என் மலர்
திருவாரூர்
- அஸ்வினி நட்சத்திர பரிகார தலமாக விளங்குகிறது.
- 100 தவில், 100 நாதஸ்வர கலைஞர்கள் கலந்துகொண்டு மங்கள இசை வாசித்தனர்.
திருத்துறைப்பூண்டி:
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் புகழ்பெற்ற பிறவிமருந்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இது
1000-ம் ஆண்டுக்குமேல் பழமையான கோவிலாகும். இந்த கோவில் அஸ்வினி நட்சத்திர பரிகார தலமாகவும் விளங்குகிறது. மேலும், பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு தியாகராஜர் சன்னதி எதிரில் 'திருத்துறைப்பூண்டியில் திருவையாறு' என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் 100 தவில், 100 நாதஸ்வர கலைஞர்கள் கலந்துகொண்டு மங்கள இசை வாசித்தனர்.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
- மின் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம்.
- கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நீடாமங்கலம்:
வலங்கைமானில் அ.தி.மு.க. சார்பில், சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்குலைவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் முன்னாள் அமைச்சர் இரா. காமராஜ் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். திருச்சி மண்டல தகவல் தொழில்நுட்ப செயலாளர் ராஜராஜன், வலங்கைமான் ஒன்றிய தலைவர் குமாரமங்கலம் சங்கர், கிழக்கு ஒன்றிய செயலாளர் சாத்தனூர் இளவரசன், வலங்கைமான் நகர செயலாளர் குணசேகரன், முன்னாள் பேரூராட்சி தலைவர் மாஸ்டர் ஜெயபால், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் ராணி துரைராஜ், மாவட்ட கவுன்சிலர் சாந்தி தேவராஜன், ஒன்றிய துணை தலைவர் வாசுதேவன், மாவட்ட மாணவரணி இணை செயலாளர் இளங்கோவன், வர்த்தக அணி துணை செயலாளர் பாலா, ஒன்றிய துணை செயலாளர் மாத்தூர் குருமாணிக்கையா மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
- இளைஞர்களின் வேலைவாய்ப்பிற்காக பல்வேறு வகையான திறன் பயிற்சிகளை செயல்படுத்தி வருகிறது.
- விருப்பத்தின் அடிப்படையில் தேர்வு செய்து திறன் பயிற்சி பெற்று வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும்.
முத்துப்பேட்டை:
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் இளைஞர் திறன் திருவிழா திருத்துறைப்பூண்டி எம்.எல்.ஏ. மாரிமுத்து, மகளிர் திட்ட இயக்குநர் வடிவேல் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் செயல்ப டுத்தப்பட்டு வரும் தீன்தயாள் உபாத்யாய கிராமப்புற திறன் பயிற்சி திட்டத்தின் மூலம் 2022-23 ஆம் ஆண்டில் தமிழகத்தில் உள்ள அனைத்து வட்டாரங்க ளிலும் இளைஞர்களின் வேலைவாய்ப்பை மேம்ப டுத்தும் வகையில் வட்டார அளவிலான இளைஞர் திறன் திருவிழா நடை பெற்றது.
அப்போது இந்திய அரசும், மாநிலஅரசும் இளைஞர்களின் வேலை வாய்ப்பிற்காக பல்வேறு வகையான திறன் பயிற்சிகளை அரசுத்துறைகள், வங்கிகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் செயல்படுத்தி வருகிறது.
திறன் பயிற்சி திட்டங்க ளில், இளைஞர்களின் தகுதிக்கு ஏற்ப, விருப்பத்தின் அடிப்படையில் தேர்வு செய்து திறன் பயிற்சி பெற்று வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக பொதுமக்களிடமும் இளைஞர்களிடமும் விழிப்பணர்வு ஏற்படுத்துவதே இளைஞர் திருவிழாவின் நோக்கம் என இதில் கலந்துக்கொண்டவர்கள் கருத்து தெரிவித்து பேசினர்.
இந்த திறன் பயிற்சியில் தேர்வானவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
முன்னதாக உதவி திட்ட இயக்குநர் தில்லைமணி கண்ணன் வரவேற்று பேசினார்.
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர் கனியமுதா ரவி, பேருராட்சி தலைவர் மும்தாஜ் நவாஸ்கான், மாவட்ட கவுன்சிலர்கள் அமுதா மனோகரன், தமயந்தி, பேருராட்சி அலுவலர் கார்த்தி. வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தி, கமல்ராஜன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் உமேஷ்பாபு, நகர செயலாளர் மார்க்ஸ் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரையாற்றினர்.
