என் மலர்
திருவாரூர்
- மரங்களை மனிதர்களோடு உருவகப்படுத்தி மாணவர்களுடன் கலந்துரையாடுங்கள்.
- மாணவர்களை மரம் நட ஊக்கப்படுத்துங்கள்.
திருவாரூர்:
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கொரடாச்சேரி ஒன்றியம் குளிக்கரை அரசு மேல்நிலைப்பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
இவ்விழாவிற்கு குளிக்கரை ஊராட்சித் தலைவர் மதிவாணன் தலைமை தாங்கினார்.
மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமரன், பள்ளி மேலாண்மைக்குழு தலைவி சசிகலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தலைமை ஆசிரியை அட்சரசுந்தரி வரவேற்றுப் பேசினார்.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முனைவர் புகழேந்தி கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டார்.
அப்போது அவர் கூறியதாவது, பூமியை வருங்கால சந்த்தியினர் ஆரோக்கியமாக உயிர்வாழ வழிவகை செய்யும் கடமை நம் ஒவ்வொருக்கும் உள்ளது.
மரங்களை மனிதர்களோடு உருவகப்படுத்தி மாணவர்களுடன் கலந்துரையாடுங்கள்.
மரங்களின் ஆக்சிஜனை நாம் சுவாசிக்கிறோம்.
நாம் வெளியிடும் கார்பன்டை ஆக்ஸைடை மரங்கள் சுவாசிக்கின்றன.
மாணவர்களிடம் நீங்கள் நடுவது மரம் மட்டுமல்ல.
ஒரு ஆக்ஸிஜன் தொழிற்சாலையும் கூட என சொல்லி, மாணவர்களை மரம் நட ஊக்கப்படுத்துங்கள்.
இவ்வாறு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் புகழேந்தி ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
இவ்விழாவில் முதன்மை கல்வி அலுவலரின் உதவியாளர் ராஜேந்திரன், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், மாணவர்களின் பெற்றோர் மற்றும் ஊர் பொது மக்கள் கலந்து கொண்டனர்.
- தொண்டு நிறுவனங்களுக்கு தமிழக அரசு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.
- 10 கிராம் தங்க பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ வெளியி ட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது:-
ஓவ்வொரு ஆண்டும் சுதந்திர தின விழா அன்று மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணிபுரிந்த சமூகபணியாளர், தொண்டு நிறுவனங்களுக்கு தமிழக அரசு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில், 15.8.23 அன்று நடைபெறும் சுதந்திர தின விழாவில், மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணிபுரிந்த சமூக பணியாளர், மருத்துவர், தொண்டு நிறுவனம், மாற்றுத்திறனாளிகளுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்பு அளித்த தனியார் நிறுவனம் மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஆகியவர்களுக்கு தமிழக அரசின் சிறப்பு விருதுகள் தமிழக முதலமைச்சரால் கோட்டை கொத்தளத்தில் 10 கிராம் தங்க பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படவுள்ளது.
எனவே, மேற்காணும் விருதுகளுக்கு தகுதியான விருப்பமுள்ள நபர்கள் திருவாரூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், அறை எண்:6, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், திருவாரூர்-610004 என்ற முகவரியில் விண்ணப்பம் பெற்று உரிய ஆவணங்களுடன் 26.06.2023க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் சிறப்பு பயிற்சி 3 நாட்கள் வழங்கப்பட்ட உள்ளது
- சுத்தம் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
திருவாரூர்:
தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின்னர் ஜூன் 12-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.
கோடை விடுமுறைக்கு பின்னர் பள்ளிகள் திறக்கப்படுவதால் பள்ளி வளாகங்களில் முளைத்துள்ள புல், பூண்டுகளை அகற்றி சுத்தப்படுத்த வேண்டும்.
பள்ளியின் கட்டடம் மற்றும் கழிப்பிடங்கள், குடிநீர் வசதிகளை கண்காணித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்டு ள்ளது.
அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் தூய்மைப் பணிகள், கழிப்பிடம் மற்றும் கட்டிட சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இப்பணிகளில் பள்ளியின் ஆசிரியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
பள்ளி திறப்பதை முன்னிட்டு மாவட்டத்தில் அனைத்தும் பள்ளிகளுக்கும், புத்தகங்கள் குறிப்பேடுகள் வழங்கப்பட்டுள்ளது.
பள்ளி திறந்த அதே நாளில் மாணவ மாணவிகளுக்கு புத்தகங்கள் மற்றும் குறிப்பேடுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு பிரிண்டர் உள்ளிட்ட உபகரணங்களும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு 4 மற்றும் 5 வகுப்பு மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ் கற்பித்தல் பணி நடைபெற உள்ளதால் ஆசிரியர்களுக்கு அதற்கான சிறப்பு பயிற்ச்சியும் மூன்று நாட்கள் வழங்கப்பட்டுள்ளது.
பள்ளியில் நடைபெறும் தூய்மைப் பணிகளை திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த கல்வித்துறை அலு வலர்கள் மேற்பார்வையிட்டு வருகின்றனர்.
- சுற்றுச்சூழல் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுவரும் நிறுவனங்களுக்கு விருது.
- மக்கும் குப்பைகளை நகராட்சியுடன் இணைந்து மக்கிய உரமாக மாற்றி வழங்கும் நிகழ்ச்சி.
திருத்துறைப்பூண்டி:
தமிழக அரசு தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம் மூலம் திடக்கழிவு மேலாண்மை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பிளாஸ்டிக் ஒழிப்பு, பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு சுற்றுச்சூழல் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுவரும் நிறுவனங்களை ஊக்குவிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் உலக சுற்றுச்சூழல் தினத்தன்று பசுமை சாம்பியன் விருது வழங்கி வருகிறது.
அந்த வகையில், திருத்துறைப்பூண்டி பகுதிகளில் தினசரி சேகரிக்கப்படும் மக்கும் குப்பைகளை நகராட்சியுடன் இணைந்து மக்கிய உரமாக மாற்றி விவசாயிகளுக்கு வழங்கும் பணியை 5 வருடமாக சிறப்பாக செய்து சுற்றுச்சூழலை பாதுகாத்து வரும் பாலம் சேவை நிறுவனத்தின் இந்த பணியை பாராட்டி 2022- 23-ம் ஆண்டுக்கான பசுமை சாம்பியன் விருதை பாலம் சேவை நிறுவனத்திற்கு தமிழக அரசு வழங்கியுள்ளது.
இதற்கான சான்றிதழை திருவாரூர் மாவட்ட கலெக்டர் பாலம் சேவை நிறுவன செயலாளர் செந்தில்குமாரிடம் வழங்கினார்.
- பயனாளிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
- விழிப்புணர்வு சைக்கிள் பேரணி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
திருத்துறைப்பூண்டி:
இந்திய அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்ச கத்தின் கீழ் இயங்கும் திருவாரூர் மக்கள் கல்வி நிறுவனம் சார்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தை யொட்டி ஜி-20 கல்விப் பணிக்குழுவின் பொதுமக்கள் பங்கேற்பு நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக மரக்கன்று நடும் விழா திருவாரூர் அடுத்த அலிவலத்தில் நடைபெற்றது.
இதில் மக்கள் கல்வி நிறுவன தலைவர் கவுசல்யா தலைமை தாங்கினார். திருவாரூர் மக்கள் கல்வி நிறுவன இயக்குநர் பாலகணேஷ் முன்னிலை வகித்தார்.
அலிவலம் ஊராட்சி தலைவர் நிர்மலா பாண்டியன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் மாசிலாமணி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.
தொடர்ந்து, பயனாளி களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
பின்னர், விழிப்புணர்வு சைக்கிள் பேரணி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் அலுவ லர்கள் திருலோகச்சந்தர், கனகதுர்க்கா, மனோஜ், பயிற்றுனர்கள், பயனாளிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
- கடலோர பகுதியில் கஞ்சா கடத்தப்படுவதாக திருவாரூர் மாவட்ட கியூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
- போலீசார் விரைந்து சென்று 3 பேரையும் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.
