என் மலர்

  நீங்கள் தேடியது "Young women murder"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஐஸ்கிரீம் பார்லரில் புகுந்து இளம்பெண்ணை கத்தியால் குத்திக்கொன்று கள்ளக்காதலன் தற்கொலை செய்து கொண்டார். மேலும் அவர் எழுதிய உருக்கமான கடிதம் சிக்கி உள்ளது.
  சேலம்:

  சேலம் சூரமங்கலம் ஆசாத் நகரை சேர்ந்தவர் சாகுல். இவருடைய மனைவி ஷெரின் சித்தாராபானு (வயது 25). குடும்ப பிரச்சினை காரணமாக இவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் அவர் கணவரை பிரிந்து தன் குழந்தையுடன், பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். அங்கிருந்து காசக்காரனூர் பகுதியில் உள்ள ஐஸ்கிரீம் பார்லரில் ஷெரின் சித்தாராபானு வேலை பார்த்து வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் இனாமுல்லா(54). மனைவியை பிரிந்து வசித்து வந்த இவர், வெளிநாட்டிற்கு வேலைக்கு ஆட்கள் அனுப்பி வைக்கும் ஏஜெண்டாக இருந்தார்.

  இதுபற்றி தகவல் அறிந்த ஷெரின் சித்தாராபானு, இனாமுல்லாவை தொடர்பு கொண்டு வேலை கேட்டுள்ளார். அப்போது அவர் வெளி நாட்டிற்கு வேலைக்கு அனுப்ப நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியதால் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அவர்கள் நெருங்கி பழகி வந்தனர்.

  இதனிடையே, கடந்த சில மாதங்களாக இனாமுல்லாவுடன் பேசுவதை ஷெரின் சித்தாராபானு திடீரென நிறுத்திக்கொண்டார். இதனால் அவர் தன்னிடம் பேசுமாறும், திருமணம் செய்து கொள்ளும்படியும் ஷெரின் சித்தாரா பானுவை வற்புறுத்தி உள்ளார். ஆனால் அதற்கு அவர் சம்மதிக்கவில்லை. இதனால் ஷெரின் சித்தாராபானு மீது அவருக்கு ஆத்திரம் ஏற்பட்டது.

  இந்தநிலையில், நேற்று காலை வழக்கம்போல் அவர் வேலைக்கு சென்றார். அப்போது ஐஸ்கிரீம் பார்லரில் யாரும் இல்லாததை அறிந்த இனாமுல்லா, கடைக்குள் திடீரென்று புகுந்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியதாக தெரிகிறது. அதற்கு ஷெரின் சித்தாராபானு மறுத்து தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர் ஏற்கனவே தயாராக மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்த முயன்றார். அப்போது ஷெரின் சித்தாராபானு கூச்சலிட்டார். அவரது சத்தம் கேட்டு பொதுமக்கள் அந்த கடை முன்பு திரண்டனர்.

  ஆனால் பொதுமக்கள் வந்துவிடுவார்களோ? என பயந்த அவர் கடையின் ஷட்டரை பூட்டிக்கொண்டார். பின்னர் கத்தியை எடுத்து ஷெரின் சித்தாராபானுவின் வயிறு, கழுத்து உள்ளிட்ட பல இடங்களில் சரமாரியாக குத்தி படுகொலை செய்தார். இதையடுத்து இனாமுல்லா அந்த கடைக்குள்ளேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

  இது குறித்து தகவல் அறிந்த சூரமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். பின்னர் கடையின் ஷட்டரை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, ஷெரின் சித்தாராபானு கொலை செய்யப்பட்டும், இனாமுல்லா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களது உடல்களை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

  பெண்ணை கொலை செய்து விட்டு இனாமுல்லா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது இனாமுல்லா எழுதி இருந்த ஒரு கடிதத்தை போலீசார் கைப்பற்றினர்.

