என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிறுமியை பாராட்டிய வேலூர் கலெக்டர் சண்முக சுந்தரம்.
    X
    சிறுமியை பாராட்டிய வேலூர் கலெக்டர் சண்முக சுந்தரம்.

    சிலம்பம் சுற்றி சாதனை படைத்த சிறுமிக்கு கலெக்டர் பாராட்டு

    சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மூன்றரை வயது சிறுமியை கலெக்டர் சண்முகம் சுந்தரம் பாராட்டினார்.
    வேலூர்:

    வேலூர் சத்துவாச்சாரி நேரு நகரை சேர்ந்தவர் விக்னஷ்வரராவ். சிலம்ப மாஸ்டர். இவரது மனைவி தீபலட்சுமி. ஆசிரியை. இவர்களது மகள் திவிஷா (வயது3½). அவளுக்கு 2 வயது ஆகும் போதே தந்தை சிலம்பம் சுற்ற கற்றுக்கொடுத்தார். அதைத் தொடர்ந்து ஒன்றை, இரட்டை கம்பு பயன்படுத்தி சிலம்பம் சுற்றி உள்ளது.

    சிறுமியின் திறமையை பெற்றோர் இந்திய சாதனை புத்தக அமைப்புக்கு அனுப்பி வைத்தனர். அவர்கள் சிறுமியின் திறமையை கண்டறிந்து சிறு வயதில் சிலம்பம் சுற்றியமைக்காக தங்கப்பதக்கம், சான்றிதழ் மற்றும் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தமைக்கான அடையாள அட்டையை வழங்கினர்.

    இதையடுத்து சிறுமியின் பெற்றோர் கலெக்டர் சண்முகசுந்தரத்தை சந்தித்தனர். அவர் சிறுமியை பாராட்டினார்.

    Next Story
    ×