என் மலர்
நீங்கள் தேடியது "யாகசாலைகள் அமைத்து கலசங்கள் வைத்து பூமி பூஜை"
- 200 ஆண்டுகள் பழமையான வாய்ந்தது
- புதியதாக புனரமைத்து புதுப்பிக்க வேண்டும்
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அருகே உள்ள வேப்பங்குப்பம் கிராமத்தில் இந்து அறநிலைத்துறைக்கு சொந்தமான சுமார் 200 ஆண்டுகள் பழமையான வாய்ந்த ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோவில் உள்ளது. இங்கு விஷேச தினங்கள் உட்பட முக்கிய நாட்களில் பூஜைகள் செய்து வழிப்பட்டு வருகின்றனர்.
200 ஆண்டுகள் பழமையான கோவில் என்பதால் கட்டிடங்கள் சிதிலமடைந்த காணப்பட்டு வந்தது. இதனை புதியதாக புனரமைத்து புதுப்பிக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து இன்று காலை 8 மணி முதல் யாகசாலைகள் அமைத்து கலசங்கள் வைத்து பூமி பூஜைகள் செய்தனர். வேப்பங்குப்பம் ஊராட்சிமன்ற தலைவர் சுகன்யா உமாபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.






