என் மலர்
திருநெல்வேலி
- சுகாதாரத்துறையினர் மற்றும் ஏர்வாடி போலீசார் கிருஷ்ணன் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.
- விசாரணைக்கு பின் கிருஷ்ணன் நாங்குநேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
களக்காடு:
நெல்லை மாவட்டம் ஏர்வாடி வடக்கு சேனையர் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது63). இவர் 8-ம் வகுப்பு வரை படித்துள்ளார். அதன்பின் பணகுடியில் உள்ள ஒரு மருந்து கடையில் வேலை பார்த்து வந்துள்ளார்.
அதனைதொடர்ந்து கிருஷ்ணன் வீட்டில் இருந்தபடி பொதுமக்களுக்கு ஆங்கில மருத்துவ சிகிச்சை அளித்து வந்துள்ளார். இதுகுறித்து சுகாதாரத்துறைக்கு புகார்கள் வந்தது. அதன்பேரில் திருக்குறுங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அதிகாரி பிரியதர்ஷினி ஏர்வாடி போலீசில் புகார் செய்தார்.
இதையடுத்து சுகாதாரத்துறையினர் மற்றும் ஏர்வாடி போலீசார் கிருஷ்ணன் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு ஏராளமான மாத்திரைகள், ஊசி மருந்துகள் இருப்பதும், அவர் அனுமதி இன்றி சட்ட விரோதமாக பொதுமக்களுக்கு ஆங்கில மருத்துவ சிசிச்சை அளித்ததும் தெரியவந்தது.
இதனைதொடர்ந்து கிருஷ்ணனை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து மருந்து, மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணைக்கு பின் அவர் நாங்குநேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
- முதலில் சப்-கலெக்டர் தலைமையில் விசாரணை நடைபெற்றது.
- பாதிக்கப்பட்டவர்கள் இன்று அம்பை தாலுகா அலுவலகத்திற்கு வந்து விளக்கம் அளித்தனர்.
அம்பை:
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் காவல் நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்ட விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கி சித்ரவதை செய்ததாக எழுந்த புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக அம்பாசமுத்திரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர் சிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார்.
இதுதொடர்பாக முதலில் சப்-கலெக்டர் தலைமையில் விசாரணை நடைபெற்றது. பின்னர், ஊரக வளர்ச்சித்துறை முதன்மை செயலாளர் அமுதாவை விசாரணை அதிகாரியாக நியமித்து அரசு உத்தரவிட்டது. அதன்படி விசாரணை அதிகாரி அமுதா விசாரணை நடத்தி வருகிறார். பாதிக்கப்பட்டவர்கள் இன்று அம்பை தாலுகா அலுவலகத்திற்கு வந்து அதிகாரி அமுதா முன்னிலையில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஏஎஸ்பி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
- மேலப்பாளையத்தில் திங்கட்கிழமை தோறும் மாட்டு சந்தை நடந்து வருகிறது.
- ஒவ்வொரு வாரமும் மேலப்பாளையம் சந்தையில் சுமார் ரூ. 2 கோடி வரை விற்பனை நடைபெறும்.
நெல்லை:
தென்மாவட்டங்களில் உள்ள பிரசித்தி பெற்ற கால்நடை சந்தைகளில் நெல்லை மேலப்பாளையம் கால்நடை சந்தையும் ஒன்றாகும். இங்கு ஆடுகளுடன், மாடு மற்றும் கருவாடு விற்பனை நடந்து வருகிறது. அந்த வகையில் வாரந்தோறும் தோறும் திங்கட்கிழமை மாட்டு சந்தையும், செவ்வாய் கிழமை தோறும் ஆட்டுச்சந்தையும் நடந்து வருகிறது.
மாடுகளுடன் குவிந்த வியாபாரிகள்
வழக்கமாக ஒவ்வொரு வாரமும் சுமார் ரூ. 2 கோடி வரை விற்பனையாகும். ரம்ஜான், பக்ரீத், தீபாவளி, கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகை நாட்களிலும், திருவிழா நாட்களிலும் விற்பனை மேலும் அதிகரித்து காணப்படும்.
