search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "toolkits"

    • தமிழக அரசால் புதிய திட்டமாக ஸ்டெம்ப பயிற்சி கொண்டு வரப்பட்டுள்ளது.
    • அறிவியல் செயல்பாடுகள் மாணவர்களுக்கு செய்து காண்பிக்கப்படுகின்றன.

    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த எடையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு ஸ்டெம்ப பயிற்சி நடைபெற்றது.

    அரசு பள்ளிகளில் மாணவர்களின் அறிவியல் மனப்பான்மை மேம்படுத்துவதற்காக தமிழக அரசால் புதிய திட்டமாக ஸ்டெம்ப பயிற்சி கொண்டு வரப்பட்டு உள்ளது.

    இந்த திட்டத்திற்காக மாநிலம் முழுவதும் ஆசிரியர்களுக்கும் பயிற்சிகள் வழங்கப்பட்டு பள்ளிகளுக்கும் அதற்கான கருவிப்பெட்டிகள் கிட் வழங்கப்பட்டு உள்ளன.

    இதன் மூலம் மாநிலம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் அறிவியல் செயல்பாடுகள் மாணவர்களுக்கு செய்து காண்பிக்கப்–படுகின்றன.

    அதன்படி திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை எடையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடந்த ஸ்டெம்ப பயிற்சி பள்ளி தலைமையாசிரியர் கோதண்டராமன் தலைமையில் நடைபெற்றது.

    இதில் ஸ்டெம்ப பயிற்சி தன்னார்வ ஆசிரியை அன்பரசி மாணவர்களுக்கு பயிற்சி அளித்து பேசினார்.

    இதில் ஆசிரியர்கள் பத்மாதேவி, ரேவதி, கலைச்செல்வி, சித்திரா, சசிகலா, மன்மதன்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×