என் மலர்
திருவாரூர்
- இலம்பி நோய், ஆட்டு கொல்லி நோய்க்கு 300 மாடுகள், 700 ஆடுகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது.
- மருத்துவ குழுவில் டாக்டர் ராமலிங்கம் மண்டல இணை இயக்குனர் தொடங்கி வைத்தார்.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி வட்டம் ஜாம்புவானோடை ஊராட்சி வீரன்வயல் பகுதியில், தமிழ்நாடு கால்நடை கோட்டம் மற்றும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், வேளாண்மை அறிவியல் நிலையம் நீடாமங்கலம் இணைந்து சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
இலம்பி நோய், ஆட்டு கொல்லி நோய்க்கு 300 மாடுகள், 700 ஆடுகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது. டாக்டர் மகேந்திரன் தலைமையிலான மருத்துவ குழுவில் டாக்டர் ராமலிங்கம் மண்டல இணை இயக்குனர் தொடங்கி வைத்தார்.
டாக்டர் சபாபதி, ஊராட்சி மன்றத் தலைவர், துணைத் தலைவர், ஒன்றிய கவுன்சிலர்,ஊராட்சி மன்ற உறுப்பினர் நளினி,கவிதா,டாக்டர் ராதாகிருஷ்ணன் திட்ட ஒருங்கிணைப்பாளர் கால்நடை உதவியாளர் பிரசன்னா, மாதவன், மகாலெட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
- ரூ.1 லட்சத்துக்கான காசோலை, சான்று மற்றும் சால்வை வழங்கப்படும்.
- பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்தவர்கள் இருப்பின் விண்ணப்பிக்கலாம்.
திருவாரூர்:
தமிழக அரசின் அவ்வையார் விருது. பெண்களின் முன்னேற்றத்திற்கு சேவை புரிந்தவருக்கு வழங்கப்பட உள்ளது. இவ்விருது பெற டிச 10க்குள் விண்ணப்பிக்கலாம் என திருவாரூர் மாவட்ட கலெக்டர் தெரிவித்து உள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியி ருப்பதாவது, உலக மகளிர் தின விழா 8.3.2023-ம் அன்று நடைபெறவுள்ளது.
இவ்விழாவின் போது பெண்களின் முன்னே ற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த ஒருவருக்கு தமிழக முதல்வரால் அவ்வையார் விருது வழங்கப்படவுள்ளது. இவ்விருது பெறுபவருக்கு 8 கிராம் எடையுள்ள தங்க பதக்கமும், ரூ.1 லட்சத்துக்கான காசோலை, சான்று மற்றும் சால்வை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இவ்விருதுக்கான விண்ணப்பங்களை தமிழக அரசின் விருதுகள் தொடர்பான இணையதள முகவரிக்கு சென்று பதிவு செய்யப்பட வேண்டும்.
இவ்விருதுகள் தொடர்பான கூடுதல் விபரங்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உள்ள விண்ணப்ப படிவங்கள் ஆகியவை திருவாரூர் மாவட்ட இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது. எனவே திருவாரூர் மாவட்டத்தில் பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்தவர்கள் இருப்பின் அவர்கள் இணையதளம் வாயிலாக 10.12.2022-க்குள் விண்ணப்பிக்குமாறு திருவாரூர் மாவட்ட கலெக்டர் ப.காயத்ரி கிருஷ்ணன் கேட்டு க்கொண்டுள்ளார்.
- மாடுகளின் உரிமையாளரிடம் இருந்து ரூ.17 ஆயிரம் அபராதம் வசூலிப்பு.
- ஏற்கனவே, பிடிபட்ட மாடுகள் மறுபடியும் பிடிபட்டால் சட்டப்பூர்வ நடவடிக்கை.
