search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Fireworks Shop"

    • அனுமதியின்றி விற்றால் நடவடிக்கை
    • கடையின் அருகே டீக்கடை, ஓட்டல் வைக்க அனுமதி இல்லை

    வேலூர்:

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு கடை வியாபாரிகளுக்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் வேலூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு உதவி கலெக்டர் கவிதா தலைமை தாங்கினார்.

    தாசில்தார்கள் செந்தில் குமார், ஜெகதீஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் வேலூர் மாவட்ட பட்டாசு வியாபாரிகள் சங்க கவுரவ தலைவர் ஜனார்த்தனன் மற்றும் வியாபாரிகள் கலந்து கொண்டு பேசியதாவது:-

    நாங்கள் பல ஆண்டுகளாக உரிமம் பெற்று பட்டாசு கடை நடத்தி வருகிறோம். திடீரென எங்கள் கடையின் அருகே டீக்கடை, ஓட்டல் வைத்து நடத்துகின்றனர். இதனால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது.

    இது தொடர்பாக அதிகாரிகள் ஆய்வு செய்து அந்த கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். பட்டாசு வியாபாரத்தினை நம்பி பல வியாபாரிகள் உள்ளனர். இந்த நிலையில் ஆன்லைன் வியாபாரம் நடைபெறுவதால் எங்களது வியாபாரம் பாதிக்கபடுகிறது.

    ஆன்லைன் வியாபாரத்தால் விபத்துகளும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே ஆன்லைன் வியாபாரத்தை தடை செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் பேசினர்.

    இதற்கு பதில் அளித்து வேலூர் உதவி கலெக்டர் கவிதா பேசியதாவது:-

    உரிமம் இன்றி பட்டாசுகள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். யாராவது அவ்வாறு பட்டாசு விற்பனை செய்தால் அவர்கள் குறித்து உடனடியாக எனக்கோ அல்லது சம்பந்தப்பட்ட தாசில்தாரிடம் புகார் தெரிவிக்கலாம்.

    பட்டாசு கடைகளில் பணியாற்றும் பணியாளர்களுக்கு தகுந்த பயிற்சிகள் வழங்க வேண்டும். கடைகளில் இரு வழி பாதைகள் இருக்க வேண்டும். கடையில் தீ தடுப்பு உபகரணங்கள் கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.

    மின் வயர்கள் பாதுகாப்பான முறையில் குழாய்கள் மூலமே கடைக்குள் பதிக்கப்பட்டு இருக்க வேண்டும்.மின் இணைப்பு பெட்டி கடையின் வெளியே வைத்திருக்க வேண்டும்.

    மளிகை கடையில் பட்டாசுகள் விற்பனை செய்ய கூடாது. வீடுகளில் பதுக்கி வைத்து விற்பனை செய்யக்கூடாது. இது போன்ற புகார்கள் வந்தால் தெரிவிக்கலாம். வேலூர் மாவட்டத்தில் அரசின் விதிமுறைகளை கடைப்பிடித்து

    இந்த தீபாவளியை விபத்து உள்ளிட்ட அசம்பாவிதம் இல்லாத தீபாவளியாக கொண்டாட வியாபாரிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். வேலூர் கோட்டத்தில் 51 கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    இவர் அவர் கூறினார்.

    • கலெக்டர் பாஸ்கர பாண்டியன் அறிவுறுத்தல்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பட்டாசு கடைகளில் ஆய்வு செய்ய கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தர விட்டுள்ளார்.

    திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பட்டாசு கடைகளை தணிக்கை மேற்கொள்வது தொடர்பான ஆய்வு கூட்டம் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

    திருப்பத்தூர் தாலுகாவில் 36, நாட்டறம்பள்ளி தாலுகாவில் 25, வாணி யம்பாடி தாலுகாவில் 17, ஆம்பூர் தாலுகாவில் 4 என மொத்தம் 82 பட்டாசு கடைகள் உள்ளது. இந்த கடைகளை தணிக்கை செய்து, பட்டாசு கடைகள் அமைப்பதற்கான வழிமுறையின்படி அமைக்கப்பட்டுள்ளது குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.

    மேலும் தீபாவளி பண்டிகைக்கு தற்காலிக உரிமம் வழங்கும் இடத்தில் இருப்பில் உள்ள பட்டாசுகளை அகற்ற வேண்டும்.

    மக்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் உள்ள பட்டாசு கடைகளை ஆய்வு செய்து உடனடியாக உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்.