பின்னர் இளைஞர்களுக்கு சான்றிதழ் வழங்கினர். இதில் ஏராளமான இளம்பெண்கள் உட்பட பலரும் கலந்துக்கொ ண்டனர்.
- வாய்க்கால் மற்றும் நடவு செய்திருக்கும் வயல் வழியாக இறந்தவர் உடலை எடுத்து செல்லும் நிலை.
- இரண்டு நாட்கள் கழித்து இறுதி சடங்குகள் செய்ய வேண்டிய அவலம்.
நீடாமங்கலம்:
திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டம், பெருங்குடி ஊராட்சியில் கடந்த 80 ஆண்டுகளாக சுடுகாட்டிற்கு செல்ல பாதை இல்லாததால் வாய்க்கால் மற்றும் நடவு செய்திருக்கும் வயல் வழியாக இறந்தவர் உடலை எடுத்து செல்லும் நிலை உள்ளது.
இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இறந்தவர் உடலை மழையால் வாய்க்காலில் தண்ணீர் அதிகமாக உள்ள தால் இரண்டு நாட்கள் கழித்து இறுதி சடங்குகள் செய்ய வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து கிராமமக்கள் அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், இதே நிலை நீடித்தால் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் கிராமமக்கள் கூறுகின்றனர்.
- குழந்தைகள் இருக்கும் இடத்திற்கே நகர்த்தி சென்று எக்ஸ்ரே எடுக்கும் வசதி.
- சுமார் ரூ.10 லட்சம் மதிப்பில் டிஜிட்டல் எக்ஸ்ரே கருவி பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
மன்னார்குடி:
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் பிரிவில் நகர்த்தக்கூடிய டிஜிட்டல் எக்ஸ்ரே கருவி பயன்பாட்டை மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனர் டாக்டர் செல்வகுமார் தொடங்கி வைத்தார்.
இதன் மூலம் பிறந்த குழந்தைகளுக்கு தேவைப்பட்டால் குழந்தைகள் இருக்கும் இடத்திற்கே நகர்த்தி சென்று எக்ஸ்ரே எடுத்து பச்சிளம் குழந்தைகளின் உடல் நிலை குறித்து அறிந்து கொள்ள இயலும்.
ஒரு முறை எக்ஸ்ரே எடுத்தால் பின்னர் தேவைப்–படும் உடல் பகுதியை தனித்தனியாக கணினி மூலம் பார்த்து எக்ஸ்ரே பகுத்தாய்வு செய்து கொள்ளும் வசதியுடன் சுமார் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் மன்னார்குடி அரசு மருத்துவமனையில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
- திமுக அரசுக்கு வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.
- அதிமுக கொண்டு வந்த பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை நிறுத்திவிட்டதாகவும் தெரிவித்தார்.
திருவாரூர்:
தமிழக அரசுஅண்மையில் உயர்த்தி உள்ள சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு காரணமாக மக்கள் மிகுந்த அல்லல் பட்டு வருவதாகவும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு அடைந்துள்ளதாகவும் கூறி திருவாரூர் மாவட்ட அதிமுக சார்பில், திருவாரூர் அருகே உள்ள புலிவலத்தில் ஒன்றியச் செயலாளர் மணிகண்டன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜ் எம் எல் ஏ கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.
அப்போது திமுக அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதி அனைத்தையும் மீறி விட்டதாகவும், ஒரு வாக்குறுதிகளை கூட நிறைவேற்றவில்லை என்றும், மாறாக அதிமுக கொண்டு வந்த பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை நிறுத்திவிட்டதாகவும் தெரிவித்தார்.
மின் கட்டண உயர்வு சொத்து வரி உயர்வு பால் விலை உயர்வு போன்ற பல்வேறு சுமைகளை மக்கள் மீது வைத்துள்ள திமுக அரசுக்கு வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என தெரிவித்தார்
திமுக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் அமைச்சரும் நன்னிலம் சட்டமன்ற உறுப்பினரான காமராஜ் சிறப்புரையாற்றினார் இதில் ஒன்றிய செயலாளர் மணிகண்டன் செந்தில் உள்ளிட்ட ஏராளமான அதிமுகவினர் பங்கேற்றனர்.
இதுபோல் நன்னிலத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திலும் முன்னாள் அமைச்சர் இரா காமராஜர் எம்எல்ஏ கலந்து கொண்டார் இதில் ஒன்றிய செயலாளர்கள் அன்பழகன் குணசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கொரடாச்சேரி வெட்டாற்று பாலம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட இலக்கிய அணி செயலாளர் அரங்க.சத்தியமூர்த்தி தலைமை வகித்தார்.