முத்துப்பேட்டை:
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை கடலோர பகுதியில் கஞ்சா கடத்தப்படுவதாக திருவாரூர் மாவட்ட கியூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
இதைத் தொடர்ந்து கியூ பிரிவு போலீசார், முத்துப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தன், இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் இன்று அதிகாலை முத்துப்பேட்டை அருகே உள்ள அலையாத்தி காட்டில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமான வகையில் 3 பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் போலீசை பார்த்ததும் தப்பியோட்டம் பிடித்தனர். உடனடியாக போலீசார் விரைந்து சென்று 3 பேரையும் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் அலையாத்தி காட்டில் 10 மூட்டை கஞ்சா வைத்திருப்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அவர்களை கைது செய்து 10 மூட்டை கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.
மேலும் விசாரணையில் அவர்கள் முத்துப்பேட்டை அருகே பேட்டையை சேர்ந்த முருகானந்தம் (வயது 43), அதே பகுதியை சேர்ந்த மகேந்திரன் (25) கோவிலூரை சேர்ந்த சசிகுமார் (20) என்பதும் அவர்கள் இலங்கைக்கு கடத்துவதற்காக கஞ்சாவை பதுக்கி வைத்திருந்ததும் தெரிய வந்தது. இதன் மொத்த எடை 300 கிலோ ஆகும். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
- 3 அடி உயரம் கொண்ட சிற்பம் தத்ரூபமாக செதுக்கப்பட்டுள்ளது.
- ஆதித்தசோழனின் சிற்பம் தெருவோர சன்னதியில் வைத்து வழிபடுவது கவலை அளிக்கிறது.
திருவாரூர்:
பிற்கால சோழர் பேரரசுக்கு அடிகோலியவர் விஜயாலய சோழன். இவரது மகன் ஆதித்ய சோழன். ஆதித்ய சோழனுக்கு கிபி 871 ஆம் ஆண்டில் இளவரசர் பட்டம் சூட்டப்பட்டது.
பிற்காலச் சோழர்கள் கிபி 8ஆம் நூற்றாண்டு முதல் 13 ஆம் நூற்றாண்டு வரை கோலோச்சி வந்தனர்.
இவர்களது காலத்தில் திருவாரூர், நாகை, நன்னிலம், தஞ்சாவூர், மன்னார்குடி, வலங்கைமான், கும்பகோணம், சீர்காழி, மயிலாடுதுறை உள்ளிட்ட பல இடங்களில் கோயில்களை கட்டி நிலம் உள்ளிட்டவர்களை தானமாக வழங்கி உள்ளனர்.
அந்த வகையில் ஆதித்த மங்கலத்தில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கும் நிலம் தானமாக வழங்கப்பட்டுள்ளது.
இத்தகவல்களை அன்பில் செப்பேடு மற்றும் கல்வெட்டுகள் கூறுகின்றன.
அங்குள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கு நிலம் தானம் அளித்த அடிப்படையில் ஆதித்ய சோழன் சிற்பத்தையும் கோயிலில் வைத்து பொதுமக்கள் வழிபட்டு வந்தனர்.
காலப்போக்கில் கோயில் அழிந்து விடவே அச்சிற்பத்தை காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகில் உள்ள தெருவோர சிறிய சன்னதியில் வைத்து வழிபட்டு வருகின்றனர்.
மூன்று அடி உயரம் கொண்ட சிற்பம் தத்ரூபமாக செதுக்கப்பட்டுள்ளது.
தலைப்பகுதியில் சிறிய முடியுடன் கூடிய கவசம், காதுகளில் பத்திர குண்டலமும், கழுத்தணி களுடன் முகத்தில் முறுக்கு மீசையுடனும், கீழாடை அணிந்து, வலது கரத்தில் அம்பும், இடது கரத்தில் வில்லும் கொண்டு நின்ற நிலையில் காணப்படுகிறது. இந்த சிற்பம் ஒன்பதாம் நூற்றாண்டில் செய்யப்பட்டுள்ளது என தெரிகிறது.