  அந்த கடிதத்தில் அவர் எழுதி இருப்பதாவது:-

  ஷெரின் சித்தாராபானுவுடன் எனக்கு கடந்த 4 வருடங்களாக தொடர்பு இருந்தது. எங்களது தகாத உறவினால் நான் எனது குடும்பத்தை இழந்து அனாதையாகிவிட்டேன். ஒரு கட்டத்தில் எல்லாவற்றையும் இழந்து தவித்து வந்தநிலையில் அவரை திருமணம் செய்து கொண்டு நல்ல முறையில் வாழலாம் என்ற நம்பிக்கையில் திருமணம் செய்து கொள்வது சம்பந்தமாக 10 பக்கத்தில் ஒரு கடிதம் எழுதி கொடுத்தேன்.

  அதில், நான் உன்னை முழுமையாக நம்புகிறேன். உனக்கு உண்மையான கணவனாக வாழ்ந்து உனது களங்கத்தை என்னால் ஏற்பட்ட அவமானங்களை முழுமையாக நீக்கிட உறுதி அளிக்கிறேன். எனது மனைவி, மகள், உறவினர்கள் அனைவரும் என்னை முழுமையாக ஒதுக்கி விட்டார்கள் என கூறி இருந்தேன்.

  இறுதியான எனது முயற்சியையும் அவள் உதாசீனப் படுத்தி விட்டாள். இதனால் ஷெரின் சித்தாராபானுவை கொலை செய்து விட முடிவு செய்து, இதனை நிறைவு செய்கிறேன். வாழ்வதற்கான தகுதியை நான் இழந்து விட்டேன். நான் எனது பாவத்தை ஒப்புக்கொண்டு பகிரங்கமாக எங்கள் இருவரின் மரண தண்டனையை நிறைவேற்றுகிறேன். எங்கள் இருவரின் குடும்பத்தினர் எங்களை மன்னிக்க வேண்டும். இப்படிக்கு பாவத்தால் கொலை மற்றும் தற்கொலைக்காரன் இனாமுல்லா என எழுதி கையெழுத்து போட்டு உள்ளார். நான் செய்யப்போகும் கொலைக்கும், தற்கொலைக்கும் நானே பொறுப்பு.

  இவ்வாறு அந்த கடிதத்தில் இனாமுல்லா எழுதி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

  கள்ளக்காதல் விவகாரத்தில் கத்தியால் குத்தி பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் சேலத்தில் பர பரப்பை ஏற்படுத்தி உள்ளது.#tamilnews
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வள்ளியூரில் இளம்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து கைதான வாலிபருக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வலியுறுத்தி கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
  வள்ளியூர்:

  குமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள பெருஞ்சிலம்பு, வலியவிளை கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகள் மெர்சி (வயது23). இவர் வள்ளியூரில் தங்கி இருந்து அங்குள்ள பிரபல ஜவுளிக்கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

  அதே கடையில் திருக்குறுங்குடி அருகே உள்ள மகிழடி கிராமத்தை சேர்ந்த ரவீந்திரன் (31) என்பவரும் ஊழியராக வேலை பார்த்து, 15 நாட்களுக்கு முன்பு வேலையை விட்டு நின்று விட்டார். ரவீந்திரனும், மெர்சியும் வேலை பார்க்கும் போது அடிக்கடி பேசி பழகினர். இதில் அவர்களுக்குள் காதல் ஏற்பட்டது.

  பின்னர் ரவீந்திரன் வேலையை விட்டு நின்று விட்டதால், மெர்சி அவருடன் பேசி பழகுவதை நிறுத்தி விட்டார்.

  இதில் ஆத்திரம் அடைந்த ரவீந்திரன் நேற்று முன்தினம், மெர்சியை வள்ளியூர் பஸ் நிலையம் அருகே அழைத்து பேசி கொண்டு இருந்தார். அப்போது அவர் தன்னை திருமணம் செய்ய வலியுறுத்தி உள்ளார். ஆனால் மெர்சி அதற்கு மறுத்தார். இதனால் ஆத்திரத்தில் இருந்த ரவீந்திரன், மெர்சியை கத்தியால் சரமாரி குத்தி கொலை செய்தார். இந்த சம்பவம் வள்ளியூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

  இதுதொடர்பாக வள்ளியூர் டி.எஸ்.பி. கனகராஜ், இன்ஸ்பெக்டர் அனிதா, சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவீந்திரனை கைது செய்து விசாரணை நடத்தினர்.

