என் மலர்tooltip icon

    வேலூர்

    பணத்திற்காக கடத்தப்பட்ட வேலூர் தொழிலதிபர் கர்நாடக மாநிலத்தில் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.
    பெங்களூரு:

    வேலூர் மாவட்டம் ஏலகிரி மலைப்பகுதியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபர் அருள் (வயது 50), நேற்று மர்ம நபர்களால் கடத்தப்பட்டார். பின்னர் அவரது வீட்டுக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு 50 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டி உள்ளனர்.

    இதுபற்றி அருளின் மனைவி கொடுத்த புகாரின் அடிப்படையில் ஏலகிரி மலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கடத்தல்காரர்கள் பேசிய செல்போன் எண் பதிவான டவர் இருந்த இடத்தை ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

    போலீசார் விசாரணை

    இந்நிலையில் கடத்தப்பட்ட தொழிலதிபர் அருள், கர்நாடக மாநிலம் பங்காருபேட்டையில் பத்திரமாக மீட்கப்பட்டார். அவரை கடத்திச் சென்ற 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

    ஏலகிரி மலையில் ரூ.50 லட்சம் கேட்டு தொழில் அதிபர் கடத்தப்பட்டார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேலூர்:

    ஏலகிரி மலையை சேர்ந்தவர் அருள் (வயது 50). ரியல் எஸ்டேட் அதிபர். அவரது மனைவி சாந்தி. இன்று காலை ஏலகிரி மலையில் அருள் நடைபயிற்சி சென்று கொண்டிருந்தார்.

    அப்போது காரில் வந்த மர்ம கும்பல் அருளை காரில் கடத்தி சென்றனர். நடைபயிற்சிக்கு சென்ற அருள் நீண்ட நேரமாக வீடு திரும்பாததால் சாந்தி அவரை தேடி வந்தார்.

    அப்போது அவரது செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்மநபர் உங்கள் கணவர் அருளை நாங்கள் கடத்தி வைத்துள்ளோம்.

    ரூ.50 லட்சம் கொடுத்தால் தான் அருளை விடுவிப்போம். இல்லை என்றால் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த சாந்தி இதுகுறித்து ஏலகிரிமலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    சப்-இன்ஸ்பெக்டர் நாமதேவன் கடத்தல் கும்பல் குறித்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் ஏலகிரி மலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    அரக்கோணம் அருகே ரெயிலில் சிக்கி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அரக்கோணம்:

    அரக்கோணம்- சென்னை செல்லும் தண்டவாளத்தில் புளியமங்கலம் அருகே 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ரெயிலில் அடிபட்டு இறந்தார்.

    அரக்கோணம் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராமகிருஷ்ணன், வெங்கடேசன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று உடலை மீட்டு அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றகனர்.

    வேலூர் ஜெயிலில் முருகன் தொடர்ந்து சாப்பிட மறுத்து இன்று 20-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். முருகனின் உறவினர் அவருக்கு சிகிச்சை அளிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் இன்று மனுதாக்கல் செய்ய உள்ளார்.
    வேலூர்:

    ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன் வேலூர் ஆண்கள் ஜெயிலிலும், அவரது மனைவி நளினி பெண்கள் ஜெயிலிலும் அடைக்கப்பட்டுள்ளனர். முருகன் அறையில் செல்போன் சிக்கியதால் அவருக்கான சலுகைளை சிறைத்துறை நிர்வாகம் ரத்து செய்தது.

    தன்னை தனி அறையில் அடைத்து கொடுமைப்படுத்துவதாக கூறி முருகன் இன்று 20-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். டாக்டர்கள் குழுவினர் அவரது உடல் நிலையை கண்காணித்தனர்.

    சாப்பிடாமல் இருந்ததால் முருகன் மிகவும் சோர்வாக காணப்படுகிறார். இதனால் கடந்த 2 நாட்களாக அவருக்கு குளுக்கோஸ் ஏற்றப்பட்டது.

