என் மலர்
திருநெல்வேலி
- தொல்லியல் துறை சார்பாக 2023-24 ஆண்டில் தமிழ்நாட்டில் 8 இடங்களில் அகழாய்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
- அதில் நெல்லை மாவட்டத்தில் உள்ள துலுக்கர்பட்டி கிராமமும் அடங்கும்.
வள்ளியூர்:
தொல்லியல் துறை சார்பாக 2023-24 ஆண்டில் தமிழ்நாட்டில் 8 இடங்களில் அகழாய்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அதில் நெல்லை மாவட் டத்தில் உள்ள துலுக்கர்பட்டி கிராமமும் அடங்கும். ராதாபுரம் தாலுகாவில் உள்ள துலுக்கர்பட்டி கிராமம் நம்பி ஆற்றின் தென் கரையில் அமைந்து ள்ளது. இந்த தொல்லியல் மேடானது விளாங் காடு என்றழைக்கப் படுகிறது. இவ்வாழ்வியல் மேடானது, சுமார் 2.5 மீ உயரம், 36 ஏக்கர் பரப்பளவில் விரிந்து காணப்படுகிறது.
கலெக்டர் தொடங்கி வைத்தார்
இந்த தொல்லியல் தளமானது சிவகளை, ஆதிச்ச நல்லூருக்கு சமகால கட்டமாகும். இங்கு 2-ம் கட்ட அகழாய்வு பணியினை மாவட்ட கலெக்டர் கார்த்தி கேயன் இன்று காலை தொடங்கி வைத்தார்.
சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மை செய லாளர் டாக்டர் சந்தர மோகன் மற்றும் தொல்லி யல் துறை ஆணையர் சிவானந்தம் வழிகாட்டு தலின்படி, அகழாய்வு இயக்குநர் வசந்தகுமார், அகழாய்வு இணை இயக்குனர் காளீஸ்வரன், தலைமை யில் அகழாய்வு பணி நடை பெற்றது.
நிகழ்ச்சியில் ஆனை குளம் ஒன்றிய வார்டு கவுன்சிலர் ரைகானா ஜாவித், பஞ்சாயத்து தலைவர் அசன், அரசு ஒப்பந்ததாரர் ஷேக், வார்டு உறுப்பினர்கள் மற்றும் கிராம மக்கள் பங்கேற்றனர். பின்னர் கலெக்டர் கார்த்தி கேயன் செய்தியா ளர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தின் அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கி வரலாற்றுக்கு முந்தைய காலம் முதல் வரலாற்று காலம் வரையிலான தொல்லியல் இடங்களில் அகழாய்வு செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி பண்டையத் தமிழ் சமூகத்தின் தொன்மை, பண்பாடு மற்றும் விழுமியங்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் இந்த ஆண்டு 8 இடங்களில் தொல்லியல் ஆய்வுகளை மேற்கொள்ள தமிழக அரசு திட்டமிட்டு பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டன.
தாமிரபரணி ஆற்றங்கரையில் வாழ்ந்த தமிழ் சமூகத்தினரின் மேம்பட்ட பண்பாடு 2,600 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று உறுதி செய்ய கூடுதல் சான்றுகளைத் தேடி அகழாய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு 11.2.2022 பொருநை ஆற்றின் ஈடாக நம்பியார் படுகையிலும் அகழாய்வுகள் மேற்கொள் ளப்பட்டு ள்ளன. 8 மாதங்கள் நடைபெற்ற இந்த அகழாய்வில் 17 குழிகள் அமைக்கப்பட்டு இதுவரை 109 தொல் பொ ருட்கள் கண்டெடுக்க ப்பட்டுள்ளது.
வெள்ளி முத்திரைக் காசுகள், செம்பிலான பொருட்கள், இரும்பில் ஆன பொருட்கள், சுடு மண்ணால் ஆன பொம்மை, சுடுமண்ணால் ஆன விளையாட்டு பொருட்கள், நீலக்கல் கண்ணாடி மணிகள், பளிங்கு கல்மணிகள் ஆகிய முக்கிய தொல்பொருட்கள் ஆகும். தமிழில் பொறிக்கப்பட்ட பானை ஓடுகளும் கண்டறியப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து 2-ம் கட்டமாக அகழாய்வு பணிகள் இன்று தொடங்கின.