இந்நிலையில் இன்னும் 4 நாட்களில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி இன்று மேலப்பாளையம் மாட்டு சந்தைக்கு ஏராளமான வாகனங்களில் ஆயிரக்க ணக்கான மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இதற்காக நேற்று இரவு முதலே பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மாடுகள் கொண்டு வரப்பட்டது. அவைகள் தரத்திற்கேற்ப விற்பனை செய்யப்பட்டது. இதற்காக இன்று 100-க்கணக்கான சில்லறை வியாபாரிகள் சந்தையில் திரண்டனர். மேலும் பொதுமக்களும் அதிகளவில் வந்திருந்தனர். இதனால் மேலப்பாளையம் சந்தை இன்று களைகட்டி காணப்பட்டது.
- மால்வின் நேற்று இரவு டிராக்டரில் உரம் ஏற்றி கொண்டு சென்று கொண்டிருந்தார்.
- ஆத்திரம் அடைந்த ஆல்வின், செல்வதாஸ் ஆகியோர் மால்வினை அவதூறாக பேசி தாக்கினர்.
களக்காடு:
களக்காடு கக்கன்நகர் நடுத்தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் மால்வின் (வயது 20), டிரைவர். நேற்று இரவு இவர் டிராக்டரில் உரம் ஏற்றி கொண்டு, மூங்கிலடி அரசு பள்ளி அருகே சென்று கொண்டிருந்தார்.
அப்போது களக்காடு மிஷின் பள்ளி தெருவை சேர்ந்த சந்திரசேகர் மகன் ஆல்வின் (24), மூங்கிலடியை சேர்ந்த தானியேல் மகன் செல்வதாஸ் (26) ஆகியோர் மோட்டார் சைக்கிளில் வந்து, டிரா க்டரை வழிமறித்து நிறுத்தி னர். பின்னர் அவர்கள் மால்வினி டம், மோட்டார் சைக்கிளுக்கு வழி விட மாட்டியா? எனக் கேட்டனர். இதில் அவர்களு க்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த ஆல்வின், செல்வதாஸ் ஆகியோர் மால்வினை அவதூறாக பேசி தாக்கினர்.
மேலும் கத்தியை காட்டி கொலை செய்து விடுவதாகவும் மிரட்டினர். இதுபற்றி அவர் களக்காடு போலீசில் புகார் செய்தார். நாங்குநேரி டி.எஸ்.பி. ராஜு, களக்காடு இன்ஸ் பெக்டர் ஜோசப் ஜெட்சன் மற்றும் போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ஆல்வின், செல்வதாஸ் ஆகியோரை கைது செய்தனர்.
- பட்டப்படிப்பு படிக்காத வேலையில்லாத இளைஞர்களுக்கு ரூ. 1,500 வழங்கப்படும்
- இந்தியா முழுவதும் காங்கிரஸ் மிகப்பெரிய எழுச்சியைப் பெறும் என ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. கூறினார்.
நெல்லை:
கர்நாடக மாநில சட்டசபைக்கு வருகிற மே 10-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு ஆளும் பாரதீய ஜனதா கட்சிக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
தேர்தல் பார்வையாளர்கள்
இந்நிலையில் கர்நாடக மாநில சட்டசபைக்கான தேர்தல் பார்வையா ளர்களை காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைமை நியமித்துள்ளது. அதில் தமிழகத்தைச் சேர்ந்த 10 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இடம்பெற்று இருக்கிறார்கள். அவர்களில் தமிழக காங்கிரஸ் பொருளா ளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி மனோகரனும் ஒருவர்.
