சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பங்கள்.
சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பங்கள்.

சூறைகாற்றால் சாய்ந்த மின்கம்பங்கள் சீரமைக்கப்படுமா?

மின்கம்பங்கள் சரி செய்யப்படாமல் அப்படியே உள்ளது.விவசாயிகள் வயலுக்கு சென்றால் விபத்து ஏற்படும் சூழல் உள்ளது.
Published on

நீடாமங்கலம்:

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சமீபத்தில் வீசிய சூறை காற்றால் சின்னகரம் என்ற கிராமத்தில் வயல்வெளியின் நடுவே உள்ள மின்கம்பங்கள் சாய்ந்தன.

அதனைத் தொடர்ந்து உடனடியாக மின்சாரம் நிறுத்தப்பட்டது. ஆனால் இதுவரை மின்கம்பங்கள் சரி செய்யப்படாமல் அப்படியே உள்ளது. இதனால் இரவு நேரங்களில் விவசாயிகள் வயலுக்கு சென்றால் விபத்து ஏற்படும் சூழல் உள்ளது.

எனவே, சாய்ந்த மின்கம்பங்கள் சீரமைக்கப்படுமா என விவசாயிகள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com