என் மலர்tooltip icon

    செய்திகள்

    முருகன் - நளினி
    X
    முருகன் - நளினி

    நளினி-முருகன் உடல்நிலையை டாக்டர் குழு தீவிர கண்காணிப்பு

    வேலூர் சிறையில் முருகன்-நளினி தொடர்ந்து உண்ணாவிரதம் இருப்பதால் அவர்களது உடல்நிலை மிகவும் சோர்வாக உள்ளது. டாக்டர்கள் குழுவினர் 2 பேரின் உடல் நிலையையும் கண்காணித்து வருகின்றனர்.
    வேலூர்:

    ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன் வேலூர் ஆண்கள் ஜெயிலிலும், அவரது மனைவி நளினி பெண்கள் ஜெயிலிலும் அடைக்கப்பட்டுள்ளனர். முருகன் அறையில் செல்போன் சிக்கியதால் அவருக்கான சலுகைளை சிறைத்துறை நிர்வாகம் ரத்து செய்தது.

    ஜெயிலில் உள்ள முருகனை சிறை நிர்வாகம் கொடுமைப்படுத்துவதாக கூறி நளினி கடந்த 26-ந்தேதி முதல் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இன்று 10-வது நாளாக நளினி தனது உண்ணாவிரதத்தை தொடர்ந்தார்.

    வேலூர் சிறை

    அதேபோல் தன்னை தனி அறையில் அடைத்து கொடுமைப்படுத்துவதாக கூறி முருகனும் இன்று 18-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

    முருகன்-நளினி தொடர்ந்து உண்ணாவிரதம் இருப்பதால் அவர்களது உடல்நிலை மிகவும் சோர்வாக உள்ளது. டாக்டர்கள் குழுவினர் 2 பேரின் உடல் நிலையையும் கண்காணித்து வருகின்றனர்.

    தொடர்ந்து அவர்கள் சாப்பிடாமல் இருப்பதால் மிகவும் சோர்வாக உள்ளனர். இதனால் நேற்று முதல் 2 பேருக்கும் குளுக்கோஸ் ஏற்றப்படுகிறது. இன்று காலை டாக்டர்கள் முருகன்-நளினிக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு குறித்து பரிசோதனை செய்தனர். தொடர்ந்து 2-வது நாளாக அவர்களுக்கு குளுக்கோஸ் ஏற்றப்படுகிறது. ஜெயில் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் 2 பேரும் உண்ணாவிரதத்தை கைவிட தொடர்ந்து மறுத்து வருகின்றனர்.

    Next Story
    ×