பொதுக்கூட்டம்
கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசினார். தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தால் கர்நாடக மாநி லத்தை சேர்ந்த குடும்பத் தலை விகள் ஒவ்வொரு வருக்கும் மாதம் தோறும் ரூ. 2 ஆயிரம் வழங்கப்படும், பட்டப்படிப்பு முடித்து வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு மாதம்தோறும் ரூ. 3 ஆயிரம் வழங்கப்படும், பட்டப்படிப்பு படிக்காத வேலையில்லாத இளைஞர்களுக்கு ரூ. 1,500 வழங்கப்படும், மின்சாரம் மாதம் 200 யூனிட் வரை இலவசம் என்பது உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை ராகுல்காந்தி வழங்கினார்.
கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி மனோகரனும் கலந்து கொண்டார்.
பேட்டி
இது குறித்து ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. இன்று சென்னையில் நிரு பர்களிடம் கூறிய தாவது:-
கர்நாடக மாநில சட்ட மன்ற தேர்தலில் மிகப்பெரிய மக்கள் எழுச்சியைப் பார்க்க முடிகிறது. ஆளும் பாரதீய ஜனதா அரசுக்கு எதிரான மன நிலையில் அனைவரும் இருக்கிறார்கள். அங்கே பாரதீய ஜனதா கட்சிக்கு ள்ளும் மிகப்பெரிய குழப்பம் ஏற்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்டோர் காங்கிரஸ் பக்கம் வந்து விட்டார்கள்.
பாரதீய ஜனதா அரசை ஆட்சியில் இருந்து அப்புறப்படுத்தும் முடிவுக்கு கர்நாடக மக்களும் வந்து விட்டார்கள். நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றிபெற்று ஆட்சியைப் பிடிக்கும்.
கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் பெறப்போகும் இந்த வெற்றிக்குப் பிறகு, இந்தியா முழுவதும் காங்கிரஸ் மிகப்பெரிய எழுச்சியைப் பெறும். இது உறுதி. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் பெறப்போகும் வெற்றிக்கு முதல் படியாக இந்த கர்நாடக மாநில தேர்தல் முடிவுகள் இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கீழ முன்னீர்பள்ளம் மருதம் நகரை சேர்ந்த பொதுமக்கள் நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை திரண்டு வந்தனர்.
- கொலை மற்றும் கொலை முயற்சி சம்பவங்கள் குறித்து மாவட்ட கலெக்டர் விசாரணை நடத்தி இது போன்ற தாக்குதலுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று அந்த மனுவில் கூறியுள்ளனர்.
நெல்லை:
நெல்லையை அடுத்த முன்னீர்பள்ளம் மருதம் நகரை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 37). கட்டிட தொழிலாளியான இவர் கடந்த 14-ந் தேதி இரவு வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.
அரிவாள் வெட்டு
அப்போது அவரை 5 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் ஓட ஓட விரட்டி வெட்டினர். இதில் காயம் அடைந்த குணசேகரன் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச் சைக்காக சேர்க்கப்பட்டு அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கீழ முன்னீர்பள்ளம் மருதம் நகரை சேர்ந்த பொதுமக்கள் நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை திரண்டு வந்தனர். மாவீரன் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்கம் நிறுவன தலைவர் மாரியப்ப பாண்டியன் தலைமையில் வந்த கிராம மக்கள் திடீரென கலெக்டர் அலுவலக சாலையில் அமர்ந்து தர்ணா போராட் டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்கள் கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறி இருப்ப தாவது:-
நிரந்தர தீர்வு வேண்டும்
சமீப காலமாக எங்கள் பகுதியை சேர்ந்தவர்கள் மீது கொலை மற்றும் கொலை முயற்சி சம்பவங்கள் நடந்து வருகிறது. இதற்கு அரசு துறை சார்ந்த சில அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதாக கருதுகிறோம். எனவே மாவட்ட கலெக்டர் விசாரணை நடத்தி இது போன்ற தாக்குதலுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.
