என் மலர்
திருவண்ணாமலை
ஆரணி அருகே பாம்பு கடித்து பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆரணி:
ஆரணியை அடுத்த மலையாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் தண்டபாணி. அவரது மனைவி புவனேஸ்வரி (வயது 30). இவர்களுக்கு அஜய் (7), ராகுல் (5), ரமணா (5) என 3 குழந்தைகள் உள்ளன. நேற்று முன்தினம் புவனேஸ்வரியை பாம்பு கடித்துள்ளது.
இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், புவனேஸ்வரி வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து களம்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விநாயகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
திருவண்ணாமலை அருகே தென்னை மரத்தில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை தாலுகா கிளிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் முருகன். அவரது மகன் தனுஷ் (வயது 17). இவர், தென்னை மரத்தில் ஏறியபோது, தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை அருகே நள்ளிரவில் வீடுகளுக்குள் புகுந்த 7 பேர் கொண்ட கொள்ளை கும்பல் பெண்களை தாக்கி நகைகளை பறிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தண்டராம்பட்டு:
திருவண்ணாமை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த மெய்யூரில் திருவண்ணாமலை கள்ளக்குறிச்சி சாலையில் வீடுகள் உள்ளது. இங்கு ஏராளமானோர் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நள்ளிரவு 1 மணி அளவில் 7 பேர் கொண்ட கும்பல் திடீரென அங்கிருந்த வீடுகளுக்குள் புகுந்து வீட்டில் இருந்தவர்களை சரமாரியாக தாக்கினர்.
மேலும் வீட்டில் இருந்த பெண்கள் அணிந்திருந்த நகைகளை பறிக்க முயன்றனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த பெண்கள் கத்தி கூச்சலிட்டனர். கூச்சல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் தெருவில் குவிந்தனர்.
பொதுமக்கள் ஒன்று சேர்வதை கண்ட கொள்ளை கும்பல் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். அவர்களை பொதுமக்கள் விரட்டி சென்றனர். அவர்கள் இருளில் தப்பி ஓடிவிட்டனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் வாணாபுரம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்கள் வடமாநிலத்தை சேர்ந்த கும்பலா? அல்லது உள்ளூரை சேர்ந்தவர்களா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடம் அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

ஆரணி அருகே மணல் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆரணி:
ஆரணியை அடுத்த தச்சூர் மோட்டூர் ஆற்றுப்படுகை பகுதியில் ஆரணி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் தரணி மற்றும் போலீசார் நேற்று அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தச்சூர் - மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்த பழனி (வயது 40), கோபி (30) ஆகிய 2 பேர் 2 மாட்டு வண்டிகளில் மணல் கடத்தி வந்தனர். இதையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்து, 2 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர்.
சாத்தனூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்க அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அரசாணை வந்தவுடன் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கலெக்டர் சந்தீப்நந்தூரி கூறினார்.
திருவண்ணாமலை:
தண்டராம்பட்டு அருகே உள்ள சாத்தனூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் சந்தீப்நந்தூரி தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் முத்துக்குமாரசாமி, பொதுப்பணித் துறை நீர்வள ஆதாரத் துறையின் மத்திய பெண்ணையாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் மகேந்திரன், உதவி செயற்பொறியாளர் அறிவழகன், சாத்தனூர் அணை உதவி பொறியாளர் செல்வராஜூ, வேளாண்மை இணை இயக்குனர் முருகன், திருவண்ணாமலை வருவாய் கோட்ட அலுவலர் ஸ்ரீதேவி மற்றும் அரசு அலுவலர்கள் பாசனதாரர்கள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
இதில் பாசனதாரர்கள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் பல்வேறு கருத்துக்கள் தெரிவித்தனர்.
பின்னர் கலெக்டர் சந்தீப் நந்தூரி நிருபர்களிடம் கூறுகையில், ‘‘தண்டராம்பட்டு பகுதியில் அமைந்துள்ள மிகப் பெரிய அணையான சாத்தனூர் அணையில் இருந்து பொதுப்பணித் துறை மூலமாக இந்த ஆண்டு எத்தனை நாட்கள், எவ்வளவு நீர் திறப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இக்கருத்துக்களின் அடிப்படையில் சாத்தனூர் அணையில் இருந்து நீர் திறப்பதற்கு அரசுக்கு பரிந்துரை செய்யப்படும்.
