என் மலர்tooltip icon

    திருவள்ளூர்

    • கூட்டத்தில் பங்கேற்க வரும் உதயநிதி ஸ்டாலினுக்கு பிரமாண்ட வரவேற்பு கொடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
    • இளைஞரணியின் செயல்பாடு மற்றும் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விரிவாக பேச உள்ளார்.

    ஆவடி:

    தி.மு.க. இளைஞரணியின் 2-வது மாநில மாநாடு சேலத்தில் டிசம்பர் மாதம் 17-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த மாநாட்டுக்கு இளைஞர்களை தயார்படுத்தும் வகையில் மாவட்ட வாரியாக இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடத்தி வருகிறார்.

    அந்த வகையில் இன்று திருவள்ளூர் ஒருங்கிணைந்த மாவட்ட தி.மு.க. இளைஞரணி நிர்வாகிகள் கூட்டம் இன்று மாலை ஆவடியில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.

    கூட்டத்திற்கு திருவள்ளூர் மத்திய மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆவடி சா.மு.நாசர் எம்.எல்.ஏ. தலைமை வகிக்கிறார்.

    இதில் இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார். டிசம்பர் மாதம் நடைபெற உள்ள தி.மு.க. இளைஞரணி மாநில மாநாடு குறித்து இந்த கூட்டத்தில் விரிவாக ஆலோசனை வழங்க உள்ளார்.

    இளைஞரணியின் செயல்பாடு மற்றும் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்தும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகிறார்.

    இந்த கூட்டத்தில் அமைச்சர் ஆர்.காந்தி, திருவள்ளூர் மேற்கு மாவட்டச் செயலாளர் திருத்தணி சந்திரன் எம்.எல்.ஏ. திருவள்ளூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் டி.ஜே.கோவிந்தராஜன் எம்.எல்.ஏ., பூந்தமல்லி எம்.எல்.ஏ., ஆ.கிருஷ்ணசாமி, மாநில இளைஞரணி துணைச் செயலாளர்கள் அப்துல் மாலிக், பிரபு கஜேந்திரன், மாநில மாணவரணி இணைச் செயலாளர் ஜெரால்டு, ஆவடி மேயர் உதயகுமார், மாநகர செயலர் சண்.பிரகாஷ் மற்றும் அனைத்து அணி அமைப்பாளர்கள் கலந்து கொள்கின்றனர்.

    இந்த கூட்டத்தில் பங்கேற்க வரும் உதயநிதி ஸ்டாலினுக்கு ஆவடியில் பிரமாண்ட வரவேற்பு கொடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

    முன்னதாக, இன்று காலை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருவள்ளூர் சென்றிருந்தார்.

    திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் சிறப்புத் திட்டங்களின் நிலைப்பாடு குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

    செப்டம்பர் 15-ந்தேதி முதல் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்பட உள்ள கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் எந்த அளவில் உள்ளது என்பது பற்றியும் ஆய்வு மேற்கொண்டார்.

    திருவள்ளூர் மாவட்டத்தில் எவ்வளவு பெண்கள் விண்ணப்பித்து உள்ளனர் என்ற விவரங்களை கேட்டறிந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தற்போது நடைபெறும் களஆய்வு விவரங்களையும் கேட்டறிந்தார்.

    இது தவிர சிறப்புத் திட்டங்களின் கீழ் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டப் பணிகள் குறித்தும் கலெக்டர் ஆல்பி ஜான் வர்க்கீசுடன் ஆலோசித்தார். இதில் சிறப்பு திட்ட அதிகாரி டாரேஸ் அகமது உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

    அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் 912 பேர்களுக்கு ரூ.36 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.

    திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஒருநாள் சுற்றுப் பயணம் மேற்கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு பல இடங்களில் வரவேற்புகள் கொடுக்கப்பட்டன.

    • நேற்று மாலை விஜயலட்சுமி பள்ளி முடிந்து வீடு நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தார்.
    • மகன், மகளை மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்று இருளஞ்சேரியில் உள்ள பள்ளியில் விட்டுவிட்டு திரும்பி வந்து கொண்டு இருந்தார்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் பூங்கா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீனிவாசன். இவரது மனைவி விஜயலட்சுமி (42). இவர் பூண்டி அடுத்த வெள்ளத்துக்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அவர் பள்ளிக்கு தினமும் மோட்டார் சைக்கிளில் சென்று வருவது வழக்கம்.

