என் மலர்
நீங்கள் தேடியது "தலைவர் மீது வழக்கு பதிவு"
- 10 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட அரசு பொது கழிப்பிடம் இடிக்கப்பட்டது
- அதே பகுதியை சேர்ந்தவர் போலீசில் புகார்
அணைக்கட்டு:
வேலுர் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த தோளப்பள்ளி ஊராட்சியில் உள்ள காமராஜபுரம் பகுதியில் பொதுமக்களின் வசதிக்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அரசு பொது கழிப்பிடம் கட்டப்ப ட்டுள்ளது.
தற்போது அந்த கட்டிடம் பழுதடைந்து காணப்பட்டது.
இதனை இடித்துவிட்டு, அந்த இடத்தில் புதியதாக மேநீர்தேக்கத்தொட்டி கட்ட ஊராட்சி நிர்வாகத்தினர் திட்டமிட்டுள்ளனர்.
அதன்படி கடந்த மாதம் 20-ந் தேதி ஊராட்சி மன்ற தலைவி கல்பனா மற்றும் அவரது கணவர் சுரேஷ் ஆகியோர் சேர்ந்து பொக்லைன் எந்திரம் மூலம் பொதுகழிப்பிட கட்டிடத்தை இடித்துள்ளனர். மேலும் கழிவறையில் இருந்த இரும்பு கதவுகள் மற்றும் கேபிள் ஒயர்களை எடுத்துச்சென்றுள்ளனர்.
இதுகுறித்து அதே பகுதியை சேர்ந்த பாக்கியராஜ், ஊராட்சி மன்ற தலைவி தனது கணவருடன் சேர்ந்து கதவு மற்றும் கம்பிகளை திருடிச் சென்றதாக வேப்பங்குப்பம் போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் நாகராஜ், தோளப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் கல்பனா, அவரது கணவர் சுரேஷ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.






