என் மலர்
திருவண்ணாமலை
திருவண்ணாமலை நகராட்சி வேட்டவலம் சாலையில் நடைபெற்ற தூய்மை பணியை அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்து ஆய்வு செய்த போது எடுத்தபடம். அருகில் கலெக்டர் முருகேஷ் மற்றும் பலர் உள்ளனர்.
திருவண்ணாமலை:
தமிழகத்தில் எதிர்வரும் வடகிழக்கு பருவமழையால் குடியிருப்பு பகுதிகளில் பல்வேறு இடங்களில் வீடுகளுக்குள் வெள்ளநீர் புகும் அபாயம் உள்ளது. அதிகப்படியாக தேக்கமாகும் மழைநீரால் டெங்கு மற்றும் மலோியா நோய் பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாகும் சூழ்நிலையும் உள்ளது. மேலும் மழைநீர் சாக்கடை நீருடன் கலந்து தேங்குவதால் இதர தொற்று நோய்கள் பரவும் அபாயமும் உள்ளது.
ஆகவே வரும் பருவமழையால் ஏற்படும் இடர்பாடுகளை தவிர்த்திடும் வகையில் கடந்த 20-ந்தேதி முதல் நாளை (சனிக்கிழமை) வரை ஊரக மற்றும் நகர்புற பகுதிகளில் மாபெரும் மழைநீர் வடிகால் தூய்மைப் பணி முகாமை நடத்தி அனைத்து மழைநீர் வடிகால்களையும் 100 சதவீதம் தூர்வாரி தூய்மைப்படுத்த வேண்டும் என அரசு அறிவித்துள்ளது.
அதன்படி நேற்று திருவண்ணாமலை நகராட்சியில் வேட்டவலம் சாலை, கீழ்நாத்தூர், நாவக்கரை, பெருமாள்நகர், காந்திநகர் ஆகிய பகுதிகளில் திருவண்ணாமலை நகராட்சி, நெடுஞ்சாலைத்துறை, தூய்மை அருணை இயக்கம் ஆகியவை இணைந்து மாபெரும் மழைநீர் வடிகால் தூய்மைப் பணி முகாம் நடத்தப்பட்டது.
முகாமை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்து நேரில் ஆய்வு செய்தார். தூய்மைப் பணியில் 500-க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டனர். அப்போது சிறிய கால்வாய்களை சுகாதாரப் பணியாளர்கள் மூலமும், பெரிய கால்வாய்களை பொக்லைன் எந்திரம் மூலமும் சுத்தம் செய்யப்பட்டது.
மேலும் அனைத்து வார்டுகளிலும் நாளைக்குள் பணியை முடிக்கும் வகையில் பகுதிகளை பிரித்துக் கொள்ள வேண்டும் என்றும், திடக்கழிவு, கட்டிட கழிவு, செடி, கொடி புதர்களை முழுமையாக அகற்ற வேண்டும் என்றும், பணிகள் முடிந்த பின்னர் கொசு மருந்து தெளிக்க வேண்டும் என்றும் அமைச்சர் அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
இப்பணி காலை 8 மணியளவில் தொடங்கி மதியம் 1 மணி வரை நடந்தது. அனைத்துப் பகுதிகளுக்கும் அமைச்சர் நேரில் சென்று தூய்மைப் பணியில் ஈடுபட்ட தன்னார்வலர்களையும், நகராட்சி துப்புரவு பணியாளர்களையும், நெடுஞ்சாலைத் துறை பணியாளர்களையும் ஊக்கப்படுத்தினார்.
