என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "They came to remove it with a bogline machine"

    • போலீசார் மண்எண்ணெய் பாட்டில்களை பிடுங்கி எறிந்தனர்
    • அவகாசம் வழங்கியும் செங்கல் சூளைகள் அகற்றப்படவில்லை

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், ஊசூரில் ஆதிதிராவிட நலத்துறைக்கு சொந்தமான இடத்தில் 7 தனியார் செங்கல் சூளைகள் இயங்கி வருகிறது. இந்த செங்கல் துறை களை ஆக்கிரமிப்பு செய்தவர்களே அகற்றிக்கொள்ள கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் செங்கல் சூளைகள் அகற்றப்படவில்லை.

    இதனை அடுத்து அணைக்கட்டு தாசில்தார் வேண்டா, ஊசூர் ஊராட்சி மன்ற தலைவர் விஜயகுமாரி, துணை தாசில்தார் மகேஸ்வரி, வருவாய் ஆய்வாளர் ஜெயந்தி, கிராம நிர்வாக அலுவலர் அரவிந்த் மற்றும் போலீசார் பொக்லைன் எந்திரத்துடன் இன்று காலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்தனர்.

    அப்போது செங்கல் சூளை உரிமையாளர்கள், அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் கால அவகாசம் வழங்க வலியுறுத்தினர். அப்போது செங்கல் சிலை உரிமையாளர்கள் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.

    அப்போது அங்கு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மண்எண்ணெய் பாட்டில்களை பிடுங்கி எறிந்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    ×