என் மலர்tooltip icon

    திருவாரூர்

    • திருச்சி உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்படும்.
    • வாரந்தோறும் சராசரியாக ரூ.30 லட்சத்திலிருந்து, 40 லட்சம் வரை ஆடுகள் விற்பனையாகும்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் வேதாரண்யம் சாலை பள்ளிவாசல் மைதானத்தில் வாரந்தோறும் வியாழக்கிழமையன்று ஆட்டுச் சந்தை நடைபெற்று வருகிறது.

    இந்தச் சந்தையில் உள்ளூர் விவசாயிகள் மட்டுமன்றி மதுரை, ராஜகிரி, அறந்தாங்கி, புதுக்கோட்டை, மன்னார்குடி, வேதாரண்யம், தஞ்சாவூர், திருச்சி உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். வாரந்தோறும் சராசரியாக ரூ.30 லட்சத்திலிருந்து ரூ.40 லட்சம் வரை ஆடுகள் விற்பனையாகும்.

    இந்த நிலையில், நேற்று நடைபெற்ற சந்தையில் வழக்கத்தை விட கூடுதலாக வியாபாரிகள் ஆடுகளைக் கொண்டு வந்திருந்தனர். இதே போல ஆடுகளை வாங்கவும் ஏரா ளமானோர் வந்திருந்தனர்.

    பக்ரீத் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், நேற்று ஒரே நாளில் ரூ.1.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை யானதாக சந்தை ஏற்பா ட்டாளர்கள் தெரிவித்தனர்.

    • திருத்துறைப்பூண்டி புதிய பஸ் நிலையத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • பொதுமக்களிடம் போதை பொருள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்ட மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில் போதை பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி திருத்துறைப்பூண்டி புதிய பஸ் நிலையத்தில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு கலால் உதவி ஆணையர் அழகிரிசாமி தலைமை தாங்கினார். உணவு பாதுகாப்பு அலுவலர் முதலியப்பன், மாவட்ட பேரிடர் ஆலோசனை குழு உறுப்பினர் செல்வகணபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முன்னதாக பாலம் சேவை நிறுவன செயலாளர் செந்தில்குமார் அனைவரையும் வரவேற்றார்.

    நிகழ்ச்சியில் நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கினார்.

    இதில் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன், அரசு கலைக்கல்லூரி பேராசிரியர் பன்னீர்செல்வம், டவுன் லயன்ஸ் சங்க தலைவர் சின்னதுரை, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி என்.எஸ்.எஸ். ஆசிரியர் சக்கரபாணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் நல விடுதிகளில் மாணவர்கள் சேர வருகிற 30-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
    • விடுதிகளில் தரமான உணவு காலை, மதியம் மற்றும் இரவு ஆகிய 3 வேளைகளிலும் வழங்கப்படுகிறது.

    திருவாரூர்

    திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கல்லூரி விடுதிகள் திருவாரூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின்கீழ் கல்லூரி மாணவர்களுக்காக 4 விடுதிகளும், மாணவிகளுக்காக 3 விடுதிகளும் என மொத்தம் 7 கல்லூரி விடுதிகள் செயல்பட்டு வருகிறது.

    2023-2024-ம் கல்வி ஆண்டில் ஆதிதிராவிடர் நல விடுதிகளில் தங்கி கல்வி படிப்பதற்கு இணைய வழியில் மாணவர்கள் சேர்க்கையை நடத்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

    அதன்படி, விதிமுறைகள், வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி https/tnadw.hms.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் நேரடியாகவோ அல்லது காப்பாளரின் உதவியுடனோ விண்ணப்பிக்கலாம். பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்துக்குள் இருக்க வேண்டும்.

    பெற்றோரை இழந்த மாணவ, மாணவிகள் மற்றும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேலும், மாணவ, மாணவிகளுக்கு விடுதிகளில் தரமான உணவு காலை, மதியம் மற்றும் இரவு ஆகிய 3 வேளைகளிலும் வழங்கப்படுகிறது.

