என் மலர்tooltip icon

    வேலூர்

    • 10 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட அரசு பொது கழிப்பிடம் இடிக்கப்பட்டது
    • அதே பகுதியை சேர்ந்தவர் போலீசில் புகார்

    அணைக்கட்டு:

    வேலுர் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த தோளப்பள்ளி ஊராட்சியில் உள்ள காமராஜபுரம் பகுதியில் பொதுமக்களின் வசதிக்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அரசு பொது கழிப்பிடம் கட்டப்ப ட்டுள்ளது.

    தற்போது அந்த கட்டிடம் பழுதடைந்து காணப்பட்டது.

    இதனை இடித்துவிட்டு, அந்த இடத்தில் புதியதாக மேநீர்தேக்கத்தொட்டி கட்ட ஊராட்சி நிர்வாகத்தினர் திட்டமிட்டுள்ளனர்.

    அதன்படி கடந்த மாதம் 20-ந் தேதி ஊராட்சி மன்ற தலைவி கல்பனா மற்றும் அவரது கணவர் சுரேஷ் ஆகியோர் சேர்ந்து பொக்லைன் எந்திரம் மூலம் பொதுகழிப்பிட கட்டிடத்தை இடித்துள்ளனர். மேலும் கழிவறையில் இருந்த இரும்பு கதவுகள் மற்றும் கேபிள் ஒயர்களை எடுத்துச்சென்றுள்ளனர்.

    இதுகுறித்து அதே பகுதியை சேர்ந்த பாக்கியராஜ், ஊராட்சி மன்ற தலைவி தனது கணவருடன் சேர்ந்து கதவு மற்றும் கம்பிகளை திருடிச் சென்றதாக வேப்பங்குப்பம் போலீசில் புகார் செய்தார்.

    அதன்பேரில் இன்ஸ்பெக்டர் நாகராஜ், தோளப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் கல்பனா, அவரது கணவர் சுரேஷ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • உடல் நலம் பாதிக்கப்பட்டதால் மனஉளைச்சலில் காணப்பட்டார்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    வேலூர்:

    வேலூர் மாவட்ட அணைக்கட்டு புலிமேடு அருகே கொல்லை மேடு கிராமத்தைச் சேர்ந்தவர் குணசேகரன். இவரது மனைவி திவ்ய (வயது 21). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.

    திவ்யா உடல் நலம் பாதிக்கப்பட்டு அவதி அடைந்து வந்தனர். இதனால் மனஉளைச்சலில் காணப்பட்டார். திவ்யா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அரியூர் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வாக்குச்சாவடி முகவர்கள் பணிகள் குறித்து பேசினார்
    • பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    வேலூர்:

    வேலூர் மாவட்ட தி.மு.க. அவசர செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட அவை தலைவர் முகமது சகி தலைமை தாங்கினார். வேலூர் மாவட்ட செயலாளர் ஏ. பி.நந்தகுமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு வாக்குச்சாவடி முகவர்கள் பணிகள் குறித்து பேசினார்.

    கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் நரசிம்மன், வேலூர் மாநகர செயலாளர் கார்த்திகேயன் எம்.எல்.ஏ.அமலு விஜயன் எம்.எல்.ஏ., மாநகராட்சி மேயர் சுஜாதா ,துணை மேயர் சுனில் குமார், காட்பாடி ஒன்றிய குழு தலைவர் வேல்முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் தி.மு.க. வடக்கு மண்டல வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி பாசறை கூட்டம் வருகிற 22-ந்தேதி திருவண்ணாமலையில் நடக்கிறது.

    இதில் வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குசாவடி முகவர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.

    தி.மு.க. மகளிர் அணி மாநாட்டை சிறப்பாக நடத்திய முதல்அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவிப்பது, மகளிர் உரிமை மாநாடு வெற்றி பெற மகளிர் அணி நிர்வாகிகள் அனைவரையும் ஒருங்கிணைத்த கனிமொழி எம்.பி.க்கு வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவிப்பது என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்தது
    • கோஷங்களை எழுப்பினர்

    வேலூர்:

    தமிழ் நாடு மருந்து விற்பனை பிரதிநிதிகள் சங்கத்தின் வேலூர் கிளை சார்பில் வேலூர் கலெக்டர் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் கெஜராஜ் தலைமை தாங்கினார். இதில் மருந்து விற்பனை பிரதிநிதிகளுக்கான நிரந்தர வேலை விதிகள் உருவாக்குதல், மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்கள் மீதான ஜிஎஸ்டி வரியை குறைத்தல், அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மருத்துவ பிரதிநிதிகள் தடையின்றி வேலை செய்ய வழிவகை செய்ய கோருதல், மருத்துவ பிரதிநிதிகள் அவர் சார்ந்த பணியிடங்களுக்கு தடையின்றி நுழைவதை உறுதி செய்தல் உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    • ஒப்பந்ததாரருக்கு எச்சரிக்கை
    • சட்டபடி நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு அறிவுரை