மாவட்ட இளைஞர் இளம் பெண்கள் பாசறை செயலாளர் எஸ்.கலியபெருமாள் முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் சேகர், பாஸ்கர், கொரடாச்சேரி பேரூர் செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் நிர்வாகிகள் ஜெகநாதன், விஸ்வநாதன், தாழை.செல்லபாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் விலைவாசி உயர்வுக்கு எதிராகவும், விலைஉயர்வை திரும்பப் பெற வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டது.
- திறன் பயிற்சியில் தேர்வானவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
- மகளிர் திட்ட இயக்குநர் வடிவேல் தலைமையில் நடைபெற்றது.
திருத்துறைப்பூண்டி:
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் இளைஞர் திறன் திருவிழா மாரிமுத்து எம்.எல்.ஏ. , மகளிர் திட்ட இயக்குநர்வடிவேல் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.உதவி திட்ட இயக்குநர் தில்லைமணி கண்ணன் வரவேற்புரை வழங்கினார்.
இந்த திறன் பயிற்சியில் தேர்வானவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் முத்துப்பேட்டை ஒன்றிய பெருந்தலைவர் கனிஅமுதா ரவி, பேருராட்சி தலைவர் மும்தாஜ் நவாஷ், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் அமுதாமனோகரன் மற்றும்தமயந்தி, பேருராட்சி செயலாளர் கார்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தி மற்றும் கமல்ராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் உமேஷ்பாபு, நகர செயலாளர் காரல் மார்க்ஸ் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை மற்றும் சான்றிதழ் வழங்கினர்.
முடிவில் வட்டார இயக்க மேலாண்மை மேலாளர் ராதிகா நன்றி தெரிவித்தார்.
- திருத்துறைப்பூண்டியில் வடக்கு, தெற்கு அ.தி.மு.க. சார்பில் பாமனி கடை தெருவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- தி.மு.க. அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
திருத்துறைப்பூண்டி:
சொத்து வரி, மின்கட்டணம், பால் ஆகியவற்றின் விலை உயர்வை கண்டித்தும், தி.மு.க. அரசை கண்டித்தும் திருத்துறைப்பூண்டியில் வடக்கு, தெற்கு அ.தி.மு.க. சார்பில் பாமனி கடை தெருவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு மாவட்ட துணை செயலாளர் அம்பிகாபதி தலைமை தாங்கினார்.
வடக்கு ஒன்றிய செயலாளர் பாலகிருஷ்ணன் , தெற்கு ஒன்றிய செயலாளர் சிங்காரவேலு, நகர செயலாளர் சண்முகசுந்தர், மாவட்ட மாணவர் அணி செயலாளர் சுரேந்தர், வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் சுரேஷ்குமார், தொகுதி முன்னாள்செயலாளர்அர்ஜுனன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஒன்றிய அவைத்தலைவர் பாலதண்டாயுதம், தெற்கு ஒன்றிய அவைத்தலைவர் சின்னையன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு தி.மு.க. அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
- தமிழக அரசால் புதிய திட்டமாக ஸ்டெம்ப பயிற்சி கொண்டு வரப்பட்டுள்ளது.
- அறிவியல் செயல்பாடுகள் மாணவர்களுக்கு செய்து காண்பிக்கப்படுகின்றன.
முத்துப்பேட்டை:
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த எடையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு ஸ்டெம்ப பயிற்சி நடைபெற்றது.
அரசு பள்ளிகளில் மாணவர்களின் அறிவியல் மனப்பான்மை மேம்படுத்துவதற்காக தமிழக அரசால் புதிய திட்டமாக ஸ்டெம்ப பயிற்சி கொண்டு வரப்பட்டு உள்ளது.
இந்த திட்டத்திற்காக மாநிலம் முழுவதும் ஆசிரியர்களுக்கும் பயிற்சிகள் வழங்கப்பட்டு பள்ளிகளுக்கும் அதற்கான கருவிப்பெட்டிகள் கிட் வழங்கப்பட்டு உள்ளன.
இதன் மூலம் மாநிலம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் அறிவியல் செயல்பாடுகள் மாணவர்களுக்கு செய்து காண்பிக்கப்–படுகின்றன.
அதன்படி திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை எடையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடந்த ஸ்டெம்ப பயிற்சி பள்ளி தலைமையாசிரியர் கோதண்டராமன் தலைமையில் நடைபெற்றது.
இதில் ஸ்டெம்ப பயிற்சி தன்னார்வ ஆசிரியை அன்பரசி மாணவர்களுக்கு பயிற்சி அளித்து பேசினார்.