தூய்மைப்பணியின் போது நாவக்கரையில் உள்ள பொதுமக்கள் சாலை வசதி கேட்டும், பெருமாள் நகரில் உள்ள பெண்கள் வீட்டுமனைப் பட்டாக்கள் கோரியும் அமைச்சரிடம் மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சர் விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
ஆய்வின் போது மாவட்ட கலெக்டர் முருகேஷ், சி.என்.அண்ணாதுரை எம்.பி., மு.பெ.கிரி எம்.எல்.ஏ., நகராட்சி ஆணையர் சந்திரா, நகராட்சி ஆய்வாளர்கள் ஆல்பர்ட், வினோத்கண்ணா, கார்த்திகேயன், நெடுஞ்சாலைத்துறை வட்ட கண்காணிப்பு பொறியாளர் பழனிவேல்ராஜன், கோட்ட பொறியாளர் முரளி, உதவி கோட்ட பொறியாளர் ரகுராமன், உதவி பொறியாளர் கலைமணி, தூய்மை அருணையின் மேற்பார்வையாளர்கள் ரா.ஸ்ரீதரன், டாக்டர் எ.வ.வே.கம்பன், ப.கார்த்திவேல்மாறன், ஒருங்கிணைப்பாளர்கள் ப்ரியா ப.விஜயரங்கன், ரா.ஜீவானந்தம், ஏ.ஏ. ஆறுமுகம் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள், நகராட்சி பணியாளர்கள், நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை நகரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவது குறித்து போலீஸ் சூப்பிரண்டு திடீரென ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை:
தமிழகத்தில் வளர்ந்து வரும் நகரங்களில் திருவண்ணாமலை நகரமும் ஒன்றாகும். திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்து மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களில் ஏராளமான மக்கள் திருவண்ணாமலைக்கு வருகை தருகின்றனர். இது மட்டுமின்றி பல்வேறு பணிகளுக்காக திருவண்ணாமலை நகரத்திற்கு தினமும் ஏராளமான மக்கள் வருகை தருவதால் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகின்றது.
திருவண்ணாமலை நகரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த நேற்று மாலை 7 மணி அளவில் திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார்ரெட்டி திருவண்ணாமலை தேரடி வீதி, காந்தி சிலை பகுதி, திருவண்ணாலை மத்திய பஸ் நிலையம் எதிரில் உள்ள பகுதிகள் மற்றும் பஸ் நிலையத்திற்குள் திடீரென ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது பஸ் நிலையத்திற்கு எதிரே போக்குவரத்துக்கு இடையூறாக சாலையோரத்தில் மோட்டார் சைக்கிள்களை நிறுத்தக்கூடாது என்று போலீஸ் சூப்பிரண்டு அறிவுறுத்தினார்.
மேலும் அறிவொளி பூங்கா அருகில் போக்குவரத்து சிக்னல் பகுதியில் பார்வையிட்டார். அப்போது போக்குவரத்து விதி மீறி சிக்னல் நேரத்தில் வாகன ஓட்டிகள் வெள்ளை கோட்டிற்கு அருகில் நிறுத்தாமல் முந்தியடித்து கொண்டு வந்து போக்குவரத்து இடையூறாக நின்ற ஆட்டோ, மோட்டார் சைக்கிள்களில் வந்த வாகன ஓட்டிகளிடம் போக்குவரத்து விதிகளை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்றும், மோட்டார் சைக்கிள்களில் செல்பவர்கள் ஹெல்மெட் அணிய வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார்.
ஆய்வின் போது திருவண்ணாமலை டவுன் உதவி போலீஸ் சூப்பிரண்டு கிரண்ஸ்ருதி, போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி மற்றும் போலீசார் பலர் உடனிருந்தனர்.
செய்யாறில் ஓட்டலில் சமையல் மாஸ்டர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்யாறு:
செய்யாறை அடுத்த தவசி கிராமத்தை சேர்ந்தவர் முனிரத்தினம் (வயது 45), ஓட்டலில் சமையல் மாஸ்டராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி தங்கம்மாள். இவர்களுக்கு மணிகண்டன் என்ற மகனும், செண்பகபூஜா என்ற மகளும் உள்ளனர்.
நேற்று முன்தினம் முனிரத்தினம் ஓட்டலில் வேலை செய்து கொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக சக ஊழியர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக செய்யாறு மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், முனிரத்தினம் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து செய்யாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் மீது ஏறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை :
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர். நேற்று ராஜகோபுரம் முன்பு ஏராளமான பக்தர்கள் நின்று சாமி தரிசனம் செய்தனர். மதியம் 1 மணியளவில் வாலிபர் ஒருவர் ராஜகோபுரத்தின் மீது வெளிப்புறம் வழியாக சுமார் 20 அடிக்கு மேல் ஏறி ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டார். இதைப்பார்த்தவர்கள் கோவிலின் ராஜகோபுர பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம் தெரிவித்தனர்.