தற்போது விவசாயிகள் வைத்துள்ள கோரிக்கையான சிறிய கால்வாய் சீரமைப்பு பணிகளுக்கு பொதுப்பணித் துறை மூலம் மதிப்பீடு தயார் செய்து ஊரக வளர்ச்சித் துறையின் 100 நாள் வேலை திட்டம் மூலம் பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். பெரிய கால்வாய்கள் சீரமைப்பதற்கு பொதுப்பணித் துறை மூலம் மதிப்பீடு தயார் செய்து அரசுக்கு பரிந்துரை செய்து பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். சாத்தனூர் அணையிலிருந்து நீர் திறப்பதற்கான கருத்துரு அரசுக்கு அனுப்பப்பட்டு அரசாணை வந்தவுடன் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சாத்தனூர் அணையில் நேற்றைய நிலவரப்படி நீர்மட்டம் 111.65 அடியாக இருந்தது. சாத்தனூர் இடது மற்றும் வலது புறக் கால்வாய்களில் முறையே விநாடிக்கு 250 கன அடி மற்றும் 200 கன அடி வீதம் 90 நாட்களுக்கு இடைவெளி விட்டு தண்ணீர் வழங்கலாம் என திட்டமிடப்பட்டு உள்ளது. மேலும் முதல் 30 நாட்களுக்கு நேரடி பாசனத்திற்கு தண்ணீர் வழங்கவும், திட்டமிடப்பட்டு உள்ளது என்றும் சாத்தனூர் அணையிலிருந்து திருக்கோவிலூர் அணைக்கட்டுக்கு மூன்று தவணைகளாக 1200 மில்லியன் கன அடி தண்ணீர் வழங்கலாம் எனவும் திட்டமிடப்பட்டு உள்ளதாக என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

கலசபாக்கம் அருகே போலி டாக்டரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கலசபாக்கம்:
கலசபாக்கம் அருகே உள்ள லாடவரம் கிராமத்தைச் சேர்ந்த அருள் என்பவர் முறையான மருத்துவ படிப்பு படிக்காமல் கடந்த சில வருடங்களாக அதே கிராமத்தில் கிளினிக் வைத்து பொதுமக்களுக்கு வைத்தியம் பார்த்து வந்துள்ளார்.
இது பற்றி தகவல் அறிந்த கலசபக்கம் சுகாதாரத்துறை அதிகாரிகள் போலி டாக்டர் அருள் மீது கலசபாக்கம் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் அருளை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலையில் பெண்ணிடம் 7 பவுன் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை வானவில் நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் குமரன். அவரது மனைவி அபிராமி (வயது 36). இவர் நேற்று முன்தினம் திருக்கோவிலூருக்கு உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு இரவு சுமார் 10 மணியளவில் திருவண்ணாமலை மத்திய பஸ் நிலையத்திற்கு வந்தார். பின்னர் அவர் தனது கணவருடன் 10.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் தென்றல் நகர் லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகம் வழியாக சென்று உள்ளார்.
அப்போது அந்த வழியாக எதிரே மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் திடீரென அபிராமி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதினர்.
பின்னர் அவர்கள் அபிராமியின் கழுத்தி இருந்த 7 பவுன் சங்கிலியை பறித்து கொண்டு சம்பவ இடத்தில் இருந்து தப்பி சென்று விட்டனர்.
அவர் திருடன், திருடன் என்று அலறினார். அக்கம்பக்கத்தினர் இது குறித்து திருவண்ணாமலை கிழக்கு போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அரிகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை பார்வையிட்டு இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் 2 மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
திருவண்ணாமலையில் கஞ்சா வைத்திருந்த முதியவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் மற்றும் போலீசார் ஆணாய்பிறந்தான் கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது நந்திநகர் பஸ் நிறுத்தம் அருகில் சந்தேகப்படும் வகையில் சென்று கொண்டிருந்த முதியவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது அவரிடம் ஒரு கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தியதில், திருவண்ணாமலை-திருக்கோவிலூர் சாலை கரிகாலன் நகரை சேர்ந்த முனுசாமி (61 வயது) என்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
ஆரணி அருகே குடும்ப தகராறில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
ஆரணி:
ஆரணியை அடுத்த சேவூர் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன். அவரது மனைவி கோமதி (வயது 23). இவர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. சுகன்ராஜ் என்ற ஆண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் கணவன் - மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் மனவேதனை அடைந்த கோமதி நேற்று முன்தினம் தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.
இதில் தீக்காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஆரணி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் வழக்குப்பதிவு செய்தார்.
தற்கொலை செய்து கொண்ட கோமதிக்கு திருமணமாகி 2 ஆண்டுகளே ஆவதால் ஆரணி உதவி கலெக்டர் (பொறுப்பு) ஜெயராமன் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.
ஆரணியில் பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
ஆரணி:
ஆரணி நகரில் 33 வார்டுகள் உள்ளன. அதில் 1-வது வார்டு முதல் 18-வது வார்டுகள் வரை துப்புரவுப் பணிகளை தனியார் மேற்கொண்டு வருகின்றனர். மீதமுள்ள 19-வது வார்டு முதல் 33-வது வார்டு வரை நகராட்சி துப்புரவு பணியாளர்கள் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
முதல் 18 வார்டுகள் வரை செய்யப்படுகிற துப்புரவு பணியாளர்களின் பணிகள் வீடுகளில் குப்பைகளை வாங்குவது மட்டுமே. ஆனால் பக்க கால்வாய்களிலும், சிறு பாலங்களிலும் ஏற்பட்டுள்ள அடைப்புகளை அகற்றுவதில்லை. இதனால் பல்வேறு பகுதிகளில் உள்ள கால்வாய்களில் கழிவுநீர் சாலையில் வழிந்தோடுகிறது.