இதில் ஆசிரியர்கள் பத்மாதேவி, ரேவதி, கலைச்செல்வி, சித்திரா, சசிகலா, மன்மதன்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- முதலிடம் பிடித்த மூன்று மாணவர்களுக்கு நினைவு பரிசுகள்.
- பள்ளி பருவத்தில் மாணவர்கள் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் மதுவிலக்கு காவல்துறை சார்பில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
இதில் தலைமை ஆசிரியர் கிருஷ்ணசாமி தலைமை தாங்கினார். ஆசிரியர்கள் மீனாட்சி சுந்தரம், அலோசியஸ், தலைமை காவலர்கள் சீனிவாசன், ரஞ்சனி பிரியா, செந்தமிழ்ச்செல்வி, கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆசிரியை வெற்றி செல்வி அனைவரையும் வரவேற்றார். முதலிடம் பிடித்த மூன்று மாணவர்களுக்கு நினைவு பரிசுகளும் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் நோட்டுகளும் வழங்கி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரூபாவதி பேசுகையில் பள்ளி பருவத்தில் மாணவர்கள் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் போதை பழக்கத்திற்கு அடிமையாக கூடாது என்றார்.
முடிவில் ஆசிரியர் இன்பாலன் நன்றி கூறினார்.
- ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி, நகர செயலாளர் செல்லத்துரை ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
- மக்களின் கோரிக்கைகள் குறித்த போராட்டங்களை முன்னெடுத்து செல்வது குறித்து முக்கிய தீர்மானம்.
முத்துப்பேட்டை:
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கட்சி உறுப்பினர்களுக்கு அரசியல் விளக்க பேரவை கூட்டம் ஓன்றிய செயலாளர் பழனிச்சாமி, நகர செயலாளர் செல்லத்துரை ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
இதில் மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி இன்றைய அரசியல் பற்றி விளக்கி பேசினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜோதிபாசு, மாவட்ட குழு உறுப்பினர் கேவி.ராஜேந்திரன் ஆகியோர் செயல்பாடுகள் குறித்து விளக்கி பேசினார்கள். கூட்டத்தில் நகர மக்களின் கோரிக்கைகள் குறித்து போராட்டங்கள் முன்னெடுத்துச் செல்வது குறித்து முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் வீரசேகரன், முத்துகிருஷ்ணன், வீரமணி, பெரியசாமி, ராஜேந்திரன், கவிதா, நகர குழு உறுப்பினர்கள் ரமேஷ், மந்திரமூர்த்தி, இந்திராணி, சரவணன், கவிதா உட்பட ஏராளமான கட்சியினர் பங்கேற்றனர்.
- தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஏமாற்றி வருகிறது.
- தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும்.
மன்னார்குடி:
மன்னார்குடியில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
பாராளுமன்ற தேர்தல்களில் பிரதமரை தேர்ந்தெடுப்பதில் எங்கள் கட்சி முக்கிய பங்கு வகிக்கும்.
அதில் நாங்கள் அணில் போல் செயல்பட்டு வருகிறோம்.
தேசிய கட்சி ஒன்றுடன் அ.ம.மு.க. கூட்டணி அமைத்து பாராளுமன்ற தேர்தலை சந்திப்போம்.
எடப்பாடி பழனிச்சாமியுடன் இணைந்து செயல்பட மாட்டோம் என்று பலமுறை கூறி வருகிறோம்.
ஜெயலலிதாவை நேசிக்கிறவர்கள் ஒன்றிணைந்து, இதர கட்சியுடன் கைகோர்த்து தேர்தலை சந்தித்தால் தான் தி.மு.க.வை வீழ்த்த முடியும்.
தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஏமாற்றி வருகின்றது.
இதனால் மக்கள் அதிருப்தியுடனும், வேதனையுடனும் உள்ளனர்.
இது வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும்.
தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும்.
அதற்கான முயற்சியில் ஆளுநர் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வரும் நிலையில் இதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது துணை பொதுச்செயலாளர் ெரங்கசாமி, திருவாரூர் மாவட்ட செயலாளர் எஸ்.காமராஜ், தஞ்சாவூர் மாவட்ட செயலாளர்
மா. சேகர், மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் வேலு.கார்த்திகேயன், தேர்தல் பிரிவு இணைச்செயலாளர் மலர்வேந்தன், அம்மா தொழிற்சங்க பேரவை மாநில இணைச் செயலாளர் சத்தியமூர்த்தி, நகரக் செயலாளர், ஒன்றிய செயலாளர், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய குழு உறுப்பி னர்கள் உடன் இருந்தனர்.






