என் மலர்tooltip icon

    வேலூர்

    வேலூர் மார்க்கெட்டுக்கு வந்துள்ள எகிப்து வெங்காயத்தில் ருசி இல்லாததால் விற்பனை குறைந்துள்ளது.
    வேலூர்:

    வெங்காய விலையை குறைக்கவும், தட்டுப்பாட்டை போக்கவும் எகிப்து நாட்டில் இருந்து வெங்காயத்தை கப்பல் மூலம் மத்திய அரசு இறக்குமதி செய்தது.

    இந்த நிலையில் வேலூர் நேதாஜி மார்க்கெட்டிற்கு எகிப்து வெங்காயம் விற்பனைக்கு வந்துள்ளது.

    பெரிய அளவிலான எகிப்து வெங்காயம் அதிகபட்சமாக 750 கிராம் எடையிலும், சிறிய அளவிலான வெங்காயம் 250 கிராம் எடையிலும் காணப்படுகிறது.

    ஒரு கிலோ ரூ.100 என்ற விலையில் 50 கிலோ கொண்ட மூட்டை ரூ.5 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது.

    நாட்டு வெங்காயம் ஒரு கிலோ ரூ.40 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்படுகிறது.

    எகிப்து வெங்காயம் பெரிய அளவில் காணப்படுவதால் பெண்கள் அதனை வாங்க ஆர்வம் காட்டவில்லை.

    மேலும் இந்த வெங்காயத்தை சமையலுக்கு பயன்படுத்தினால் சுவை குறைந்து காணப்படுகிறது. ருசி இல்லாததால் வீடுகளுக்கு எகிப்து வெங்காயத்தை வாங்குபவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது. ஓட்டல்களுக்கு அதிகளவில் வாங்கி செல்கின்றனர்.

    அதனால் ஒரு கிலோ என்று சில்லரை விலையில் விற்பனை செய்யப்படவில்லை. 5 கிலோ மற்றும் அதற்கு மேல் வாங்கினால் மட்டுமே சில்லரையில் வழங்கப்படுகிறது.


    ஜோலார்பேட்டை அருகே 2 அம்மன் கோவில் உண்டியல் உடைத்து கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அடுத்த மேட்டுசக்கர குப்பத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் மட்டும் கோவில் திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.

    இந்த நிலையில் நேற்றிரவு கோவில் முன்பக்க கதவை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் அங்கிருந்த உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

    இன்று காலை கோவில் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    இதுகுறித்து ஊருக்குள் தகவல் பரவியதால் கோவில் முன்பாக ஏராளமானவர்கள் திரண்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. திருட்டு குறித்து கோவில் நிர்வாகி மணிகண்டன் ஜோலார்பேட்டை போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல் ஜோலார்பேட்டை அடுத்த பக்ரிதர்கா திருப்பத்தூர் மெயின் ரோட்டில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. நேற்றிரவு இந்த கோவிலுக்குள் நுழைந்த கொள்ளையர்கள் உண்டியலை உடைத்து பணத்தை எடுத்து சென்றுள்ளனர். போலீசார் வழக்கு பதிவு செய்து 2 கோவில்களிலும் ஒரே கும்பல் கைவரிசை காட்டியதா? அல்லது வெவ்வேறு திருட்டு கும்பலா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நேற்று ஜோலார்பேட்டை தாமலேரி முத்தூரில் 2 டாஸ்மாக் கடைகளில் திருட்டு நடந்தது. இன்று மீண்டும் கோவில்களில் கொள்ளை கும்பல் கைவரிசை காட்டியுள்ளது தொடர் திருட்டால் அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.

    ஆற்காடு அருகே செல்போன் கடைக்காரர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எதற்காக தற்கொலை செய்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஆற்காடு:

    ஆற்காடு அடுத்த காவனூர் பாரதி நகரை சேர்ந்தவர் யோகானந்தன் (வயது 28). காவனூரில் செல்போன் கடை நடத்தி வந்தார். இவருக்கு மாலதி என்ற மனைவியும், ஒரு மகன் உள்ளனர். மாலதி காவனூரில் உள்ள தனியார் வங்கியில் வேலை செய்து வருகிறார்.

    நேற்று முன்தினம் வங்கி சார்பில் சென்னையில் நடைபெறும் பயிற்சி வகுப்புக்கு மாலதி சென்று விட்டார். நேற்றிரவு கடையில் இருந்து வீட்டிற்கு வந்த யோகனந்தன் இன்று காலை நீண்ட நேரமாகியும் வெளியேவரவில்லை.

