search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Panguni Chariot"

    • தேர் திருவிழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    குத்தாலம்:

    குத்தாலம் தாலுகா திருவாலங்காடு கிராமத்தில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான வண்டார் குழலி அம்பிகை சமேத வடாரண்யேசுர சாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் பங்குனி உத்திர பெருவிழா கடந்த 16-ந் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான 9-ம் நாள் தேர் திருவிழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது.

    திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவான தேசிக பரமாசாரிய சுவாமிகள் அருளாசியுடன் காலை 9 மணிக்கு கோவிலில் இருந்து சுவாமி, அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினர்.

    பின்னர் மகா தீபாராதனை செய்யப்பட்ட, திருவாவடுதுறை ஆதீன கட்டளை ஸ்ரீமத் வேலப்ப தம்பிரான் சுவாமிகள் தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார்.

    இதில் ஒன்றியக்குழு உறுப்பினர் ராஜவள்ளி பாலமுருகன் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். பின்னர் தேரானது நான்கு வீதிகளையும் வலம் வந்து மதியம் நிலையை அடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • களக்காடு வரதராஜபெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவ திருவிழா கடந்த 27-ந்தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.
    • திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்ட விழா 10-ம் நாளான நேற்று நடந்தது.

    களக்காடு:

    களக்காடு வரதராஜபெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவ திருவிழா கடந்த 27-ந்தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. இதையொட்டி தினமும் காலையில் சிறப்பு திருமஞ்சனமும், இரவில் பெருமாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வருதலும் நடந்து வருகிறது. திருவிழாவின் 5-ம் நாளன்று கருட சேவையும், 7-ம் திருநாளன்று வரதராஜபெருமாள் திருக்கல்யாண வைபவமும் நடைபெற்றது. 8-ம் நாளான கடந்த 3-ந்தேதி பெருமாள் குதிரை வாகனத்தில் பவனி வந்தார். திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்ட விழா 10-ம் நாளான நேற்று நடந்தது. இதையொட்டி பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் தேவியர்களுடன் திருத்தேருக்கு எழுந்தருளினார். அதன் பின் மாலையில் திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது.

    விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர். ரதவீதிகளை சுற்றி வந்து, இரவில் திருத்தேர் நிலையை வந்தடைந்தது. களக்காடு இன்ஸ்பெக்டர் ஜோசப்ஜெட்சன் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் இசக்கி மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பின்னர் வரதராஜபெருமாள் தேர் தடம் பார்க்கும் நிகழ்ச்சி இடம்பெற்றது. 11-ம் நாளான இன்று தீர்த்தவாரி நடக்கிறது.

    • சிறப்பு பூஜைகள் நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற 2 ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த விரிஞ்சிபுரம் மார்க்க பந்தீஸ்வரர் கோவில் உள்ளது.

    பங்குனி உத்திரத்தை முன்னிட்டு கொடியேற்றம் தொடங்கி பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம்.

    பிரம்மோற்சவத்தின் ஏழாவது நாள் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெறும்.

    இன்று காலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆரா தனைகள் செய்யப்பட்டு தேரோட்டம் நடந்தது. மார்க்கபந்தீஸ்வரர் திருத்தேரில் ஏற்றி பக்தர்கள் அரோகரா கோஷங்களுடன் வடம்பிடித்து மாட வீதியில் சுவாமி வலம் வந்தது.இரவு 8 மணி வரை தேரோட்டம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

    தேரோட்டத்தை ரத்தினகிரி பாலமுரு கனடிமை சுவாமிகள் சிறப்பு பூஜைகள் செய்து தொடங்கி வைத்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர்.

    இதில் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் அசோகன், அதிமுக புறநகர் மாவட்ட செயலாளர் வேலழகன் மற்றும் நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.

    ×