என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாணியம்பாடியில் பிடிப்பட்ட பாம்பு.
    X
    வாணியம்பாடியில் பிடிப்பட்ட பாம்பு.

    வாணியம்பாடியில் வீட்டுக்குள் புகுந்த கொடிய விஷ பாம்பு

    வாணியம்பாடியில் வீட்டுக்குள் புகுந்த கொடிய விஷ பாம்பை வாலிபர் பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தார். மேலும் பதுங்கியிருந்த 2 பாம்புகளை தேடி வருகிறார்கள்.
    வாணியம்பாடி:

    வாணியம்பாடி அடுத்த மேட்டுப்பாளையம் பகுதியில் குடியிருப்புகள் அதிகமாக உள்ள பகுதியில் உள்ள வீதியில் இரவு திடீரென்று கொடிய விஷம் கொண்ட 3 பாம்புகள் சுற்றி திரிந்துள்ளதை கண்ட அப்பகுதி மக்கள் பீதியடைந்து பாம்பு பிடிக்கும் வாலிபர் இலியாஸ்க்கு தகவல் கொடுத்தனர். 

    அவர் அங்கு வருவதற்குள் ஒரு பாம்பு மட்டும் அருகில் உள்ள ஒரு வீட்டில் புகுந்து தஞ்சமடைந்தது. மற்ற 2 பாம்புகள் அருகில் உள்ள ஒரு புதருக்குள் சென்று மறைந்து விட்டது. பின்னர் அங்கு வந்த பாம்பு பிடிக்கும் வாலிபர் அந்த வீட்டிற்குள் சென்று அங்கு பதுங்கியிருந்த ஒரு பாம்பினை லாவகமாக பிடித்தார். புதருக்குள் புகுந்த 2 பாம்புகளை பிடிக்க முடியவில்லை. எந்த நேரத்திலும் அந்த 2 பாம்புகளும் வீட்டிற்குள் புகுந்து விடுமோ என்ற பீதியில் அப்பகுதி மக்கள் அந்த 2 பாம்புகளை தேடி வருகின்றனர்.

    பிடிபட்ட அந்த பாம்பு வித்தியாசமாக உள்ளது. ராஜநாகம் இனத்தை சார்ந்த பாம்பாக இருக்கலாம் என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். பிடிபட்ட பாம்பினை வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
    Next Story
    ×