என் மலர்
திருநெல்வேலி
- தென் மாவட்டத்தில் முக்கிய மருத்துவமனையில் ஒன்றாக நெல்லை அரசு மருத்துவமனை உள்ளது.
- கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு புதிதாக கட்டப்பட்டது.
நெல்லை:
தென் மாவட்டத்தில் முக்கிய மருத்துவமனையில் ஒன்றாக நெல்லை அரசு மருத்துவமனை உள்ளது. இங்கு தினமும் ஆயிரக்க ணக்கனோர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு புதிதாக கட்டப்பட்டது. இந்நிலையில் நேற்று பெய்த கோடை மழை காரணமாக அவசர சிகிச்சை பிரிவின் மேற்கூரையில் இருந்து மழைநீர் கசிந்தது. இதனால் அங்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் அவதி அடைந்தனர்.
சமீபத்தில் புதிதாக கட்டப்பட்ட இந்த கட்டிடத்தில் மேற்கூரையில் இருந்து மழை நீர் கசிந்தது நோயாளிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- களக்காடு அருகே உள்ள மாவடி, நெரிஞ்சிவிளையை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது40). இவர் கட்டுமான தொழில் காண்ட்ராக்டராக உள்ளார்.
- காயமடைந்த பன்னீர்செல்வம் சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள மாவடி, நெரிஞ்சிவிளையை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது40). இவர் கட்டுமான தொழில் காண்ட்ராக்டராக உள்ளார்.
கடந்த 15 நாட்களுக்கு முன்பு மலையடிபுதூரை சேர்ந்த செல்லத்துரை மகன் சாமுவேல் (20) தாமரை குளம் அருகே உள்ள ஜெயராமன் என்பவரது தோட்டத்தில் அனுமதி இன்றி பனை மரத்தில் ஏறி நொங்கு களை வெட்டி யுள்ளார். இதனை பார்த்த பன்னீர்செல்வம், சாமுவேலை கண்டித்து உள்ளார்.
இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வந்தது. இதற்கிடையே நேற்று சாமுவேல், பன்னீர் செல்வத்திற்கு போன் செய்து, கட்டுமான பணி உள்ளது என்றும், அதுபற்றி பேச ராஜபுதூர் ஊருக்கு தென்புறமுள்ள பாலத்திற்கு வரும் படி அழைத்துள்ளார்.
கொலை மிரட்டல்
இதையடுத்து பன்னீர்செல்வம் அங்கு சென்றார். அப்போது அங்கிருந்த சாமுவேல் உள்பட 5 பேர் சேர்ந்து, பன்னீர்செல்வத்தை அவதூறாக பேசி தாக்கினர். கொலை மிரட்டலும் விடுத்தனர்.
இதனால் காயமடைந்த பன்னீர்செல்வம் சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுபற்றி திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் சுப்பு ராமகிருஷ்ணன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி, பன்னீர்செல்வத்தை தாக்கிய சாமுவேல் உள்பட 5 பேரையும் தேடி வருகிறார்.
- நெல்லை மாநகரத்தில் ஆணவக் கொலை தடுப்பு தொடர்பாக மாநகர துணை கமிஷனர் (கிழக்கு), மாவட்ட சமூகநல அலுவலர் மற்றும் மாவட்ட ஆதி திராவிட நல அலுவலர் அடங்கிய சிறப்பு குழு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
- கலப்புத் திருமணம் செய்தவர்களை துன்புறுத்துவது, மிரட்டுவது தொடர்பாக புகார் தெரிவிக்க 24 மணி நேரமும் தனிப்பிரிவு செயல்படும்.