    ஜெயிலில் உள்ள முருகனை சிறை நிர்வாகம் கொடுமைப்படுத்துவதாக கூறி நளினி கடந்த 26-ந்தேதி முதல் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்தார்.

    உண்ணாவிரதத்தை கைவிட கோரி நளினி-முருகனிடம் ஜெயில் அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அதிகாரிகள் பேச்சுவார்த்தையை ஏற்று நளினி நேற்று உண்ணாவிரதத்தை கைவிட்டார்.

    முருகன் தொடர்ந்து சாப்பிட மறுத்து இன்று 20-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

    இந்த நிலையில் முருகன் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார். அவரது உயிரை காப்பாற்ற மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

    இது தொடர்பாக முருகனின் உறவினர் தேன்மொழி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் இன்று மனுதாக்கல் செய்ய உள்ளார் என முருகனின் வக்கீல் புகழேந்தி தெரிவித்தார்.


    வாணியம்பாடியில் வீட்டுக்குள் புகுந்த கொடிய விஷ பாம்பை வாலிபர் பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தார். மேலும் பதுங்கியிருந்த 2 பாம்புகளை தேடி வருகிறார்கள்.
    வாணியம்பாடி:

    வாணியம்பாடி அடுத்த மேட்டுப்பாளையம் பகுதியில் குடியிருப்புகள் அதிகமாக உள்ள பகுதியில் உள்ள வீதியில் இரவு திடீரென்று கொடிய விஷம் கொண்ட 3 பாம்புகள் சுற்றி திரிந்துள்ளதை கண்ட அப்பகுதி மக்கள் பீதியடைந்து பாம்பு பிடிக்கும் வாலிபர் இலியாஸ்க்கு தகவல் கொடுத்தனர். 

    அவர் அங்கு வருவதற்குள் ஒரு பாம்பு மட்டும் அருகில் உள்ள ஒரு வீட்டில் புகுந்து தஞ்சமடைந்தது. மற்ற 2 பாம்புகள் அருகில் உள்ள ஒரு புதருக்குள் சென்று மறைந்து விட்டது. பின்னர் அங்கு வந்த பாம்பு பிடிக்கும் வாலிபர் அந்த வீட்டிற்குள் சென்று அங்கு பதுங்கியிருந்த ஒரு பாம்பினை லாவகமாக பிடித்தார். புதருக்குள் புகுந்த 2 பாம்புகளை பிடிக்க முடியவில்லை. எந்த நேரத்திலும் அந்த 2 பாம்புகளும் வீட்டிற்குள் புகுந்து விடுமோ என்ற பீதியில் அப்பகுதி மக்கள் அந்த 2 பாம்புகளை தேடி வருகின்றனர்.

    பிடிபட்ட அந்த பாம்பு வித்தியாசமாக உள்ளது. ராஜநாகம் இனத்தை சார்ந்த பாம்பாக இருக்கலாம் என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். பிடிபட்ட பாம்பினை வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
    காட்பாடி அருகே கணவனுடன் பைக்கில் சென்ற பெண்ணிடம் பைக்கிள் வந்த மர்ம நபர்கள் செயினை பறித்து சென்றனர். பட்டப்பகலில் நடைபெற்ற இந்த சம்பவம் பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.
    காட்பாடி:

    காட்பாடி அருகே கொண்டசமுத்திரம் காந்திநகர் இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் முத்தையா (வயது51). இவரது மனைவி கேத்தீஸ்வரி. நேற்று கணவன், மனைவி இருவரும் கே.வி.குப்பம் அருகே உள்ள தேவரிஷி குப்பத்திற்கு சென்று விட்டு பைக்கில் வந்தனர்.