இந்த அகழாய்வின் குறிக்கோள் செறிவுமிக்க இத்தொல்லியல் தளத்தின் உருவாக்கம், குடியேற்ற முறை மற்றும் தொல் பொருட்களின் தன்மை ஆகியவற்றை கண்டறிவது ஆகும். நம்பி ஆற்றங் கரையில் இரும்பு கால பண்பாட்டின் வேர்களைத் தேடுவதே இவ்அகழாய்வின் நோக்கமாகும்.
நம்பியாறு நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி இதே மாவட்டத்தில் ஆத்தங்கரை பள்ளிவாசலில் கடலில் கலக்கிறது. நெல்லை மாவட்டத்தின் நாங்குநேரி, ராதாபுரம் பகுதியில் சுமார் 45 கிலோமீட்டர் நீளமுடைய இந்த ஆற்றில் பழங்கா லத்தில் பல வரலாற்று சிறப்புமிக்க சிவன் கோவில்கள் இருந்ததாகவும், பண்டைய மக்களின் வாழ்வியல் இடமாக சிறந்ததாகவும், பண்பாட்டுக் கூறுகள் மூலம் கண்டறியப் பட்டுள்ளன.
இந்த நம்பியாறு படுகை பண்டைய தமிழர்களின் தொன்மையான நாகரீகத்தின் தொட்டில் ஆகவும், வியாபாரத் தளமாகவும், ஆன்மீக தலமாகவும் பல அரசர்கள் ஆட்சி செய்யும் இடமாகவும் திகழ்ந்துள்ளது. இதற்கு சான்றாக தான் இன்றும் இந்த பகுதியில் ராஜாக்கள் வாழ்ந்த இடம் ராஜாக்கமங்கலம் என்றும், தளபதிகள் வாழ்ந்த இடம் தளபதி சமுத்திரம் என்றும், இரணியன் என்ற அரசன் வாழ்ந்த இடம் இரணியன் குடியிருப்பு என்று பல தொல்லியல் சிறப்புடைய பகுதிகள் இங்கு அமைந்துள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
- நெல்லை புதிய பஸ் நிலையத்தில் சமீப காலமாக பயணிகளிடம் பிக்பாக்கெட், செல்போன் திருடி செல்வது, நூதன முறையில் நகை பறிப்பது போன்ற சம்பவங்கள் நடைபெற்றன.
- இதனை தடுக்கும் பொருட்டு புதிய பஸ் நிலையத்தில் போலீசார் தீவிர ரோந்து சுற்றி வருகின்றனர்.
நெல்லை:
நெல்லை புதிய பஸ் நிலையத்தில் சமீப காலமாக பயணிகளிடம் பிக்பாக்கெட், செல்போன் திருடி செல்வது, நூதன முறையில் நகை பறிப்பது போன்ற சம்பவங்கள் நடைபெற்றன.
போலீசார் ரோந்து
இதனை தடுக்கும் பொருட்டு புதிய பஸ் நிலை யத்தில் போலீசார் தீவிர ரோந்து சுற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்த வியாபாரி கண்ணன் என்பவரிடம் இருந்து 2 பேர் ரூ.300 பிக்பாக்கெட் அடித்த னர். அப்போது அங்கு ரோந்து சென்ற போலீசார் பிக்பாக்கெட் அடித்த 2 பேரையும் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
போலீசார் நடத்திய விசா ரணையில் அவர்கள் மேலப் பாளையம் குறிச்சியை சேர்ந்த சக்தி வேல் (வயது57), கல்லிடைக் குறிச்சியை சேர்ந்த அருள் துரை (33) என்பது தெரிய வந்தது.
இவர்கள் இதற்கு முன்பு வேறு பயணிகளிடம் கைவரிசை காட்டி னார்களா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- களக்காடு வரதராஜபெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவ திருவிழா கடந்த 27-ந்தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.
- திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்ட விழா 10-ம் நாளான நேற்று நடந்தது.
களக்காடு:
களக்காடு வரதராஜபெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவ திருவிழா கடந்த 27-ந்தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. இதையொட்டி தினமும் காலையில் சிறப்பு திருமஞ்சனமும், இரவில் பெருமாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வருதலும் நடந்து வருகிறது. திருவிழாவின் 5-ம் நாளன்று கருட சேவையும், 7-ம் திருநாளன்று வரதராஜபெருமாள் திருக்கல்யாண வைபவமும் நடைபெற்றது. 8-ம் நாளான கடந்த 3-ந்தேதி பெருமாள் குதிரை வாகனத்தில் பவனி வந்தார். திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்ட விழா 10-ம் நாளான நேற்று நடந்தது. இதையொட்டி பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் தேவியர்களுடன் திருத்தேருக்கு எழுந்தருளினார். அதன் பின் மாலையில் திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது.
விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர். ரதவீதிகளை சுற்றி வந்து, இரவில் திருத்தேர் நிலையை வந்தடைந்தது. களக்காடு இன்ஸ்பெக்டர் ஜோசப்ஜெட்சன் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் இசக்கி மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பின்னர் வரதராஜபெருமாள் தேர் தடம் பார்க்கும் நிகழ்ச்சி இடம்பெற்றது. 11-ம் நாளான இன்று தீர்த்தவாரி நடக்கிறது.
- தி.மு.க. தலைமைச் செயற்குழு உறுப்பினரான வக்கீல் பிரபாகரன் தலைமையில் வனத்துறை அமைச்சர் மதிவேந்தனை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
- மணிமுத்தாறு மலைப்பகுதிக்கு அங்கு வசிக்கும் பொதுமக்கள் மற்றும் தோட்டத் தொழிலாளர்கள் இடையூறு இன்றி செல்ல வனத்துறை அனுமதி அளிக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.
நெல்லை:
முன்னாள் சபாநாயகரும், நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான ஆவுடையப்பன் அறிவுறுத்தலின்படி, தி.மு.க. தலைமைச் செயற்குழு உறுப்பினரான வக்கீல் பிரபாகரன் தலைமையில் வனத்துறை அமைச்சர் மதிவேந்தனை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
கோரிக்கை
அதில், மணிமுத்தாறு மலைப்பகுதிக்கு அங்கு வசிக்கும் பொதுமக்கள் மற்றும் தோட்டத் தொழிலாளர்கள் இடையூறு இன்றி செல்ல வனத்துறை அனுமதி அளிக்க வேண்டும். மணிமுத்தாறு பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட மலைப்பகுதிகளில் வனத்துறை மூலம் செய்ய வேண்டிய பணிகளை நிறை வேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
சந்திப்பின் போது பேரூர் தி.மு.க செயலாளர், முத்துகணேசன், மணிமுத்தாறு பேரூராட்சி தலைவர் அந்தோனி யம்மாள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
- வள்ளியூர் அருகே உள்ள கண்ணனூர் கிராமம் நம்பி ஆற்றின் கரையில் அய்யப்பனின் அவதாரம் என்று அழைக்கப்படும் சித்தூர் தென்கரை மகா ராசேசுவரர் கோவில் உள்ளது.
- இந்த கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 28-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
வள்ளியூர்:
வள்ளியூர் அருகே உள்ள கண்ணனூர் கிராமம் நம்பி ஆற்றின் கரையில் அய்யப்பனின் அவதாரம் என்று அழைக்கப்படும் சித்தூர் தென்கரை மகா ராசேசுவரர் கோவில் உள்ளது.
இந்த கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 28-ந்தேதி கொடி யேற்றத்து டன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 9-ம் திருவிழா வான நேற்று தேரோட்டம் நடைபெற்றது. மகாராசேசு வரர் சுவாமி தேரில் எழுந் தருளினார். பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர். இதில் தென் மாவட்டங்கள் மட்டுமின்றி கேரளாவை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தேரோட்டத்தை தொடர்ந்து வில்வனம்பு தூர், கண்ண நல்லூர், தங்கையம், இளங்குளம் தலைவர்மார் சமுதாயத்தின் குதிரை ஓட்டமும் நடைபெற்றது. பகல் 12 மணிக்கு கும்பாபி ஷேகம் மற்றும் ஆராதனை களும், இரவு சுவாமி புலி வாகனத்தில் திருவீதி உலாவும் நடைபெற்றது.