    இதனால் சந்தேகம் அடைந்த அவரது உறவினர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு யோகனந்தன் மின் விசிறியில் தூக்கில் பிணமாக தொங்கினார்.

    இது குறித்து திமிரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    யோகனந்தன் குடும்ப பிரச்சனையில் தற்கொலை செய்தாரா? அல்லது வேறு எதேனும் காரணமா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன் வேலூர் ஜெயிலில் மீண்டும் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

    வேலூர்:

    முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு முருகனும், வேலூர் பெண்கள் சிறையில் உள்ள அவரது மனைவி நளினியும் சிறை நிர்வாகம் கொடுமைப்படுத்துவதாக கூறி உண்ணாவிரதம் இருந்தனர்.

    சிறை அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து இருவரும் உண்ணாவிரதத்தை கைவிட்டனர்.

    இந்நிலையில், கடந்த 19-ந் தேதி முருகனை சந்திக்க அவரது உறவினர் ஒருவர் வேலூர் சிறைக்கு வந்தார். அப்போது அவர் கொண்டு வந்த உணவு பொருட்களை உள்ளே எடுத்து செல்ல சிறை நிர்வாகம் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து முருகனை சந்தித்த உறவினர் நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த முருகன், உறவினர் சந்திப்பின்போது பாதியில் எழுந்து சென்றார்.

    இதற்கிடையில், நேற்று காலை வேலூர் பெண்கள் சிறையில் நளினியை, முருகன் சந்தித்தபோது, சிறையில் மீண்டும் தனக்கு கொடுமை நடப்பதாக கூறி உண்ணாவிரதம் இருக்க போவதாக நளினியிடம், முருகன் கூறினார்.

    சந்திப்பு முடிந்து ஆண்கள் சிறைக்கு திரும்பிய முருகன் நேற்று காலை முதல் உணவு சாப்பிடாமல் உண்ணாவிரதம் இருந்தார். இன்று 2-வது நாளாக அவர் சாப்பிட மறுத்து தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

    முருகன் கடந்த 2 மாத இடைவெளிகளில் 3-வது முறையாக உண்ணாவிரதம் இருந்து வருவது ஜெயில் அதிகாரிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஆம்பூர் அருகே மர்மமான முறையில் இளம்பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 வாலிபர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆம்பூர்:

    ஆம்பூர் அடுத்த சுட்டகுண்டாவை சேர்ந்தவர் ரேவதி (வயது 24). இவருக்கு, போச்சம்பள்ளியை சேர்ந்த வாலிபருடன் கடந்த 4 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. கணவன்- மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ரேவதி கணவரை பிரிந்து தனது தாயார் வீட்டுக்கு வந்து விட்டார்.

    இந்த நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ரேவதிக்கு கே.ஜி.எப். பகுதியை சேர்நத மகேஷ் என்பவருடன் 2-வது திருமணம் நடந்தது. மகேஷ் பெங்களூருவில் வேலை செய்து வருகிறார். ரேவதி கடந்த சில நாட்களுக்கு முன்பு சுட்டகுண்டாவில் உள்ள தன்னுடைய தாய் வீட்டிற்கு வந்தார். நேற்று முன்தினம் கணவருடன் செல்போனில் பேசுவதற்காக வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் காணவில்லை.

    இந்த நிலையில் அதே ஊரில் வனப்பகுதி எல்லையோரம் சுண்டக்காபாறை என்ற இடத்தில் ரேவதி கழுத்தில் காயங்களுடன் பிணமாக கிடந்தார்.

    உமராபாத் போலீசார் பிணத்தை மீட்டு விசாரணை நடத்தினர். ரேவதி அணிந்திருந்த 10 பவுன் நகை, செல்போன் ஆகியவை காணாமல் போயிருந்தது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி கொலையாளிகளை தேடி வந்தனர்.

    ரேவதியின் செல்போனில் கடைசியாக யார்? யார்? பேசினர் என ஆய்வு செய்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த 2 வாலிபர்கள் ரேவதியிடம் செல்போனில் நீண்ட நேரம் பேசியது தெரியவந்தது.