மேலும் நகரில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்ட குப்பை கிடங்கு வசதி இல்லாததால் கமண்டல நாகநதி ஆற்றுப்பகுதியிலும், ஆரணி-முள்ளிப்பட்டு-சேவூர் பைபாஸ் சாலையிலும், பழைய ஆற்காடு சாலையில் உள்ள ஆற்றுப் பகுதியிலும், ஆரணி- வந்தவாசி சாலையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கமிட்டி வளாகம் அருகிலும் குப்பைகளை கொட்டி வருகின்றனர்.
இதனால் குப்பைகள் அதிகளவில் சேரும்போது, துப்புரவு பணியாளர்கள் அவர்களாகவே அங்குள்ள குப்பைகளை தீயிட்டு கொளுத்தி விடுகின்றனர். இதனால் அங்குள்ள பொதுமக்கள் பல்வேறு நோய் தொற்றுக்கு ஆளாகின்றனர். துர்நாற்றம் வீசும் காற்று, நச்சுப்புகையால் மூச்சுத்திணறல், உடல் நலப் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து ஆரணி நகராட்சி ஆணையாளரிடம் பலமுறை புகார் கொடுத்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இந்தநிலையில் நேற்று முன்தினம் ஆரணி-வந்தவாசி சாலையில் ஒழுங்குமுறை விற்பனைக் கமிட்டி அருகில் வசித்து வரும் பொதுமக்களும், பல்வேறு பகுதி மக்களும் சேர்ந்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்ததும் ஆரணி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, ஆரணி டவுன் வருவாய் ஆய்வாளர் வேலுமணி, கிராம நிர்வாக அலுவலர் ஜெயச்சந்திரன் ஆகியோர் விரைந்து வந்து, பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதுதொடர்பாக ஆரணி நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) டி.ராஜவிஜயகாமராஜிடமும் தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டு பேசி, குப்பைகள் எரிக்கப்பட்ட இடத்தை சுத்தம் செய்து, குப்பைகளை அங்குக் கொட்டாமல் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
ஆரணி அருகே விஷம் குடித்து மாற்றுத்திறனாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆரணி:
ஆரணியை அடுத்த ஆதனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 45), மாற்றுத்திறனாளி. இவருக்கு செந்தாமரை என்ற அக்காவும், ஆறுமுகம் என்ற தம்பியும் உள்ளனர். மூவருக்கும் சொந்தமான சுமார் 2½ ஏக்கர் நிலம் உள்ளது. நிலம் பாகப்பிரிவினை சம்பந்தமாக செந்தாமரையின் கணவர் அன்பழகன் சுப்பிரமணியமும், தம்பி ஆறுமுகமும் கடந்த சில வருடங்களாகவே தொடர்ந்து தகராறு செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த சுப்பிரமணி விஷம் குடித்து மயங்கி கிடந்தார். உடனடியாக அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர்கள் பரிசோதித்து வரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து ஆரணி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
திருவண்ணாமலையில் போலீஸ் என கூறி பெண்ணிடம் 18 பவுன் நகை பறித்து சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை ராமலிங்கனார் தெருவை சேர்ந்தவர் இளங்கோ. இவர் மங்கலத்தில் நகை அடகு கடை வைத்துள்ளார். இவரது மனைவி மணிமொழி (வயது 51). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று காலை திருவண்ணாமலை சன்னதி தெருவில் உள்ள தனியார் வங்கி மற்றும் துணிக்கடைகளுக்கு மணிமொழி சென்றுள்ளார். அப்போது அவர் சுமார் 18 பவுன் நகை அணிந்திருந்ததாக கூறப்படுகிறது. அங்கிருந்து அவர் சன்னதி தெரு வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது சன்னதி தெருவில் இருந்து அய்யங்குள தெரு பிரியும் பகுதியில் நின்று கொண்டிருந்த சுமார் 35 வயது மதிக்கத்தக்க மர்ம நபர்கள் 2 பேர் மணிமொழியிடம் பேச்சு கொடுத்துள்ளனர்.
அப்போது அவர்கள் தங்களை போலீசார் என அறிமுகப்படுத்திக் கொண்டு, பொது இடத்தில் இவ்வளவு நகை அணிந்து வரலாமா என அறிவுரை வழங்கி நகையை கழற்றி கொடுங்கள் பேப்பரில் மடித்து தருகிறோம் என கூறியுள்ளனர்.
இதனை நம்பி அவர் நகைகளை கழட்டி அந்த மர்ம நபர்களிடம் கொடுத்துள்ளார். பின்னர் அவர்களும் அதனை பேப்பரில் மடித்து கொடுப்பது போல் செய்து சாதுரியமாக அங்கிருந்து மோட்டார் சைக்கிளிள் தப்பி சென்றுள்ளனர். இதனால் செய்வதறியாமல் அவர் அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் இதுகுறித்து திருவண்ணாமலை டவுன் போலீசில் மணிமொழி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து போலீஸ் எனக் கூறிய மர்ம நபர்கள் தேடி வருகின்றனர்.