என் மலர்tooltip icon

    வேலூர்

    • அதிகாரிகள் தகவல்
    • வேலூர் அரசு மருத்துவமனையில் விட்டுச்சென்றனர்

    வேலூர்:

    வேலூர் பெண்ட்லேண்ட் அரசு மருத்துவமனை புறநோயா ளிகள் பிரிவு பகுதியில் கடந்த மாதம் 20-ந்தேதி பிறந்து சில நாட்களே ஆன ஆண் குழந்தை அழுது கொண்டிருந்தது.

    அந்த குழந்தையை அங்குவிட்டு சென்ற பெற்றோர் யார் என்று தெரியவில்லை. இதையடுத்து குழந்தை சிகிச்சைக்காக அடுக் கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது.

    அந்த குழந்தையின் பெற்றோர் மற்றும் அதனை விட்டு சென்ற பெண் குறித்து வேலூர் தெற்கு போலீசார் விசாரித்து வரு கின்றனர்.

    குழந்தைக்கு இதுவரை யாரும் உரிமை கோர வில்லை. அதனால் குழந்தைகள் நலக்குழுமத்தின் மூலம் சென்னையில் உள்ள தத்து நிறுவனத்திடம் குழந்தை வழங் கப்பட உள்ளது.

    இந்த குழந்தையின் பெற்றோர் உரிய ஆதாரங்களுடன் வேலூர் சுற்றுலா மாளிகை எதிரில் உள்ள மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தை நேரில் அணுகி பெற்று கொள்ளலாம் என்று குழந்தை பாது காப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • வேலை செய்து கொண்டிருந்த போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    காட்பாடி, விருதம்பட்டு அடுத்த மோட்டூரை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 56). இவர் நேற்று தனது வீட்டு குளியல் வேலை அறையில் ஒயரிங் செய்து கொண்டு இருந்தார்.

    அப்போது எதிர்பாராத விதமாக கிருஷ்ணன் மீது மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட கிருஷ்ணன் படுகாயம் அடைந்தார்.

    உறவினர்கள் கிருஷ்ணனை மீட்டு சிகிச்சை க்காக வேலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து விருதம்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 1000 பேர் பங்கேற்பு
    • பணிகள் பாதிப்பு

    வேலூர்:

    வேலூர் மாநகராட்சி 4 மண்டலங்களில் 60 வார்டுகள் உள்ளன. 4 மண்டலங்களிலும் 1200 பெண் பணியாளர்களும் 400 ஆண் பணியாளர்களும் ஒப்பந்த துப்புரவு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஒப்பந்த பணியா ளர்களுக்கு தினக்கூலியாக ரூ.350 வழங்கப்பட்டு வருகிறது. தினக்கூலியை உயர்த்தி வழங்க வேண்டும் என ஒப்பந்த பணியாளர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து கலெக்டர் குமாரவேல் பாண்டியன் ஒப்பந்த பணியாளர்களுக்கு ரூ.538 வழங்க வேண்டும் என ஆணை பிறப்பித்தார்.

    இருப்பினும் ஒப்பந்த பணியாளர்களுக்கு கூலியை உயர்த்தி வழங்காமல் பழையபடி சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.

    கூலியை உயர்த்த கோரி அதிகாரிகள் நேற்று முன்தினம் வரை அவகாசம் கேட்டனனர். ஆனால் இதுவரை அதிகாரிகள் எந்தவித பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை.

    இதனால் ஒப்பந்த பணியாளர்கள் பகுஜன் சமாஜ் ஒப்பந்த பணியாளர் சங்க பொதுச் செயலாளர் பெருமாள் தலைமையில் இன்று வேலையை புறக்கணித்து மாநகராட்சி அலுவலக நுழைவு வாயிலில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மேலும் கடந்த 10 மாதங்களாக ஒப்பந்த பணியாளர் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் இஎஸ்ஐ பிஎப் அவர்களது கணக்கில் வரவு வைக்காமல் உள்ளதாக கூறப்படுகிறது.

    இ.எஸ்.ஐ.பி.எப். தங்களது கணக்கில் வரவு வைக்கக் கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். கூலியை உயர்த்து வழங்க விட்டால் 10 நாட்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

    • சாலையை கடந்தபோது பரிதாபம்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    வேலூர்:

    கர்நாடக மாநிலம், கோலாரை சேர்ந்தவர் லோகநாதன். இவரது மனைவி ஜெகதா (வயது 70). இவர் கொணவட்டத்தில் உள்ள தனது மகள் வீட்டிற்கு வந்தார்.

    நேற்று முன்தினம் காலை கொணவட்டம் அரசு போக்குவரத்து பணி மனை அருகே சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையை கடந்தார்.