திருவாரூர்:
திருவாரூர் நகரத்திற்கு ட்பட்ட சாலைகளிலும், திருவாரூரில் இருந்து மயிலாடுதுறை செல்லும் சாலையில் கங்களாஞ்சேரி வரை இரவு நேரங்களில் மாடுகள் மற்றும் குதிரைகள் சாலைகளில் சுற்றி திரிவதால் தொடர்ந்து சாலை விபத்துகள் ஏற்பட்டு வந்தது. இது குறித்து பொதுமக்கள் திருவாரூர் நகராட்சிக்கு தொடர்ந்து புகார் தெரிவித்த வண்ணம் இருந்தனர்.
இதனையடுத்து திருவாரூர் நகராட்சி ஆணையர் பிரபாகரன் உத்தரவின் பேரில் சாலையில் சுற்றி தெரியும் மாடுகள் மற்றும் குதிரைகள் நகராட்சி ஊழியர்கள் மூலம் பிடிக்கப்பட்டு அவற்றிற்கு நாள் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும், மூன்று நாட்கள் கடக்கும் பட்சத்தில் அந்த கால்நடைகள் பொது ஏலம் விடப்படும் என்றும், கால்நடைகள் மூலம் ஏற்படும் விபத்துகளுக்கு உரிமையாளரே பொறுப்பாவார் என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை பிடித்து தருபவருக்கு ரூ 500 சன்மானமாக வழங்கப்படும் என்றும் விளம்பரப்படுத்தப்பட்டது.அதனைத் தொடர்ந்து நகராட்சி ஊழியர்கள், நகராட்சிக்குட்பட்ட சாலைகளில் சுற்றி தெரியும் மாடுகளை கடந்த இரண்டு நாட்களாக பிடித்து நகராட்சி அலுவலக வளாகத்திற்குள் பாதுகாத்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்தில் சாலையில் போக்குவரத்திற்கு இடையூராக சுற்றித்திரிந்த மாடுகளின் உரிமையாளரிடமிருந்து ரூ17 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக திருவாரூர் நகராட்சி தெரிவித்துள்ளது. மேலும் ஏற்கனவே பிடிபட்ட மாடுகள் மறுபடியும் பிடிபட்டால் காவல்துறை மூலம் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அந்த மாடுகளால் ஏற்படும் விபத்திற்கு உரிமையாளரே பொறுப்பாவார் என்றும் நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுவரை 37 மாடுகள் பிடிபட்டது. இதில் 28 மாடுகளை உரிமையாளர்கள் அபராதம் செலுத்தி அழைத்துச் சென்றனர். மீதமுள்ள 9 மாடுகள் தற்போது நகராட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும் நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
- அங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளர்களை பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கி கவுரவிப்பு.
- அங்கன்வாடிக்கு தேவையான உபகரண பொருட்கள் வாங்கி சீர்வரிசையாக வழங்கினர்.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டியில் நம்பிக்கை தொண்டு நிறுவனம், தமிழ்நாடு இளம் குழந்தைகளின் பராமரிப்பு கூட்டமைப்பு இணைந்து அங்கன்வாடி தின விழா , அங்கன்வாடி சீர்திருவிழா ஐந்து மையங்களில் நடந்தது.
விழாவிற்கு வந்திருந்த அனைவரையும்நம்பிக்கை தொண்டு நிறுவன திட்ட வேளாளர்விஜயா வரவேற்றார்.
திருத்துறைப்பூ ண்டி நகர மன்ற தலைவர் கவிதா பாண்டியன் தலைமை வகித்தார். ஒன்றிய பெருந்தலைவர் பாஸ்கர், குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் கண்ணகி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அங்கன்வாடி திட்ட த்தையும் பணிகளையும் நம்பிக்கை கொண்டு நிறுவணம் தொடர்ச்சியாக செய்து வரும் பணிகளையும் பாராட்டி பேசி திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சோமசுந்தரம் கலை நிகழ்ச்சி பிரசார வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பிரச்சார வாகனம் அங்கிருந்து கலை நிகழ்ச்சிகளுடன் புறப்பட்டு கொக்காலடி, முள்ளூர், திருத்துறைப்பூண்டி டவுன் பள்ளிவாசல் ஆகிய அங்கன்வாடி மையங்க ளுக்கு சென்று அங்கன்வாடி பணியாளர்கள் உதவியா ளர்களை பொன்னாடை போற்றி நினைவு பரிசுகள் வழங்கி கவுரவித்து அங்க ன்வாடிக்கு தேவையான உபகரணங்கள் பொருட்கள் வாங்கி சீர்வரிசையாக மேளதாள இன்னிசையுடன் எடுத்துச் சென்று வழங்கினார்கள்.