இந்த கொலை முயற்சி சம்பவத்தில் ஈடுபட்ட 5 பேரையும் 2 நாட்களுக்கு மேலாகியும் போலீசார் கைது செய்யவில்லை. அவர்களையும் உடனடியாக கைது செய்ய வேண்டும். மருதம்நகரில் உள்ள டாஸ்மாக் கடையால் தான் இதுபோன்ற குற்ற சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. எனவே அந்த கடையையும் வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
தொடர்ந்து, அவர்களிடம் பாளை உதவி போலீஸ் கமிஷனர் பிரதீப் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச் செய்தார்.
வீட்டு மனை
அம்பை தாலுகா அடைச்சாணி அருந்ததியர் தெருவை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து அளித்த மனுவில், ரெங்கசமுத்திரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு எங்களுக்கு வீட்டு மனை வழங்கப்பட்டது. தற்போது அந்த இடத்தில் நாங்கள் வீடு கட்ட செல்லும் போது அதிகாரிகள் அனுமதி மறுக்கின்றனர். மேலும் பட்டா ரத்தாகி விட்டதாக தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக விசாரணை நடத்தி எங்களது வீட்டுமனையை மீண்டும் பெற்று தர வேண்டும் என்று கூறி இருந்தனர்.
- சமீப காலமாக பணியாளர் பற்றாக்குறை காரணமாக நாய்கள் பிடிக்கப்படாமல் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.
- சாலைகளில் நடந்து செல்வோரை துரத்தி சென்று நாய்கள் அச்சம் ஏற்படுத்தி வருகிறது.
நெல்லை:
நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட 55 வார்டுகளில் சுற்றி திரியும் நாய்களை கடந்த காலங்களில் பிடித்து சென்று கருத்தடை சிகிச்சை கொடுத்து மாற்று இடங் களில் விட்டுவிடும் பணி வழக்கமாக நடந்து வந்தது.
ஆனால் சமீப காலமாக பணியாளர் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு காரண ங்களுக்காக சாலைகளில் சுற்றி திரியும் நாய்கள் பிடிக்கப்படாமல் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இதன் காரணமாக மாநகரின் ஒவ்வொரு பகுதிகளிலும் நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து அவற்றின் தொந்தரவும் கூடி வருகிறது.
இந்த நிலையில் நெல்லை மாநகராட்சியின் மையப் பகுதியில் அமைந்துள்ள சந்திப்பு சிந்துபூந்துறை பகுதியில் நாள்தோறும் சாலைகளில் சுற்றி தெரியும் நாய்களால் பொதுமக்கள் பலர் அவதிக்குள்ளா கின்றனர். சாலைகளில் நடந்து செல்வோர், இருசக்கர வாகனத்தில் செல்வோரை துரத்தி சென்று நாய்கள் அச்சம் ஏற்படுத்தி வருகிறது.
மேலும் சாலைகளில் செல்வோரை வெறிநாய்கள் கடிக்கும் அவல நிலையும் நாள்தோறும் நடந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. சமீபத்தில் நெல்லை வண்ணார்பேட்டை பகுதியை சேர்ந்த ஒருவர் நெல்லை சிந்துபூந்துறை பகுதியில் உள்ள உணவ கத்தில் உணவு வாங்கிக் கொண்டு வெளியே வந்த போது நாய்கள் அவரை துரத்திச் சென்று காலில் கடித்துவிட்டது.
இதனால் காயமடைந்த அவரை மீட்டு அப்பகுதி மக்களால் மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப் பட்டார். இதே போல் பலரையும் சாலை களில் சுற்றித் திரியும் வெறி நாய்கள் கடித்து வருவ தாகவும், எனவே நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கூட்டத்தில் உடற்கல்வியியல்துறை தலைவர் ஆறுமுகம் முன்னிலை வகித்தார்.
- நிகழ்ச்சியில் முன்னாள் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்களது நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
நெல்லை:
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுத்துறை முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. உடற்கல்வியியல்துறை தலைவர் ஆறுமுகம் முன்னிலை வகித்தார். முன்னாள் மாணவர்கள் சங்க கவுரவ ஆலோசகர் தங்கராஜ் வரவேற்றுப் பேசினார்.