இன்று இரவு சுவாமி ரிஷப வாகனத்தில் திருவீதி உலாவும், 7-ந்தேதி மஞ்சள் நீராட்டு விழாவுடன், இரவு கொடியிறக்கம் நடைபெறும்.
திருவிழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் ஆய்வாளர் கோபாலன், தக்கார் லதா, செயல் அலுவலர் பொன்னி மற்றும் கண்ணநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் மகா ராசன்செய்துள்ளனர்.
வள்ளியூர் டி.எஸ்.பி. யோகேஸ்குமார், இன்ஸ் பெக்டர் சாகுல் ஹமீது பாதுகாப்பு பணிகளை ஏற்பாடு செய்திருந்தனர்.
- அம்பை உட்கோட்ட போலீஸ் சரகத்தில் விசாரணைக்கு வந்தவர்களின் பற்களை பிடுங்கிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
- போலீசார் கடந்த மாதம் 10, 11 மற்றும் 12-ந்தேதிகளில் சி.சி.டி.வி. கேமராவில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக வீடியோ காட்சிகள் பதிவாகவில்லை என கூறியதாக தெரிகிறது.
நெல்லை:
நெல்லை மாவட்டம் அம்பை உட்கோட்ட போலீஸ் சரகத்தில் விசாரணைக்கு வந்தவர்களின் பற்களை பிடுங்கிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக சேரன்மகா தேவி சப்-கலெக்டர் முகமது சபீர் ஆலம் விசாரணை நடத்தி வருகிறார். சப்-கலெக்டர் அலுவலகத்தில். பாதிக்கப்பட்டவர்களில் 13 பேர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர். மேலும் கல்லிடைக்குறிச்சி சப்-இன்ஸ்பெக்டர் ஆபிரகாம் ஜோசப், தலைமை காவலர் மற்றும் 2 போலீசார் ஆஜராகி போலீஸ் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட சி.சி.டி.வி. காட்சிகள் உள்ளிட்ட ஆவணங்களை சப்-கலெக்டர் முகமது சபீர் ஆலமிடம் ஒப்படைத்தனர். இந்த விசாரணை வருகிற 10-ந்தேதி வரை நடைபெறுகிறது.
இந்த சம்பவத்தில் நெல்லை மாவட்ட போலீசார் பலர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அம்பை உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர் சிங் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். மேலும் தனிப்பிரிவு காவலர்கள் ராஜ்குமார், போகன் ஆயுதப்படைக்கும், நெல்லை மாவட்ட உளவுப்பிரிவு இன்ஸ்பெக்டர் கோமதி, அம்பை சரக உளவுப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் மகாராஜன் ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
மேலும் கல்லிடைக்குறிச்சி இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி, அம்பை இன்ஸ்பெக்டர் சந்திரமோகன், விக்கிரமசிங்கபுரம் இன்ஸ்பெக்டர் பெருமாள், அம்பை சரக தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சக்திநடராஜன், தனிப்பிரிவு தலைமை காவலர் சந்தானகுமார், கூடுதல் தனிப்பிரிவு காவலர் மணிகண்டன் ஆகியோர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டனர்.
இந்நிலையில் சப்-கலெக்டர் முகமது சபீர் ஆலம் நேற்று முன்தினம் கல்லிடைக்குறிச்சி, வி.கே.புரம், அம்பை போலீஸ் நிலையங்களில் ஆய்வு செய்தார். அவர் அம்பை போலீஸ் நிலையத்தில் ஆய்வு செய்தபோது அங்குள்ள சி.சி.டி.வி. காட்சிகளை கேட்டார். அதற்கு அங்குள்ள போலீசார் கடந்த மாதம் 10, 11 மற்றும் 12-ந்தேதிகளில் சி.சி.டி.வி. கேமராவில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக வீடியோ காட்சிகள் பதிவாகவில்லை என கூறியதாக தெரிகிறது.