    இதையடுத்து நேற்றிரவு 2 வாலிபர்களையும் உமராபாத் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேலூர் மலையில் 80 அடி பள்ளத்தில் தள்ளி இளம்பெண்ணை தள்ளி கொலை செய்தது எப்படி என்பது குறித்து ஆட்டோ டிரைவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
    வேலூர்:

    வேலூர் அடுத்த அரியூர் குப்பத்தை சேர்ந்த சரவணன் மகள் நிவேதா (வயது17). பிளஸ்-2 படித்த இவர் வேலூர் சி.எம்.சி. ஆஸ்பத்திரியில் உள்ள கேன்டீனில் வேலை பார்த்து வந்தார்.

    கடந்த 14-ந்தேதி பைக்கில் வேலைக்கு சென்ற நிவேதா மாயமானார். இதுபற்றி வடக்கு போலீஸ் நிலையத்தில் அவரது பெற்றோர் புகார் அளித்தனர்.

    இந்த நிலையில் புதுவசூர் மலையில் உள்ள கல்குவாரியில் நிவேதா பிணமாக கிடந்தார். அவரது கைகளில் இருந்த பச்சை அடையாளங்கள் மூலம் நிவேதா என்பது உறுதிசெய்யப்பட்டது.

    சம்பவ இடத்தில் நிவேதாவின் செல்போன், பைகள் இல்லை.

    நிவேதாவின் செல்போனில் அதிகம் பேசியவர்கள் யார்? வாட்ஸ் அப் நண்பர்கள் குறித்த விவரங்களை போலீசார் சேகரித்தனர்.

    இதில் ரங்காபுரம் மூலக்கொல்லை தென்றல் நகரை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் பிரகாஷ் (23). இளம்பெண்ணுடன் அதிகம் பேசியது தெரியவந்தது. அவரை பிடித்து போலீசார் கிடுக்கிபிடி விசாரணை நடத்தினர்.

    அப்போது பிரகாஷ் நிவேதாவை 80 அடி பள்ளத்தில் தள்ளி கொலை செய்தது தெரியவந்தது. அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பர் ஆட்டோ டிரைவர் நவீன்குமார் (20) அவருக்கு உதவியுள்ளார். 2 பேரையும் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    நிவேதாவின் காதலன் பிரகாஷ் அளித்துள்ள வாக்கு மூலத்தில் கூறியிருப்பதாவது:-

    கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நிவேதா ரங்காபுரத்தில் உள்ளஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தார். அப்போது எனது ஆட்டோவில் அடிக்கடி வந்து சென்றார். எங்களுக்குள் பழக்கம் ஏற்பட்டதால் செல்போன் எண்ணை பரிமாறிக் கொண்டோம். தொடர்ந்து பேசியதால் காதல் ஏற்பட்டது.

    2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்தோம். இந்த நிலையில் அவரது நடத்தையில் எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவளை திருமணம் செய்யும் எண்ணத்தை கைவிட்டேன்.

    காதலிக்க தயார், திருமணம் செய்ய முடியாது என்ற நிலையில் இருந்தேன். இந்த நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி நிவேதா என்னை வற்புறுத்தினாள். சம்பவத்தன்று தனிமையில் சந்திக்க முடிவு செய்தோம்.

    இதற்காக நிவேதாவை புதிய பஸ் நிலையத்திற்கு வரவழைத்தேன். அங்கிருந்து ஆட்டோவில் புதுவசூர் மலைக்கு அழைத்து சென்றேன். தனிமையில் பேசிக் கொண்டிருந்த போது திருமணம் செய்ய வேண்டுமென வற்புறுத்தினாள்.

    இதனால் ஆத்திரத்தில் அவளை கழுத்தை நெரித்து 80 அடி பள்ளத்தில் தள்ளி விட்டேன். பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்து விட்டாள்.

    இதனால் போலீசில் இருந்த தப்பிக்க முடிவு செய்தேன். இதுபற்றி எனது நண்பன் நவீன்குமாரிடம் தெரிவித்தேன். அவன் வந்ததும் நிவேதாவின் செல்போனை கல்குவாரி குட்டையில் வீசினேன்.

    அவரது பையை செங்காநத்தம் மலையில் வீசி எறிந்து விட்டு வந்துவிட்டோம்.

    இவ்வாறு போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

    இதனையடுத்து கொலை நடந்த இடத்திற்கு 2 பேரையும் அழைத்து சென்றனர். அங்கு பிரகாஷ் நிவேதாவை 80 அடி பள்ளத்தில் தள்ளிவிட்டது எப்படி என நடித்து காட்டினார்.