இந்நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரோட்டரி டெல்டா சங்க தலைவர் ரமேஷ், முன்னாள் தலைவர் காளிதாஸ், திருத்துறைப்பூண்டி நூற்றாண்டு லயன் சங்க தலைவர் முகமது இக்பால், செயலாளர் தங்கமணி, பிசியோதெரபி டாக்டர் கருணாநிதி, போக்கு வரத்து காவல் ஆய்வாளர் கி ல்லி வளவன், அங்கன்வாடி மைய பார்வை யா ளர்கள், அங்கன்வாடி பணியா ளர்கள், பெ ற்றோ ர்கள், பொதுமக்கள், குழந்தைகள் அனைவரும் கலந்து கொ ண்டனர்.
- முத்துப்பேட்டை அருகே உள்ள தில்லைவிளாகம் கிராமத்தை சேர்ந்தவர் கல்யாணசுந்தரம்.
- நாட்டு வெடிக்குண்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட சணல், திரி, மருந்து உள்ளிட்ட மூலப்பொருட்களை பறிமுதல் செய்தனர்.
முத்துப்பேட்டை:
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள தில்லைவிளாகம் கிராமத்தை சேர்ந்தவர் கல்யாணசுந்தரம் (வயது 54). இவர் நாகை மாவட்டம் வாய்மேடு பகுதியில் அரசு அங்கீகாரம் பெற்ற ஒரு நாட்டு வெடி தயாரிக்கும் கடையில் வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் இவர் உரிய அனுமதியின்றி சட்ட விரோதமாக தனது வீட்டின் கொட்டகையில் நாட்டு வெடிக்குண்டு தயாரித்து கொண்டிருந்தார். இது பற்றிய ரகசிய தகவல் முத்துப்பேட்டை போலீசாருக்கு கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு புறப்பட்டனர். இதனை அறிந்த கல்யாணசுந்தரம் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார்.
இதனை தொடர்ந்து போலீசார் கொட்டகை முழுவதும் சோதனையிட்டனர். அதில் நாட்டு வெடிக்குண்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட சணல், திரி, மருந்து உள்ளிட்ட மூலப்பொருட்களை பறிமுதல் செய்தனர்.
இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஏதாவது அசம்பாவித சம்பவத்தை நிகழ்த்த கல்யாணசுந்தரம் நாட்டு வெடிக்குண்டு தயாரித்தாரா? அல்லது வேறு யாராவது கொடுத்த ஆர்டரின் பேரில் தயாரித்தாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி அவரை தேடி வருகின்றனர்.
அவரை பிடித்து விசாரித்தால் உண்மை தன்மை தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.
ஏற்கனவே கோவை கார் வெடிப்பு, மங்களூர் குக்கர் வெடிக்குண்டு வெடிப்பு உள்ளிட்ட பயங்கரவாத சம்பவம் நடந்த நிலையில் தற்போது நாட்டு வெடிக்குண்டு தயாரிக்கும் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- பல்வேறு கோரிக்கைகள் குறித்த 268 மனுக்களை கலெக்டரிடம் அளித்தனர்.
- சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் வழங்கல்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பொது–மக்கள் பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக்கடன், வீட்டு–மனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த 268 மனுக்களை கலெக்டரிடம் அளித்தனர்.
பொதுமக்களிடம் விசாரித்து மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர், சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை வழங்கி குறித்த காலத்திற்குள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.
