என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புட்லூரில் வாலிபர் அடித்துக்கொலை- ஏரியில் உடல் வீச்சு
    X

    புட்லூரில் வாலிபர் அடித்துக்கொலை- ஏரியில் உடல் வீச்சு

    • யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்? என்று தெரியவில்லை.
    • மாயமானவர்கள் பற்றிய விபரத்தை சேகரித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த புட்லூர் ஏரியில் இன்று காலை வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் செவ்வாப்பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவித்த னர். போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து உடலை மீட்டு விசாரணை நடத்தினர். பிணமாக கிடந்தவருக்கு சுமார் 40 வயது இருக்கும். பேண்ட், டி-சர்ட் அணிந்து இருந்தார். அவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்? என்று தெரியவில்லை.

    மர்ம நபர்கள் அவரை அடித்து கொலை செய்துவிட்டு உடலை ஏரியில் வீசி சென்று இருப்பது தெரிந்தது. உடல் அழுகிய நிலையில் காணப் பட்டதால் அவர் இறந்து 3 நாட்களுக்கு மேல் இருக்கும் என்று தெரிகிறது. இது தொடர்பாக புட்லூர் மற்றும் சுற்றுப்புற பகுதியில் மாயமானவர்கள் பற்றிய விபரத்தை சேகரித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×