இதையடுத்து போலீசார் ராஜகோபுரத்தின் கீழ்பகுதியில் நின்றவாறு அவரிடம் பேச்சுக்கொடுத்தனர். அப்போது அவர், நான் புதியதாக வாங்கிய செல்போனை ஒருவர் எடுத்து சென்று தலைமறைவாகி விட்டார். அவரிடம் இருந்து செல்போனை வாங்கி தராவிட்டால் ராஜகோபுரம் மேலிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டல் விடுத்து உள்ளார்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் இது குறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசார் அந்த நபரிடம் சுமார் 1 மணி நேரம் சமரச முயற்சியில் ஈடுபட்டனர். அதன்பின் ராஜகோபுரத்தின் மேல் ஏறி சென்று அவரை பத்திரமாக மீட்டு கீழே அழைத்து வந்தனர். கோபுரத்தின் முன் இதனை ஏராளமானோர் பார்க்க திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவரை போலீசார் திருவண்ணாமலை டவுன் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் வர்சிகுடி வடக்கு கூவம் பகுதியை சேர்ந்த புருஷோத்தமன் (வயது 23) என்பதும் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்தது. அவர், கடந்த 3 வருடங்களுக்கு மேலாக திருவண்ணாமலையில் சுற்றி திரிந்து வந்துள்ளார். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவண்ணாமலை அருகே குடியிருப்பு பகுதியில் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று முன்தினம் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. திருவண்ணாமலையில் பெய்த பலத்த மழையால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கி காணப்பட்டது. மேலும் நொச்சிமலை பகுதியில் உள்ள ஏரியில் இருந்து மழைநீர் வெளியே செல்ல வழியில்லாததால் அதன் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் புகுந்தது. இதனால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
இதையடுத்து நேற்று பகலில் நொச்சிமலை குடியிருப்பு பகுதிகளில் இருந்து தண்ணீரை வெளியேற்றும் பணியில் நெடுஞ்சாலைத்துறையினர் ஈடுபட்டனர். மழைநீர் செல்லும் கால்வாயை பொக்லைன் எந்திரம் மூலம் சீர் செய்தனர். தொடர்ந்து அப்பகுதியில் தேங்கி இருந்த தண்ணீர் படி, படியாக குறைய தொடங்கியது.
அதேபோல் திருவண்ணாமலையை அடுத்த மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட கோடிதிப்பை பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். நேற்று முன்தினம் பெய்த மழையால் அப்பகுதியில் உள்ள தெருக்களில் மழைநீர் தேங்கியது. சில குடியிருப்புகளிலும் மழைநீர் புகுந்தது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று முன்தினம் பெய்த மழையில், அதிகபட்சமாக கலசபாக்கத்தில் 159 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகி உள்ளது. மற்ற பகுதிகளில் பெய்த மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
கீழ்பென்னாத்தூர் - 96.8, ஜமுனாமரத்தூர் - 69, திருவண்ணாமலை - 54, போளூர் - 12.6, தண்டராம்பட்டு - 8, சேத்துப்பட்டு - 2.8, ஆரணி - 1 ஆகும். மேலும் குப்பநத்தம் அணைக்கு விநாடிக்கு 70 கன அடி நீர் வரத்தும், மிருகண்டாநதி அணைக்கு விநாடிக்கு 80 கன அடி நீர் வரத்தும், செண்பகதோப்பு அணைக்கு விநாடிக்கு 32 கன அடி நீர்வரத்தும் ஏற்பட்டு உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் தேசூர் அரசு பள்ளி மாணவனுக்கு கொரோனா உறுதியானதை அடுத்து அப்பள்ளிக்கு 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
சேத்துப்பட்டு:
திருவண்ணாமலை மாவட்டம் தேசூர் அரசு பள்ளியில் படிக்கும் கள்ளப்புலியூர் கிராமத்தை சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவருக்கு கொரோனா உறுதியானது.
இதையடுத்து தேசூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆரணி மாவட்ட கல்வி அதிகாரிக்கு தகவல் தெரிவித்தார். அதை தொடர்ந்து, பள்ளிக்கு 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது.
பள்ளி முழுவதும் சுத்தம் செய்து, கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
இதையடுத்து கள்ளப்புலியூர் கிராமத்தை சேர்ந்த மாணவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
மேலும் பள்ளிக்கு வந்த 20-க்கும் மேற்பட்ட ஆசிரியர், ஆசிரியர்களுக்கு தொடர் பரிசோதனை எடுக்கப்பட்டு வருகிறது. 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டு பள்ளி மூடப்பட்டது. சுகாதராதுறையினர், மருத்துவ குழுவினர் அங்கு முகாமிட்டு கண்காணித்து வருகின்றனர்.

