என் மலர்
நீங்கள் தேடியது "கடையில் பாம்பு"
- அலறி அடித்து ஓட்டம்
- பரவமலை காப்புக்காட்டில் கொண்டுபோய் விட்டனர்
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தம்மாள். இவர் அதே பகுதியில் கடைவைத்துள்ளார்.
இந்த நிலையில் கோவிந்தம்மாள் நேற்று கடைக்கு சென்றார். அப்போது கடையில் பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றுள்ளது. இதைப்பார்த்த அதிர்ச்சி யடைந்த கோவிந்தம்மாள் கத்தி கூச்சல் போட்டுள்ளார். சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் அருகே இருந்த வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
இதனை யடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனச்சரகர் இந்து தலைமை யிலான குழுவினர் கடையில் இருந்த 5 அடி நீளம் கொண்டு நல்ல பாம்பை மீட்டு அருகே இருந்த பரவமலை காப்புக்காட்டில் பத்திரமாக விட்டனர்.