    மாணவ, மாணவிகள் கல்லூரி விடுதிகளில் சேர இணையதளத்தில் வருகிற 30-ந் தேதி (வெள்ளிக்கிழமை) வரை விண்ணப்பிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தி.மு.க. ஆட்சி வந்தாலே விலைவாசி உயர்வும் வந்து விடுகிறது.
    • செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.

    திருவாரூர்:

    ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி திருவாரூர் புதிய ரயில் நிலையம் முன்பாக முன்னாள் அமைச்சரும் மாவட்ட கழக செயலாளருமான இரா.காமராஜ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

    ஆர்ப்பா ட்டத்தில் முன்னாள் அமைச்சர் காமராஜ் பேசியதாவது:-

    திமுக ஆட்சி வந்தாலே விலைவாசி உயர்வும் வந்து விடுகிறது. மின் கட்டனம் உயர்தியுள்ளனர், குடிநீர் வரி உயர்த்தப்பட்டுள்ளது. இதையெல்லாம் கண்டித்து போராட்டம் நடைபெற்று வருகிறது.

    தொடர்ந்து விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்தும், செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் கழக அமைப்புச் செயலாளர்கள் கோபால், சிவா ராஜமாணி க்கம், நகர செயலாளர் ஆர்.டி. மூர்த்தி, மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண் பாசறை செயலாளர் கலியபெருமாள், ஒன்றிய செயலாளர்கள் பி கே யு. மணிகண்டன், செந்தில்வேல், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சின்னராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • திருச்சி- 5 நெல் ரகமானது, களர் மற்றும் உவர் தன்மையை தாங்கி வளரக்கூடிய பண்புகளைக் கொண்டுள்ளது.
    • இந்த ரகமானது உப்பு பாசன நீரிலும், நன்கு வளரக்கூடிய தன்மையை கொண்டு விளங்குகின்றது.

    நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானியும், திட்ட ஒருங்கிணைப்பாளருமான ராதாகிருஷ்ணன், சுற்றுச்சூழல் விஞ்ஞானி செல்வமுருகன் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருவாரூர் மாவட்டத்தின் களர் மற்றும் உப்பு பாதித்த நிலங்களில், அதனை தாங்கி வளரக்கூடிய திருச்சி- 5 நெல் ரகத்தினை விவசாயிகள் சாகுபடி செய்து பயன்பெற வேண்டும். தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளில் ஒன்றான அன்பில் தர்மலிங்கம் மேலாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து சமீபத்தில் வெளியிடப்பட்ட திருச்சி- 5 நெல் ரகமானது, களர் மற்றும் உவர் தன்மையை தாங்கி வளரக்கூடிய பண்புகளைக் கொண்டுள்ளது.

    இந்த ரகமானது உப்பு பாசன நீரிலும், நன்கு வளரக்கூடிய தன்மையை கொண்டு விளங்குகின்றது. மேலும் இந்த ரகம் நல்ல, உப்புகளற்ற நிலங்களிலும் நன்கு வளரக்கூடியது.

    குறுவை பருவத்திற்கு ஏற்ற இந்த ரகமானது 110 முதல் 115 நாள் வயதுடையது ஆகும். இது உவர் தன்மையை தாங்கி வளரக்கூடிய கூடிய திருச்சி- 2 நெல் ரகத்திலிருந்து திடீர் மாற்ற இனப்பெருக்க முறைகளின் வாயிலாக உருவாக்கப்பட்ட ஒரு ரகமாகும்.

    இது ஒரு எக்டருக்கு 5,100 கிலோ மகசூல் தரும். இந்த ரகம் திருச்சி- 2 நெல் ரகத்தைக் காட்டிலும் 12.64 சதவீதம் அதிக மகசூல் தரக்கூடியதாக விளங்குகின்றது. மேலும் இந்த ரகம் குலை நோய், பழுப்பு நிற, இலைப்புள்ளி நோய் போன்ற நோய்களுக்கும், பச்சை நிற தத்துப்பூச்சி, பழுப்பு நிற தத்துப்பூச்சி, வெள்ளை முதுகு தத்துப்பூச்சி போன்ற பூச்சிகளுக்கும் எதிர்ப்பு தன்மை வாய்ந்ததாக விளங்குகிறது.

