என் மலர்
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டத்தில் நாளை திருவள்ளுவர் தினம், 26-ந்தேதி குடியரசு தினம் மற்றும் 28-ந்தேதி வள்ளலார் நினைவு தினம் ஆகிய 3 நாட்கள் டாஸ்மாக் கடைகளை மூடிவைக்க கலெக்டர் சந்தீப் நந்தூரி உத்தரவிட்டுள்ளார்.
திருவண்ணாமலை:
தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் அனைத்து அரசு டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள், மதுபான கடைகளை ஒட்டி உள்ள மதுபான பார்கள் மற்றும் நட்சத்திர அந்தஸ்து ஓட்டலில் உள்ள பார்கள் ஆகியவை நாளை (வெள்ளிக்கிழமை) திருவள்ளுவர் தினம், 26-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) குடியரசு தினம் மற்றும் 28-ந்தேதி (வியாழக்கிழமை) வள்ளலார் நினைவு தினம் ஆகிய 3 நாட்கள் மூடிவைக்க வேண்டும். அன்றைய தினத்தில் மதுபானங்கள் விற்பனை செய்யக்கூடாது என்று தெரிவிக்கப்படுகிறது.
மதுபானம் விற்பனை செய்வதாக தெரியவந்தால் சம்பந்தப்பட்ட டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகளில் விற்பனையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மதுபான கடைகள் திறக்கப்பட்டிருந்தாலும் மது கூடத்தில் மதுபான விற்பனை செய்வதாக தெரிய வந்தாலும் மதுபான பார் உரிமங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைத்தல் மற்றும் உரிமங்களை ரத்து செய்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
இந்த தகவலை திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார்.
கண்ணமங்கலம் அருகே மது, சாராயம் பதுக்கிய 9 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார், சந்தவாசல் சப்-இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது வண்ணாங்குளம் குன்றுமேட்டை சேர்ந்த பரசுராமன் (வயது 64), கீழ்நகர் பிரபாகரன் (37), முனியந்தாங்கல் ஜெகநாதன் (45), சந்தவாசல் புஷ்பகிரி வனிதா (44), மல்லிகாபுரம் சரவணன் (39), வீரகோயில் முனியாண்டி (46) ஆகிய 6 பேரை கைது செய்து, அவர்களிடம் இருந்து 83 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
மேலும் மல்லிகாபுரம் கிராமத்தில் லாரி டியூபில் சாராயம் பதுக்கி வைத்திருந்ததாக சுரேஷ் (36), மதுவிற்றதாக அம்மாபாளையம் மாணிக்கம்மாள் (60), காட்டுக்காநல்லூர் காலனியை சேர்ந்த தேவகி ஆகியோரை கைது செய்தனர்.
செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் ஈட்டிய விடுப்புத்தொகை வழங்கக்கோரி தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் கரும்பு அரவை நிறுத்தப்பட்டது.
செய்யாறு:
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில், செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது. இங்கு சுமார் 300 தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களில் நிரந்தர தொழிலாளர்களான 200 பேர் 2019-2020-ம் ஆண்டு ஈட்டிய விடுப்புக்கான தொகையை வழங்க வலியுறுத்தி நேற்று காலை 10 மணி முதல் ஆலை வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நேற்று முன்தினம் இரவு, போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தொழிலாளர்களுடன், சர்க்கரை ஆலை நிர்வாக மேலாண்மை இயக்குனர் நடந்திய பேச்சு வார்த்தை தோல்வி அடைந்ததையொட்டி தொழிலாளர்களின் உள்ளிருப்பு போராட்டம் நேற்று இரண்டாவது நாளாக நீடித்தது. ஆலை நிர்வாகம் கோரிக்கையை ஏற்காவிடில் போராட்டம் தொடரும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அரவைப் பருவம் தொடங்கி விளைநிலங்களில் இருந்து கரும்பு வெட்டி தினமும் ஆலைக்கு கரும்பு வந்துகொண்டிருந்தது. முன்னறிவிப்பின்றி தொழிலாளர்கள் நடத்தும் இந்த போராட்டத்தால் ஆலையில் கரும்பு அரவை நிறுத்தப்பட்டுள்ளது. அதனால் ஆலைக்கு கரும்புகள் ஏற்றி வந்த சுமார் 150 லாரிகள், 1500 டன் கரும்புகளுடன் ஆலை வளாகத்திற்குள் வரிசைகட்டி நிற்கின்றன.