  அப்போது அவர், “தன்னை காதலித்துவிட்டு திருமணம் செய்ய மறுத்ததால், மெர்சியை குத்தி கொலை செய்ததாக” வாக்குமூலம் அளித்தார். இதைத்தொடர்ந்து போலீசார் அவரிடம் இருந்து கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட கத்தியை பறிமுதல் செய்தனர். அவரை நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

  இந்த நிலையில் இந்த கொலை வழக்கில் கைதான ரவீந்திரனுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும், பாதிக்கப்பட்ட மெர்சி குடும்பத்துக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று வலியவிளை கிராம மக்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மனோ தங்கராஜ், பிரின்ஸ் உள்பட ஏராளமானவர்கள் குமரி மாவட்டம் குமாரபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். #tamilnews
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ராமநாதபுரம் அருகே அரிவாளால் கழுத்தை அறுத்து இளம்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து அவரது கணவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
  ராமநாதபுரம்:

  ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் புதுகுடியிருப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் முனியசாமி (வயது42). இவருக்கு திருமணமாகி விவாகரத்தாகி விட்டது.

  இதையடுத்து முனியசாமி துபாய்க்கு வேலைக்கு சென்றார். அப்போது அவருக்கும், அங்கு பணி புரிந்த திருச்சியை சேர்ந்த மும்தாஜ் பேகம் (40) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து 2 பேரும் திருமணம் செய்து கொண்டனர்.

  பின்னர் மனைவியுடன் ஊர் திரும்பிய முனியசாமி புதுக்குடியிருப்பு கிராமத்தில் குடும்பம் நடத்தி வந்தார். இவர்களுக்கு 13 வயதில் பெண் குழந்தை உள்ளது.

  இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக கணவன்- மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டது. சில நாட்களுக்கு முன்பு இதுதொடர்பாக தேவிபட்டினம் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் இருவரையும் அழைத்து பேசி சமரசம் செய்து வைத்தனர். நேற்று மீண்டும் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது.

  இன்று காலை 6.30 மணிக்கு சமையல் அறையில் மும்தாஜ்பேகம் சமைத்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த முனியசாமி தகராறில் ஈடுபட்டு திடீரென்று அங்கிருந்த அரிவாளால் மனைவியின் கழுத்தை அறுத்து விட்டு தப்பினார். இதில் மும்தாஜ்பேகம் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார்.

  இதுகுறித்து தகவல் அறிந்த தேவிபட்டினம் போலீசார் சம்பவ இடம் வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தலைமறைவான முனியசாமியை தேடி வருகின்றனர். #tamilnews
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கோத்தகிரியில் இளம்பெண் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து கொலையாளிகளை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
  கோத்தகிரி:

  நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கட்டப்பெட்டு அம்பேத்கார் நகரை சேர்ந்த ராஜேஸ்குமாரின் மனைவி லோகேஸ்வரி (வயது 26). கோத்தகிரி ரோஸ் காட்டேஜ் பகுதியில் உள்ள வீட்டில் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். அவரது 3 வயது மகன் கார்த்திகேயனும் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் உயிருடன் மீட்கப்பட்டார்.

  கொலையாளிகளை கைது செய்ய நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகப்பிரியா குன்னூர் டி.எஸ்.பி.க்கு உத்தரவிட்டார். குன்னூர் டி.எஸ்.பி. கிருஷ்ணசாமி தலைமையில் 4 தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். முதல் கட்டமாக லோகேஸ்வரியின் செல்போன் எண்களை சோதனை செய்தனர். அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிரா பதிவுகளையும் ஆராய்ந்தனர்.

  கழுத்து அறுக்கப்பட்ட சிறுவன் கார்த்திகேயன் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. சிறுவனிடம் விசாரணை நடத்தினால் கொலையாளிகள் குறித்து விபரம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர். இந்நிலையில் தனிப்படை போலீசார் ஈரோட்டில் பதுங்கியிருந்த கொலையாளி ஒருவரை பிடித்து விட்டதாக தகவல்கள் பரவியது. #tamilnews
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கோத்தகிரியில் பூட்டிய வீட்டுக்குள் இளம்பெண் கழுத்து அறுத்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  கோத்தகிரி:

  நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கட்டப்பெட்டு அம்பேத்கார் நகரை சேர்ந்தவர் ராஜேஸ்குமார். இவர் சவுதி அரேபியாவில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி லோகேஸ்வரி (வயது 26). இவர்களுக்கு 3 வயதில் கார்த்திகேயன் என்ற மகன் உள்ளார்.