    மேலும் அவர் வீசிய செல்போன் கல்குவாரி குட்டை தண்ணீரில் ஆழமான பகுதியில் கிடப்பதால் அதனை எடுக்க முடியவில்லை. செங்காநத்தம் மலையில் நிவேதாவின் பையை மீட்டனர்.

    கைதான பிரகாஷ், நவீன்குமார் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
    வேலூர் மாவட்டம் காட்டிபாடியில் திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவாக பாரதிய ஜனதாவின் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    வேலூர்:

    வேலூர் மாவட்ட பா.ஜ.க. சார்பில் காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    மாவட்ட தலைவர் தசரதன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் ஜெகன்நாதன் வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளர்களாக மாநில செயலாளர் கரு.நாகராஜன், மாநில துணை தலைவர் எம்.என்.ராஜா கலந்து கொண்டனர்.

    தேசிய குடியுரிமை சட்டத்தை எதிர்க்கும் தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினரை கண்டித்தும் பொய் பிரசாரத்தை நிறுத்த கோரியும் கோ‌ஷம் எழுப்பினர்.

    இதில் கோட்ட பொறுப்பாளர்கள் பிரகாஷ், ரமேஷ், ஓ.பி.சி.யின் மாநில செயலாளர் பாபாஸ் பாபு, மேற்கு மாவட்ட தலைவர் வெங்கடேசன், பிச்சாண்டி, மாவட்ட பொதுச்செயலர்கள் பாஸ்கர், வாசு, மாவட்ட செயலாளர், பாபு, இந்து முன்னணி கோட்ட தலைவர் மகேஷ், ராஜேஷ், ஏழுமலை, மாநகர மண்டல தலைவர்கள் கமல வினாயகம், சீனிவாசன், மோகன், நந்தகுமார் ஜெகன், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள பொறுப்பாளர்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    முடிவில் மகளிரணி செயலாளர் கார்த்தியாயினி நன்றி கூறினார்.
    சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மூன்றரை வயது சிறுமியை கலெக்டர் சண்முகம் சுந்தரம் பாராட்டினார்.
    வேலூர்:

    வேலூர் சத்துவாச்சாரி நேரு நகரை சேர்ந்தவர் விக்னஷ்வரராவ். சிலம்ப மாஸ்டர். இவரது மனைவி தீபலட்சுமி. ஆசிரியை. இவர்களது மகள் திவிஷா (வயது3½). அவளுக்கு 2 வயது ஆகும் போதே தந்தை சிலம்பம் சுற்ற கற்றுக்கொடுத்தார். அதைத் தொடர்ந்து ஒன்றை, இரட்டை கம்பு பயன்படுத்தி சிலம்பம் சுற்றி உள்ளது.

    சிறுமியின் திறமையை பெற்றோர் இந்திய சாதனை புத்தக அமைப்புக்கு அனுப்பி வைத்தனர். அவர்கள் சிறுமியின் திறமையை கண்டறிந்து சிறு வயதில் சிலம்பம் சுற்றியமைக்காக தங்கப்பதக்கம், சான்றிதழ் மற்றும் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தமைக்கான அடையாள அட்டையை வழங்கினர்.

    இதையடுத்து சிறுமியின் பெற்றோர் கலெக்டர் சண்முகசுந்தரத்தை சந்தித்தனர். அவர் சிறுமியை பாராட்டினார்.

    வேலூர் வசூர் மலையில் இளம்பெண் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்த சம்பவம் தொடர்பாக மேலும் 4 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வேலூர்:

    வேலூர் அடுத்த அரியூர் குப்பத்தை சேர்ந்த சரவணன் மகள் நிவேதா (வயது17). பிளஸ்-2 படித்த இவர் வேலூர் சி.எம்.சி. ஆஸ்பத்திரியில் உள்ள கேன்டீனில் வேலை பார்த்து வந்தார்.

    கடந்த 14-ந்தேதி பைக்கில் வேலைக்கு சென்ற நிவேதா மாயமானார். இதுபற்றி வடக்கு போலீஸ் நிலையத்தில் அவரது பெற்றோர் புகார் அளித்தனர். காணாமல் போன அன்று காலை 11 மணிக்கு அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டதாக அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

    மேலும் நிவேதாவின் இடதுகை பெரு விரலில் ஸ்டார், வலது கையில் பறவை இறக்கை பச்சை குத்தி இருந்ததாக கூறியுள்ளனர்.