பின்னர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பில் பணிக்காலத்தில் உயிரிழந்தவர்களின் வாரிசு–தாரர்கள் 3 நபர்களுக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணையினை வழங்கினார்.
தமிழக அரசால் டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது பெற்ற மன்னார்குடி வட்டம், பாலையக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் முதுகலை ஆசிரியர் ராச கணேசனை பாராட்டினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் சந்திரா உள்பட பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- வாகன ஓட்டிகள் 12 பேருக்கு ஹெல்மெட் வழங்கல்.
- இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு போலீசார் அறிவுரை வழங்கினர்.
மன்னார்குடி:
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி காவல் துறை சார்பில் இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கீழபாலம் பகுதியில் நடைபெற்றது.
இதில் மன்னார்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அஸ்வந்த் ஆண்டோ பங்கேற்று வாகன ஓட்டிகள் 12 பேருக்கு ஹெல்மெட்களை வழங்கினார்.
மேலும் சாலை விதிகள், தலைகவசத்தின் முக்கியத்துவம் குறித்து இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு போலீசார் அறிவுரைகளை கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து உதவி ஆய்வாளர் சண்முகசுந்தரம் மகிழ்வாகனன், நகர காவல் உதவி ஆய்வாளர் கோகிலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- ஜாம்புவானோடை கந்தபரிச்சான் ஆற்றங்கரையோரங்களில் பனை விதைகள் நடும் பணி.
- 1000-க்கும் மேற்பட்ட பனை விதைகள் விவசாய தொழிலாளர்கள் மூலம் நடப்பட்டது.
முத்துப்பேட்டை:
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த ஆலங்காடு மற்றும் ஜாம்புவானோடை கிராமங்களில் தமிழ்நாடு விவசாய குத்தகைதாரர்கள் பாதுகாப்பு நல சங்கம் சார்பில் பனைவிதை நடும் பணி நடைபெற்றது.
இதை தமிழ்நாடு விவசாய குத்தகைதாரர்கள் பாதுகாப்பு நல சங்க மாவட்ட தலைவர் துரைஅரசன் தலைமையில் மாநில தலைவர் வழக்கறிஞர் சிறுகளத்தூர் ஜெய்சங்கர் பனை விதைகளை நட்டு தொடங்கி வைத்தார்.
இதில் ஆலங்காடு கோட்டகம், குளக்கரை ஆற்றங்கரையோரம் மற்றும் ஜாம்புவானோடை கந்தபரிச்சான் ஆற்றங்கரையோரங்களில் 1000-க்கும் மேற்பட்ட பனை விதைகள் விவசாய தொழிலாளர்கள் மூலம் நடப்பட்டது.
இதில் ஆலங்காடு கிராமத்தில் ஒன்றிய கவுன்சிலர் மோகன், ஊராட்சி மன்ற தலைவர் பிரவீன்குமார், ஜாம்புவானோடை கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் பாலமுருகன், துணைத்தலைவர் ராமஜெயம், சங்கத்தின் மாநில இணைச்செயலாளர் இளையராஜா, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் இருதயராஜ், கோட்டூர் ஒன்றிய தலைவர் நடராஜன் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
- எண்கண் வெட்டாறு ரெகுலேட்டர் அருகே ஆகாயத் தாமரை செடிகள் தேங்கியுள்ளது.
- 65 குடிநீர் மேல்தேக்க தொட்டிகள் அமைக்க நடவடிக்கை.
திருவாரூர்:
கொரடாச்சேரி ஒன்றியக்குழுவின் சாதாரணக் கூட்டம் அதன் துணைத் தலைவர் பாலச்சந்திரன் தலைமையில் நடந்தது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விஸ்வநாதன், முத்துக்குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலாளர் பிரவின்குமார் தீர்மானங்களை படித்தார்.