இதனால் லாரியில் ஏற்றப்பட்டுள்ள கரும்பு மற்றும் விவசாய நிலத்தில் வெட்டப்பட்டு ஆலைக்கு ஏற்றுவதற்கு தயாராக உள்ள சுமார் 500 டன் கரும்பு காய்ந்து எடை குறைந்து விவசாயிகளுக்கு இழப்பை ஏற்படுத்தும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த போராட்டத்தால் ஒரு நாளைக்கு 2,500 டன் கரும்பு அரவை நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
களம்பூர் அருகே சாராயம், மது விற்ற 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.அரவிந்த் உத்தரவின்படி ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு கோட்டீஸ்வரன் மேற்பார்வையில் களம்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, சப்-இன்ஸ்பெக்டர் விநாயகம் மற்றும் போலீசார் நேற்று தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.
களம்பூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட வடமாதிமங்கலம் பகுதியில் குமாரி (வயது 53) என்பவரிடம் இருந்து 5 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. அவர் கைது செய்யப்பட்டார்.
அதே பகுதியில் பிரபு (38) என்பவர் மதுபாட்டில்களை வெளிமார்க்கெட்டில் விற்பனை செய்துள்ளார். அவரை போலீசார் கைது செய்து, மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
எட்டிவாடி பகுதியில் முருகன் (40) என்பவர் டாஸ்மாக் கடையில் இருந்து மதுபாட்டில்கள் வாங்கி வந்து விற்பனைக்காக வைத்திருந்தார். அவரை போலீசார் கைது செய்தனர். மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
கீழ்ப்பட்டு கிராமத்தில் வசித்து வரும் வினோத்குமார் (28) என்பவர் மதுபாட்டில்களை வீட்டில் பதுக்கி வைத்திருந்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.
கீழ்பென்னாத்தூர் அருகே அரசு பஸ் மோதி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கீழ்பென்னாத்தூர்:
கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள சி.சாலையூர் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன், லாரி டிரைவர். இவரது மகன் மணிகண்டன் (வயது 22). நேற்று முன்தினம் மாலை மணிகண்டன் கீழ்பென்னாத்தூருக்கு மோட்டார் சைக்கிளில் வந்துவிட்டு மீண்டும் சாலையூருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். அப்போது, திருவண்ணாமலையில் இருந்து திண்டிவனம் நோக்கி சென்ற அரசு பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்த தகவலின்பேரில், கீழ்பென்னாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் ஜான் போஸ்கோ ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அரசு பஸ் டிரைவர் பாபு (44) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கலெக்டர், தாலுகா அலுவலகங்களில் கோரிக்கை மனுக்களை பொதுமக்கள் பெட்டியில் போட்டனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமைேதாறும் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடந்து வந்தது. கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையின் காரணமாக தற்காலிகமாக மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது. இருப்பினும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிைய சேர்ந்த பொதுமக்கள் அதிகாரிகளை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை அளிக்க கலெக்டர் அலுவலகத்திற்கு வருகின்றனர்.
கொரோனா முன்னெச்சரிக்கை காரணமாக பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு வருவதை தவிர்ப்பதற்காக அந்தந்த பகுதி தாலுகா அலுவலகங்களில் திங்கட்கிழமையன்று வைக்கப்படும் மனு பெட்டியில் கோரிக்கை மனுக்களை செலுத்துமாறு மாவட்ட நிர்வாகம் மூலம் வேண்டுகோள் விடுக்கப்பட்டு இருந்தது. இருப்பினும் பெரும்பாலான பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்றும் பல்வேறு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு கோரிக்கை மனுக்கள் அளிக்க வந்தனர். அவர்களை அலுவலக நுழைவு வாயில் முன்பு போலீசார் சோதனை செய்த பிறகே உள்ளே செல்ல அனுமதித்தனர். தொடர்ந்து அவர்கள் அலுவலகத்தின் முன்பு வைக்கப்பட்டு இருந்த பெட்டியில் மனுவை செலுத்தினர்.
அப்போது கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தாலே நடவடிக்கை இல்லை. இது போன்று பெட்டியில் போட ெசான்னால் நாங்கள் என்ன செய்வோம். பல முறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை என்று பொதுமக்கள் பலர் புலம்பிய படியே சென்றனர்.
அதேபோல் தாலுகா அலுவலகங்களில் வைக்கப்பட்டு இருந்த பெட்டிகளிலும் பொதுமக்கள் மனு போட்டனர்.
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமைேதாறும் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடந்து வந்தது. கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையின் காரணமாக தற்காலிகமாக மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது. இருப்பினும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிைய சேர்ந்த பொதுமக்கள் அதிகாரிகளை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை அளிக்க கலெக்டர் அலுவலகத்திற்கு வருகின்றனர்.