    இந்த நிலையில் புதுவசூர் மலையில் உள்ள கல்குவாரியில் நிவேதா பிணமாக கிடந்தார். அவரது கைகளில் இருந்த பச்சை அடையாளங்கள் மூலம் நிவேதா என்பது உறுதிசெய்யப்பட்டது.

    சம்பவ இடத்தில் நிவேதாவின் செல்போன், பைகள் இல்லை. அதனை மர்ம நபர்கள் எடுத்து சென்றிருக்கலாம் என்று சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

    நிவேதா கொணவட்டத்தை சேர்ந்த வாலிபருடன் கடந்த சில மாதங்களாக பழகி வந்துள்ளார். இருவரும் செல்போனில் பேசி வந்துள்ளனர். இந்த நிலையில் நிவேதா கேன்டீனில் வேலை செய்தபோது மருத்துவ மனையில் உதவியாளராக பணிபுரிந்து வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

    2 வாலிபர்களும் நிவேதாவை காதலித்து வந்துள்ளனர். காதல் தகராறில் நிவேதா கொலை செய்யப்பட்டி ருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவரை காதலித்த 2 வாலிபர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் நிவேதாவின் செல்போனில் அதிகம் பேசியவர்கள் யார்? வாட்ஸ் அப் நண்பர்கள் குறித்த விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர்.

    அவரது பைக் சி.எம்.சி. ஆஸ்பத்திரில் மீட்கப்பட்டது. மேலும் அவரது செல்போன் மாயமாகி உள்ளது. அதனை கொலையாளிகள் எடுத்து சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

    இந்த நிலையில் தனிப்படை போலீசார் ரங்காபுரம், மூலக்கொல்லை பகுதியை சேர்ந்த 4 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்து வருகின்றனர். இதனால் சத்துவாச்சாரியில் பரபரப்பபு ஏற்பட்டுள்ளது.

    ஆம்பூர் அருகே 2-வது திருமணம் செய்த பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள அரங்கல்துருகம் ஊராட்சி சுட்டகுண்டா கிராமத்தை சேர்ந்தவர் ரேவதி (வயது 24). இவருக்கு, போச்சம்பள்ளியை சேர்ந்த ஒருவருடன் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ரேவதி கணவரை பிரிந்து தனது தாயார் வீட்டிற்கு வந்து விட்டார்.

    இந்த நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ரேவதிக்கு கே.ஜி.எப். பகுதியை சேர்நத மகேஷ் என்பவருடன் 2-வது திருமணம் நடந்தது. மகேஷ் பெங்களூருவில் வேலை செய்து வருகிறார். ரேவதி கடந்த சில நாட்களுக்கு முன்பு சுட்டகுண்டாவில் உள்ள தன்னுடைய தாய் வீட்டிற்கு வந்தார். நேற்று முன்தினம் கணவருடன் செல்போனில் பேசுவதற்காக வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் காணவில்லை.

    இந்த நிலையில் அதே ஊரில் வனப்பகுதி எல்லையோரம் சுண்டக்காபாறை என்ற இடத்தில் ரேவதி கழுத்தில் காயங்களுடன் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த உமராபாத் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். ரேவதி அணிந்திருந்த 10 பவுன் நகை, செல்போன் ஆகியவை காணாமல் போயிருந்தது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, ரேவதி நகைக்காக கொலை செய்யப்பட்டாரா? அல்லது பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேலூர் வசூர் மலையில் வைத்து இளம்பெண்ணை கொலை செய்த 2 வாலிபர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வேலூர்:

    வேலூர் அடுத்த அரியூர் குப்பத்தை சேர்ந்த சரவணன் மகள் நிவேதா (வயது17). பிளஸ்-2 படித்த இவர் வேலூர் சி.எம்.சி. ஆஸ்பத்திரியில் உள்ள கேன்டீனில் வேலை பார்த்து வந்தார்.

    கடந்த 14-ந்தேதி பைக்கில் வேலைக்கு சென்ற நிவேதா மாயமானார். இதுபற்றி வடக்கு போலீஸ் நிலையத்தில் அவரது பெற்றோர் புகார் அளித்தனர். காணாமல் போன அன்று காலை 11 மணிக்கு அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டதாக அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

    மேலும் நிவேதாவின் இடதுகை பெரு விரலில் ஸ்டார், வலது கையில் பறவை இறக்கை பச்சை குத்தி இருந்ததாக கூறியுள்ளனர்.