    இந்த ரகமானது நீண்ட, சன்ன, ஒட்டாத, குழையாத, நல்ல மனம் உடைய அரிசியை கொண்டதாகவும் விளங்குகிறது. ஆகவே திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி மற்றும் முத்துப்பேட்டை வட்டாரங்கள் உள்பட அனைத்து வட்டார களர் மற்றும் உவர் நில விவசாயிகள் அனைவரும், திருச்சி- 5 நெல் ரகத்தினை சாகுபடி செய்து பயன்பெற வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • திருவாரூரில் ஒரே நாளில் ரூ.2 கோடிக்கு பருத்தி ஏலம் போனது.
    • நன்கு காயவைத்து கொண்டு வந்தால் 30 சதவீதம் வரை கூடுதலாக லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

    திருவாரூர்

    திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிப்பதாவது:-

    திருவாரூா் மாவட்டத்தை பொருத்தவரையில் திருவாரூர், மன்னார்குடி, வலங்கைமான், மூங்கில்குடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விவசாயிகள் பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளனா்.

    திருவாரூரில் 3 முறை பருத்தி ஏலம் நடந்துள்ளது. முதல் ஏலத்தின் போது சுமார் ரூ.54 லட்சம் மதிப்பிலும், 2-வது ஏலத்தில் ரூ.1 கோடியே 52 லட்சத்து 87 ஆயிரத்து 514 மதிப்பிலும், நேற்று முன்தினம் நடந்த ஏலத்தில் ஒரே நாளில் ரூ.2 கோடியே 3 லட்சத்திற்கு ஏலம் போனது.

    அதிகபட்ச விலை நேற்று முன்தினம் நடந்த ஏலத்தில் அதிபட்சமாக குவிண்டால் ரூ.6 ஆயிரத்து 899-க்கும், சராசரியாக ரூ.6 ஆயிரத்து 355-க்கும் ஏலம் போனது. திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை ரூ.4.05 கோடிக்கு பருத்தி ஏலம் விடப்பட்டுள்ளது. பருத்தியை விவசாயிகள் ஈரப்பதமாக கொண்டு வருவதால் குறைந்த விலைக்கே வியாபாரிகள் ஏலம் எடுக்கின்றனர்.

    அதே நிலையில் பருத்தியை நன்கு காயவைத்து ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கொண்டு வந்தால் 30 சதவீதம் வரை கூடுதலாக லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. எனவே விவசாயிகள் பருத்தியை காய வைத்து கொண்டு வந்தால் அதிக விலைக்கு கொள்முதல் செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பயணிகள் தங்கும் குடில்கள், காட்டை ரசிக்கும் டவர் ஆகிய பகுதியை ஆய்வு செய்தார்.
    • டிக்கெட் கவுண்டர் அமைப்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தார்.

    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பகுதியில் உள்ள அலையாத்தி காட்டில் சுற்றுலா துறை சார்பில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளவதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுலா மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.4 கோடி நிதி ஒதுக்கீடு செய்தார். அதற்கான பணிகள் விரைவில் தொடங்க இருக்கிறது. அந்த பணிகளை எவ்வாறு மேற்கொள்வது? என ஆய்வு செய்வதற்காக அமைச்சர் ராமச்சந்திரன் அலையாத்தி காட்டில் நேரில் ஆய்வு செய்தார். முன்னதாக, முத்துப்பேட்டைக்கு வந்த அமைச்சரை தி.மு.க. ஒன்றிய செயலாளர் மனோகரன், நகர செயலாளர் கார்த்திக் ஆகியோர் வரவேற்றனர்.

    பின்னர் அமைச்சர் ராமச்சந்திரன் ஜாம்புவானோடை படகு துறைக்கு வந்து அங்கிருந்து வனத்துறை படகு மூலம் கோரையாறு வழியாக அலையாத்திகாட்டிற்கு சென்று பார்வையிட்டார். பின்னர் காட்டின் உள்ளே இருக்கும் நடைபாதைகள், சுற்றுலா பயணிகள் தங்கும் குடில்கள், காட்டை ரசிக்கும் டவர் ஆகிய பகுதியை ஆய்வு செய்தார்.