    கொசவன்புதூர் அருகே வந்து கொண்டிருந்த போது பின்னால் பைக்கில் முகத்தில் துணி கட்டியபடி வந்த 2 மர்ம நபர்கள் கேத்தீஸ்வரியின் கழுத்தில் இருந்த 2 பவுன் செயினை பறித்தனர். இதில் நிலைதடுமாறி பைக்கில் இருந்து கேத்தீஸ்வரியும், முத்தையாவும் கீழே விழுந்தனர். செயினை பறித்த மர்ம நபர்கள் அங்கிருந்து வேகமாக பைக்கில் தப்பி சென்று விட்டனர். கீழே விழுந்ததில் படுகாயமடைந்த 2 பேரையும் மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    இது குறித்து கே.வி.குப்பம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் நடைபெற்ற இந்த சம்பவம் பொதுமக்களிடம் பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.
    வேலூர் மாவட்டத்தில் 4 போலி டாக்டர்களை கைது செய்த சுகாதாரத்துறை அதிகாரிகள் அவர்களிடம் இருந்து மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை பறிமுதல் செய்தனர்.
    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் உள்ள கிராமப் பகுதிகளில் 10-ம் வகுப்பு 12-ம் வகுப்பு படித்து விட்டு மருத்துவம் பார்த்து வருகின்றனர்.

    இவர்கள் தனியாக கிளினிக் நடத்தி வருகின்றனர். காய்ச்சலால் பாதிக்கப்படும் பொதுமக்கள் போலி டாக்டரிடம் சிகிச்சை பெற்று பாதிக்கப்படுகின்றனர்.

    இதனை தடுக்க கலெக்டர் சண்முகசுந்தரம் உத்தரவின்பேரில் மாவட்ட சுகாதார இணை இயக்குனர் யாஸ்மின் தலைமையில் 55 பேர் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    இந்த குழுவினர் கடந்த மாதம் மாவட்டம் முழுவதும் நடத்திய அதிரடி சோதனையில் 20 போலி டாக்டர்கள் சிக்கினர். அவர்கள் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

    தொடர்ந்து போலி டாக்டர்கள் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் சுகாதார இணை இயக்குனர் யாஸ்மின் தலைமையிலான குழுவினர் 11 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது போலி டாக்டர்கள் பலர் கிளினிக்கை மூடி விட்டு ஓட்டம் பிடித்தனர். குடியாத்தம் பகுதியில் கிளினிக் நடத்திவந்த போலி டாக்டர்கள் பெரியப்பா, ராகவன் ஆகியோரை மடக்கி பிடித்தனர்.

    மேலும் ஊசூர் கூட் ரோட்டில் கிளினிக் நடத்தி வந்த போலி டாக்டர் மஞ்சுளா, கத்தாழம்பட்டு கிராமத்தில் கிளினிக் நடத்தி வந்த போலி டாக்டர் பரமேஸ்வரி ஆகியோரை சுகாதாரத்துறையினர் பிடித்தனர்.

    4 போலி டாக்டர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மருத்துவம் பார்க்க பயன்படுத்திய ஊசி மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

    தொடர்ந்து போலி டாக்டர்களை பிடிக்க சுகாதாரத்துறையினர் அதிரடி வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
    ரெயில்வே சீரமைப்பு பணியில் ஈடுபட்ட ஊழியர் ரெயிலில் சிக்கி பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை கேத்தாண்டபட்டி ரெயில் நிலையம் அருகே இன்று காலை சேலம் பயணிகள் ரெயில் பழுதாகி நின்றது.

    இதனை சீரமைக்கும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர். இதில் ஜோலார்பேட்டை புது ஓட்டல் தெருவைச் சேர்ந்த கோபிநாதன் (வயது 42) என்ஜின் மெக்கானிக். இவர் பணியில் ஈடுபட்டார்.

    சேதமடைந்த பேண்டோ கம்பியை தூக்கிக் கொண்டுவந்து கொடுத்தும் அதனை பொருத்தும்பணி செய்தார். இதனையடுத்து சேலம் ரெயில் புறப்பட்டுச் சென்றது. பணி முடிந்த பிறகு தண்டவாளம் அருகில் இருந்த கோபிநாதன் அதனை கடக்க முயன்றார்.

    அப்போது பெங்களூரு நோக்கி வேகமாக சென்ற லால்பாக் எக்ஸ்பிரஸ் ரெயில் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கோபிநாதன் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    அவரது உடலை பார்த்து ரெயில்வே ஊழியர்கள் கதறி அழுதனர்.