    வேலூர்:

    வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள ஹோலி கிராஸ் பள்ளியில் பள்ளி கல்வித்துறை சார்பில் மாதிரி பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி மற்றும் மாதிரி பள்ளி முதல்வர் தாரகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கலெக்டர் பேசியதாவது:-

    மாதிரி பள்ளிகளில் மாணவர்கள் தேர்ச்சி 100 சதவிகிதமாக இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. கல்வியில் மாணவர்கள் கவணம் செலுத்தி நல்ல முறையில் படிக்க வேண்டும். கல்வி கற்பதோடு மட்டுமல்லாமல், சமுதாயத்திற்காக சேவை செய்யும் துறைகளில் பணியாற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். இதில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    இதனை தொடர்ந்து கலெக்டர் சத்துவாச்சாரி காந்தி நகர், மந்தை வெளி, சக்தி நகர், பூங்காநகர் ஆகிய பகுதிகளில் உள்ள சாலைகளை ஆய்வு செய்தார். அப்போது சாலையின் நடுவே பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளங்களின் மூடிகள் சிலாப்கள் உடைந்து மக்கள் தவறி உள்ளே விழும் ஆபத்தான நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    உடனடியாக ஒப்பந்ததாரரை வரவழைத்து எச்சரிக்கை செய்ததுடன், அந்த பணிகளை விரைந்து முடிக்கவில்லை என்றால் அவர் மீது வழக்குபதிவு செய்து சட்டபடியான நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு அறிவுறுத்தினார்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • சாலையில் நிறுத்திவிட்டு சந்தை வளாகத்திற்கு சென்றார்
    • போலீசார் விசாரணை

    அணைக்கட்டு:

    அகரம்சேரி அடுத்த காளப்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் மகேந்திரன் ( வயது 49), கூலித் தொழிலாளி. இவர் தனது பைக்கில் பள்ளிகொண்டா சர்விஸ் சாலையில் நிறுத்திவிட்டு காய்கறிகள் வாங்க சந்தை வளாகத்திற்கு சென்றார்.

    பின்னர் மீண்டும் திரும்பி வந்து பார்த்தபோது பைக் காணவில்லை. அதனை மர்ம நபர்கள் யாரோ திருடி சென்றுள்ளனர். இது குறித்து மகேந்திரன் பள்ளிகொண்டா போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மக்கள் மற்றும் பார்வையாளர்கள் சிரமமின்றி உள்ளே வரவும், வெளியேறவும் இருக்கைகள் மற்றும் திரையரங்க வளாகத்தினை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும்.
    • திரையரங்குகளை சுகாதாரமாக பராமரிக்க போதுமான கால இடைவெளியுடன் உரிய பாதுகாப்பு நடைமுறைகளுடன் சிறப்பு காட்சி நடத்தப்பட வேண்டும்.

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-

    வேலூர் மாவட்டத்தில் லியோ திரைப்படத்தினை திரையிடும் திரையரங்குகளில் 19.10.2023 முதல் 24.10.2023 வரை கூடுதலாக சிறப்புக் காட்சி (ஒரு நாளைக்கு அதிகபட்சம் 5 காட்சிகள்) நடத்திடவும், தொடக்க காட்சி காலை 9 மணிக்கும் கடைசி காட்சி அடுத்த நாள் அதிகாலை 1.30 மணிக்கும் முடிவடையும் வகையில் திரையிடுமாறு அரசு ஆணைகள் வெளியிட்டுள்ளன.

    திரையரங்க உரிமையாளர் திரையரங்கில் சுகாதார குறைபாடுகள் மற்றும் கூட்ட நெரிசல் ஏதும் ஏற்படா வண்ணமும், திரைப்படம் காண்போரின் போக்குவரத்து உள்வருதல், வெளியேறுதல், வாகனம் நிறுத்துதல் மற்றும் இயக்குதல் பாதிக்கப்படாத வகையிலும், காவல் துறையினரின் ஒத்துழைப்பு மற்றும் பாதுகாப்பு பெறுவதற்கு தக்க ஏற்பாடுகள் செய்து கொள்ள வேண்டும்.

    மேலும் மக்கள் மற்றும் பார்வையாளர்கள் சிரமமின்றி உள்ளே வரவும், வெளியேறவும் இருக்கைகள் மற்றும் திரையரங்க வளாகத்தினை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும்.

    திரையரங்குகளை சுகாதாரமாக பராமரிக்க போதுமான கால இடைவெளியுடன் உரிய பாதுகாப்பு நடைமுறைகளுடன் சிறப்பு காட்சி நடத்தப்பட வேண்டும்.

