என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை மாநகர சாலைகளில் சுற்றித் திரியும்  வெறி நாய்களால் பொதுமக்கள் அவதி
    X

    நெல்லை மாநகர சாலைகளில் சுற்றித் திரியும் வெறி நாய்களால் பொதுமக்கள் அவதி

    • சமீப காலமாக பணியாளர் பற்றாக்குறை காரணமாக நாய்கள் பிடிக்கப்படாமல் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.
    • சாலைகளில் நடந்து செல்வோரை துரத்தி சென்று நாய்கள் அச்சம் ஏற்படுத்தி வருகிறது.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட 55 வார்டுகளில் சுற்றி திரியும் நாய்களை கடந்த காலங்களில் பிடித்து சென்று கருத்தடை சிகிச்சை கொடுத்து மாற்று இடங் களில் விட்டுவிடும் பணி வழக்கமாக நடந்து வந்தது.

    ஆனால் சமீப காலமாக பணியாளர் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு காரண ங்களுக்காக சாலைகளில் சுற்றி திரியும் நாய்கள் பிடிக்கப்படாமல் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இதன் காரணமாக மாநகரின் ஒவ்வொரு பகுதிகளிலும் நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து அவற்றின் தொந்தரவும் கூடி வருகிறது.

    இந்த நிலையில் நெல்லை மாநகராட்சியின் மையப் பகுதியில் அமைந்துள்ள சந்திப்பு சிந்துபூந்துறை பகுதியில் நாள்தோறும் சாலைகளில் சுற்றி தெரியும் நாய்களால் பொதுமக்கள் பலர் அவதிக்குள்ளா கின்றனர். சாலைகளில் நடந்து செல்வோர், இருசக்கர வாகனத்தில் செல்வோரை துரத்தி சென்று நாய்கள் அச்சம் ஏற்படுத்தி வருகிறது.

    மேலும் சாலைகளில் செல்வோரை வெறிநாய்கள் கடிக்கும் அவல நிலையும் நாள்தோறும் நடந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. சமீபத்தில் நெல்லை வண்ணார்பேட்டை பகுதியை சேர்ந்த ஒருவர் நெல்லை சிந்துபூந்துறை பகுதியில் உள்ள உணவ கத்தில் உணவு வாங்கிக் கொண்டு வெளியே வந்த போது நாய்கள் அவரை துரத்திச் சென்று காலில் கடித்துவிட்டது.

    இதனால் காயமடைந்த அவரை மீட்டு அப்பகுதி மக்களால் மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப் பட்டார். இதே போல் பலரையும் சாலை களில் சுற்றித் திரியும் வெறி நாய்கள் கடித்து வருவ தாகவும், எனவே நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×