கொரோனா முன்னெச்சரிக்கை காரணமாக பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு வருவதை தவிர்ப்பதற்காக அந்தந்த பகுதி தாலுகா அலுவலகங்களில் திங்கட்கிழமையன்று வைக்கப்படும் மனு பெட்டியில் கோரிக்கை மனுக்களை செலுத்துமாறு மாவட்ட நிர்வாகம் மூலம் வேண்டுகோள் விடுக்கப்பட்டு இருந்தது. இருப்பினும் பெரும்பாலான பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்றும் பல்வேறு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு கோரிக்கை மனுக்கள் அளிக்க வந்தனர். அவர்களை அலுவலக நுழைவு வாயில் முன்பு போலீசார் சோதனை செய்த பிறகே உள்ளே செல்ல அனுமதித்தனர். தொடர்ந்து அவர்கள் அலுவலகத்தின் முன்பு வைக்கப்பட்டு இருந்த பெட்டியில் மனுவை செலுத்தினர்.
அப்போது கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தாலே நடவடிக்கை இல்லை. இது போன்று பெட்டியில் போட ெசான்னால் நாங்கள் என்ன செய்வோம். பல முறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை என்று பொதுமக்கள் பலர் புலம்பிய படியே சென்றனர்.
அதேபோல் தாலுகா அலுவலகங்களில் வைக்கப்பட்டு இருந்த பெட்டிகளிலும் பொதுமக்கள் மனு போட்டனர்.
ஆரணி அருகே மதுவில் விஷம் கலந்து குடித்து கூலித்தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆரணி:
ஆரணியை அடுத்த முள்ளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி (வயது 57), கூலித்தொழிலாளி. கொரோனா பரவலால் சரிவர வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்ததாகக் கூறப்படுகிறது. அத்துடன் போதைக்கு அடிமையான அவர் தினமும் மதுக்குடித்து விட்டு வீட்டுக்கு வந்துள்ளார்.
வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் 9-ந்தேதி மதுபானத்தில் விஷத்தை கலந்து குடித்து விட்டு வீட்டில் மயக்கமடைந்து கிடந்தார். அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி பழனி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து ஆரணி டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
சாரயம் பதுக்கி வைத்திருந்த 4 பெண்கள் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார் தலைமையில், மதுவிலக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி, இன்ஸ்பெக்டர் தயாளன் மற்றும் தனிப்பிரிவு போலீசார் தானிப்பாடி போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட மோத்தகல், வேப்பூர் செக்கடி, தட்டரணை பகுதியில் மதுவிலக்கு வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு 1,800 லிட்டர் சாராய ஊறல் பூமிக்கு அடியில் மறைத்து வைத்திருந்ததை கணடுபிடித்து கைப்பற்றி அழித்தனர்.
மேலும் விற்பனைக்கா சாராயம் பதுக்கி வைத்தி்ருந்ததாக மோத்தகல் பகுதியை சேர்ந்த சந்தோஷ் (வயது 32), வேப்பூர்செக்கடியை சேர்ந்த அலமேலு (53), தட்டரணை கிராமத்தை சேர்ந்த அமுதா (32), சித்திரா (43), கல்யாணி (40) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த சாராயத்தையும் கைப்பற்றி அழித்தனர்.
வாணாபுரம் பகுதியில் பெய்த மழையால் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் உளுந்துபயிர் சேதம் அடைந்துள்ளது. உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாணாபுரம்:
வாணாபுரம் பகுதியில் தச்சம்பட்டு, தலையாம்பள்ளம், சின்ன கல்லப்பாடி, பெரிய கல்லப்பாடி, வெறையூர், அண்டம்பள்ளம், நவம்பட்டு, விருதுவிளங்கினான், கல்லேரி, பவித்திரம் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட கிராமங்களில் புரட்டாசி, ஐப்பசி மாதங்களில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலத்தில் விவசாயிகள் உளுந்து சாகுபடி செய்தனர்.