போளூர் பகுதியில் உள்ள ஏரி மற்றும் குளங்களுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று முன்தினம் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. இதில் அதிகபட்சமாக செங்கத்தில் 64 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகி உள்ளது. மற்ற பகுதிகளில் பெய்த மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
தண்டராம்பட்டு-52, கலசபாக்கம்-45, வந்தவாசி-37, போளூர்-31.8, ஜமுனாமரத்தூர்-22, செய்யாறு-18, திருவண்ணாமலை-6, ஆரணி-4.5, சேத்துப்பட்டு-3.4, கீழ்பென்னாத்தூர்-2.8 ஆகும்.
மாவட்டம் முழுவதும் அவ்வப்போது பெய்து வரும் மழையினால் சாத்தனூர் அணைக்கு நேற்று விநாடிக்கு 208 கன அடி தண்ணீரும், மிருகண்டாநதிக்கு விநாடிக்கு 48 கன அடி தண்ணீரும் வரத்து ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதேபோல போளூர் பகுதியில் உள்ள ஏரி மற்றும் குளங்களுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஜவ்வாதுமலை அடிவாரத்தில் உற்பத்தியாகும் மஞ்சள் ஆற்றில் இருந்து போளூர் பெரிய ஏரிக்கு தண்ணீர் நேற்று அதிகாலை முதல் வேகமாக வருகிறது.

திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலத்திற்கு தடை விதிக்கப்பட்டதால் பக்தர்களின்றி கிரிவலப்பாதை வெறிச்சோடி காணப்பட்டது. கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்த வெளியூர் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
திருவண்ணாமலையில் மலையை சிவனாக வழிபடுவதால் பவுர்ணமி நாட்களில் அருணாசலேஸ்வரர் கோவிலின் பின்புறம் உள்ள மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் மலை சுற்றும் பாதையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலத்திற்கு மாவட்ட நிர்வாகம் மூலம் தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு வருகிறது.
இந்த மாதத்திற்கான பவுர்ணமி நேற்று அதிகாலை 5.20 மணிக்கு தொடங்கி இன்று அதிகாலை 5.51 மணிக்கு நிறைவடைந்தது. இந்த மாதமும் பவுர்ணமி கிரிவலத்திற்கு தடை விதிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை என 3 நாட்கள் அருணாசலேஸ்வரர் கோவில் மற்றும் கிரிவலப்பாதையில் உள்ள அஷ்டலிங்க கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டு இருந்த நிலையில் 4-வது நாளாக நேற்றும் அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்களுக்கு சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட வில்லை.
இதை அறியாத வெளி மாநில பக்தர்கள் புரட்டாசி பவுர்ணமியன்று சாமி தரிசனம் செய்ய திருவண்ணாமலைக்கு நேற்று முன்தினம் இரவே வருகை புரிந்தனர். இதில் சிலர் நேற்று முன்தினம் இரவு முதலே கிரிவலம் செல்ல தொடங்கினர். நேற்று அதிகாலையில் பவுர்ணமி நேரத்தில் கிரிவலம் செல்ல வந்த பக்தர்கள் கிரிவலப்பாதையில் உள்ள அஷ்டலிங்க சன்னதிகள் மூடப்பட்டிருந்ததால் ஏமாற்றம் அடைந்தனர்.
மேலும் அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய முடியாததால் பக்தர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். பக்தர்கள் ராஜகோபுரம் முன்பு கற்பூரம் ஏற்றி வழிபட்டு சென்றனர். மேலும் நேற்று அதிகாலை முதல் கிரிவலப்பாதையில் உள்ள முக்கிய சாலை சந்திப்பு பகுதிகளில் போலீசார் மூலம் தடுப்புகள் அமைக்கப்பட்டு பக்தர்கள் கிரிவலம் செல்லாமல் தடுக்க கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது கிரிவலம் செல்ல வந்த பக்தர்களை போலீசார் திருப்பி அனுப்பினர். இருப்பினும் சிலர் மாற்றுத் பாதையில் கிரிவலப்பாதைக்கு வந்து தங்களது கிரிவலத்தை தொடர்ந்தனர்.
