என் மலர்

  நீங்கள் தேடியது "old man arrest"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சிறுமி பகத்சிங் நகர் வழியாக தனது உறவினர் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது திடீரென மழை வந்தது.
  • சிறுமி அந்த பகுதியில் உள்ள திருமண மண்டபம் முன்பு மழைக்காக ஒதுங்கி நின்றார்.

  கோவை:

  கோவை துடியலூர் அருகே உள்ள பெரியநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் 10-ம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டு வேலைகள் செய்து வருகிறார்.

  சம்பவத்தன்று சிறுமி பகத்சிங் நகர் வழியாக தனது உறவினர் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது திடீரென மழை வந்தது. இதனையடுத்து சிறுமி அந்த பகுதியில் உள்ள திருமண மண்டபம் முன்பு மழைக்காக ஒதுங்கி நின்றார். அப்போது அங்கு பணியில் இருந்த காவலாளி ஜோதிபுரத்தை சேர்ந்த நடராஜன் (வயது 73) என்பவர் சிறுமியிடம் அன்பாக பேசுவது போல் நடித்தார்.

  பின்னர் அவர் சிறுமியை மண்டபத்துக்குள் வருமாறு அழைத்தார். சிறுமி உள்ளே சென்றதும் அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி சத்தம் போட்டார். அங்கு இருந்து தப்பிச் சென்றார். இது குறித்து அவர் தனது தாயிடம் கூறி கதறி அழுதார்.

  பின்னர் இது குறித்து சிறுமி துடியலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

  பின்னர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலாளி நடராஜனை கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

  ×