    அரசு நிர்ணயித்துள்ள கட்டணம் மற்றும் பார்கிங் கட்டணம் ஆகியவற்றினை கடைபிடிக்கவும் விதிமீறல்கள் இருப்பின் பொதுமக்கள் வருவாய் கோட்ட அலுவலர், வேலூர்-9445000417, வருவாய் கோட்ட அலுவலர், குடியாத்தம்-9442999120, தாசில்தார்கள் வேலூர்-9445000508, காட்பாடி-9445000510. குடியாத்தம்-9445000509, பேர்ணாம்பட்டு-9486064172 ஆகியோர்களுக்கு புகார் தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • கலெக்டர் குமாரவேல் பாண்டியன் எச்சரிக்கை
    • ஒரு நாளைக்கு அதிகபட்சம் 5 காட்சிகள் மட்டுமே காண்பிக்கப்பட வேண்டும்

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    வேலூர் மாவட்டத்தில் லியோ திரைப்படத்தினை திரையிடும் திரை யரங்குகளில் 19.10.2023 முதல் 24.10.2023 வரை கூடுதலாக சிறப்புக் காட்சி (ஒரு நாளைக்கு அதிகபட்சம் 5 காட்சிகள்) நடத்திடவும், தொடக்க காட்சி காலை 9 மணிக்கும் கடைசி காட்சி அடுத்த நாள் அதிகாலை 1.30 மணிக்கும் முடிவடையும் வகையில் திரையிடுமாறு அரசு ஆணைகள் வெளிட்டுள்ளன.

    திரையரங்க உரிமை யாளர் திரையரங்கில் சுகாதார குறைபாடுகள் மற்றும் கூட்ட நெரிசல் ஏதும் ஏற்படாத வண்ணமும், திரைப்படம் காண்போரின் போக்குவரத்து உள்வருதல் வெளியேறுதல் வாகனம் நிறுத்துதல் மற்றும் இயக்குதல் பாதிக்கப்படாத வகையிலும், காவல் துறையினரின் ஒத்துழைப்பு மற்றும் பாதுகாப்பு பெறு வதற்கு தக்க ஏற்பாடுகள் செய்து கொள்ள வேண்டும்.

    மேலும் மக்கள் மற்றும் பார்வையாளர்கள் சிரமமின்றி உள்ளே வரவும், வெளியேறவும் இருக்கை கள் மற்றும் திரையரங்க வளாகத்தினை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும்.

    திரையரங்குகளை சுகாதாரமாக பராமரிக்க போதுமான கால இடை வெளியுடன் உரிய பாது காப்பு நடைமுறை களுடன் சிறப்பு காட்சி நடத்தப்பட வேண்டும்.

    அரசு நிர்ணயித்துள்ள கட்டணம் மற்றும் பார்கிங் கட்டணம் ஆகியவற்றினை கடைபிடிக்கவும் விதிமீ றல்கள் இருப்பின் பொது மக்கள் வருவாய் கோட்ட அலுவலர், வேலூர்- 9445000417, வருவாய் கோட்ட அலுவலர், குடியாத்தம் - 9442999120, தாசில்தார்கள் வேலூர்- 9445000508, காட்பாடி - 9445000510. குடியாத்தம்- 9445000509, பேர்ணா ம்பட்டு- 9486064172 ஆகியோர்களுக்கு புகார் தெரி விக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • அடிக்கடி பணம் கேட்டு மிரட்டி வந்துள்ளார்
    • போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்

    வேலூர்:

    வேலூர் சார்பனாமேடு பில்டர்பெட் பகுதியை சேர்ந்தவர் அப்துல்கரீம் (வயது 35). இவர் டீக்கடை நடத்தி வருகிறார். இவரிடம் ஓல்டு டவுனை சேர்ந்த கனி(எ)அருணாச்சலம் என்பவர் அடிக்கடி பணம் கேட்டு மிரட்டி வந்துள்ளார்.

    இந்த நிலையில் கடந்த மாதம் 24-ந் தேதி இரவு அப்துல்கரீம் வீட்டிற்கு சென்று அருணாச்சலம் பணம் கேட்டு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    பணம் தர அப்துல்கரீம் மறுக்கவே ஆத்திரமடைந்த அருணாச்சலம், தான் இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியால் கழுத்திலும், கைகளிலும் சரமாரியாக வெட்டினார். இதில் படுகாயமடைந்த அப்துல்கரீம் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்க ப்பட்டார்.

    இதுதொடர்பாக அப்துல்கரீம் கொடுத்த புகாரின் பேரில் வேலூர் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பேபி வழக்குப்பதிவு செய்து அருணாச்சலத்தை கைது செய்து ஜெயிலில் அடைத்தார்.

