என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வலங்கைமானில், அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
    X

    ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் இரா. காமராஜ் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார்.

    வலங்கைமானில், அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

    • மின் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம்.
    • கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    நீடாமங்கலம்:

    வலங்கைமானில் அ.தி.மு.க. சார்பில், சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்குலைவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில் முன்னாள் அமைச்சர் இரா. காமராஜ் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். திருச்சி மண்டல தகவல் தொழில்நுட்ப செயலாளர் ராஜராஜன், வலங்கைமான் ஒன்றிய தலைவர் குமாரமங்கலம் சங்கர், கிழக்கு ஒன்றிய செயலாளர் சாத்தனூர் இளவரசன், வலங்கைமான் நகர செயலாளர் குணசேகரன், முன்னாள் பேரூராட்சி தலைவர் மாஸ்டர் ஜெயபால், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் ராணி துரைராஜ், மாவட்ட கவுன்சிலர் சாந்தி தேவராஜன், ஒன்றிய துணை தலைவர் வாசுதேவன், மாவட்ட மாணவரணி இணை செயலாளர் இளங்கோவன், வர்த்தக அணி துணை செயலாளர் பாலா, ஒன்றிய துணை செயலாளர் மாத்தூர் குருமாணிக்கையா மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    Next Story
    ×