சிறப்பு விருந்தினராக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சங்க செயலாளர் பேராசிரியர் வெளியப்பன் கலந்து கொண்டு பேசினார்.
நிகழ்ச்சியில் முன்னாள் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்களது நினைவுகளையும், கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும் முன்னாள் மாணவர் சங்கத்தை வலுப்படுத்த ஆலோசனைகளை தெரிவித்தனர். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. இதில் உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுத்துறை முன்னாள் மாணவர்கள் சங்க செயலாளர், இணை செயளாளர்களான செல்வராஜ், ஜோஸ்பின் பிரியங்கா மற்றும் சங்க உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் முன்னாள் மாணவர்கள் சங்க தலைவர் பேச்சிமுத்து நன்றி கூறினார்.
- தீயணைப்பு துறையினர் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
- மீட்கப்பட்ட உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
வள்ளியூர்:
வள்ளியூர் முருகன் கோவில் தெப்பகுளத்தில் ஆண் பிணம் ஒன்று மிதந்து கொண்டிருந்தது. இதனை இன்று காலை அங்கு குளிக்க சென்றவர்கள் பார்த்து வள்ளியூர் தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் குளத்தில் மிதந்து கொண்டிருந்த சுமார் 35 வயது மதிக்கத்தக்க அந்த வாலிபரின் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
அதனை போலீசார் கைப்பற்றி நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அந்த வாலிபர் யார்? குளத்தில் குளிக்க வந்த இடத்தில் மூழ்கி பலியானாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்று போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பல் பிடுங்கிய விவகாரத்தில் பாதிக்கப்பட்ட சூர்யாவின் தாத்தா பூதப்பாண்டி ஆஜாராகி விளக்கமளிக்க தாலுகா அலுவலகத்திற்கு வந்தார்.
- அமுதா ஐ.ஏ.எஸ். விசாரணை நடத்தி வரும் அம்பை தாலுகா அலுவலகம் வருவாய் துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.
கல்லிடைக்குறிச்சி:
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர்களின் பற்களை பிடுங்கி சித்ரவதை செய்ததாக எழுந்த புகார் தொடர்பாக அம்பாசமுத்திரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர் சிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக சப்-கலெக்டர் தலைமையில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், உயர்நிலை அதிகாரி தலைமையில் விசாரணைக்கு உத்தரவிட அரசுக்கு நெல்லை கலெக்டர் கார்த்திகேயன் பரிந்துரைத்திருந்தார். இதனை ஏற்று ஊரக வளர்ச்சித்துறை முதன்மை செயலாளர் அமுதாவை விசாரணை அதிகாரியாக நியமித்து அரசு உத்தரவிட்டது.
அதன்படி கடந்த 10-ந்தேதி அம்பை தாலுகா அலுவலகத்தில் விசாரணை அதிகாரி அமுதா தலைமையில் விசாரணை நடந்தது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் இருந்து யாரும் ஆஜராகவில்லை.
இந்நிலையில் இன்று மற்றும் நாளை ஆகிய 2 நாட்களும் விசாரணை அதிகாரி அமுதா தலைமையில் மீண்டும் 2-ம் கட்ட விசாரணை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி இன்று காலை 10 மணிக்கு அம்பை தாலுகா அலுவலகத்தில் வைத்து அதிகாரி அமுதா தலைமையில் விசாரணை தொடங்கியது. இதற்காக அவர் நேற்று இரவு சென்னையில் இருந்து நெல்லை வந்தடைந்தார். இன்று காலை விசாரணை தொடங்கியதையொட்டி தாலுகா அலுவலகம் போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது.
தொடர்ந்து, பல் பிடுங்கிய விவகாரத்தில் பாதிக்கப்பட்ட சூர்யாவின் தாத்தா பூதப்பாண்டி ஆஜாராகி விளக்கமளிக்க தாலுகா அலுவலகத்திற்கு வந்தார்.