பிற்கால சோழப்பேரரசுக்கு அடி கோலிய விஜயாலயன் மகன் ஆதித்யசோழனின் சிற்பம் தெருவோர சன்னதியில் வைத்து வழிபடுவது பொதுமக்களையும் தொல்லியல் நிபுணர்களையும் கவலை கொள்ள செய்துள்ளது.
வரலாற்று பாரம்பரி யமிக்க ஆதித்ய சோழனின் சிற்பத்தினை பிரத்தியேகமாக தனி அரங்கம் அமைத்து பொதுமக்களின் பார்வை க்கும் வழிபாட்டிற்கும் ஏற்பாடு செய்ய வேண்டுமென தொல்லியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
- அதம்பார், வேலங்குடி ஆகிய துணை மின்நிலையங்களில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
- முகுந்தனூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வினியோகம் இருக்காது.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம் பேரளம், அதம்பார், வேலங்குடி ஆகிய துணை மின்நிலையங்களில் நாளை 6-ந்தேதி (செவ்வாய்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
எனவே இந்த துணை மின்நிலையங்களில் இருந்து மின்வினிே்யாகம் பெறும் பேரளம், கொல்லுமாங்குடி, கொட்டூர், கொல்லாபுரம், பூந்தோட்டம், அதம்பார்,
விலாகம், எரவாஞ்சேரி, ஸ்ரீவாஞ்சியம், வேலங்குடி, நல்லாடை, காலியாக்குடி, திருக்கொட்டாரம், பாவட்டகுடி, கடகம், சிறுபுலியூர், முகுந்தனூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வினியோகம் இருக்காது.
இந்த தகவலை பேரளம் உதவி செயற்பொறியாளர் பிரபாகர் தெரிவித்துள்ளார்.
- 11 வயது பள்ளி மாணவி குளிர்பானம் வாங்க கடைக்கு வந்துள்ளார்.
- வீட்டிற்கு சென்று பெற்றோர்களிடம் சம்பவத்தை தெரிவித்துள்ளார்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகில் உள்ள மாப்பிள்ளைகுப்பத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 75). இவர் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். இவர் அதே பகுதியில் பள்ளிக்கூடத்திற்கு எதிரே ஒரு பெட்டிக்கடை நடத்தி வருகிறார்.
சில தினங்களுக்கு முன்பு இவரது கடைக்கு அதே ஊரைச் சேர்ந்த 11 வயது பள்ளி மாணவி குளிர்பானம் வாங்க வந்துள்ளார்.
குளிர்பானம் வாங்க வந்தபோது கடையில் பொதுமக்கள் யாரும் இல்லாததால், துணிச்சல் அடைந்த கார்த்திகேயன் சிறுமியை கடைக்கு உள்ளே அழைத்துச் சென்று அவளுக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்றதாக தெரிகிறது.
இதில் அதிர்ச்சி அடைந்த அச்சிறுமி அங்கிருந்து தப்பித்து ஓடி தனது வீட்டிற்கு சென்று பெற்றோர்களிடம் சம்பவத்தை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சிறுமியின் தாய் நன்னிலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தலைமை ஆசிரியர் கார்த்திகேயனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் இப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி வருகிறது.
- மின்கம்பங்கள் சரி செய்யப்படாமல் அப்படியே உள்ளது.
- விவசாயிகள் வயலுக்கு சென்றால் விபத்து ஏற்படும் சூழல் உள்ளது.
நீடாமங்கலம்:
திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சமீபத்தில் வீசிய சூறை காற்றால் சின்னகரம் என்ற கிராமத்தில் வயல்வெளியின் நடுவே உள்ள மின்கம்பங்கள் சாய்ந்தன.