    இந்த நிலையில் புதுவசூர் மலையில் உள்ள கல்குவாரியில் நிவேதா பிணமாக கிடந்தார். அவரது கைகளில் இருந்த பச்சை அடையாளங்கள் மூலம் நிவேதா என்பது உறுதிசெய்யப்பட்டது.

    இறந்து கிடந்த இளம்பெண் மலை காட்டுக்கு தனியாக செல்ல வாய்ப்பில்லை. மேலும் செல்போன், பைகள் எதுவும் அங்கு இல்லை. அவரை மலைக்கு அழைத்து சென்று 80 அடி பள்ளத்தில் தள்ளி விட்டு கொலை செய்துள்ளனர்.

    சம்பவ இடத்தில் நிவேதாவின் செல்போன், பைகள் இல்லை. அதனை மர்ம நபர்கள் எடுத்து சென்றிருக்கலாம் என்று சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

    நிவேதா கொணவட்டத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவருடன் கடந்த சில மாதங்களாக பழகி வந்துள்ளார். இருவரும் செல்போனில் பேசி வந்துள்ளனர். இந்த நிலையில் நிவேதா கேன்டீனில் வேலை செய்தபோது மருத்துவ மனையில் உதவியாளராக பணிபுரிந்து வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 2 வாலிபர்களும் நிவேதாவை காதலித்து வந்துள்ளனர். அதில் ஒருவர் திருமணம் செய்து கொள்ளும்படி நிவேதாவுக்கு நெருக்கடி கொடுத்து வந்துள்ளார்.

    காதல் தகராறில் நிவேதா கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவரை காதலித்த 2 வாலிபர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் நிவேதாவின் செல்போனில் அதிகம் பேசியவர்கள் யார்? என்பது குறித்த விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர்.

    இதன்மூலம் துப்பு துலக்க முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில்:-

    நிவேதா உடல் பிரேத பரிசோதனை இன்று நடக்கிறது. அந்த அறிக்கையின் அடிப்படையில் விசாரணை துரிதப்படுத்தப்படும்.

    அவரது பைக் சி.எம்.சி. ஆஸ்பத்திரில் மீட்கப்பட்டது. அவரை மலைக்கு அழைத்து சென்றுள்ளனர். மேலும் அவரது செல்போன் மாயமாகி உள்ளது. அதனை கொலையாளிகள் எடுத்து சென்றிருக்கலாம். அவருடன் செல்போனில் பேசியவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர்.

    வேலூர் அரசு மருத்துவமனையில் யாரும் உரிமை கோராமல் பல மாதங்களாக பிணவறையில் இருந்த ஒரு மூதாட்டி பிணம் மற்றும் 4 முதியவர்களின் அனாதை பிணங்களை சமூகசேவகரான மணிமாறன் அடக்கம் செய்தார்.
    வேலூர்:

    திருவண்ணாமலையை சேர்ந்தவர் மணிமாறன். சமூகசேவகரான இவர் கைவிடப்பட்ட முதியவர்களை மீட்டு அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுத்துள்ளார். மேலும், அரசு மருத்துவமனைகளில் பல மாதங்களாக யாரும் வாங்கிச் செல்லாமல் இருக்கும் அனாதை பிணங்களை இவர் வாங்கி முறையாக இறுதி சடங்குகள் செய்து அடக்கம் செய்து வருகிறார்.

    இந்த நிலையில் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் யாரும் உரிமை கோராமல் பல மாதங்களாக பிணவறையில் இருந்த ஒரு மூதாட்டி பிணம் மற்றும் 4 முதியவர்களின் அனாதை பிணங்களை இவர் அடக்கம் செய்ய முன்வந்தார். அதன்படி மணிமாறன் வேலூர் தாலுகா போலீஸ் நிலையத்தில் அனுமதி பெற்று பின்னர், மருத்துவமனையில் இருந்து 5 பிணங்களையும் பெற்று முத்துமண்டபம் பாலாற்றங்கரை இடுகாட்டில் இறுதி சடங்குகள் செய்து நேற்று அடக்கம் செய்தார்.

    இவரின் இந்த சேவைக்கு வேலூர் சரக டி.ஐ.ஜி. காமினி, துணை போலீஸ் சூப்பிரண்டு துரைபாண்டியன் ஆகியோர் பாராட்டுகளை தெரிவித்தனர்.
    ×