நெல்லை:
நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நெல்லை மாநகரத்தில் ஆணவக் கொலை தடுப்பு தொடர்பாக மாநகர துணை கமிஷனர் (கிழக்கு), மாவட்ட சமூகநல அலுவலர் மற்றும் மாவட்ட ஆதி திராவிட நல அலுவலர் அடங்கிய சிறப்பு குழு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் கலப்புத் திருமணம் செய்தவர்களை துன்புறுத்துவது, மிரட்டுவது தொடர்பாக புகார் தெரிவிக்க 24 மணி நேரமும் தனிப்பிரிவு செயல்படும். எனவே சம்பந்தப்பட்டவர்கள் புகார் தெரிவிக்க நெல்லை மாநகரம் தனிப்பிரிவு 9498101729 மற்றும் மாநகர காவல் கட்டுப்பாடு அறை எண் 0462-2562651, 100 ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உதவி வன பாதுகாவலர் பதவிக்கான கணினி வழித் தேர்வு நெல்லையில் 2 தேர்வு மையங்களில் வருகிற 3-ந்தேதி நடைபெற உள்ளது.
- மாவட்ட அளவில் கணினி வழித்தேர்வினை 1,246 தேர்வர்கள் தேர்வெழுத உள்ளனர்.
நெல்லை:
நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதா வது:-
தமிழ்நாடு அரசு பணி யாளர் தேர்வாணை யத்தால், தமிழ்நாடு அரசு பணியில் தொகுதி1-ஏ.யில் அடங்கிய உதவி வன பாதுகாவலர் பதவிக்கான கணினி வழித் தேர்வு பி.எஸ்.என். பொறியியல் கல்லூரி மற்றும் பி.எஸ்.என். அறிவியல் மற்றும் தொழில் நுட்ப கல்லூரி ஆகிய 2 தேர்வு மையங்களில் வருகிற 3-ந்தேதி நடைபெற உள்ளது.
மாவட்ட அளவில் கணினி வழித்தேர்வினை 1,246 தேர்வர்கள் தேர்வெழுத உள்ளனர். மேற்படி தேர்வு நாளன்று பஸ்களை தேர்வு மையத் திற்கு கூடுதலாக இயக்கு மாறும் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு உத்தரவிடப் பட்டுள்ளது.
தேர்வு நடைபெறும் கல்வி நிலையத்திற்கு போலீ சார் மூலம் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திடவும், தேர்வு நடை பெறும் மையத்தின் அருகில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவ குழுக்கள் மற்றும் 108 ஆம்புலன்ஸ் வசதி களுடன் தயார் நிலையில் வைத்திட சுகாதாரத் துறைக்கும், தேர்வு நாளன்று தடையில்லாத மின்சார வசதியினை செய்து கொ டுக்க மின்சாரத் துறைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தேர்வு எழுதுவோர் தங்களின் தேர்வு மையங் களை முன் கூட்டியே கண்ட றிந்து தேர்வு எழுத வருமாறு கேட்டு கொள்ளப்படு கிறார்கள். மேலும், தேர்வு அறையினுள் செல்போன் களை எடுத்து செல்ல அனுமதியில்லை. தேர்வு எழுதுபவர்கள் தவிர மற்ற வர்கள் தேர்வு மைய வளா கத்திற்குள் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பாளையில் முதன் முறையாக மாபெரும் பொருட்காட்சி வருகிற 29-ந்தேதி முதல் தொடங்குகிறது.
- பொருட்காட்சி யில் ஆழ்கடல் மீன்களின் குகை கண்காட்சி, மாபெரும் வீட்டு உபயோக பொருட்கள் காட்சி இடம் பெறுகிறது.
நெல்லை:
பாளையில் முதன் முறையாக மாபெரும் பொருட்காட்சி வருகிற 29-ந்தேதி முதல் தொடங்குகிறது.
பாளை மத்திய சிறைச்சாலை எதிரில் உள்ள காதுகேளாதோர் பள்ளி மைதானத்தில் நடைபெற உள்ள இந்த பொருட்காட்சி யில் ஆழ்கடல் மீன்களின் குகை கண்காட்சி, மாபெரும் வீட்டு உபயோக பொருட்கள் காட்சி இடம் பெறுகிறது. மேலும் பொருட்காட்சி யில் வண்ண வண்ண மீன்களின் கண்காட்சி, சிறுவர்களுக்கான பொழுது போக்கு பூங்கா, பெண்களுக்கான ஷாப்பிங் திருவிழா, நுகர்வோர் ஸ்டால் மற்றும் உணவு திருவிழா உள்ளிட்டவை இடம் பெறுகின்றன.
