search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cooperative sugar mill"

    • திருப்பத்தூர் கலெக்டர் எச்சரிக்கை
    • கோரிக்கைகள் 24 மணி நேரத்திற்குள் பரிசீலனை

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை பதிவு செய்த கரும்பை தனியார் ஆலை எடுத்து சென்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் அமர்குஷ் வாஹா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருப்பத்தூர் மாவட்டம் கேத்தாண்டபட்டி பகுதியில் அமைந்துள்ள திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2022-23-ம் ஆண்டு அர வைப் பருவத்திற்கு 4032 ஏக்கர் கரும்பு பதிவு செய்யப்பட் டுள்ளது. மேலும் 2021-2022-ம் ஆண்டிற்கான அரவைப்பரு வத்தில் சப்ளை செய்த அனைத்து கரும்பு விவசாயிகளுக்கும் கரும்புக்கான தொகை நிலுவை ஏதும் இல்லாமல் தமிழக அசினால் வழங்கப்பட்டுள்ளது.

    பதிவு செய்யப்பட்ட கரும்பை ஆலையின் விதிக ளுக்கு புறம்பாக எடுத்துச் செல்ல சில இடைத்தரகர்கள் மற்றும் வெல்லம் காய்ச்சும் ஆலை உரிமையாளர்கள் முயற்சி செய்து வருகிறார்கள். இது சட்டபடி குற்றமாகும். இதனால் ஆலைக்கு பெருத்த நஷ்டம் ஏற்படுவதுடன் அர சுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

    எனவே சர்க்கரை ஆலைக்கு பதிவு செய்த கரும்பை முறை கேடான வகையில் வெளிச் சந்தையிலோ அல்லது வெல் லம் தயாரிக்கும் ஆலைக்கோ விற்பனை செய்வதாக மாவட்ட நிர்வாகத்திற்கும், ஆலை நிர்வாகத்திற்கும் புகார்கள் வருகின்றன. முறைகேடுகளில் ஈடு படும் அங்கத்தினர்கள், இடைத்தரகர்கள் மற்றும் வெல்லம் காய்ச்சும் ஆலை உரிமையாளர்கள் மீது கரும்பு கட்டுப்பாட்டு சட்டம் மற்றும் அத்தியாவசிய பண்டங்கள் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    ஆலையின் விவகார பகுதிக ளுக்குட்பட்ட பதிவு செய் யாத கரும்பை எடுத்து செல்ப வர்கள் உரிய கோட்ட கரும்பு அலுவலரிடம் தடையில்லா சான்றிதழ் பெறவேண்டும். அதன் பிறகே தங்களது கரும்பை வாகனங்களில் ஏற்றி செல்ல வேண்டும். அவ் வாறு உரிய ஆவணங்கள் இன்றி கரும்பு ஏற்றிச் செல் லும் வாகனங்களை போலீ சார் மூலம் பறிமுதல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப் படும்.

    மேலும் விவசாய அங்கத்தினர்கள் தங்களின் கோரிக்கைகளை 7200651223 என்ற செல்போன் எண்ணில் தொடர்புக்கொண்டு திருப் பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு தெரியப்படுத்தலாம். கோரிக்கைகள் 24 மணி நேரத்திற்குள் பரிசீலனை செய்யப்படும் வகையில் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டது.

    • கலெக்டர், எம்.எல்.ஏ.க்கள் தொடங்கி வைத்தனர்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் 2022-23 ம் ஆண்டு அரைவைப்பருவ துவக்க விழா இன்று நடந்தது.

    நிர்வாக குழு தலைவர். ஏ.ஆர் ராஜேந்திரன் வருவாய் அலுவலர் மேலாண்மை இயக்குனர் மீனா பிரியா தரஷினி, துணைத் தலைவர் சி.செல்வம் ஆலை அரைவைக்கான பூஜை நடைபெற்றது.

    விழாவில் கலெக்டர் அமர் குஷ்வாஹா எம்எல்ஏக்கள். தேவராஜ், நல்லதம்பி, மதியழகன்ஆகியோர் கந்துக்கொண்டு ஆலை அரைவையை தொடங்கி வைத்தனர்.

    இந்த 2022-23ம் ஆண்டு அரைவைப்பருவத்தில் 1,30,000 மெட்ரிக்டன்கள் அரவை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. 

    திருவெண்ணைநல்லூர் அருகே சக ஊழியர்கள் முன்னிலையில் உயர் அதிகாரி திட்டியதால் கூட்டுறவு சர்க்கரை ஆலை என்ஜினீயர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    திருவெண்ணைநல்லூர்:

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள பெரிய செவலை பகுதியில் செங்கல்வராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது.

    இந்த சர்க்கரை ஆலையில் உதவி என்ஜினீயராக சரவணன் (வயது 40) என்பவர் பணிபுரிந்து வந்தார். இவர் ஆலை வளாகத்தில் உள்ள குடியிருப்பில் தங்கி இருந்தார்.

    இன்று காலை சர்க்கரை ஆலையில் சரவணன் வழக்கம் போல் பணியில் ஈடுபட்டிருந்தார்.

    அப்போது அங்கு வந்த உயர் அதிகாரி ஒருவர் சக ஊழியர்கள் முன்னிலையில் என்ஜீனியர் சரவணனை தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது.

    இதில் மனம் உடைந்த சரவணன் உடனே அவர் தங்கியிருந்த அறைக்கு சென்றார். பின்னர் அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். சரவணண் தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து சக ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    இது குறித்து திருவெண்ணைநல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தூக்கில் பிணமாக தொங்கிய சரவணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சரவணன் தற்கொலை செய்வதற்கு காரணமான உயர் அதிகாரியை கண்டித்து சர்க்கரை ஆலை ஊழியர்கள் அனைவரும் இன்று ஒரு நாள் பணியை புறக்கணித்தனர். மேலும் சர்க்கரை ஆலையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த சம்பவத்தால் சர்க்கரை ஆலை வளாகத்தில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.
    ×