உளுந்து பயிருக்கு மருந்து தெளித்தும், உரமிட்டும் வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த தொடர் மழையாலும், தற்போது பெய்து வரும் கனமழையாலும் உளுந்து பயிரில் மழைநீர் தேங்கியது. இதனால் பயிர் அழுகியது. செடிகளில் பூக்கள் உதிர்ந்து, பிஞ்சுகள் வளர்ச்சி அடையாமல் செடிகள் மஞ்சள் நிறத்தில் வெகுவாக பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
பருவ கால பயிராக உளுந்தை பயிரிட்டுள்ளோம். புரட்டாசி, ஐப்பசி மாதங்களில் உளுந்து பயிரை பயிரிடுவதற்கு உழவு, விதைப்பு, மேலுரம், மருந்து தெளித்தல் ஆகியவற்றுக்காக இதுவரை ஒரு ஏக்கருக்கு ரூ.20 ஆயிரத்துக்கும்மேல் செலவு செய்துள்ளோம்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையாலும், தற்போது மழை பெய்து வருவதாலும் உளுந்து பயிரில் மழைநீர் தேங்கி பயிர் அழுகிப்போகிறது. இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் வேதனையில் உள்ளோம். இப்பகுதியில் விவசாயிகள் பயிரிட்டுள்ள உளுந்து பயிரில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் மழையால் சேதமடைந்துள்ளது.
எனவே சம்பந்தப்பட்ட வேளாண்மைத்துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு சேதமடைந்த உளுந்து பயிரை கணக்கெடுத்து இழப்பீடு வழங்க வேண்டும். பயிர் காப்பீடு செய்துள்ள அனைத்து விவசாயிகளுக்கும் காப்பீட்டு தொகை கிடைக்கவும், காப்பீடு செய்யாத விவசாயிகளுக்கு இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் நிவாரண நிதியில் இருந்து இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு விவசாயிகள் கூறினர்.
கண்ணமங்கலம் அருகே கல்குவாரி பள்ளத்தில் டிராக்டர் கவிழ்ந்து டிரைவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அருகே உள்ள ஒண்ணுபுரம் கிராமத்தில் வி.வி.தாங்கல் மலையில் கல்குவாரி உள்ளது. இந்த குவாரி குத்தகை காலம் முடிவடைந்ததால் கடந்த ஓராண்டாக செயல்படவில்லை. இதனருகில் ஜல்லி உடைக்கும் எந்திரம் உள்ளது. இதனை குண்ணத்தூரைச் சேர்ந்த சித்திக்பாஷா என்பவர் நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று காலை பாறைகளை வெடிவைத்து தகர்க்கும் டிராக்டர் வண்டியை புதுப்பேட்டை பாலாஜி நகரை சேர்ந்த முனிசாமி (வயது45) என்பவர் கல்குவாரி பள்ளத்தின் அருகே ஓட்டிச்சென்றார். அவருடன் ஜல்லி நிறுவன ஊழியர் ரெட்டிபாளையம் அழகேசன் (55) என்பவரும் சென்றார். அப்போது திடீரென டிராக்டர் கல்குவாரி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் டிரைவர் முனிசாமி டிராக்டரில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதுகுறித்து தகவலறிந்த கண்ணமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி, சப்-இன்ஸ்பெக்டர் நாராயணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
அழகேசனிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, டிராக்டரை கழுவுவதற்காக ஓட்டிச்சென்றபோது கவிழ்ந்தது என தெரிவித்தார்.
இந்த சம்பவம் குறித்து மேலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்யாறில் மின்சாரம் தாக்கி டேங்க் ஆபரேட்டர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்யாறு:
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகா பைங்கிணர் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 37). டேங்க் ஆபரேட்டர். சம்பவத்தன்று செய்யாறு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் உள்ள மகளிர் விடுதியில் பணியாற்றும் நண்பரை பாா்க்க சென்றுள்ளார். அப்போது அங்கு மின் பராமரிப்பு பணி நடந்துள்ளது. இதனால் உதவி செய்யுமாறு நண்பர் கூறியதை தொடர்ந்து வெங்கடேசன் உதவிசெய்துள்ளார். அப்போது அவர் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். உடனடியாக அவரை மீட்டு செய்யாறு மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்து பார்த்து, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இது குறித்து வெங்கடேசனின் மனைவி தீபா கொடுத்த புகாரின் பேரில் செய்யாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
கீழ்பென்னாத்தூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கீழ்பென்னாத்தூர்:
பென்னாத்தூர் அருகே ஆராஞ்சி காலனியை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி (வயது 27). இவர் நேற்று முன்தினம் தனது வயலில் வேலை செய்துவிட்டு வீட்டின் அருகில் உள்ள விவசாய கிணற்றில் கால் கழுவுவதற்காக சென்றார். அப்போது கிணற்றில் தவறி விழுந்தார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து கிணற்றில் குதித்து அவரை மீட்க முயன்றனர். ஆனால் நீச்சல் தெரியாததால் கிணற்றில் கிருஷ்ணசாமி மூழ்கிவிட்டார். இதையடுத்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 15 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் கிருஷ்ணசாமியை பிணமாக மீட்டனர்.
பின்னர் கீழ்பென்னாத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






