வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் வழங்கி போலீசார் விழிப்புணர்வு

வாகன ஓட்டிகள் 12 பேருக்கு ஹெல்மெட் வழங்கல்.இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு போலீசார் அறிவுரை வழங்கினர்.
வாகன ஓட்டிகளுக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு அஸ்வந்த் ஆண்டோ ஹெல்மெட் வழங்கினார்.
வாகன ஓட்டிகளுக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு அஸ்வந்த் ஆண்டோ ஹெல்மெட் வழங்கினார்.
Published on: 

மன்னார்குடி:

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி காவல் துறை சார்பில் இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கீழபாலம் பகுதியில் நடைபெற்றது.

இதில் மன்னார்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அஸ்வந்த் ஆண்டோ பங்கேற்று வாகன ஓட்டிகள் 12 பேருக்கு ஹெல்மெட்களை வழங்கினார்.

மேலும் சாலை விதிகள், தலைகவசத்தின் முக்கியத்துவம் குறித்து இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு போலீசார் அறிவுரைகளை கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து உதவி ஆய்வாளர் சண்முகசுந்தரம் மகிழ்வாகனன், நகர காவல் உதவி ஆய்வாளர் கோகிலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com