தினமும் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை இந்த பொருட்காட்சி நடக்கிறது. ஆழ்கடல் மீன்கள் கண்காட்சியானது சிங்கப்பூர், மலேசியாவில் இடம் பெறுவது போல் தற்போது முதன் முறையாக பாளையில் நடைபெற உள்ள பொருட்காட்சியில் இடம் பெறுவது குறிப்பிடத்தக்கது.
- கூடங்குளத்தில் தலா 1,000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
- 3, 4-வது அணு உலைகள் கட்டுமானப் பணிகளும் நடந்து வருகின்றன. மேலும் 5, 6-வது அணு உலைகளும் அமைக்கப்பட உள்ளன.
நெல்லை:
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் தலா 1,000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதுதவிர 3, 4-வது அணு உலைகள் கட்டுமானப் பணிகளும் நடந்து வருகின்றன. மேலும் 5, 6-வது அணு உலைகளும் அமைக்கப்பட உள்ளன.
இந்நிலையில் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு மின்சார உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் செறிவூட்டப்பட்ட யுரேனியம் எரிகோல்கள் ரஷிய நாட்டின் மாஸ்கோவில் இருந்து விமானம் மூலம் மதுரை விமான நிலையத்திற்கு நேற்று வந்தது.
அங்கிருந்து மிகுந்த பாதுகாப்புடன் சாலை மார்க்கமாக இந்த செறிவூட்டப்பட்ட யுரேனியம் எரிகோல்கள் இன்று காலை கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.
தனி விமானம் மூலம் ரஷியாவில் இருந்து வந்த செறிவூட்டப்பட்ட யுரேனியம் எரிக்கோல்கள் 3 ட்ரெய்லர் லாரிகளில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மற்றும் தமிழக காவல்துறையுடன் மிகுந்த பாதுகாப்புடன் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு அதிகாலை 3 மணி அளவில் வந்து சேர்ந்தது.
ஒவ்வொரு எரிபொருளும் 4.57 மீட்டர் நீளமும், 705 கிலோ கிராம் எடையும் கொண்டது. அணு உலையில் 163 எரிக்கோல்கள் ஒரு பண்டல் ஆக்கப்பட்டு ஒரு வருடத்திற்கு மின் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும். தற்பொழுது 45 பண்டல்கள் வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
- இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 16-ந் தேதி தொடங்கியது.
- விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடந்தது.
நெல்லை:
நெல்லை தச்சநல்லூரில் சிவன்கோவில் என அழைக்கப்படும் நெல்லையப்பர்- காந்திமதி அம்பாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா 10 நாட்கள் நடைபெறும்.
தேரோட்டம்
இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 16-ந் தேதி தொடங்கியது. இதையொட்டி கோவில் வளாகத்தில் காலை 5.30 மணிக்கு கணபதி ஹோமம் நடைபெற்றது. மறுநாள் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.
விழா நாட்களில் சுவாமி, அம்பாள், பஞ்சமூர்த்தி களுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இரவு சுவாமி, அம்பாள், பஞ்சமூர்த்திகளுடன் வீதி உலா நடந்தது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடந்தது. இதையொட்டி சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. காலை 8.30 மணிக்கு வருசாபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. காலை 10 மணிக்கு சுவாமி, அம்பாள் தேரில் எழுந்தருளினார்கள்.
