என் மலர்
உள்ளூர் செய்திகள்

சந்திப்பு கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் மாணவர்கள்.
நெல்லை பல்கலைக்கழகத்தில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டம்
- கூட்டத்தில் உடற்கல்வியியல்துறை தலைவர் ஆறுமுகம் முன்னிலை வகித்தார்.
- நிகழ்ச்சியில் முன்னாள் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்களது நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
நெல்லை:
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுத்துறை முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. உடற்கல்வியியல்துறை தலைவர் ஆறுமுகம் முன்னிலை வகித்தார். முன்னாள் மாணவர்கள் சங்க கவுரவ ஆலோசகர் தங்கராஜ் வரவேற்றுப் பேசினார்.
சிறப்பு விருந்தினராக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சங்க செயலாளர் பேராசிரியர் வெளியப்பன் கலந்து கொண்டு பேசினார்.
நிகழ்ச்சியில் முன்னாள் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்களது நினைவுகளையும், கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும் முன்னாள் மாணவர் சங்கத்தை வலுப்படுத்த ஆலோசனைகளை தெரிவித்தனர். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. இதில் உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுத்துறை முன்னாள் மாணவர்கள் சங்க செயலாளர், இணை செயளாளர்களான செல்வராஜ், ஜோஸ்பின் பிரியங்கா மற்றும் சங்க உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் முன்னாள் மாணவர்கள் சங்க தலைவர் பேச்சிமுத்து நன்றி கூறினார்.