கடந்த மாதம் 10-ந்தேதி தான் பாதிக்கப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதைத்தொடர்ந்து சம்பவத்தன்று சி.சி.டி.வி. காட்சிகள் எதனால் பதிவாகவில்லை என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
- தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணனுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது.
- மேலும் 6 போலீசாரை இடமாற்றம் செய்து நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவேஷ் குமார் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் அம்பை சரக பகுதியில் குற்ற வழக்குகள் தொடர்பாக விசாரணைக்காக சென்றவர்களின் பற்கள் பிடுங்கியதாக புகார் எழுந்தது.
இந்த சம்பவம் நாளுக்குநாள் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இதுதொடர்பான வீடியோ காட்சிகளும் சமூக வலைதளத்தில் பரவி வைரல் ஆனது.
இதைத் தொடர்ந்து அம்பை உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர் சிங் சஸ்பெண்டு செய்யப்பட்டார். இதுதொடர்பாக சேரன்மகாதேவி சப்-கலெக்டர் முகம்மது ஷபீர் ஆலம் பல்வேறு கட்டமாக விசாரணை நடத்தி வருகிறார். மனித உரிமைகள் ஆணையமும் இந்த சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது.
இதனிடையே கல்லிடைக்குறிச்சி தனிப்பிரிவு காவலர் ராஜ்குமார், விக்கிரமசிங்கபுரம் தனிப்பிரிவு காவலர் போகன் ஆகியோரை கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆயுதப்படைக்கு மாற்றினார்.
மேலும் நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணனும் இடமாற்றம் செய்யப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர். இதனால் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணனுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக நேற்று போலீஸ் நிலையங்களில் நடக்கும் சம்பவங்களை உயர் அதிகாரிகளுக்கு உரிய தகவல் தெரிவிக்கவில்லை எனக்கூறி நெல்லை மாவட்ட உளவுப்பிரிவு இன்ஸ்பெக்டர் கோமதி, சப்-இன்ஸ்பெக்டர் மகாராஜன் ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில் விசாரணை கைதிகளின் பற்கள் உடைக்கப்பட்ட புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட அம்பை, வீ.கே.புரம், கல்லிடைக்குறிச்சி போலீஸ் நிலையங்களில் நேற்று மாலை சப்-கலெக்டர் முகம்மது ஷபீர் ஆலம் விசாரணை நடத்தினார். மேலும் அங்குள்ள சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை உடனடியாக ஒப்படைக்கவும் போலீசாருக்கு உத்தரவிட்டார்.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக மேலும் 6 போலீசாரை இடமாற்றம் செய்து நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவேஷ் குமார் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி அம்பை இன்ஸ்பெக்டர் சந்திர மோகன், கல்லிடைக்குறிச்சி இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி, வீ.கே.புரம் இன்ஸ்பெக்டர் பெருமாள், அம்பை உட்கோட்ட தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் சக்தி நடராஜன்1, அம்பை தனிப்படை காவலர்கள் மணிகண்டன் மற்றும் சந்தன குமார் ஆகிய 6 பேர் மாற்றப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சப்-கலெக்டர் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், மேலும் சில போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்படுகிறது.
- பங்குனி பிரமோற்சவ விழா கடந்த 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- தேரோட்டத்தையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப் பட்டது
நெல்லை:
இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பாளை ராஜ கோபாலசுவாமி கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. சிறப்பு வாய்ந்த இக்கோவிலில் பங்குனி பிரமோற்சவ விழா கடந்த 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
தேரோட்டம்
ஸ்ரீ ருக்மணி, சத்தியபாமா சமேத ராஜகோபாலசுவாமி நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்தார். விழாவில் 10- ம் திருநாளான இன்று தேர் திருவிழா நடைபெற்றது.