    அனைத்து தாசில்தார்களும், பொது மக்கள் பயனடையும் வகையில் சிறப்பு முகாம்கள் நடத்தி ஆதார், குடும்ப அட்டை, பட்டா, வங்கி கணக்கு, வீட்டுமனை ஆகிய அடிப்படை வசதிகளை வழங்க வேண்டும். மலைவாழ் மக்களுக்கு சாதி சான்றிதழ் வழங்குவதுடன், அவர்களின் குழந்தைகள் இடைநிற்றலை தவிர்க்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் வில்சன் ராஜசேகர், முத்தையன், வருவாய் கோட்டாட்சி யர்கள் லட்சுமி, பிரேமலதா, தனித்துணை கலெக்டர் கோவிந்தன், தாசில்தார்கள் சிவப்பிரகாசம், சம்பத், குமார், மகாலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • பட்டாசு கடைகளில் 10-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.
    • தீ மளமள எரிந்து கடையில் இருந்த பட்டாசுகளில் தீ பரவியது. இதனால் பட்டாசுகள் வெடித்து சிதறின.

    வாணியம்பாடி:

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த புத்து கோவிலில் அம்பலூர் சாலையில் தனியார் பட்டாசு கடை உள்ளது. இதன் அருகே பட்டாசு குடோனும் அமைந்துள்ளது. இந்த பட்டாசு கடைகளில் 10-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.

    இந்நிலையில் இன்று மதியம் பட்டாசு கடையில் திடீரென தீ பிடித்தது. தீ மளமள எரிந்து கடையில் இருந்த பட்டாசுகளில் தீ பரவியது. இதனால் பட்டாசுகள் வெடித்து சிதறின.

    அருகே இருந்த பட்டாசு குடோன் மீது தீப்பொறி விழுந்தது. குடோனில் இருந்த பட்டாசுகள் திடீரென வெடிக்க தொடங்கின. அங்கு பணியில் ஈடுபட்டிருந்த பெண்கள் உட்பட குழந்தைகள் உள்ளே சிக்கிக் கொண்டனர்.

    அந்த வழியாக வந்தவர்கள் உடனடியாக வாணியம்பாடி, திருப்பத்தூர், ஜோலார்பேட்டை தீயணைப்பு துறையினருக்கும், அம்பலூர் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸ் டிஎஸ்பி சுரேஷ்பாபு தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த தீ விபத்தில் குழந்தை உள்பட 2 பேர் பலியானதாக கூறப்படுகிறது. மேலும் 2 பேர் காயத்துடன் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் உள்ளே சிக்கியவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. 

    • தற்காலிக பட்டாசு கடைகள் வைக்க விரும்புவோர் வருகிற 30-ந்தேதி வரை இணைய வழியாக விண்ணப்பிக்க தமிழக அரசினால் அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.
    • விண்ணப்பங்களை வருகிற 30-ந்தேதி வரை மட்டுமே இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க முடியும்.

    சேலம்:

    தீபாவளி பண்டிகையின் போது சேலம் மாவட்டத்தில் சேலம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட இடங்களை தவிர்த்து தற்காலிக பட்டாசு கடைகள் வைக்க விரும்புவோர் வருகிற 30-ந்தேதி வரை இணைய வழியாக விண்ணப்பிக்க தமிழக அரசினால் அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.

    சேலம் மாவட்டத்திலுள்ள அனைத்து இ-சேவை, பொது சேவை மையங்களில் இணையதளம்வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்து டன் பின்வரும் ஆவணங்கள் இணைக்கப்பட வேண்டும். கட்டிட அமைவிட வரைபடம், கட்டிட உரிமை ஆவணங்கள், உரிமக் கட்டணமாக செலுத்தப்பட்ட செலுத்துச்சீட்டு (சலான் அசல்), விண்ணப்பதாரரின் முகவரி குறித்த ஆவணம் (ஆதார் அட்டை , பான் அட்டை , ஸ்மார்ட் குடும்ப அட்டை), உள்ளாட்சி அமைப்பில் கட்டிடம், வீட்டு வரி ரசீது, விண்ணப்ப தாரரின் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் இணைக்கவேண்டும் . விண்ணப்பங்களை வருகிற 30-ந்தேதி வரை மட்டுமே இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க முடியும்.

    எனவே தற்காலிக பட்டாசு கடை அமைக்க உரிமம் கேட்டு விண்ணப்பம் செய்வோர் பொது மக்களுக்கு சிரமமில்லாத, ஆட்சேபணையற்ற மற்றும் பாதுகாப்பான இடத்தை தேர்வு செய்து விண்ணப்பிக்குமாறு கலெக்டர் கார்மேகம் கேட்டுக்கொண்டுள்ளார்.

    ×