    வேலூர் ஜெயிலில் 11 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வந்த நளினி இன்று தனது போராட்டத்தை கைவிட்டார்.
    வேலூர்:

    ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன் வேலூர் ஆண்கள் ஜெயிலிலும், அவரது மனைவி நளினி பெண்கள் ஜெயிலிலும் அடைக்கப்பட்டுள்ளனர். முருகன் அறையில் செல்போன் சிக்கியதால் அவருக்கான சலுகைகளை சிறைத்துறை நிர்வாகம் ரத்து செய்தது.

    ஜெயிலில் உள்ள முருகனை சிறை நிர்வாகம் கொடுமைப்படுத்துவதாக கூறி நளினி கடந்த 26-ந்தேதி முதல் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இன்று 11-வது நாளாக நளினி தனது உண்ணாவிரதத்தை தொடர்ந்தார். அதேபோல் தன்னை தனி அறையில் அடைத்து கொடுமைப்படுத்துவதாக கூறி முருகனும் இன்று 19-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

    முருகன்

    முருகன்- நளினி தொடர்ந்து உண்ணாவிரதம் இருப்பதால் அவர்களது உடல் நிலை மிகவும் சோர்வாக உள்ளது. டாக்டர்கள் குழுவினர் 2 பேரின் உடல் நிலையையும் கண்காணித்து வந்தனர்.

    2 பேரும் சாப்பிடாமல் இருப்பதால் மிகவும் சோர்வாக உள்ளனர். இதனால் நேற்று முன்தினம் முதல் 2 பேருக்கும் குளுக்கோஸ் ஏற்றப்பட்டது. டாக்டர்கள் முருகன்-நளினிக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு குறித்து பரிசோதனை செய்தனர்.

    இந்நிலையில் வேலூர் பெண்கள் ஜெயிலில் இன்று 11-வது நாளாக மேற்கொண்ட உண்ணாவிரத போராட்டத்தை நளினி கைவிட்டார்.

    நளினியுடன் சிறைத்துறை அதிகாரிகள் நடத்திய தொடர் பேச்சுவார்த்தை காரணமாக தனது உண்ணாவிரதத்தை அவர் கைவிட்டார்.
    ராணிப்பேட்டையில் பல்வேறு சம்பவங்களில் இளம்பெண் மற்றும் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
    வாலாஜா:

    ராணிப்பேட்டை காரை தர்கா தெருவை சேர்ந்தவர் கலீல்பாஷா (வயது 44). தொழிலாளி. அடிக்கடி உடல் நலம் பாதிக்கபட்டதால் மனம் உடைந்து காணப்பட்டார்.

    நேற்று வீட்டில் கலீல்பாஷா தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். ராணிப்பேட்டை போலீசார் உடலை கைபற்றி விசாரணை நடத்தினர்.

    ராணிப்பேட்டை பிங்கி எல்.ஏப். ரோடு பகுதியை சேர்ந்தவர் வினோஆனந்த். இவரது மனைவி அனுஷா (36). கணவன் மனைவிக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    இதனால் மனமுடைந்த அனுஷா நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ராணிப்பேட்டை போலீசார் உடலை கைபற்றி பிரே பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

    இது தெடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.         
    ஆன்லைன் வர்த்தக விளம்பரத்தில் நடிக்கும் நடிகர் விஜய் சேதுபதி உடனடியாக அதிலிருந்து விலக வேண்டும் என விக்கிரமராஜா வலியுறுத்தியுள்ளார்.

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் நகர அனைத்து வணிகர் சங்கத்தின் சார்பில் 20-வது ஆண்டு தொடக்க விழா நடந்தது. சிறப்பு அழைப்பாளராக வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கலந்து கொண்டார்.

    நிகழ்ச்சியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-

    வெளிநாட்டு குளிர்பானத்தை முற்றிலுமாக விற்பனை செய்வதை தடுக்கும் விதத்தில் உள்ளூர் குளிர்பான குளிர்சாதன பெட்டிகளை கேட்டுள்ளோம். விரைவில் வெளிநாட்டு குளிர்பானங்களை விற்க தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம்.