    இந்த நிலையில் நேற்று மாலை விஜயலட்சுமி பள்ளி முடிந்து வீடு நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தார்.

    புதூர் அருகே திருவள்ளூர்-ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலையில் வந்தபோது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம வாலிபர்கள் திடீரென விஜயலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த 7 சவரன் செயினை பறித்து தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து புல்லரம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மற்றொரு சம்பவம்...

    பேரம்பாக்கம் அடுத்த சத்தரை, சாய் ரித்விக் கார்டன் பகுதியை சேர்ந்தவர் தங்கதுரை. இவரது மனைவி பூங்கோதை (34). இவர் தனது மகன், மகளை மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்று இருளஞ்சேரியில் உள்ள பள்ளியில் விட்டுவிட்டு திரும்பி வந்து கொண்டு இருந்தார்.

    பேரம்பாக்கம் சத்தரை சாலையில் வந்து கொண்டிருந்தபோது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் பூங்கோதை கழுத்தில் இருந்த 5 பவுன் செயினை பறித்து தப்பினர். இதுகுறித்து மப்பேடு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • இலவச சைக்கிள் வழங்கும் விழா தலைமை ஆசிரியர் மரகதம் தலைமையில் நடைபெற்றது.
    • பனை விதை மற்றும் மரக்கன்றுகள் நடும் திட்டம் நடைபெற்றது

    பொன்னேரி:

    மீஞ்சூர் அடுத்த காட்டூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கல்வித்துறை சார்பில் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா தலைமை ஆசிரியர் மரகதம் தலைமையில் நடைபெற்றது.

    இதில் பொன்னேரி எம்எல்ஏ துரை சந்திரசேகர் கலந்து கொண்டு 78 மாணவர்களுக்கு இலவச மிதிவண்டியை வழங்கினார். இதில் ஊராட்சி மன்ற தலைவர் செல்வராமன், தெற்கு ஒன்றிய செயலாளர் ஜெகதீசன், காட்டூர் தலைவர் செல்வராமன், காங்கிரஸ் வட்டார தலைவர் புருஷோத்தமன், சமூக ஆர்வலர் குரு சாலமோன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். பின்னர் காட்டூர் ஊராட்சி ஏரியில் காட்டுப்பள்ளி அதானி அறக்கட்டளை சார்பில் பனை விதை மற்றும் மரக்கன்றுகள் நடும் திட்டம் நடைபெற்றது

    • சுக்காபி, சுண்டல் போன்றவற்றை சாப்பிட்டு பார்த்து விட்டு தரமாக அனைத்தும் வழங்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
    • துணை அமைப்பாளர் பழனி, கோளூர் கோபால், முருகானந்தம் கோதண்டன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    பொன்னேரி:

    பொன்னேரி மீஞ்சூர் அரசு பள்ளி கல்லூரி ஆதிதிராவிடர் மாணவர் மற்றும் மாணவிகள் விடுதிகளில் ஆதி திராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆய்வு செய்தார்.

    விடுதியில் வருகை பதிவேடு உணவு பொருள் இருப்பு விவரங்கள் உணவுபட்டியல் மாணவர்கள் சேர்க்கை சமையலறை தங்குமிடம் போன்றவற்றை முறையாக பார்த்து மாணவர்களிடம் குறைகளை கேட்டறிந்த அவர் மாணவர்களுக்கு வழங்கப்படும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், சுக்காபி, சுண்டல் போன்றவற்றை சாப்பிட்டு பார்த்து விட்டு தரமாக அனைத்தும் வழங்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

