இறந்து கிடந்த காட்டுபன்றி

டாக்டர்கள் பரிசோதனை செய்தனர் காட்டுபன்றியை வனத்துறையினர் தீயிட்டு எரித்தனர்
விவசாய நிலத்தில் இறந்து கிடந்த காட்டு பன்றி.
விவசாய நிலத்தில் இறந்து கிடந்த காட்டு பன்றி.
Published on

அணைக்கட்டு:

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த ஊணை வாணியம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் தமிழ்செல்வம். இவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் வேர்க்கடலை பயிரிடப்பட்டு பாதுகாத்து வருகின்றார்.

இந்தநிலையில் நேற்று நிலத்திற்கு சென்றார். அப்போது துர்நாற்றம் வீசியது. அருகே சென்று பார்த்தபோது ஆண் காட்டுபன்றி இறந்து கிடந்தது தெரிந்தது.

இதுகுறித்து ஒடுகத்தூர் வனத்துறைக்கு தகவல் கொடுத்தார்.

வனத்துறையினர் இறந்து கிடந்த பன்றியின் உடலை மீட்டு அணைக்கட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனை க்காக அனுப்பினர். பின்னர் காட்டுபன்றியை வனத்துறையினர் தீயிட்டு எரித்தனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com