    அப்போது அந்த வழியாக வேகமாக வந்த லாரி ஜெகதா மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த ஜெகதா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த வேலூர் வடக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஜெகதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து கே.வி.குப்பத்தை சேர்ந்த லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

    • போக்சோவில் கைது
    • சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்

    வேலூர்:

    ஆந்திர மாநிலம், சித்துார் அடுத்த பலமநேரி அருகே உள்ள பெத்தபஞ்சாணி பகுதியைச் சேர்ந்தவர் காலேஷா (வயது 25). இவர் குடியாத்தம் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில் தனது உறவினர் வீட்டில் தங்கியிருந்து குடியாத்தம் நகரில் உள்ள கடைகளுக்கு சாம்பிராணி புகை போடும் வேலை செய்து வருகிறார்.

    இந்நிலையில் காலேஷா, வழக்கம் போல் காட்பாடி 'சாலையில் உள்ள கடைகளுக்கு புகைபோட சென்றார். அப்போது அங்குள்ள ஒரு கடையில் சாம்பிராணி புகை போடும்போது கடையில் இருந்த 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

    இதையடுத்து சிறுமி கூச்சலிட்டார். சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் காலஷாவை பிடித்து குடியாத்தம் அனைத்து மகளிர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    அனைத்து மகளிர் போலீசிஸ் இன்ஸ்பெக்டர் ஷியாமளா தலைமையிலான போலீசார், போக்சோ சட்டத்தில் காலேஷாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஒருவர் படுகாயம்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    அணைக்கட்டு:

    ஆம்பூரை சேர்ந்த கலைச்செல்வன் (வயது 24) இவரது நண்பர்களான விக்னேஷ் (23) ராம்குமார் (28) ஆகியோர். வேலூரில் இருந்து கலைச்செல்வனை ஆம்பூரில் விடுவதற்காக ஒரே பைக்கில் சென்றனர்.

    வெட்டுவானம் அடுத்த சின்னகோவிந்தம்பாடி அருகே வாகனம் செல்லும் போது நிலை தடுமாறி கீழே விழுந்தனர். இதில் முன்னால் சென்று கொண்டிருந்த அரசு பஸ்சில் பின்பக்க சக்கரத்தில் கலைச்செல்வன் சிக்கினார்.

    பின் சக்கரம் ஏறி இறங்கி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக கலைச்செல்வன் இறந்தார்.

    தூக்கி வீசப்பட்ட நண்பர்கள் விக்னேஷ் மற்றும் ராம்குமார் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்ரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

    கலைச்செல்வன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பள்ளிகொண்டா போலீசார் அனுப்பி வைத்து விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன.

    • சி.சி.டி.வி கேமரா பதிவுகளை ஆய்வு
    • கும்பலுக்கு வலைவீச்சு

    வேலூர்:

    குடியாத்தம் அடுத்த ஆர்.எஸ்.ரோடு, விஸ்வநாதன் நகரைச் சேர்ந்தவர் குபேந்திரன்(வயது 61). ஓய்வு பெற்ற ராணுவ வீரர்.

    இவர் குடியாத்தத்தில் உள்ள ஒரு வங்கியில் ரூ.1.50 லட்சம் பணத்தை பெற்று கொண்டு தனது பைக் பெட்டியில் வைத்தார். பின்னர் அங்கிருந்து மருந்து கடைக்கு சென்று மாத்திரை

    வாங்கிக்கொண்டு வீட்டுக்கு சென்றார். இதனையடுத்து பெட்டியை திறந்து பார்த்த போது பணம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    இதுகுறித்து குபேந்திரன் குடியாத்தம் டவுன் போலீசில் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த போலீசார் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • 10 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட அரசு பொது கழிப்பிடம் இடிக்கப்பட்டது
    • அதே பகுதியை சேர்ந்தவர் போலீசில் புகார்

    அணைக்கட்டு:

    வேலுர் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த தோளப்பள்ளி ஊராட்சியில் உள்ள காமராஜபுரம் பகுதியில் பொதுமக்களின் வசதிக்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அரசு பொது கழிப்பிடம் கட்டப்ப ட்டுள்ளது.

    தற்போது அந்த கட்டிடம் பழுதடைந்து காணப்பட்டது.

    இதனை இடித்துவிட்டு, அந்த இடத்தில் புதியதாக மேநீர்தேக்கத்தொட்டி கட்ட ஊராட்சி நிர்வாகத்தினர் திட்டமிட்டுள்ளனர்.

    அதன்படி கடந்த மாதம் 20-ந் தேதி ஊராட்சி மன்ற தலைவி கல்பனா மற்றும் அவரது கணவர் சுரேஷ் ஆகியோர் சேர்ந்து பொக்லைன் எந்திரம் மூலம் பொதுகழிப்பிட கட்டிடத்தை இடித்துள்ளனர். மேலும் கழிவறையில் இருந்த இரும்பு கதவுகள் மற்றும் கேபிள் ஒயர்களை எடுத்துச்சென்றுள்ளனர்.