    வியாபாரிகளை பாதிக்கும் ஆன்லைன் வர்த்தகத்தில் நடிகர் விஜய்சேதுபதி நடித்துள்ளார்.

    விஜய்சேதுபதி

     

    இதனால் வியாபாரிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாவார்கள். உடனடியாக அந்த விளம்பரத்தில் இருந்து நடிகர் விஜய்சேதுபதி விலக வேண்டுமென வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் அவரது வீட்டிற்கு சென்று நேரில் கடிதம் கொடுத்துள்ளோம். கண்டிப்பாக பரிசீலனை செய்வார். இல்லாவிட்டால் வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் போராட்டம் நடத்தப்படும்.

    புதிய சினிமா படம் சி.டி.க்களாக வெளியிட்ட போது அதனை எதிர்த்து வணிகர் சங்க பேரமைப்பு குரல் கொடுத்தது. தற்போது வியாபாரிகளை காக்க நடிகர்கள் ஆன்லைன் வர்த்தகத்தில் நடிக்கக் கூடாது.

    வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் 37-வது மாநில மாநாடு அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெற உள்ளது. அதற்கு பிரதமர் மோடியை அழைக்க உள்ளோம்.

    பல பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி விதிப்பை குறைக்க மத்திய மந்திரியிடம் மனு அளித்துள்ளோம்.

    ஜி.எஸ்.டி. வரியை குறைக்க வேண்டும். இல்லாவிட்டால் அடுத்த கட்டமாக மிகப்பெரிய போராட்டம் நடத்த உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    வேலூர் சிறையில் முருகன்-நளினி தொடர்ந்து உண்ணாவிரதம் இருப்பதால் அவர்களது உடல்நிலை மிகவும் சோர்வாக உள்ளது. டாக்டர்கள் குழுவினர் 2 பேரின் உடல் நிலையையும் கண்காணித்து வருகின்றனர்.
    வேலூர்:

    ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன் வேலூர் ஆண்கள் ஜெயிலிலும், அவரது மனைவி நளினி பெண்கள் ஜெயிலிலும் அடைக்கப்பட்டுள்ளனர். முருகன் அறையில் செல்போன் சிக்கியதால் அவருக்கான சலுகைளை சிறைத்துறை நிர்வாகம் ரத்து செய்தது.

    ஜெயிலில் உள்ள முருகனை சிறை நிர்வாகம் கொடுமைப்படுத்துவதாக கூறி நளினி கடந்த 26-ந்தேதி முதல் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இன்று 10-வது நாளாக நளினி தனது உண்ணாவிரதத்தை தொடர்ந்தார்.

    வேலூர் சிறை

    அதேபோல் தன்னை தனி அறையில் அடைத்து கொடுமைப்படுத்துவதாக கூறி முருகனும் இன்று 18-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

    முருகன்-நளினி தொடர்ந்து உண்ணாவிரதம் இருப்பதால் அவர்களது உடல்நிலை மிகவும் சோர்வாக உள்ளது. டாக்டர்கள் குழுவினர் 2 பேரின் உடல் நிலையையும் கண்காணித்து வருகின்றனர்.

    தொடர்ந்து அவர்கள் சாப்பிடாமல் இருப்பதால் மிகவும் சோர்வாக உள்ளனர். இதனால் நேற்று முதல் 2 பேருக்கும் குளுக்கோஸ் ஏற்றப்படுகிறது. இன்று காலை டாக்டர்கள் முருகன்-நளினிக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு குறித்து பரிசோதனை செய்தனர். தொடர்ந்து 2-வது நாளாக அவர்களுக்கு குளுக்கோஸ் ஏற்றப்படுகிறது. ஜெயில் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் 2 பேரும் உண்ணாவிரதத்தை கைவிட தொடர்ந்து மறுத்து வருகின்றனர்.

    ×