என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருத்துறைப்பூண்டியில், போதை பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி
    X

    பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.

    திருத்துறைப்பூண்டியில், போதை பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி

    • திருத்துறைப்பூண்டி புதிய பஸ் நிலையத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • பொதுமக்களிடம் போதை பொருள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்ட மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில் போதை பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி திருத்துறைப்பூண்டி புதிய பஸ் நிலையத்தில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு கலால் உதவி ஆணையர் அழகிரிசாமி தலைமை தாங்கினார். உணவு பாதுகாப்பு அலுவலர் முதலியப்பன், மாவட்ட பேரிடர் ஆலோசனை குழு உறுப்பினர் செல்வகணபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முன்னதாக பாலம் சேவை நிறுவன செயலாளர் செந்தில்குமார் அனைவரையும் வரவேற்றார்.

    நிகழ்ச்சியில் நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கினார்.

    இதில் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன், அரசு கலைக்கல்லூரி பேராசிரியர் பன்னீர்செல்வம், டவுன் லயன்ஸ் சங்க தலைவர் சின்னதுரை, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி என்.எஸ்.எஸ். ஆசிரியர் சக்கரபாணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×