    காட்டிலிருந்து திரும்பிய அமைச்சர் படகுத்துறையில் கூடுதல் படகுகள் விடுவது, சுற்றுலா பயணிகள் காத்திருக்கும் வகையில் வசதிகள் மேற்கொள்வது, வாகனங்கள் நிறுத்துமிடம் அமைப்பது, கழிப்பிடம், குடிநீர் வசதி போன்ற வசதிகளை மேற்கொள்வது, டிக்கெட் கவுண்டர் அமைப்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தார்.

    ஆய்வின்போது, சுற்றுலா துறை செயலாளர் சந்தீப் நந்தூரி, மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ, வன அலுவலர் ஸ்ரீகாந்த், செல்வராஜ் எம்.பி., மாரிமுத்து எம்.எல்.ஏ., மன்னார்குடி ஆர்.டி.ஓ. கீர்த்தனா மணி, தாசில்தார் மகேஷ் குமார், வன அலுவலர் ஜனனி, மாவட்ட கவுன்சிலர் அமுதா மனோகரன், முன்னாள் பேரூராட்சி தலைவர் கார்த்திக், ஒன்றிய கவுன்சிலர் ஜாம்பை கல்யாணம், ஊராட்சி தலைவர் லதா பாலமுருகன், துணைத்தலைவர் ராமஜெயம் மற்றும் வருவாய் துறையினர், வனத்துறையினர் உடன் இருந்தனர்.

    • இ-சேவை மையம் இல்லாத பகுதிகளில் இ-சேவை மையங்கள் நிறுவி செயல்படுத்த தொடங்கப்பட்டுள்ளது.
    • மக்கள் காத்திருக்கும் நேரத்தை குறைத்து மக்களுக்கு சிறந்த மற்றும் நேர்த்தியான சேவையை வழங்குவதாகும்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் அனைத்து குடிமக்களும் இ-சேவை மையம் தொடங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    இத்திட்டமானது படித்த இளைஞர்களையும், தொழில் முனைவோர்களையும் ஊக்குவிக்கும் வகையில் இ-சேவை மையம் இல்லாத பகுதிகளில் இ-சேவை மையங்கள் நிறுவி செயல்படுத்த தொடங்கப்பட்டுள்ளது.

    இதன் நோக்கமானது இ-சேவை மையங்களின் எண்ணிக்கையை அதிகரித்து அங்கு மக்கள் காத்திருக்கும் நேரத்தை குறைத்து மக்களுக்கு சிறந்த மற்றும் நேர்த்தியான சேவையை வழங்குவதாகும்.

    இத்திட்டத்தில் விண்ணப்பங்களை பதிவு செய்ய https://tnesevai.tn.gov.in (அல்லது) https://tnega.tn.gov.in என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி வருகிற 30-ந் தேதி இரவு 8 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

    கிராமப்புறங்களில் இ-சேவை மையம் செயல்படுத்துவதற்கான விண்ணப்ப கட்டணம் ரூ.3 ஆயிரம் மற்றும் நகர்புறத்திற்கான கட்டணம் ரூ.6 ஆயிரம் ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.

    விண்ணப்ப தாரர்களுக்குரிய பயனர் மற்றும் கடவுச்சொல் (User Id & Password) விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்டுள்ள எண்ணுக்கு மின்னஞ்சல் வழியாக வழங்கப்படும்.

    மேலும், அருகில் உள்ள இ-சேவை மையங்களின் தகவல்களை 'முகவரி' ஆண்ட்ராய்டு மொபைல் செயலியை பயன்படுத்தி காணலாம் (அல்லது) https://.tnega.tn.gov.in என்ற இணை யதளத்தில் காணலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு புத்தகப்பை, வினா-விடை புத்தகங்கள் வழங்கப்பட்டது.
    • ஒழுக்கமான கல்வி ஒன்றே உங்களை உயர்ந்த நிலைக்கு அழைத்து செல்லும்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு புத்தகப்பை வினா-விடை புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடை பெற்றது.

    நிகழ்ச்சிக்கு பொறுப்பு தலைமை ஆசிரியர் பாலமுருகன் தலைமை தாங்கினார்.

    பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் அன்பரசன், ஆசிரியர் சங்க செயலாளர் முகமது ரபீக், ஆசிரியர்கள் சக்கரபாணி, நடராஜன், செல்வம், அன்புமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முன்னதாக ஆசிரியர் பாஸ்கரன் அனைவரையும் வரவேற்றார்.

    பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பழனிச்சாமி கலந்து கொண்டு புத்தகப்பை மற்றும் தமிழ் ஆசிரியர்களான பாஸ்கரன் மற்றும் சிவராமன் ஆகியோர் தயாரித்த வினா-விடை புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்கினார்.

    பின்னர் அவர் பேசுகையில்:-

    பல பெரிய மனிதர்களை உருவாக்கிய நூற்றாண்டு பாரம்பரியம் மிக்க பள்ளியில் படிக்கிறீர்கள் என்று பெரு மிதம் அடைய வேண்டும். ஒழுக்கமான கல்வி ஒன்றே உங்களை உயர்ந்த நிலைக்கு அழைத்து செல்லும்.

    நன்றாக படித்து நல்ல மதிப்பெண்கள் எடுப்பதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்பட வேண்டும் என்றார்.

    இதில் ஆசிரியர்கள் தமிழ்ச்செல்வி, மீனாட்சி சுந்தரம், விஜயகுமார், ஆடின் மெடோனா, பிரபாகரன், உமா மகேஸ்வரி, வெற்றி ச்செல்வி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் ஆசிரியர் சிவராமன் நன்றி கூறினார்.

    • பாஜக கடந்த 10 ஆண்டுகளாக பரப்பி வரும் சர்வாதிகார காட்டுத்தீயை அணைக்க வேண்டும்.
    • பாட்னாவில் நடைபெறும் கூட்டத்தில் கலைஞரின் தளபதியாக நானும் பங்கெடுக்க இருக்கிறேன்.

    திருவாரூர் மாவட்டம் காட்டூரில் கலைஞர் கோட்டத்தை திறந்து வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    கலைஞர் கோட்டத்தை திறந்து வைப்பதற்காக பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் வருவதாக இருந்தது. ஆனால் அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்ட காரணத்தினால் வர இயலவில்லை. நிகழ்ச்சிக்கு வர முடியாமல் போனதற்கு வருத்தம் தெரிவித்தார். பீகார் மாநில துணை முதலமைச்சர் தேஜஸ்வி வந்திருக்கிறார். அவருக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவிக்கிறேன்.

    திராவிட கட்டட கலையுடன் நவீன வசதிகளோடு கலைஞர் கோட்டம் அமைக்கப்பட்டுள்ளது.சென்னை முதல் கன்னியாகுமரி வரை அனைத்து ஊர்களுக்கும் திட்டங்களை செயல்படுத்தியவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி. கருணாநிதியை நாடு போற்றும் தலைவராக்கிய ஊர் திருவாரூர்.

    அண்ணாவை, கருணாநிதி முதன்முறையாக சந்தித்தது திருவாரூரில்தான். என் தந்தைக்கு, என் தாய் எழுப்பிய அன்புக் கோட்டையாக கலைஞர் கோட்டத்தை கருதுகிறேன். கலைஞர் கோட்டம் என்பது அவரது பரிணாமங்களை சொல்லும் கருவூலம்.

    பாஜக கடந்த 10 ஆண்டுகளாக பரப்பி வரும் சர்வாதிகார காட்டுத்தீயை அணைக்க வேண்டிய கடமை நமக்கெல்லாம் இருக்கிறது. அதற்கான முதல் ஜனநாயக விளக்கை பாட்னாவில் நிதிஷ் குமார் அவர்கள் தொடங்கி வைக்க இருக்கிறார்கள். நானும் பாட்னா செல்கிறேன். ஜனநாயக போர்க்களத்தில் கலைஞரின் தளபதியாக நானும் பங்கெடுக்க இருக்கிறேன்.

    இந்திய ஜனநாயகத்தை காக்கவேண்டிய நெருக்கடியான காலத்தில் நாம் இருக்கிறோம். இதை செய்யாவிட்டால் தமிழ்நாடு என்ற மாநிலமே இல்லாமல் போய்விடும்.