    அப்போது மாணவர்கள் தங்களின் துணிகளை துவைக்க கஷ்டப்படுவதாகவும் தங்களுக்கு மின்சலவை இயந்திரங்கள் வழங்க வேண்டும் எனவும் மகளிர் விடுதியில் தங்கியுள்ள மாணவிகள் தங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கவேண்டும். தமிழ் நாளிதழ்கள் படிப்பதற்கு கொடுப்பதை போன்று ஆங்கில நாளிதழ்களையும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்:- ஆதிதிராவிட உயர்நிலைப் பள்ளிகளை தரம் உயர்த்துவது மாணவர்களின் எண்ணிக்கையை பொறுத்துதான் செய்ய முடியும் தேவை ஏற்பட்டால் தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போதை பொருட்களால் ஏற்படும் தீங்குகள் குறித்து கல்லூரி பள்ளிமாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாகவும் உயர் நிலைபள்ளிக்கும் நடுநிலை பள்ளிகளுக்கும் தற்காலிக ஆசிரியர்கள் மூலம் நிவர்த்தி செய்வதாகவும் விரைவில் தேர்வின் மூலம் உரிய ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

    ஆய்வின்போது தாசில்தார் மதியழகன் நகர மன்ற தலைவர் பரிமளம்விஸ்வநாதன் சேர்மன் ரவி காப்பாளர் அன்பழகன், நகரச் செயலாளர் ரவிக்குமார், ஒப்பந்ததாரர் ஆசானபுதூர் சம்பத், மீஞ்சூர் ஒன்றிய செயலாளர்கள் ஜெகதீசன், சுகுமார், கூட்டுறவு சங்க துணை தலைவர் நேதாஜி, முன்னாள் திமுக இளைஞரணி அமைப்பாளர் டாக்டர் மா. தீபன் மாவட்ட மகளிர் அணி தலைவர் உமா காத்தவராயன், ஆதிதிராவிடநலக்குழு அமைப்பாளர் ஏனம்பாக்கம் சம்பத் , துணை அமைப்பாளர் பழனி, கோளூர் கோபால், முருகானந்தம் கோதண்டன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பீரோவை உடைத்து 7 பவுன் நகை, பூஜை அறையில் இருந்த வெள்ளிபொருட்கள் மற்றும் ரூ.25 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளை அடித்தனர்.
    • வீடு புகுந்து தாய்-மகளை தாக்கி கொள்ளை நடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டி அடுத்த துராபள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி துர்கா. இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். ரமேஷ் இரவு பணிக்கு சென்றுவிட்டார். வீட்டில் துர்கா, அவரது தாய் சாந்தா(வயது62) மற்றும் துர்காவின் 2 மகன், மகள் இருந்தனர்.

    அவர்கள் வழக்கம்போல் இரவு சாப்பிட்டுவிட்டு வீட்டில் தூங்கினர். அவர்கள் வீட்டின் கதவை பூட்டவில்லை என்று தெரிகிறது. இந்த நிலையில் நள்ளிரவில் 3 மர்ம வாலிபர்கள் திடீரென வீட்டுக்குள் புகுந்தனர்.

    அவர்கள் பீரோவை உடைத்து 7 பவுன் நகை, பூஜை அறையில் இருந்த வெள்ளிபொருட்கள் மற்றும் ரூ.25 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளை அடித்தனர்.

    மேலும் அங்கிருந்து செல்லும்போது கொள்ளையர்கள் அறையில் தூங்கிக்கொண்டு இருந்த துர்க்காவின் கழுத்தில் கிடந்த நகையை பறிக்க முயன்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த துர்கா கூச்சலிட்டார். சத்தம் கேட்டு எழுந்த மூதாட்டி சாந்தியும் அலறினார். இதனால் ஆத்திரம் அடைந்த கொள்ளை கும்பல் கையில் வைத்திருந்த பீர்பாட்டில் மற்றும் செங்கலால் துர்கா மற்றும் அவரது தாய் சாந்தா ஆகியோரை தாக்கிவிட்டு தப்பி சென்று விட்டனர். கொள்ளையர்கள் 3 பேரும் உடல் முழுவதும் எண்ணெய் தடவி ஜட்டி மட்டும் அணிந்து வந்து உள்ளனர்.