கூட்டத்தில் உறுப்பினர்கள் பேசியதாவது:-
நாகூரான்: பருவ மழையை சமாளிக்க சிறப்பாக வடிகால் தூர்வாரப்பட்டது. வளவநல்லூர் பள்ளி சாலையை சீரமைக்க வேண்டும். ஏசுராஜ் : வண்டாம்பாளையம் சிவசக்தி நகரில் குடிநீர் மேல் தேக்க தொட்டி அமைக்க வேண்டும். ஆனந்த்: அரசமங்கலம் சாலையை சீரமைக்க வேண்டும்.
கவிதா: அத்திசோழமங்கலத்தில் தொடக்கப்பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும்.
பெருமாளகரம் மேலத்தெருவில் வடிகால் வசதி செய்து தர வேண்டும். மீரா: மேலராதாநல்லூர், காவாலக்குடி சாலையை சீரமைக்க வேண்டும்.
உமாமகேஸ்வரி: கமலாபுரம் தார்சாலையை சீரமைக்க வேண்டும். தாழைக்குடி காட்டாற்று பாலம் சாலையை சீரமைக்க வேண்டும். சத்தியேந்திரன்:
எண்கண் வெட்டாறு ரெகுலேட்டர் அருகே ஆகாயத் தாமரை செடிகள் தேங்கியுள்ளது. அதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உறுப்பினர்கள் கேள்விகளுக்கு பதிலலித்து பேசிய துணைத் தலைவர் பாலச்சந்திரன் கூறியதாவது, உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதிக்கு தகுந்தாற்போல் சாலைகளை அமைத்துக் கொள்ள வேண்டும்.
கொரடாச்சேரி வட்டாரத்தில் மக்கள் நலன் கருதி 65 குடிநீர் மேல் தேக்க தொட்டி தேர்வு செய்து, தற்போது ரூ.3 கோடி மதிப்பில் 25 குடி நீர் மேல் தேக்க தொட்டிகள் அமைக்கும் பணிகள் நடைபெற உள்ளது என்றார்.
கூட்டத்தில் ஒன்றியப் பொறியாளர் ரவீந்திரன் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள், அலுவலர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக ராணி எலிசபெத் உள்ளிட்ட இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
முடிவில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முருகானந்தம் நன்றி கூறினார்.
- மக்கும் குப்பைகளை வீட்டிலேயே உரமாக்கி வீட்டுத் தோட்டத்திற்கு பயன்படுத்தலாம்.
- கடைக்கு செல்லும் போது துணிப்பைக் கொண்டு செல்ல வேண்டும்.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி ஊராட்சி ஒன்றியம், கட்டி மேடு ஊராட்சியில் தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாக அறிவுறுத்தலின் படி உலக கழிப்பறை தினத்தினை முன்னிட்டு தூய்மை நடைபயணம் சுகாதார விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
ஊராட்சி மன்றத் தலைவர் மாலினி ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட குழு உறுப்பினர் சுஜாதா, ஒன்றியக் குழு உறுப்பினர் இந்திரா வெள்ளைச்சாமி, சமூக ஆர்வலர்கள்,ஞாண சேகரன், கல்வி மேலா ண்மைக் குழு உறுப்பினரும் கல்வியாளருமான ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தார்.
வட்டார வளர்ச்சி அலுவலர் ( கிராம ஊராட்சி ) சிவக்குமார் பேரணியை தொடக்கிவைத்து திறந்தவெளியில் மலம் கழிக்க கூடாது, அனைவரும் கழிப்பறையை பயன்படுத்தவும், மக்கும் குப்பை, மக்கா குப்பையை தரம் பிரித்து தூய்மை காவலர்களிடம் கொடுக்கவும் மக்கும் குப்பைகளை வீட்டிலேயே உரமாக்கி வீட்டுத் தோட்டத்திற்கு பயன்படுத்தவும் தீங்கு விளைவிக்க கூடிய குப்பைகளை பாதுகாப்பாக கையாள்வது, நீர் நிலைகளில் குப்பைகளைக் கொட்டக் கூடாது, நெகிழி பயன்பாட்டை தவிர்ப்பது, கடைக்கு செல்லும் போது துணிப்பைக் கொண்டு செல்ல வேண்டும் என்றும் குப்பைகளை குப்பைத் தொட்டிகளில் மட்டுமே போட வேணடும் என வலியுறுத்தினார்.