    பாஜகவை மீண்டும் ஆள அனுமதிப்பது தமிழுக்கும் தமிழ்நாட்டிற்கும், தமிழ் இனத்திற்கும் இந்திய நாட்டிற்கும், இந்தியாவின எதிர்காலத்திற்கும் கேடாக முடியும். வெற்றி வேண்டும். மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் எப்படி ஒருமுகமாக இருந்து செயல்படுகிறோமோ, செயல்பட்டு வெற்றியை பெறுகிறோமோ, அத்தகைய செயல்பாடும் ஒருங்கிணைப்பும் இந்திய அளவில் ஏற்பட்டாகவேண்டும்.

    வெற்றி வேண்டும். வெற்றிக்கு முன்னால் ஒற்றுமை வேண்டும். அதனுடைய முன்னோட்டமாகத்தான் பீகாரில் நடைபெற உள்ள கூட்டம் அமையவிருக்கிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கலைஞர் கோட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
    • நிகழ்ச்சியில் பீகார் துணை முதல்-மந்திரி தேஜஸ்வி யாதவ் பங்கேற்றுள்ளார்.

    மறைந்த தி.மு.க. தலைவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி திருவாரூர் மாவட்டம் காட்டூரில் தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் கலைஞர் கோட்டம் கட்டப்பட்டுள்ளது.

    தேர் போன்ற வடிவில் அமைக்கப்பட்டுள்ள கோட்டம் 7 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் பிரமாண்டமாக உள்ளது.

    இதற்காக ரூ.12 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. கருணாநிதியின் பொது வாழ்வை சித்தரிக்கும் அருங்காட்சியகம், நூலகம், திருமண மண்டபங்கள் ஆகியவையும் இதில் அமைக்கப்பட்டுள்ளது.

    இதன் திறப்பு விழாவை சிறப்பாக நடத்துவதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாட்களுக்கு முன்பே திருவாரூர் வந்து விட்டார். நேற்று விழா ஏற்பாடுகளை கவனித்தார். இன்று காலையிலும் கலைஞர் கோட்டம் நிகழ்ச்சியை காண வந்திருந்தார்.

    காலை 10 மணிக்கு திறப்பு விழா நிகழ்ச்சி மங்கள இசையுடன் கோலாகலமாக தொடங்கியது. முதலில் கவிஞர் வைரமுத்து தலைமையில் கவியரங்கம் நடைபெற்றது. இதில் கபிலன், பா.விஜய், ஆண்டாள் பிரியதர்ஷினி, தஞ்சை இனியன் ஆகியோர் கவிதை வாசித்து சொற்பொழிவு நிகழ்த்தினார்கள்.

    இதன் பிறகு சாலமன் பாப்பையா தலைமையில் பட்டிமன்றம் நடைபெற்றது. நிகழ்ச்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குடும்பத்தினருடன் வந்து பார்த்து ரசித்தார். அவருடன் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் தலைமைக் கழக நிர்வாகிகள், வாரியத் தலைவர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள் அமர்ந்து பார்வையிட்டனர்.

    காலை நிகழ்ச்சிகள் முடிந்ததும் உணவு இடைவேளைக்கு பிறகு கலைஞர் கோட்டம் திறப்பு விழா நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கியது.

    கலைஞர் கோட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பீகார் துணை முதல்-மந்திரி தேஜஸ்வி யாதவ் பங்கேற்றுள்ளார்.

    நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு முழுவதிலும் இருந்து தி.மு.க.வின் முக்கிய பிரமுகர்கள் அனைவரும் திருவாரூர் வந்துள்ளனர். விழா நடைபெறும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பும் அதிக அளவில் போடப்பட்டு உள்ளது.

    • காவிரி டெல்டா மாவட்டங்களான மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள தூர்வாரும் பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
    • ஒடம்போக்கியாற்றில் 126.100 முதல் 129.800 கிலோ மீட்டர் வரை ஆகாயத்தாமரைகள் படர்ந்துள்ளது.