அதனைத் தொடர்ந்து உடனடியாக மின்சாரம் நிறுத்தப்பட்டது. ஆனால் இதுவரை மின்கம்பங்கள் சரி செய்யப்படாமல் அப்படியே உள்ளது. இதனால் இரவு நேரங்களில் விவசாயிகள் வயலுக்கு சென்றால் விபத்து ஏற்படும் சூழல் உள்ளது.
எனவே, சாய்ந்த மின்கம்பங்கள் சீரமைக்கப்படுமா என விவசாயிகள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.
- பூந்தோட்டம் அருகில் உள்ள அரசலாற்று பாலம் அருகில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
- மது அருந்தி நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள பூந்தோட்டத்தை சேர்ந்தவர் அன்பழகன். இவரது மகன் ஐயப்பன் (வயது 30). இவர் சொந்தமாக கார் வைத்து வாடகைக்கு ஓட்டி தொழில் நடத்தி வருகிறார். இவர் சில தினங்களுக்கு முன்பு பூந்தோட்டம் அருகில் உள்ள அரசலாற்று பாலம் அருகில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது தொடர்பாக பேரளம் போலீசார் சந்தேக மரணம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் இறப்பதற்கு முன் ஐயப்பனுடன் பேரளம் காவல் நிலையத்தை சேர்ந்த போலீஸ்காரர்கள் மணிகண்டன், பிரபு உள்ளிட்ட நண்பர்கள் மது விருந்து நடத்தி நடனம் ஆடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இதனைத் தொடர்ந்து இறந்து போன ஐயப்பனின் தந்தை அன்பழகன், தனது மகனின் சாவில் மர்மம் இருப்பதாகவும், இதில் பேரளம் போலீஸ் மணிகண்டன் மற்றும் பிரபு ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாகவும், அது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமாரிடம் புகார் மனு அளித்திருந்தனர்.
இந்த புகார் மனு குறித்து மாவடட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் விசாரணை நடத்தி வருகிறார். இந்நிலையில் பணி நேரத்தில் உரிய அனுமதியின்றி தனிப்பட்ட நபரின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டதால் மணிகண்டன், பிரபு ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.
பணி நேரத்தில் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டு மது போதையில் நடனம் ஆடிய போலீசார் 2 பேர் பணியிட நீக்கம் செய்யப்பட்டுள்ளது இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- பல கி.மீ. தொலைவில் உள்ள முத்துப்பேட்டை பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.
- மாணவிகளை அழைப்பதற்காக பெற்றோர்கள் நீண்ட நேரம் சங்கேந்தியில் காத்திருக்கின்றனர்.
திருத்துறைப்பூண்டி:
எடையூர் சங்கேந்தி அம்மலூர் வர்த்தக சங்க தலைவர் மாதவன் பள்ளி கல்வித்துறை அமைச்சருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
எடையூர் சங்கேந்தி பகுதியை சுற்றி பின்னத்தூர், உதயமார்த்தாண்டபுரம், நாச்சிகுளம், செறுபனையூர், பாண்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் விவசாயிகள், தொழிலாளர்கள் என பல்வேறு குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், அங்கு வசிக்கும் பொதுமக்கள் தங்கள் குழந்தைகளை எடையூர், நாச்சிகுளத்தில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியிலும், பாண்டியில் உள்ள உயர்நிலை பள்ளியிலும் படிக்க வைத்து வருகின்றனர்.
ஆனால், சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சேர்க்க வேண்டும் என நினைக்கிறார்கள். அவ்வாறு வேண்டுமேயானால், பல கி.மீ. தொலைவில் முத்துப்பேட்டையில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கும், திருத்துறைப்பூண்டியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் செல்ல வேண்டி உள்ளது.
அவ்வாறு அங்கு சென்று படித்து வரும் மாணவிகளை அழைப்பதற்காக பெற்றோர்கள் நீண்ட நேரம் சங்கேந்தியில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே, பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு எடையூர் கிராமத்தை மையமாக வைத்து அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அமைக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.