    இதுகுறித்து போலீஸ்கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக ஆரம்பாக்கம் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    கொள்ளையர்கள் தாக்குதலில் காயம் அடைந்த துர்கா மற்றும் அவரது தாய் சாந்திக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. கொள்ளையில் ஈடுபட்டது வடமாநில கொள்ளை கும்பலா? அல்லது பழைய குற்றவாளிகளா? என்ற போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    வீடு புகுந்து தாய்-மகளை தாக்கி கொள்ளை நடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 5 பவுன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து இருப்பது தெரிந்தது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அடுத்த முதுகூர் ஓம் சக்தி கோவில் தெருவை சேர்ந்தவர் உமாபதி.தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலைபார்த்து வருகிறார். நேற்று காலை உமாபதி வழக்கம் போல் வேலைக்கு சென்றார். அவரது மனைவி வீட்டை பூட்டி விட்டு ஸ்ரீபெரும்புதூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டார்.

    உமாபதியின் மனைவி மாலையில் வீடுதிரும்பிய போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 5 பவுன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து இருப்பது தெரிந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் மப்பேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கடம்பத்தூர் அருகே உள்ள ஏகாட்டூர், ராதாகிருஷ்ணன் நகரை சேர்ந்தவர் சுப்பிரமணி. கூலித் தொழிலாளி. நேற்று காலை அவர் வீட்டை பூட்டிவிட்டு மனைவியுடன் வெளியே சென்றார். மதியம் வந்து பார்த்தபோது வீட்டின் முன் பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. பீரோவில் இருந்த 3 பவுன் நகையை மர்ம நபர்கள் சுருட்டி சென்று இருந்தனர். இது குறித்து கடம்பத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • காளை மாடு திருவொற்றியூர் வடிவுடையம்மன்கோவில் பகுதியில் சுற்றி வந்து உள்ளது.
    • ராஜ கோபுரத்தை பார்த்தபடி நின்ற காளைமாடு சிறிது நேரத்தில் சரிந்து விழுந்து இறந்தது.

    திருவொற்றியூர்:

    அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ. காலனியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளி முடிந்து தாயுடன் சென்ற மாணவியை மாடு ஒன்று முட்டி வீசியது.

    இதைத் தொடர்ந்து சென்னை நகரில் சாலையில் சுற்றும் மாடுகளை மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக பிடித்து அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து வருகிறார்கள்.

    இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருவொற்றியூர் வீதிகளில் சுற்றி வந்த காளை மாட்டை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்து சென்றனர். பின்னர் அதனை பெரம்பூரில் உள்ள கோசாலையில் அடைத்தனர். அந்த காளை மாடு திருவொற்றியூர் வடிவுடையம்மன்கோவில் பகுதியில் சுற்றி வந்து உள்ளது. இதனால் அதனை கோவில் மாடாக நினைத்து பக்தர்கள் நந்தீஸ்வரர் என்று பெயரிட்டு அழைத்து வந்து இருக்கிறார்கள். மாநகராட்சி ஊழியர்களால் காளை மாடு பிடிக்கப்பட்டதால் பக்தர்கள் வேதனை அடைந்தனர்.

    இதற்கிடையே அந்த காளைமாடு கோசாலையில் எதுவும் சாப்பிடாமல் இருந்ததாக தெரிகிறது. இதனால் மாடு மிகவும் பல வீனம் அடைந்தது. இதுபற்றி அறிந்த பக்தர்கள் சிலர், மாநகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்து நேற்று மாலை காளை மாட்டை மீட்டு வாகனத்தில் கொண்டு வந்து கோவில் குளக்கரை அருகே இறக்கி விட்டனர்.

    ராஜ கோபுரத்தை பார்த்தபடி நின்ற காளைமாடு சிறிது நேரத்தில் சரிந்து விழுந்து இறந்தது.

    இதனை பார்த்து அங்கிருந்த பக்தர்கள், பொது மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இறந்த காளை மாடுக்கு திருவொற்றியூர் மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு மற்றும் ஏராளமான பொதுமக்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இதில் பெண்கள் உள்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். சிலர் மாட்டின் உடலை பார்த்து கண்கலங்கினர். பக்தர்கள் மாட்டின் உடலுக்கு குங்குமம், சந்தனம் தெளித்து நாலுமாட வீதிகள் வழியாக சிவவாத்தியங்கள் முழங்க இறுதி ஊர்வலம் நடத்தினர்.

