என் மலர்
நீங்கள் தேடியது "லாரி டிரைவரை தேடி வருகின்றனர்"
- பள்ளிக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தபோது பரிதாபம்
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
வேலூர்:
வேலூர் சலவன் பேட்டையை சேர்ந்தவர் தனலட்சுமி (வயது 36). இவர் காட்பாடி கிறிஸ்டியான் பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் இந்தி ஆசிரியராக வேலை செய்து வந்தார். ஆசிரியை தினமும் வீட்டிலிருந்து பள்ளிக்கு பைக்கில் சென்று வருவது வழக்கம்.
இன்று காலை 8 மணிக்கு வீட்டிலிருந்து பைக்கில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார்.
காட்பாடி கல்புதூர் அருகே சென்றபோது முதியவர் ஒருவர் சைக்கிளில் திடீரென குறுக்கே வந்தார். அப்போது தனலட்சுமி ஓட்டிச் சென்ற பைக் நிலை தடுமாறி சாலையின் நடுவில் இருந்த தடுப்பில் மோதியது. தனலட்சுமி கீழே விழுந்தார். அப்போது காட்பாடியில் இருந்து சித்தூர் நோக்கி சென்ற லாரி தனலட்சுமி மீது எதிர்பாராத விதமாக ஏறி இறங்கியது.
இதில் தனலட்சுமி தலை நசுங்கி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த காட்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தனலட்சுமி பிணத்தை மீட்டு பிரேத பரிசோ தனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்துக்கு காரணமான தப்பிச்சென்ற லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.