    இதுகுறித்து அதே பகுதியை சேர்ந்த பாக்கியராஜ், ஊராட்சி மன்ற தலைவி தனது கணவருடன் சேர்ந்து கதவு மற்றும் கம்பிகளை திருடிச் சென்றதாக வேப்பங்குப்பம் போலீசில் புகார் செய்தார்.

    அதன்பேரில் இன்ஸ்பெக்டர் நாகராஜ், தோளப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் கல்பனா, அவரது கணவர் சுரேஷ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • உடல் நலம் பாதிக்கப்பட்டதால் மனஉளைச்சலில் காணப்பட்டார்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    வேலூர்:

    வேலூர் மாவட்ட அணைக்கட்டு புலிமேடு அருகே கொல்லை மேடு கிராமத்தைச் சேர்ந்தவர் குணசேகரன். இவரது மனைவி திவ்ய (வயது 21). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.

    திவ்யா உடல் நலம் பாதிக்கப்பட்டு அவதி அடைந்து வந்தனர். இதனால் மனஉளைச்சலில் காணப்பட்டார். திவ்யா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அரியூர் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வாக்குச்சாவடி முகவர்கள் பணிகள் குறித்து பேசினார்
    • பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    வேலூர்:

    வேலூர் மாவட்ட தி.மு.க. அவசர செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட அவை தலைவர் முகமது சகி தலைமை தாங்கினார். வேலூர் மாவட்ட செயலாளர் ஏ. பி.நந்தகுமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு வாக்குச்சாவடி முகவர்கள் பணிகள் குறித்து பேசினார்.

    கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் நரசிம்மன், வேலூர் மாநகர செயலாளர் கார்த்திகேயன் எம்.எல்.ஏ.அமலு விஜயன் எம்.எல்.ஏ., மாநகராட்சி மேயர் சுஜாதா ,துணை மேயர் சுனில் குமார், காட்பாடி ஒன்றிய குழு தலைவர் வேல்முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் தி.மு.க. வடக்கு மண்டல வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி பாசறை கூட்டம் வருகிற 22-ந்தேதி திருவண்ணாமலையில் நடக்கிறது.

    இதில் வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குசாவடி முகவர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.

    தி.மு.க. மகளிர் அணி மாநாட்டை சிறப்பாக நடத்திய முதல்அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவிப்பது, மகளிர் உரிமை மாநாடு வெற்றி பெற மகளிர் அணி நிர்வாகிகள் அனைவரையும் ஒருங்கிணைத்த கனிமொழி எம்.பி.க்கு வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவிப்பது என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்தது
    • கோஷங்களை எழுப்பினர்

    வேலூர்:

    தமிழ் நாடு மருந்து விற்பனை பிரதிநிதிகள் சங்கத்தின் வேலூர் கிளை சார்பில் வேலூர் கலெக்டர் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் கெஜராஜ் தலைமை தாங்கினார். இதில் மருந்து விற்பனை பிரதிநிதிகளுக்கான நிரந்தர வேலை விதிகள் உருவாக்குதல், மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்கள் மீதான ஜிஎஸ்டி வரியை குறைத்தல், அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மருத்துவ பிரதிநிதிகள் தடையின்றி வேலை செய்ய வழிவகை செய்ய கோருதல், மருத்துவ பிரதிநிதிகள் அவர் சார்ந்த பணியிடங்களுக்கு தடையின்றி நுழைவதை உறுதி செய்தல் உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    • ஒப்பந்ததாரருக்கு எச்சரிக்கை
    • சட்டபடி நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு அறிவுரை

    வேலூர்:

    வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள ஹோலி கிராஸ் பள்ளியில் பள்ளி கல்வித்துறை சார்பில் மாதிரி பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி மற்றும் மாதிரி பள்ளி முதல்வர் தாரகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கலெக்டர் பேசியதாவது:-

    மாதிரி பள்ளிகளில் மாணவர்கள் தேர்ச்சி 100 சதவிகிதமாக இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. கல்வியில் மாணவர்கள் கவணம் செலுத்தி நல்ல முறையில் படிக்க வேண்டும். கல்வி கற்பதோடு மட்டுமல்லாமல், சமுதாயத்திற்காக சேவை செய்யும் துறைகளில் பணியாற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். இதில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    இதனை தொடர்ந்து கலெக்டர் சத்துவாச்சாரி காந்தி நகர், மந்தை வெளி, சக்தி நகர், பூங்காநகர் ஆகிய பகுதிகளில் உள்ள சாலைகளை ஆய்வு செய்தார். அப்போது சாலையின் நடுவே பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளங்களின் மூடிகள் சிலாப்கள் உடைந்து மக்கள் தவறி உள்ளே விழும் ஆபத்தான நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    உடனடியாக ஒப்பந்ததாரரை வரவழைத்து எச்சரிக்கை செய்ததுடன், அந்த பணிகளை விரைந்து முடிக்கவில்லை என்றால் அவர் மீது வழக்குபதிவு செய்து சட்டபடியான நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு அறிவுறுத்தினார்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×