இதற்காக காலை 7 மணிக்கு ஸ்ரீ ருக்மணி, சத்தியபாமா சமேத ராஜகோபாலசுவாமி தேருக்கு எழுந்தருளினார். 4 ஆயிர திவ்ய பிரபந்தத்தில் பெரிய திருமொழி பிரபந்த குழுவினரால் அருளப் பாடல் நடைபெற்றது. தொடர்ந்து பெருமாள் தாயாருக்கு கற்பூர ஆரத்தி காட்டப்பட்டது.
தொடர்ந்து நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் அப்துல் வகாப் எம்.எல்.ஏ., துணைமேயர் கே.ஆர்.ராஜூ ஆகியோர் தேரை வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.
கோவிந்தா... கோபாலா... கோஷம்
இதில் மத்திய மாவட்ட தி.மு.க. நிர்வாகி மிக்கேல் ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆயிரக்கணக்காக பக்தர்கள் கோவிந்தா... கோபாலா... என்ற கோஷங்களுடன் தேரை வடம்பிடித்து இழுத்தனர். தேர் 4 ரதவீதிகளை சுற்றி மீண்டும் நிலையை வந்தடைந்தது.
தேரோட்டத்தை யொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப் பட்டது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர், பக்தர்கள் செய்திருந்தனர்.
- சிஸ்கோ சிஸ்டம்ஸ் நிறுவனம் சார்பில் பெங்களூரில் மாநாடு நடை பெற்றது.
- கணினி அறிவியல் துறை தலைவர் அரவிந்த் சுவாமிநாதன், ‘இண்டஸ்ட்ரி ரெடி’ படிப்புகளை வழங்கியதற்காக விருது பெற்றார்
நெல்லை:
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான் ஜோசில் தலைமையிடமாக கொண்டு செயல்படும் சிஸ்கோ சிஸ்டம்ஸ் நிறுவனம் சர்வதேச அளவில் சிஸ்கோ நெட்வொர் க்கிங் அகாடமி தொழில் நுட்ப சேவையின் 25 ஆண்டை கொண்டாடுகிறது. அதன் ஒரு பகுதியாக பெங்களூரில் மாநாடு நடை பெற்றது. அதில் இந்தியாவில் சிஸ்கோ நெட்வொ ர்க்கிங் அகாடமி கல்வி திட்டத்தின் நிலையான வளர்ச்சிக்கு மதிப்புமிக்க மற்றும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கிய கல்வி நிறுவனத்தின் சிஸ்கோ பயிற்றுவிப்பாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
இதில் நெல்லை பிரான்சிஸ் சேவியர் என்ஜினீயரிங் கல்லூரியின் சார்பாக கணினி அறிவியல் துறை தலைவர் அரவிந்த் சுவாமிநாதன், 'இண்டஸ்ட்ரி ரெடி' படிப்புகளை வழங்கியதற்காக விருது பெற்றார். தமிழகத்தின் தென்மாவட்டத்திலேயே சிஸ்கோ விருதைப் பெற்ற ஒரே நிறுவனம் பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரி ஆகும்.
இந்த விருது பெற ஊக்கமளித்த பொதுமேலாளர்கள் ஜெயக்குமார், கிருஷ்ணகுமார், கல்லூரி முதல்வர் வேல்முருகன், விருது பெற்ற கணினி அறிவியல் துறை தலைவர் அரவிந்த் சுவாமிநாதன் மற்றும் பேராசிரியர்கள் ஆகியோரை ஸ்காட் கல்வி குழும நிறுவனர் கிளிட்டஸ் பாபு, நிர்வாக இயக்குநர் அருண்பாபு, தாளாளர் பிரியதர்ஷினி அருண்பாபு ஆகியோர் பாராட்டினர்.
- பொன்னையாவுக்கும், சுடலையாடும் பெருமாளுக்கும் சொத்து பிரிப்பதில் முன் விரோதம் இருந்து வருகிறது.
- ஆத்திரம் அடைந்த சுடலையாடும் பெருமாள், பொன்னையாவை கத்தியால் குத்தினார்.