    இதைத்தொடர்ந்து நள்ளிரவு 2 மணி அளவில் மாட்டின் உடல் இந்திரா நகர் பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது. அப்போது ஆன்மிக முறைப்படி சடங்குகளும் செய்யப்பட்டது.

    • மோட்டார் சைக்கிளோடு நண்பர்கள் விக்னேஷ், யுவராஜ் ஆகியோர் விழுந்தனர்.
    • போக்குவரத்து புலனாய்வு போலீஸ் இன்ஸ்பெக்டர் கவுசல்யா வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்திவருகிறார்.

    அம்பத்தூர்:

    வில்லிவாக்கம், மேட்டு தெருவை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது23). இவர் நேற்று இரவு பாரதி நகர் 2-வது தெருவை சேர்ந்த நண்பரான யுவராஜ் (26) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் மற்றொரு நண்பரை சந்திக்க சென்றார்.

    பின்னர் நண்பர்கள் 2 பேரும் நள்ளிரவு 12 மணியளவில் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தனர். பாடி மேம்பாலம் அருகே 200 அடிசாலையில் வந்து கொண்டு இருந்தபோது அங்கு சாலை அமைக்கும் பணி நடந்தது. இந்த பணிக்காக அங்கு கனரக வேன் ஒன்று நிறுத்தப்பட்டு இருந்தது. அந்த இடத்தில் வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் திடீரென கனரக வேன் மற்றும் அதன் அருகே நின்று கொண்டு இருந்த தொழிலாளி ஏழுமலை (60) மீது வேகமாக மோதியது.

    இதில் மோட்டார் சைக்கிளோடு நண்பர்கள் விக்னேஷ், யுவராஜ் ஆகியோர் விழுந்தனர். இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த விக்னேஷ் சம்பவ இடத்திேலயே பரிதாபமாக இறந்தார். யுவராஜ், ஏழுமலை ஆகி யோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிசிக்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

    இது குறித்து திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு போலீஸ் இன்ஸ்பெக்டர் கவுசல்யா வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்திவருகிறார்.

    • கொள்ளைகும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
    • கைதான கொள்ளையர்கள் 3 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மாதவரம்:

    மாதவரம், கொளத்தூர் 100 அடி சாலையில் தனியாருக்கு சொந்தமான கார் விற்பனை மையங்கள் வரிசையாக உள்ளன. இந்த கார் விற்பனை நிலையங்களில் பல உயர்ரக கார்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    கடந்த மாதம் 9-ந்தேதி இங்குள்ள 3 கார் விற்பனை மையங்களில் அடுத்தடுத்து பூட்டு உடைக்கப்பட்டு கொள்ளை நடந்தது. மொத்தம் ரூ. 2லட்சத்து 58 ஆயிரம் ரொக்கம் கொள்ளை போனது. மேலும் ஒரு கார் நிறுவனத்தில் இருந்து பணப் பெட்டியை உடைக்க முடியாததால் அப்படியே தூக்கி சென்று ரெட்டேரி ஏரிக்கரையில் வீசி சென்று இருந்தனர்.

    இந்த கொள்ளை தொடர்பாக மாதவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்த விசாரணை நடத்தினர். கொள்ளைகும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. சம்பவத்தன்று அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு மேமரா பதிவு மற்றும் செல்போன் சிக்னலை வைத்து விசாரித்த போது கொள்ளையில் ஈடுபட்டது மும்பையை சேர்ந்த கொள்ளையர்கள் என்பது தெரியவந்தது. அவர்கள் கொள்ளை திட்டத்தை அரங்கேற்றி விட்டு மும்பைக்கு தப்பி சென்று இருப்பது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் மும்பைக்கு விரைந்து சென்று கொள்ளையில் ஈடுபட்ட பப்பு சவுகான், சாம் ராவ் ஜாதவ், கரண் பவார் ஆகிய 3 பேரை மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் அவர்களை சென்னை அழைத்து வந்தனர்.

    இந்த கொள்ளையில் மேலும் 2 பேர் தலைமறைவாக இருப்பதும், கொள்ளையில் தொடர்புடைய 3 பேர் வேறொரு வழக்கில் புனே போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பதும் தெரிய வந்தது.

