search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேட்டவலம் சாலையில் நடைபெற்ற தூய்மை பணியை அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்து ஆய்வு செய்த போது எடுத்தபடம்.
    X
    வேட்டவலம் சாலையில் நடைபெற்ற தூய்மை பணியை அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்து ஆய்வு செய்த போது எடுத்தபடம்.

    திருவண்ணாமலை நகராட்சி பகுதியில் மாபெரும் மழைநீர் வடிகால்வாய் தூய்மை பணி முகாம்

    திருவண்ணாமலை நகராட்சி வேட்டவலம் சாலையில் நடைபெற்ற தூய்மை பணியை அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்து ஆய்வு செய்த போது எடுத்தபடம். அருகில் கலெக்டர் முருகேஷ் மற்றும் பலர் உள்ளனர்.
    திருவண்ணாமலை:

    தமிழகத்தில் எதிர்வரும் வடகிழக்கு பருவமழையால் குடியிருப்பு பகுதிகளில் பல்வேறு இடங்களில் வீடுகளுக்குள் வெள்ளநீர் புகும் அபாயம் உள்ளது. அதிகப்படியாக தேக்கமாகும் மழைநீரால் டெங்கு மற்றும் மலோியா நோய் பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாகும் சூழ்நிலையும் உள்ளது. மேலும் மழைநீர் சாக்கடை நீருடன் கலந்து தேங்குவதால் இதர தொற்று நோய்கள் பரவும் அபாயமும் உள்ளது.

    ஆகவே வரும் பருவமழையால் ஏற்படும் இடர்பாடுகளை தவிர்த்திடும் வகையில் கடந்த 20-ந்தேதி முதல் நாளை (சனிக்கிழமை) வரை ஊரக மற்றும் நகர்புற பகுதிகளில் மாபெரும் மழைநீர் வடிகால் தூய்மைப் பணி முகாமை நடத்தி அனைத்து மழைநீர் வடிகால்களையும் 100 சதவீதம் தூர்வாரி தூய்மைப்படுத்த வேண்டும் என அரசு அறிவித்துள்ளது.

    அதன்படி நேற்று திருவண்ணாமலை நகராட்சியில் வேட்டவலம் சாலை, கீழ்நாத்தூர், நாவக்கரை, பெருமாள்நகர், காந்திநகர் ஆகிய பகுதிகளில் திருவண்ணாமலை நகராட்சி, நெடுஞ்சாலைத்துறை, தூய்மை அருணை இயக்கம் ஆகியவை இணைந்து மாபெரும் மழைநீர் வடிகால் தூய்மைப் பணி முகாம் நடத்தப்பட்டது.

    முகாமை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்து நேரில் ஆய்வு செய்தார். தூய்மைப் பணியில் 500-க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டனர். அப்போது சிறிய கால்வாய்களை சுகாதாரப் பணியாளர்கள் மூலமும், பெரிய கால்வாய்களை பொக்லைன் எந்திரம் மூலமும் சுத்தம் செய்யப்பட்டது.

    மேலும் அனைத்து வார்டுகளிலும் நாளைக்குள் பணியை முடிக்கும் வகையில் பகுதிகளை பிரித்துக் கொள்ள வேண்டும் என்றும், திடக்கழிவு, கட்டிட கழிவு, செடி, கொடி புதர்களை முழுமையாக அகற்ற வேண்டும் என்றும், பணிகள் முடிந்த பின்னர் கொசு மருந்து தெளிக்க வேண்டும் என்றும் அமைச்சர் அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

    இப்பணி காலை 8 மணியளவில் தொடங்கி மதியம் 1 மணி வரை நடந்தது. அனைத்துப் பகுதிகளுக்கும் அமைச்சர் நேரில் சென்று தூய்மைப் பணியில் ஈடுபட்ட தன்னார்வலர்களையும், நகராட்சி துப்புரவு பணியாளர்களையும், நெடுஞ்சாலைத் துறை பணியாளர்களையும் ஊக்கப்படுத்தினார்.

    தூய்மைப்பணியின் போது நாவக்கரையில் உள்ள பொதுமக்கள் சாலை வசதி கேட்டும், பெருமாள் நகரில் உள்ள பெண்கள் வீட்டுமனைப் பட்டாக்கள் கோரியும் அமைச்சரிடம் மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சர் விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    ஆய்வின் போது மாவட்ட கலெக்டர் முருகேஷ், சி.என்.அண்ணாதுரை எம்.பி., மு.பெ.கிரி எம்.எல்.ஏ., நகராட்சி ஆணையர் சந்திரா, நகராட்சி ஆய்வாளர்கள் ஆல்பர்ட், வினோத்கண்ணா, கார்த்திகேயன், நெடுஞ்சாலைத்துறை வட்ட கண்காணிப்பு பொறியாளர் பழனிவேல்ராஜன், கோட்ட பொறியாளர் முரளி, உதவி கோட்ட பொறியாளர் ரகுராமன், உதவி பொறியாளர் கலைமணி, தூய்மை அருணையின் மேற்பார்வையாளர்கள் ரா.ஸ்ரீதரன், டாக்டர் எ.வ.வே.கம்பன், ப.கார்த்திவேல்மாறன், ஒருங்கிணைப்பாளர்கள் ப்ரியா ப.விஜயரங்கன், ரா.ஜீவானந்தம், ஏ.ஏ. ஆறுமுகம் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள், நகராட்சி பணியாளர்கள், நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×