என் மலர்

  நீங்கள் தேடியது "Netaji"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நிலநடுக்கம், வெள்ளம், தீவிபத்து உள்ளிட்ட பேரிடர் மீட்பு பணியின்போது சிறப்பாக செயல்படுபவர்களுக்கு ஆண்டுதோறும் நேதாஜி விருது வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். #PMModi #Netajiaward
  புதுடெல்லி:

  டெல்லியில் இன்று நடைபெற்ற காவலர்கள் வீரவணக்க நாள் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

  நாட்டுக்காக உழைப்பதில் காவலர்கள் மட்டுமின்றி நிலநடுக்கம், வெள்ளம், தீவிபத்து உள்ளிட்ட பேரிடர் மீட்பு பணியின்போது சிறப்பாக செயல்படும் தேசிய - மாநில பேரிடர் மீட்புப் படையினரின் பங்களிப்பும் அபாரமானது. அவர்களும் நமது வீரம்மிக்க காவலர்கள்தான் என அவர் குறிப்பிட்டார்.  அவர்களின் வீரத்தை மட்டுமின்றி, அர்ப்பணிப்புணர்வு, தியாகம் ஆகியவற்றை நாடு மறந்துவிடாது. தீவிபத்து, கட்டிட விபத்து, வெள்ளப்பெருக்கில் இருந்து நம்மை காப்பாற்றியவர்கள் யார்? என்பது காப்பாற்றப்பட்டு, உயிர் பிழைத்தவர்களுக்கே தெரியாது என உணர்ச்சி மேலோங்க கூறிய மோடி, இந்த ஆண்டில் இருந்து பேரிடர் காலத்தில் சிறப்பாக சேவையாற்றும் வீரர்களுக்கு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பெயரால் தேசிய விருதுகள் வழங்கப்படும் என அறிவித்தார்.

  ஒவ்வொரு ஆண்டும் நேதாஜியின் பிறந்தநாளான ஜனவரி மாதம் 23-ம் தேதி இந்த விருதுக்கு தேர்வானவர்களின் பெயர்கள் அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். #PMModi #Netajiaward
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  டெல்லியில் ஆசாத் ஹிந்த் சர்க்காரின் 75-வது ஆண்டு விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி, நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் கனவுகள் இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை என தெரிவித்துள்ளார். #PMModi #AzadHindSarkar #Netaji
  புதுடெல்லி:

  இந்திய தலைநகர் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் ஆசாத் ஹிந்த் சர்க்காரின் 75-வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் தேசியக் கொடியை ஏற்றி பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.  அதைத்தொடர்ந்து பேசிய அவர், கடந்த 4 ஆண்டுகளில் இந்தியாவின் பாதுகாப்பை வலுப்படுத்த பாஜக அரசு அதிகம் உழைத்துள்ளதாகவும், சர்ஜிகல் ஸ்ட்ரைக் போன்ற கடுமையான முடிவுகளை எடுக்கும் சக்தி இந்த அரசுக்கு இருப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

  மேலும், நேதாஜி அனைத்து மக்களுக்கும் சம உரிமை மற்றும் சம வாய்ப்பு அளிக்கப்படும் என உறுதி கொண்டு இருந்தார். நாட்டில் பிரித்தாளும் கொள்கையை ஒழிக்க அவர் விரும்பியதாகவும், ஆனால் அவரது கனவு இன்று வரை நிறைவேற்றப்படவில்லை எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். #PMModi #AzadHindSarkar #Netaji
  ×