  மகனுடன் லோகேஸ்வரி கோத்தகிரி ரோஸ் காட்டேஜ் பகுதியில் வசித்து வந்தார். ஞாயிற்றுக்கிழமை தோறும் லோகேஸ்வரி மற்றும் அவரது மகனை மாமனார், மாமியார் வீட்டுக்கு வந்து பார்த்துச்செல்வது வழக்கம். அதேபோல் நேற்று இரவும் அங்கு வந்தனர்.

  வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. கதவை தட்டிப்பார்த்தனர். ஆனால் திறக்கவில்லை. சந்தேகம் அடைந்த அவர்கள் வீட்டின் பின் பக்க கதவுக்கு அருகே சென்று பார்த்தபோது கதவு வழியே ரத்தம் வழிந்து கொண்டிருந்தது.

  இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் அலறி சத்தம்போட்டனர். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தனர்.

  இது குறித்த கோத்தகிரி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.

  அங்கு லோகேஸ்வரி மற்றும் அவரது மகன் கார்த்திகேயன் ஆகியோர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்தவெள்ளத்தில் கிடந்தனர். லோகேஸ்வரியை பார்த்தபோது அவர் இறந்தது தெரியவந்தது. சிறுவன் கார்த்திகேயனுக்கு உயிர் இருப்பது தெரியவந்தது.

  இதையடுத்து கார்த்திகேயனை போலீசார் மீட்டு கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டான்.

  அங்கு ஆபத்தான நிலையில் கார்த்திகேயனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

  கொலை செய்யப்பட்ட லோகேஸ்வரியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு போலீசார் மோப்ப நாய் மில்டனை வரவழைத்து துப்பு துலங்கினர். அது சம்பவ இடத்தில் இருந்து சிறிது தூரம் ஓடி நின்றது.

  தகவல் அறிந்ததும் நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகபிரியா சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார். கொலை குறித்து குன்னூர் டி.எஸ்.பி. கோத்தகிரி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  இந்த சம்பவம் கோத்தகிரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #tamilnews
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அரக்கோணம் அருகே இளம்பெண் கற்பழித்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
  அரக்கோணம்:

  அரக்கோணம் அடுத்த குருவராஜப்பேட்டை காந்தி நகரை சேர்ந்தவர் செல்வி (வயது 30). இவரது கணவர் பாபு, சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டதால், 8 வயது மகனுடன் வசித்து வந்தார். திருத்தணி அருகில் உள்ள ஒரு ஆடை தயாரிப்பு தொழிற்சாலையில் செல்வி வேலை செய்துவந்தார்.

  செல்வி நேற்று இரவு வீட்டில் தனியாக இருந்தார். அப்போது, வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் செல்வியை கற்பழிக்க முயன்றுள்ளனர். செல்வி தப்பிக்க முயன்றதாக தெரிகிறது.

  ஆத்திரமடைந்த கும்பல், அவரை தாக்கி வலுகட்டாயமாக கற்பழித்துள்ளனர். பின்னர், கழுத்தை நெரித்து செல்வியை கொடூரமாக கொலை செய்தனர். உடலை நிர்வாணமாக போட்டுவிட்டு மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

  செல்வியின் உடலை அவரது மகன் தான் முதலில் பார்த்தார். இந்த சிறுவனின் கதறல் சத்தம் கேட்ட பிறகே அக்கம், பக்கத்தினர் வீட்டு முன்பு குவிந்தனர். இதுபற்றி அரக்கோணம் தாலுகா போலீசாருக்கு உடனடியாக தகவல் கொடுத்தனர்.

  இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

  மேலும், வழக்குப்பதிவு செய்த போலீசார், கள்ளக்காதல் தகராறில் செல்வி கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #tamilnews
  ×