நேற்று பகலிலும், இரவிலும் தனித்தனியாக சிலர் கிரிவலம் சென்றனர். பக்தர்கள் கூட்டமின்றி கிரிவலப்பாதை வெறிச்சோடி காணப்பட்டது. போலீசார் தொடர்ந்து கிரிவலப்பாதையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

தூசி அருகே மணல் கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூசி:
வெம்பாக்கம் தாலுகா தூசி அருகில் உள்ள வயலாத்தூர் கிராமத்தில் உள்ள செய்யாறு ஆற்றுப்படுகையில் இருந்து மணல் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் தூசி போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை, சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் மற்றும் போலீசார் மேற்கண்ட பகுதியில் தீவிர ரோந்துச் சென்றபோது, அதே கிராமத்தில் பள்ளத்தெருவைச் சேர்ந்த முனுசாமி (வயது 55), சிகாமணி (40), சீனிவாசன் (45) ஆகியோர் மாட்டு வண்டிகளில் மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
வந்தவாசியில் மின்சாரம் தாக்கி பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வந்தவாசி:
வந்தவாசி காமராஜர் நகர் பகுதியை சேர்ந்தவர் மாணிக்க ஆச்சாரி. இவரது மனைவி மல்லிகா (வயது 57) இவர்களுக்கு வெங்கடேசன், மணிகண்டன் என்ற 2 மகன்கள் உள்ளனர். நேற்று அதிகாலை மழை பெய்து நின்ற நிலையில், மல்லிகா தூக்கத்தில் இருந்து எழுந்து லைட்டை போட சுவிட்சை இயக்கியபோது திடீரென மின்சாரம் தாக்கியது. இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த வந்தவாசி தெற்கு காவல்துறையினர் மல்லிகா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தெற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்த மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் வருகிற 20-ந்தேதி (திங்கட்கிழமை) அதிகாலை 5.20 மணிக்கு தொடங்கி மறுநாள் 21-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 5.51 மணி வரை உள்ளது.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை கலெக்டர் முருகேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் திகழ்கிறது. இக்கோவிலின் பின்புறம் உள்ள மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் மலை சுற்றும் பாதையில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாட்களில் கிரிவலம் செல்வதற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வருகை புரிவார்கள்.
இந்த மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் வருகிற 20-ந் தேதி (திங்கட்கிழமை) அதிகாலை 5.20 மணிக்கு தொடங்கி மறுநாள் 21-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 5.51 மணி வரை உள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் உள்ளதால் திருவண்ணாமலை பவுர்ணமி கிரிவலம் நடைபெறும் நாட்களில் மலை சுற்றும் பாதையில் 14 கிலோ மீட்டர் கிரிவலம் வருவதற்கு அனுமதி கிடையாது.
இதன் காரணமாக திருவண்ணாமலை பவுர்ணமி கிரிவலம் வர வேண்டாம் என பக்தர்கள் மற்றும் பொதுமக்களிடம் கேட்டுக் கொள்ளப்படுகிறது. தமிழ்நாடு அரசின் கொரோனா மேலாண்மைக்கான தேசிய வழிகாட்டு நெறிமுறைகளின்படி கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்தவும், பொதுமக்களை பாதுகாக்கவும் எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கைக்கு பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

போளூர் அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போளூர்:
போளூரை அடுத்த வெண்மணி கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமி. இவரது 2 வது மகள் கவுசல்யா (வயது 20). இவர் போளூர் செல்வம்பேட்டையை சேர்ந்த பேக்கரியில் மாஸ்டராக வேலைபார்க்கும் விஜய் (26) என்பவரை காதலித்து 3 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். 2 வயதில் அருண் என்ற ஆண் குழந்தை உள்ளது. திருமணம் ஆனதிலிருந்து கவுசல்யா தாயார் வீட்டுக்கு வருவதில்லை. ஆனால் போன் மூலம் பேசி வந்தார். இந்த நிலையில் நேற்று கவுசல்யா வீட்டில் சண்டை போட்டதாக தகவலறிந்து தாய் லட்சுமி, அவரது மூத்த மகள் கீர்த்தனா ஆகியோர் சென்று பார்த்தபோது கவுசல்யா தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது.
இதுகுறித்து லட்சுமி போளூர் போலீசில் புகார் செய்தார். துணை போலீஸ் சூப்பிரண்டு அறிவழகன் மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்கு பதிவு செய்தார். திருமணமாகி 3 வருடங்களே ஆவதால், ஆரணி கோட்டாட்சியர் கவிதா விசாரணை மேற்கொண்டுள்ளார்.