    இவர் மீது ஏற்கனவே வழிப்பறி, திருட்டு, கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தது போன்ற பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.

    இவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய எஸ்.பி. மணிவண்ணன், கலெக்டர் குமாரவே ல்பாண்டியனுக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் அருணாச்ச லத்தை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். அதற்கான நகலை சிறையில் உள்ள அருணாச்சலத்திடம் தெற்கு போலீசார் நேற்று வழங்கினர்.

    • கண்காணிப்பு கேமரா காட்சி மூலம் தெரியவந்தது
    • பெயர், விவரம் தெரியவில்லை

    வேலூர்:

    கேரளா மாநிலம் ஆலப்புழாவில் இருந்து தன்பாத் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு காட்பாடி வந்தது.

    அப்போது முன்பதிவு பெட்டியில் வாலிபர் ஒருவர் இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் காட்பாடி ரெயில்வே போலீசார் சென்று பார்த்தனர். அப்போது 20 வயது வாலிபர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

    அவர் திருப்பூரில் இருந்து ரெயில் ஏறியதும், ஈரோடு அருகே 2 முறை அபராத தொகை செலுத்தியதும் அதற்கான ரசீது இருந்ததும் தெரியவந்தது. இருப்பினும் அவரது பெயர், விவரம் தெரியவில்லை.

    ரோஸ் நிற சட்டை, கருப்பு நிற ஜீன்ஸ் பேண்ட்டு அணிந்திருந்தார். அவரது உடலை மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து காட்பாடி ரெயில்வே போலீசார் கூறியதாவது:-

    இறந்த வாலிபர் பீகாரை சேர்ந்தவராக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. திருப்பூர் ரெயில் நிலையம் வழியாக வந்த தன்பாத் எக்ஸ்பிரஸ் ெரயிலில் அவர் ஏறியுள்ளார். இது கண்காணிப்பு கேமரா காட்சி மூலம் தெரியவந்துள்ளது.

    ரெயிலில் ஏறும்போது சகஜமாக ஏறியுள்ளார். எனவே நெஞ்சு வலி ஏற்பட்டு இறந்தாரா? அல்லது எப்படி இறந்தார் என பிரேத பரிசோதனை முடிவு வந்த பின்னரே தெரியவரும் என்றனர்.

    • அடிக்கடி மது அருந்தி விட்டு வீட்டிற்கு வருவதால் வாக்குவாதம்
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    வேலூர்:

    வேலூர் சின்ன சங்கரன்பாளையத்தை சேர்ந்தவர் சாந்தகு மார் (வயது 32), சுமை தூக்கும் தொழிலாளி. இவருடைய மனைவி ஹரிப்பிரியா. சாந்தகுமார் அடிக்கடி மது அருந்தி விட்டு வீட்டிற்கு செல்வதாகவும், அதனால் கணவன்- மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

    இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு சாந்தகு மார் குடித்து விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அதனால் கோப மடைந்த ஹரிப்பிரியா வாக்குவாதத்தில் ஈடுபட்டு சாந்தகு மாரை திட்டி உள்ளார்.

    இதில்மனமுடைந்த அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பாகாயம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • துப்பாக்கியால் சுட்டு தூக்கி சென்றனர்
    • மேய்ச்சலுக்காக சென்றது வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை

    அணைக்கட்டு:

    ஒடுகத்தூர் அடுத்த குச்சி பாளையத்தை சேர்ந்தவர் மணி. இவர் குலதெய்வ வழிபாட்டிற்காக கடந்த 2 ஆண்டுகளாக பன்றி ஒன்றை வளர்த்து வருகிறார்.

    பன்றியை தினமும் காலை மேய்ச்சலுக்கு அனுப்பி வைத்துவிட்டு மீண்டும் மாலை கயிற்றால் கட்டி வைப்பது வழக்கம்.

    இந்த நிலையில் கடந்த 14-ந் தேதி பன்றியை மேய்ச்சலுக்காக அவிழ்த்து விட்டார். வெகு நேரமாகியும் பன்றி மாலையில் வீடு திரும்பவில்லை.

    அதனை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தார். அக்கம் பக்கத்தில் விசாரித்த போது பன்றியை சிலர் நாட்டு துப்பாக்கியால் சுட்டு கொன்று அதனை எடுத்துச் சென்றதாக கூறினர். சந்தேகம் அடைந்த மணி தனது உறவினர்களுடன் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று பார்த்தார்.

    அப்போது பன்றியை கொன்றதற்கான தடயம் இருந்தது.

    இது குறித்து வேப்பங்குப்பம் போலீசில் மணி புகார் மனு அளித்தார். புகார் மனுவை பெற்றுக் கொண்ட போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×