முன்னதாக முழு சுகாதார விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது.
மேலும் தூய்மைக் காவலர்களுக்கு நலவாரிய அட்டை வழங்கப்பட்டது.
பேரணியில் மாணவர்கள் பதாகை ஏந்தி ஊராட்சி மன்ற அலுவலகத்திலிருந்து புறப்பட்டு கடைத்தெரு, பள்ளிவாசல் தெரு, சாலைத் தெருவழியாக பள்ளி வளாகம் சென்றடைந்தனர்.
நிகழ்வில் துணைத் தலைவர் பாக்கியராஜ், செயலர் புவனேஸ்வரன், சமூக ஆர்வலர்கள் செல்வம், ரகமத்துல்லா மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பாலு, ஆசிரியர்கள் சந்திரசேகரன், ராஜேஸ் குட்டி, அய்யப்பன், ராஜா, முத்துப்பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- வீட்டின் கதவு மற்றும் கூரை சமையல் பாத்திரம் எரிந்தது. இதன் மதிப்பு சுமார் 30ஆயிரம்.
- நாகம்மாள் என்பவர் கூரை வீடு மின் கசிவால் எரிந்து நாசமானது.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி வட்டம் முத்துப்பேட்டை ஒன்றியம். ஜாம்புவா னோடை ஊராட்சி மேல க்காடு பகுதியை சேர்ந்த நாகம்மாள் என்பவர் கூரை வீடு மின் கசிவால் எரிந்து நாசமானது.
வீட்டின் கதவு மற்றும் கூரை சமையல் பாத்திரம் எரிந்தது. இதன் மதிப்பு சுமார் 30ஆயிரம்.
தகவல் அறிந்த ஜாம்புவா னோடை கிராம நிர்வாக அலுவலர் புர்ஷோத்தமன், ஊராட்சி மன்ற தலைவர் லதாபாலமுருகன், துணை தலைவர் ராமஜெயம், , ஒன்றிய கவுன்சிலர் கல்யாணம் சுந்தரம் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் சேதமான வீட்டை பார்வையிட்டனர்.
- மர நடுவோம் மழை பெறுவோம் என்ற வாசகத்துடன் சுற்றுச்சூழலை பாதுகாப்போம் பிளாஸ்டிக்கை ஒழிப்போம் என்ற முழுக்கமிட்டு இந்த விழிப்புணர்வு பேரணி துவங்கியது.
- மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
திருவாரூர்:
திருவாரூர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கல்வி குழுமத்தின் தாளாளர் வெங்கடராஜூலு பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. முதல் நிகழ்வாக மரம் நடுவோம் மழை பெறுவோம் என்ற வாசகம் ஏற்ப 500 மரக்கன்று களை கல்லூரி மாணவ மாணவிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மர நடுவோம் மழை பெறுவோம் என்ற வாசகத்துடன் சுற்றுச்சூழலை பாதுகாப்போம் பிளாஸ்டி க்கை ஒழிப்போம் என்ற முழுக்கமிட்டு இந்த விழிப்புணர்வு பேரணி துவங்கியது.
இதில் கல்லூரியின் செயலர் சுந்தர்ராஜ், முதன்மை செயல் அதிகாரி நிர்மலா ஆனந்த் மேம், இயக்குனர் விஜயசுந்தரம், கல்லூரி முதல்வர் முனைவர் சிவக்குமார் மற்றும் அனைத்து கல்லூரி மற்றும் பள்ளி முதல்வர்கள் துணை முதல்வர்கள் துறை தலைவர்கள் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.