தொடர்ந்து தேர் வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தேரோட்ட நிகழ்ச்சியில் அப்துல் வகாப் எம்.எல்.ஏ., மேயர் சரவணன், துணை மேயர் ராஜு, நெல்லை மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தச்சை கணேசராஜா, பகுதி செயலாளர் சின்னத்துரை, முன்னாள் மண்டல சேர்மன் மாதவன், நிர்வாகிகள் பள்ளமடை பாலமுருகன், போர்வெல் மணி, பாக்யராஜ், வேல்முருகன், தாழை மீரான் மற்றும் பலர் கலந்து கொண்டனர். தேர் 4 ரத வீதிகளையும் சுற்றி கோவிலை வந்து அடைந்தது.
- எரிவாயு நுகர்வோர் குறைதீர்வு கூட்டம் நாளை மறுநாள் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடை பெற உள்ளது.
- நுகர்வோர்கள் தங்கள் குறைகள், புகார்களை கூட்டத்தில் தெரிவிக்கலாம்.
நெல்லை:
நெல்லை மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில் குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
நெல்லை கலெக்டர் அலுவலத்தில் எரிவாயு (கியாஸ்) நுகர்வோர் குறைதீர்வு கூட்டம் நாளை மறுநாள் (வெள்ளிக் கிழமை) மாலை 4 மணிக்கு மாவட்ட வருவாய் அலு வலர் தலைமையில் நடை பெற உள்ளது. இதில் அனைத்து எண்ணைய் நிறு வன எரிவாயு முகவர்கள், மாவட்ட எரிவாயு ஒருங்கிணைப்பாளர் மற்றும் எரிவாயு நுகர் வோர்கள் கலந்து கொள்கிறார்கள்.
கூட்டத்தில் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த அனைத்து எரிவாயு (கியாஸ்) நுகர்வோர்களும் கலந்து கொண்டு, எரிவாயு சிலிண்டர் பதிவு செய்வதில் ஏற்படும் குறைபாடுகள், தடங்கல்கள் மற்றும் எரிவாயு சிலிண்டர்கள் பெறுவதில் ஏற்படும் கால தாமதம் குறித்து தங்கள் குறைகள், புகார்களை தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- அர்சத் முகைதீன் டவுன் எஸ்.என். நெடுஞ்சாலையில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
- கார்த்திக், நவீன் ஆகியோர் மோட்டார் சைக்கிளின் கண்ணாடிகளை உடைத்ததாக தெரிகிறது.
நெல்லை:
நெல்லையை சேர்ந்தவர் அர்சத் முகைதீன் (வயது 25). இவருக்கும், திருமலை கொழுந்துபுரத்தை சேர்ந்த இசக்கி கார்த்திக் (28) மற்றும் பாளையஞ்செட்டிகுளம் நவீன் (22) என்பவர்களுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வருகிறது.
சம்பவத்தன்று அர்சத் முகைதீன் டவுன் எஸ்.என். நெடுஞ்சாலையில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த இசக்கி கார்த்திக் மற்றும் நவீன் ஆகியோர் அவரை வழிமறித்து தாக்கி, மோட்டார் சைக்கிளின் கண்ணாடிகளை உடைத்ததாக தெரிகிறது. இது தொடர்பாக அவர் சந்திப்பு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் முத்து வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தார்.
- பிரவின்ராஜ் அடிக்கடி குமாரின் வீட்டிற்கு வந்து சென்றுள்ளார்.
- பிரவின் ராஜியும், இந்திராவும் கணவன், மனைவி போல் வாழ்ந்து வந்தனர்.
களக்காடு:
நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள தளபதி சமுத்திரம் கீழூர் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் குமார், இவரது மனைவி இந்திரா. இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. 2 மகன்கள் உள்ளனர்.
கள்ளக்காதல்
இந்நிலையில் குமாரின் உறவினரான பணகுடி அருகே உள்ள ரோஸ்மியா புரத்தை சேர்ந்த பிரவின்ராஜ் (வயது 30) என்பவர் அடிக்கடி குமாரின் வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். இதில் அவருக்கும், இந்திராவிற்கும் பழக்கம் ஏற்பட்டு, நாளடையில் கள்ளக்காதலாக மாறியது.
