search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "huts"

    • பயணிகள் தங்கும் குடில்கள், காட்டை ரசிக்கும் டவர் ஆகிய பகுதியை ஆய்வு செய்தார்.
    • டிக்கெட் கவுண்டர் அமைப்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தார்.

    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பகுதியில் உள்ள அலையாத்தி காட்டில் சுற்றுலா துறை சார்பில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளவதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுலா மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.4 கோடி நிதி ஒதுக்கீடு செய்தார். அதற்கான பணிகள் விரைவில் தொடங்க இருக்கிறது. அந்த பணிகளை எவ்வாறு மேற்கொள்வது? என ஆய்வு செய்வதற்காக அமைச்சர் ராமச்சந்திரன் அலையாத்தி காட்டில் நேரில் ஆய்வு செய்தார். முன்னதாக, முத்துப்பேட்டைக்கு வந்த அமைச்சரை தி.மு.க. ஒன்றிய செயலாளர் மனோகரன், நகர செயலாளர் கார்த்திக் ஆகியோர் வரவேற்றனர்.

    பின்னர் அமைச்சர் ராமச்சந்திரன் ஜாம்புவானோடை படகு துறைக்கு வந்து அங்கிருந்து வனத்துறை படகு மூலம் கோரையாறு வழியாக அலையாத்திகாட்டிற்கு சென்று பார்வையிட்டார். பின்னர் காட்டின் உள்ளே இருக்கும் நடைபாதைகள், சுற்றுலா பயணிகள் தங்கும் குடில்கள், காட்டை ரசிக்கும் டவர் ஆகிய பகுதியை ஆய்வு செய்தார்.

    காட்டிலிருந்து திரும்பிய அமைச்சர் படகுத்துறையில் கூடுதல் படகுகள் விடுவது, சுற்றுலா பயணிகள் காத்திருக்கும் வகையில் வசதிகள் மேற்கொள்வது, வாகனங்கள் நிறுத்துமிடம் அமைப்பது, கழிப்பிடம், குடிநீர் வசதி போன்ற வசதிகளை மேற்கொள்வது, டிக்கெட் கவுண்டர் அமைப்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தார்.

    ஆய்வின்போது, சுற்றுலா துறை செயலாளர் சந்தீப் நந்தூரி, மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ, வன அலுவலர் ஸ்ரீகாந்த், செல்வராஜ் எம்.பி., மாரிமுத்து எம்.எல்.ஏ., மன்னார்குடி ஆர்.டி.ஓ. கீர்த்தனா மணி, தாசில்தார் மகேஷ் குமார், வன அலுவலர் ஜனனி, மாவட்ட கவுன்சிலர் அமுதா மனோகரன், முன்னாள் பேரூராட்சி தலைவர் கார்த்திக், ஒன்றிய கவுன்சிலர் ஜாம்பை கல்யாணம், ஊராட்சி தலைவர் லதா பாலமுருகன், துணைத்தலைவர் ராமஜெயம் மற்றும் வருவாய் துறையினர், வனத்துறையினர் உடன் இருந்தனர்.

    பெரம்பலூர் அருகே குடிசை பகுதியில் நிகழ்ந்த தீ விபத்தில் குடிசைகள் எரிந்து நாசமாகின.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் அருகே உள்ள ஆலம்பாடி ஊராட்சி கிழக்குத்தெருவை சேர்ந்தவர்கள் தங்கவேல் (வயது 60), பிச்சை (50), இவரது தம்பி தனபால் (45), கணேசன் (57). இவர்களது குடிசைகள் அருகருகே உள்ளன. அதே தெருவில் சற்று தூரத்தில் ராஜமாணிக்கம் என்பவருக்கு சொந்தமான குடிசையில் செல்லம்மாள் (65) என்பவர் வசித்து வருகிறார். இவர்கள் அனைவரும் தொழிலாளர்கள்.

    நேற்று காலை திடீரென தங்கவேல் குடிசை தீப்பற்றி எரிந்தது. இதனைத்தொடர்ந்து அருகில் உள்ள 4 குடிசைகளும் தீப்பற்றி எரிய தொடங்கின. ஒரு குடிசையில் இருந்த சமையல் கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறியதால், செல்லம்மாள் குடிசைக்கும் பரவியது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் தீயை அணைக்க முயற்சித்தனர். தீ கட்டுக்குள் அடங்காமல் போனதால் இதுகுறித்து பெரம்பலூர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் பெரம்பலூர் மற்றும் வேப்பூர் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இதில் குடிசைகள் எரிந்து நாசமானது. ஆனால் 3 மணிநேரம் போராட்டத்திற்கு பின் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    தீ விபத்து நடந்த சமயத்தில் யாரும் வீட்டில் இல்லை. அனைவரும் வயல்காடுகளுக்கு கூலிவேலைக்கு சென்றுவிட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. தீ விபத்தில் ரூ.6 லட்சத்திற்கும் மேற்பட்ட வீட்டு உபயோக பொருட்கள் எரிந்து நாசமானது. இதுகுறித்து பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், வருவாய் துறையினர் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரண பொருட்களை வழங்கினர். 
    ×