search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bookbag"

    • அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு புத்தகப்பை, வினா-விடை புத்தகங்கள் வழங்கப்பட்டது.
    • ஒழுக்கமான கல்வி ஒன்றே உங்களை உயர்ந்த நிலைக்கு அழைத்து செல்லும்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு புத்தகப்பை வினா-விடை புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடை பெற்றது.

    நிகழ்ச்சிக்கு பொறுப்பு தலைமை ஆசிரியர் பாலமுருகன் தலைமை தாங்கினார்.

    பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் அன்பரசன், ஆசிரியர் சங்க செயலாளர் முகமது ரபீக், ஆசிரியர்கள் சக்கரபாணி, நடராஜன், செல்வம், அன்புமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முன்னதாக ஆசிரியர் பாஸ்கரன் அனைவரையும் வரவேற்றார்.

    பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பழனிச்சாமி கலந்து கொண்டு புத்தகப்பை மற்றும் தமிழ் ஆசிரியர்களான பாஸ்கரன் மற்றும் சிவராமன் ஆகியோர் தயாரித்த வினா-விடை புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்கினார்.

    பின்னர் அவர் பேசுகையில்:-

    பல பெரிய மனிதர்களை உருவாக்கிய நூற்றாண்டு பாரம்பரியம் மிக்க பள்ளியில் படிக்கிறீர்கள் என்று பெரு மிதம் அடைய வேண்டும். ஒழுக்கமான கல்வி ஒன்றே உங்களை உயர்ந்த நிலைக்கு அழைத்து செல்லும்.

    நன்றாக படித்து நல்ல மதிப்பெண்கள் எடுப்பதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்பட வேண்டும் என்றார்.

    இதில் ஆசிரியர்கள் தமிழ்ச்செல்வி, மீனாட்சி சுந்தரம், விஜயகுமார், ஆடின் மெடோனா, பிரபாகரன், உமா மகேஸ்வரி, வெற்றி ச்செல்வி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் ஆசிரியர் சிவராமன் நன்றி கூறினார்.

    • திருப்பத்தூர் அரசு பள்ளியில் புத்தகப்பை இல்லா தினம் கடைபிடிக்கப்பட்டது.
    • தலைமை ஆசிரியர் மற்றும் வகுப்பாசிரியர்களின் சொந்த நிதியிலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு உணவு வழங்கினர்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் நகரில் உள்ள புதுப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் புத்தக பை இல்லா நாள் கொண்டாடப்பட்டது. மாணவ-மாணவிகளுக்கு பாடத்திட்டங்கள் குறித்த அச்சம் மற்றும் அதனால் ஏற்படும் மன அழுத்தம் முதலியவற்றை போக்கும் வகையில் புத்தகப்பை இல்லா நாளாக கடைபிடிக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் மாணவ-மாணவிகளுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் போன்ற புத்தகங்களை எளிமையோடு புரிந்து கொள்ளும் வகையில் செய்முறை பயிற்சி அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து சிலம்பாட்டம், குங்பூ போன்ற பல்வேறு விளையாட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. தலைமை ஆசிரியர் மற்றும் வகுப்பாசிரியர்களின் சொந்த நிதியிலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது. 

    ×