search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலம் மாவட்டத்தில்   தற்காலிக பட்டாசு கடை உரிமம் பெற   ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
    X

    சேலம் மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு கடை உரிமம் பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

    • தற்காலிக பட்டாசு கடைகள் வைக்க விரும்புவோர் வருகிற 30-ந்தேதி வரை இணைய வழியாக விண்ணப்பிக்க தமிழக அரசினால் அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.
    • விண்ணப்பங்களை வருகிற 30-ந்தேதி வரை மட்டுமே இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க முடியும்.

    சேலம்:

    தீபாவளி பண்டிகையின் போது சேலம் மாவட்டத்தில் சேலம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட இடங்களை தவிர்த்து தற்காலிக பட்டாசு கடைகள் வைக்க விரும்புவோர் வருகிற 30-ந்தேதி வரை இணைய வழியாக விண்ணப்பிக்க தமிழக அரசினால் அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.

    சேலம் மாவட்டத்திலுள்ள அனைத்து இ-சேவை, பொது சேவை மையங்களில் இணையதளம்வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்து டன் பின்வரும் ஆவணங்கள் இணைக்கப்பட வேண்டும். கட்டிட அமைவிட வரைபடம், கட்டிட உரிமை ஆவணங்கள், உரிமக் கட்டணமாக செலுத்தப்பட்ட செலுத்துச்சீட்டு (சலான் அசல்), விண்ணப்பதாரரின் முகவரி குறித்த ஆவணம் (ஆதார் அட்டை , பான் அட்டை , ஸ்மார்ட் குடும்ப அட்டை), உள்ளாட்சி அமைப்பில் கட்டிடம், வீட்டு வரி ரசீது, விண்ணப்ப தாரரின் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் இணைக்கவேண்டும் . விண்ணப்பங்களை வருகிற 30-ந்தேதி வரை மட்டுமே இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க முடியும்.

    எனவே தற்காலிக பட்டாசு கடை அமைக்க உரிமம் கேட்டு விண்ணப்பம் செய்வோர் பொது மக்களுக்கு சிரமமில்லாத, ஆட்சேபணையற்ற மற்றும் பாதுகாப்பான இடத்தை தேர்வு செய்து விண்ணப்பிக்குமாறு கலெக்டர் கார்மேகம் கேட்டுக்கொண்டுள்ளார்.

    Next Story
    ×