    திருவாரூர்:

    தமிழ்நாடு முதலமைச்சர் தொலைநோக்கு பார்வையோடு, நிகர சாகுபடி பரப்பினை உயர்த்தவும், நீர் ஆதாரங்களை சிறந்த முறையில் மேம்படுத்தவும், கால்வாய்கள், வாய்க்காய்கள், ஏரிகள் போன்றவற்றை புனரமைத்து பாதுகாக்கும் பணிகளை ஆண்டுதோறும் நேரில் ஆய்வு செய்து வருகிறார்.

    மேலும், காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயப் பெருமக்கள் கோரும் இடங்களில் தூர்வார ஆணையிட்டு, அப்பணிகள் நடைபெறும் இடங்களில் நேரில் ஆய்வு செய்தும் வருகிறார். அதன்படி, காவிரி டெல்டா மாவட்டங்களான திருச்சி, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள தூர்வாரும் பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

    காவிரி டெல்டா பகுதியின் கடைமடை பகுதிகளான திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் வெண்ணாறு உப வடிநிலப்பகுதி மற்றும் காவிரி உப வடிநிலப்பகுதி ஆகிய இரண்டு பெரிய உப வடிநில பகுதிகள் அமைந்துள்ளன.

    வெண்ணாறு உப வடிநிலப்பகுதியில் 25 ஆறுகள் மூலமாக 3,90,293 ஏக்கரும் காவிரி உப வடிநிலப்பகுதியில் 19 ஆறுகள் மூலமாக 1,18,362 ஏக்கரும் பாசனம் பெறுகின்றன.

    இந்த ஆறுகளிலும், வடிகால்களிலும் ஆகாய தாமரைகள் ஏராளமாக படர்ந்து வளர்வதால் பாசன நீர் செல்வதற்கும், மழை வெள்ள காலங்களில் வடிகால்களில் தண்ணீர் வடிவதற்கும் மிகுந்த தடை ஏற்படுகிறது.

    இதன் காரணமாக விவசாயம் பாதிக்கப்பட்டு மகசூல் குறைந்து விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்ப டுகிறது.

    நேற்று முதலமைச்சர் மு,க.ஸ்டாலின் காவிரி டெல்டா பகுதிகளில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்வதற்காக வந்த போது, விவசாய பெருமக்கள் நீர்நிலைகளில் உள்ள ஆகாயத் தாமரைகளை அகற்றிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

    அதன் அடிப்படையில், நீர்வளத்துறை வாயிலாக ஆறுகள், வாய்க்கால்கள் மற்றும் வடிகால்களில் படர்ந்துள்ள ஆகாயத்தா மரைகளை அகற்றும் பணிக்காக முதற்கட்டமாக, காவிரி டெல்டா பகுதியின் கடைமடை பகுதிகளான திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் உத்தரவிட்டார்.

    திருவாரூர் மாவட்டம், திருவாரூர் வட்டம், ஒடம்போக்கியாற்றில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் ஆகாயத்தாமரைகளை அகற்றும் பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ஒடம்போக்கியாறு திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் சுமார் 29,835 ஏக்கர் நிலங்களுக்கு பாசனமளிக்கிறது.

    ஒடம்போக்கியாறு அம்மையப்பன், விளமல், தன்டளை, விஜயபுரம், கள்ளிக்குடி, காணூர், நீலப்பாடி, கீவளுர், சிக்கல், நரியங்குடி ஆகிய ஊர்களின் வழியே சென்று இறுதியில் கடுவையாற்றில் கலந்து பின் கடலில் கலக்கிறது. ஒடம்போக்கியாற்றில் 126.100 முதல் 129.800 கிலோ மீட்டர் வரை ஆகாயத்தாமரைகள் படர்ந்துள்ளது.

    இதனால் பாசனத்திற்கு முறையாக தண்ணீர் செல்ல இயலாத நிலையும், மழைக்காலங்களில் வெள்ளநீர் தங்கு தடையின்றி செல்ல இயலாத நிலையும் உள்ளது. எனவே, இதனை அகற்றிட வேண்டி விவசாயிகள் கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் ஓடம்போக்கியாறற்றில்

    10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஆகாயத்தாமரைகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

    ×