என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாணவர்களுக்கு இலவச சைக்கிள்- பொன்னேரி எம்.எல்.ஏ வழங்கினார்
- இலவச சைக்கிள் வழங்கும் விழா தலைமை ஆசிரியர் மரகதம் தலைமையில் நடைபெற்றது.
- பனை விதை மற்றும் மரக்கன்றுகள் நடும் திட்டம் நடைபெற்றது
பொன்னேரி:
மீஞ்சூர் அடுத்த காட்டூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கல்வித்துறை சார்பில் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா தலைமை ஆசிரியர் மரகதம் தலைமையில் நடைபெற்றது.
இதில் பொன்னேரி எம்எல்ஏ துரை சந்திரசேகர் கலந்து கொண்டு 78 மாணவர்களுக்கு இலவச மிதிவண்டியை வழங்கினார். இதில் ஊராட்சி மன்ற தலைவர் செல்வராமன், தெற்கு ஒன்றிய செயலாளர் ஜெகதீசன், காட்டூர் தலைவர் செல்வராமன், காங்கிரஸ் வட்டார தலைவர் புருஷோத்தமன், சமூக ஆர்வலர் குரு சாலமோன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். பின்னர் காட்டூர் ஊராட்சி ஏரியில் காட்டுப்பள்ளி அதானி அறக்கட்டளை சார்பில் பனை விதை மற்றும் மரக்கன்றுகள் நடும் திட்டம் நடைபெற்றது
Next Story