    கைதான கொள்ளையர்கள் 3 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவினை சாப்பிட்டு நோயாளிடம் தரம் குறித்துக் கேட்டு கொண்டிருந்தார்.
    • விஜய் ஆனந்த், கவுன்சிலர்கள் உமாபதி, நல்ல சிவம்,பத்மா மற்றும் பலர் உடன் இருந்தனர்

    பொன்னேரி:

    பொன்னேரி அரசு பொது மருத்துவமனைக்கு சுற்று வட்டார கிராமங்களில் இருந்து தினந்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து செல்வதுண்டு. இந்நிலையில் பொன்னேரி சப்-கலெக்டர் ஐஸ்வர்யா தலைமையில் திடிர் ஆய்வு செய்தனர்.

    அப்போது பொது மக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும், மருத்துவமனையின் கட்டமைப்பு, புற நோயாளிகள் பிரிவு, உள்நோயாளிகள் பிரிவு, சமையல் கூடம், ஆய்வகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களை ஆய்வு செய்து நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவினை சாப்பிட்டு நோயாளிடம் தரம் குறித்துக் கேட்டிருந்தார்.

    பின்னர் உள் நோயாளிகள் பிரிவில் பெண்கள் சிகிச்சை பெற்று வரும் பகுதிக்கு சென்று விசாரித்து குறைகளை கேட்டறிந்தார்.

    ஆய்வின்போது மாவட்ட சுகாதார துறை துனை இயக்குநர் சேகர், தலைமை மருத்துவர் அசோகன்,பொன்னோரி நகராட்சி ஆனையர் கோபிநாத், நகராட்சி தலைவர் டாக்டர்.பரிமளம் விஸ்வநாதன், பொன்னேரி வட்டாட்சியர் மதிவாணன், டாக்டர்கள் பெனடிக், விஜய் ஆனந்த், கவுன்சிலர்கள் உமாபதி, நல்ல சிவம்,பத்மா மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    • வாகனத்தில் 40 மூட்டைகளில் சுமார் 2 டன் ரேஷன் அரிசி ஆந்திராவிற்கு கடத்த முயன்றது தெரியவந்தது.
    • ரேசன் அரிசியை திருவள்ளூரில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.

    கும்மிடிப்பூண்டி:

    திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டை-சத்தியவேடு சாலையில் மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது அவ்வழியாக ஆந்திரா நோக்கிச் சென்ற சந்தேகத்திற்கு இடமான ஒரு மினி லோடு வேனை மடக்கி நிறுத்தி அவர்கள் சோதனை செய்தனர். அந்த வாகனத்தில் 40 மூட்டைகளில் சுமார் 2 டன் ரேஷன் அரிசி ஆந்திராவிற்கு கடத்த முயன்றது தெரியவந்தது.

    ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட லோடு வேன் டிரைவரான சென்னை பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த கணேஷ் (வயது 32) என்பவரை மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை போலீசார் கைது செய்தனர்.

    லோடு வேனுடன் ரேசன் அரிசியையும் அவர்கள் பறிமுதல் செய்தனர். ரேசன் அரிசியை திருவள்ளூரில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.

    • யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்? என்று தெரியவில்லை.
    • மாயமானவர்கள் பற்றிய விபரத்தை சேகரித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த புட்லூர் ஏரியில் இன்று காலை வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் செவ்வாப்பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவித்த னர். போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து உடலை மீட்டு விசாரணை நடத்தினர். பிணமாக கிடந்தவருக்கு சுமார் 40 வயது இருக்கும். பேண்ட், டி-சர்ட் அணிந்து இருந்தார். அவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்? என்று தெரியவில்லை.

    மர்ம நபர்கள் அவரை அடித்து கொலை செய்துவிட்டு உடலை ஏரியில் வீசி சென்று இருப்பது தெரிந்தது. உடல் அழுகிய நிலையில் காணப் பட்டதால் அவர் இறந்து 3 நாட்களுக்கு மேல் இருக்கும் என்று தெரிகிறது. இது தொடர்பாக புட்லூர் மற்றும் சுற்றுப்புற பகுதியில் மாயமானவர்கள் பற்றிய விபரத்தை சேகரித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×