என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    போளூர் அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை

    போளூர் அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    போளூர்:

    போளூரை அடுத்த வெண்மணி கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமி. இவரது 2 வது மகள் கவுசல்யா (வயது 20). இவர் போளூர் செல்வம்பேட்டையை சேர்ந்த பேக்கரியில் மாஸ்டராக வேலைபார்க்கும் விஜய் (26) என்பவரை காதலித்து 3 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். 2 வயதில் அருண் என்ற ஆண் குழந்தை உள்ளது. திருமணம் ஆனதிலிருந்து கவுசல்யா தாயார் வீட்டுக்கு வருவதில்லை. ஆனால் போன் மூலம் பேசி வந்தார். இந்த நிலையில் நேற்று கவுசல்யா வீட்டில் சண்டை போட்டதாக தகவலறிந்து தாய் லட்சுமி, அவரது மூத்த மகள் கீர்த்தனா ஆகியோர் சென்று பார்த்தபோது கவுசல்யா தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது.

    இதுகுறித்து லட்சுமி போளூர் போலீசில் புகார் செய்தார். துணை போலீஸ் சூப்பிரண்டு அறிவழகன் மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்கு பதிவு செய்தார். திருமணமாகி 3 வருடங்களே ஆவதால், ஆரணி கோட்டாட்சியர் கவிதா விசாரணை மேற்கொண்டுள்ளார்.
    Next Story
    ×