மேலும் வி.கே.புரம் பகுதியை சேர்ந்த அருண்குமார், அவரது தாயார் ராஜேஸ்வரி மற்றும் 16 மற்றும் 17 வயதுள்ள 2 சிறுவர்கள் என 5 பேர் தாலுகா அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் 5 பேரும் விசாரணை அதிகாரி முன்னிலையில் ஆஜராகினர்.
அமுதா ஐ.ஏ.எஸ். விசாரணை நடத்தி வரும் அம்பை தாலுகா அலுவலகம் வருவாய் துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.
விசாரணைக்கு வருபவர்கள் காவல்துறைக்கு எதிரான குற்றச்சாட்டுகளை கூறலாம் என்பதால், தாலுகா அலுவலகத்தில் உளவுப்பிரிவு போலீசார் உள்ளிட்ட அனைத்து காவலர்களையும் தாலுகா அலுவலகத்தில் இருந்து வெளியேற்றுமாறு வருவாய் துறையினருக்கு உத்தரவிடப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.
- ராஜாபாண்டியனிடம் ரூ.3 லட்சம் வட்டிக்கு கீதா பணம் வாங்கியதாக கூறப்படுகிறது.
- ராஜாபாண்டியன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம், கந்துவட்டி கேட்டு மிரட்டுதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்தனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் சுத்தமல்லியை சேர்ந்தவர் ராஜாபாண்டியன். இவர் இந்து மக்கள் கட்சியின் தென்மண்டல தலைவராக உள்ளார். மேலும் வட்டிக்கு பணம் கொடுத்து வாங்கும் தொழிலும் செய்து வந்தார்.
பாளை கே.டி.சி.நகர் விஸ்வரத்னா நகரை சேர்ந்தவர் பாலகுமார். இவர் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கீதா(வயது 42). இவர் ராஜாபாண்டியனிடம் ரூ.3 லட்சம் வட்டிக்கு பணம் வாங்கியதாக கூறப்படுகிறது.
மாதந்தோறும் அந்த பணத்திற்கு அவர் வட்டி செலுத்தி வந்த நிலையில் கடந்த மாதம் அவர் வட்டி கொடுக்கவில்லை என்று கூறி கீதா வீட்டுக்கு ராஜா பாண்டியன் சென்றுள்ளார். பின்னர் கீதாவிடம் வட்டியை கேட்டுள்ளார்.
அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவர் ஆத்திரம் அடைந்து கீதாவை அவதூறாக பேசி, கீழே தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து கீதா பாளை போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி ராஜாபாண்டியன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம், கந்துவட்டி கேட்டு மிரட்டுதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
- இளம்பெண்ணுக்கு சமீபத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் வருகிற 5-ந்தேதி திருமணம் நடக்க இருந்தது.
- பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து மாயமான புதுப்பெண்ணை தேடி வருகின்றனர்.
களக்காடு:
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள அம்பலம் ஸ்ரீரெங்கராஜபுரம் நடுத்தெருவை சேர்ந்தவர் முருகன். இவரது மகள் முத்துலெட்சுமி(வயது 26). இவர் பட்டப்படிப்பு முடித்துவிட்டு வீட்டில் வைத்து டியூசன் நடத்தி வருகிறார்.
இவருக்கு சமீபத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் வருகிற 5-ந்தேதி திருமணம் நடக்க இருந்தது. இதையொட்டி நேற்று முருகன் தனது உறவினர்களுக்கு திருமண அழைப்பிதழ் கொடுப்பதற்காக சென்றுவிட்டார். அவரது மனைவி மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டி சென்றார்.
மாலையில் 2 பேரும் வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்தபோது முத்துலெட்சுமியை காணவில்லை. உடனே உறவினர் வீடுகளில் தேடிப்பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் அவரை காணவில்லை. இதையடுத்து அவரது பெற்றோர் நாங்குநேரி போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் செல்வி வழக்குப்பதிவு செய்து மாயமான புதுப்பெண் முத்துலெட்சுமியை தேடி வருகின்றனர்.