இதையறிந்த குமார் இருவரையும் எச்சரித்தார். ஆனால் இருவரும் கள்ளக்காதலை கைவிட வில்லை. இதனைதொடர்ந்து குமார், இந்திராவை விட்டு பிரிந்து சென்று விட்டார். அதன் பின் பிரவின் ராஜியும், இந்திராவும் கணவன், மனைவி போல் வாழ்ந்து வந்தனர். இதற்கிடையே நேற்று இரவில் பிரவின்ராஜ் இந்திரா வீட்டிற்கு வந்துள்ளார்.
தற்கொலை
இன்று அதிகாலையில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, வாக்குவாதம் எழுந்துள்ளது. ஆத்திரம் அடைந்த இந்திரா, பிரவின்ராஜை வீட்டிற்கு வெளியே தள்ளி கதவை சாத்தினார். இதனால் மனம் உடைந்த பிரவின்ராஜ் கத்தியால் தனது கழுத்தை தானே அறுத்து கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் வயிற்றிலும் கத்தியால் குத்தி கொண்டுள்ளார்.
இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி அவர் இறந்தார். இதுகுறித்து ஏர்வாடி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- குழந்தையை பார்ப்பதற்காக ஜெபராஜ் களக்காட்டிற்கு வந்தார்.
- விசாரணையில் டேனியல் மோட்டார் சைக்கிளை திருடியது தெரியவந்தது.
களக்காடு:
சேரன்மகாதேவி அருகே உள்ள கூனியூர், கீழவடக்கு தெருவை சேர்ந்தவர் சகரியா மைக்கில் ஜெபராஜ் (வயது28). விவசாயி. இவரது மனைவிக்கு களக்காடு புதிய பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் குழந்தை பிறந்துள்ளது. நேற்று அவர் குழந்தையை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் களக்காட்டிற்கு வந்தார். மருத்துவமனை அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு, அவர் மருத்துவமனைக்கு சென்றார். சிறிது நேரத்திற்கு பின் திரும்பி வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளை காணவில்லை. இதுகுறித்து அவர் களக்காடு போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் நேச மணிகண்டன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
இதில் மேலபத்தை, கருப்பன்தோப்பு பகுதியை சேர்ந்த டேனியல் (27) என்பவர் மோட்டார் சைக்கிளை திருடி சென்றது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
- திருமணமான பெண் ஒருவருக்கும், சுரேந்தருக்கும் பழக்கம் இருந்துள்ளது
- சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சதீஷ் சேர்க்கப்பட்டார்.
நெல்லை:
பாளை படப்பக்குறிச்சியை சேர்ந்தவர் சுரேந்தர்(வயது 30). நெல்லை ராமையன்பட்டி வட்டக்கிணறு பகுதியை சேர்ந்தவர் சதீஷ்(28). இவர்கள் 2 பேரும் நண்பர்கள். தினமும் ஒன்றாக கூலி வேலைக்கு செல்வது வழக்கம்.
இந்நிலையில் பாளை மூளிக்குளம் பகுதியை சேர்ந்த திருமணமான பெண் ஒருவருக்கும், சுரேந்தருக்கும் கடந்த 8 வருடங்களாக பழக்கம் இருந்துள்ளது. சமீபத்தில் சுரேந்தர் வேலைக்காக சென்னைக்கு சென்றுள்ளார். அதை பயன்படுத்தி அந்த பெண்ணுக்கு சதீஷ் பாலியல் தொல்லை கொடுத்த தாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் நேற்று சென்னையில் இருந்து வந்த சுரேந்தரிடம், அந்த பெண் நடந்த சம்பவங்களை கூறி உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர் சதீசை மூளிக்குளம் பகுதிக்கு அழைத்துள்ளார்.
அங்கு வந்த சதீசை அரிவாளால் சுரேந்தர் வெட்டி உள்ளார். இதில் காயம் அடைந்த சதீஷ் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக பாளை போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேந்தரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.






