என் மலர்

    செய்திகள்

    பனைக்குளத்தில் அரிவாளால் கழுத்தை அறுத்து இளம்பெண் கொலை- கணவருக்கு வலைவீச்சு
    X

    பனைக்குளத்தில் அரிவாளால் கழுத்தை அறுத்து இளம்பெண் கொலை- கணவருக்கு வலைவீச்சு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ராமநாதபுரம் அருகே அரிவாளால் கழுத்தை அறுத்து இளம்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து அவரது கணவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் புதுகுடியிருப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் முனியசாமி (வயது42). இவருக்கு திருமணமாகி விவாகரத்தாகி விட்டது.

    இதையடுத்து முனியசாமி துபாய்க்கு வேலைக்கு சென்றார். அப்போது அவருக்கும், அங்கு பணி புரிந்த திருச்சியை சேர்ந்த மும்தாஜ் பேகம் (40) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து 2 பேரும் திருமணம் செய்து கொண்டனர்.

    பின்னர் மனைவியுடன் ஊர் திரும்பிய முனியசாமி புதுக்குடியிருப்பு கிராமத்தில் குடும்பம் நடத்தி வந்தார். இவர்களுக்கு 13 வயதில் பெண் குழந்தை உள்ளது.

    இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக கணவன்- மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டது. சில நாட்களுக்கு முன்பு இதுதொடர்பாக தேவிபட்டினம் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் இருவரையும் அழைத்து பேசி சமரசம் செய்து வைத்தனர். நேற்று மீண்டும் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது.

    இன்று காலை 6.30 மணிக்கு சமையல் அறையில் மும்தாஜ்பேகம் சமைத்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த முனியசாமி தகராறில் ஈடுபட்டு திடீரென்று அங்கிருந்த அரிவாளால் மனைவியின் கழுத்தை அறுத்து விட்டு தப்பினார். இதில் மும்தாஜ்பேகம் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த தேவிபட்டினம் போலீசார் சம்பவ இடம் வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தலைமறைவான முனியசாமியை தேடி வருகின்றனர். #tamilnews
    Next Story
    ×