களக்காடு:
நாங்குநேரி அருகே உள்ள ஏமன்குளம் புதுக்குளம், பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் பொன்னையா (வயது 65) விவசாயி . இவருக்கும் அவரது உறவினரான சுடலையாடும் பெருமாளுக்கும் சொத்து பிரிப்பதில் தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வருகிறது.
இந்நிலையில் நேற்று பொன்னையாவும், அவரது மகன் சரவணபெருமாளும் (40) புதுக்குளம் பெருமாள் கோவில் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த சுடலையாடும் பெரு மாளுக்கும், பொன்னை யாவுக்கும் தகராறு ஏற்பட்டது.
ஆத்திரம் அடைந்த சுடலையாடும் பெருமாள், பொன்னையாவை கத்தியால் குத்தினார்.
இதனை தடுக்க வந்த அவரது மகன் சரவண பெருமாளையும் கத்தியால் குத்தினார். இதனால் காயம் அடைந்த தந்தை, மகன் இருவரையும், அக்கம், பக்கத்தினர் மீட்டு, சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கிருந்து பொன்னையா மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இதுகுறித்து நாங்குநேரி போலீசில் புகார் செய் யப்பட்டது. இன்ஸ்பெக்டர் செல்வி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி இது தொடர்பாக சுடலையாடும் பெருமாளை தேடி வருகின்றார்.
- நெல்லை மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை 22 ஆயிரத்து 897 பேர் எழுதுகின்றனர்.
- தேர்வு எழுதும் 12 சிறை கைதிகளுக்கு ஜெயில் வளாகத்தில் தனி மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
நெல்லை:
தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. அரசு பொதுத்தேர்வு நாளை (புதன்கிழமை) தொடங்குகிறது.
91 மையங்கள்
நெல்லை மாவட்டத்தில் இந்த தேர்வை 11 ஆயிரத்து 2 மாணவர்கள், 11 ஆயிரத்து 895 மாணவிகள் என மொத்தம் 22 ஆயிரத்து 897 பேர் எழுதுகின்றனர். தேர்வு எழுதுவதற்காக மாவட்டம் முழுவதும் 91 மையங்கள் அமைக்கப் பட்டுள்ளது.
இதில் நெல்லை கல்வி மாவட்ட அளவில் 36 மையங்களும், சேரன்மகாதேவி கல்வி மாவட்டத்தில் 18 மையங்களிலும், வள்ளியூர் கல்வி மாவட்டத்தில் 37 மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. 5 தனித்தேர்வர் மையங்களும் அமைக்கப்பட்டுள்ளது.
பாளை மத்திய சிறையில் தேர்வு எழுதும் 12 சிறை கைதிகளுக்கு ஜெயில் வளாகத்தில் தனி மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருப்பதி தலைமையில் கல்வி மாவட்ட அலுவலர்கள் செய்து வருகின்றனர்.
மேலும் தேர்வு நாளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டு தேர்வை சிறப்பாக நடத்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த 13-ந் தேதி தொடங்கிய பிளஸ் -2 தேர்வு முன்தினம் முடிவடைந்தது. பிளஸ்-1 தேர்வு இன்று முடிவடைந்தது.
- அரியநாயகிபுரத்தில் ஒரு வீட்டில் நல்ல பாம்பு புகுந்தது.
- பிடிபட்ட நல்ல பாம்பு சுமார் 10 அடி நீளம் இருந்தது.
முக்கூடல்:
முக்கூடல் அருகே உள்ள அரியநாயகிபுரத்தில் ஒரு வீட்டில் நல்ல பாம்பு புகுந்தது. பாம்பு கிடப்பதை கண்ட வீட்டில் உள்ளவர்கள் பாம்பை பிடிப்பதற்காக வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.
அதன் பேரில் வனத்துறையை சேர்ந்த உச்சிமாகாளி விரைந்து சென்று வீட்டில் பதுங்கி இருந்த நல்ல பாம்பை பிடித்தார். அது சுமார் 10 அடி நீளம் உள்ளதாக இருந்தது. பாம்பு வீட்டுக்குள் வந்ததை கண்டு அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அந்த பாம்பை அடர்ந்த வனப்பகுதிக்குள் விட்டனர்.






