search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "first time"

    • பாளையில் முதன் முறையாக மாபெரும் பொருட்காட்சி வருகிற 29-ந்தேதி முதல் தொடங்குகிறது.
    • பொருட்காட்சி யில் ஆழ்கடல் மீன்களின் குகை கண்காட்சி, மாபெரும் வீட்டு உபயோக பொருட்கள் காட்சி இடம் பெறுகிறது.

    நெல்லை:

    பாளையில் முதன் முறையாக மாபெரும் பொருட்காட்சி வருகிற 29-ந்தேதி முதல் தொடங்குகிறது.

    பாளை மத்திய சிறைச்சாலை எதிரில் உள்ள காதுகேளாதோர் பள்ளி மைதானத்தில் நடைபெற உள்ள இந்த பொருட்காட்சி யில் ஆழ்கடல் மீன்களின் குகை கண்காட்சி, மாபெரும் வீட்டு உபயோக பொருட்கள் காட்சி இடம் பெறுகிறது. மேலும் பொருட்காட்சி யில் வண்ண வண்ண மீன்களின் கண்காட்சி, சிறுவர்களுக்கான பொழுது போக்கு பூங்கா, பெண்களுக்கான ஷாப்பிங் திருவிழா, நுகர்வோர் ஸ்டால் மற்றும் உணவு திருவிழா உள்ளிட்டவை இடம் பெறுகின்றன.

    தினமும் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை இந்த பொருட்காட்சி நடக்கிறது. ஆழ்கடல் மீன்கள் கண்காட்சியானது சிங்கப்பூர், மலேசியாவில் இடம் பெறுவது போல் தற்போது முதன் முறையாக பாளையில் நடைபெற உள்ள பொருட்காட்சியில் இடம் பெறுவது குறிப்பிடத்தக்கது. 

    • மலைப்பகுதியில் பெய்துவரும் தொடர்மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது.
    • இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழையால் முதல் முறையாக குண்டாறு அணை நிரம்பி உள்ளது.

    செங்கோட்டை:

    தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்துவரும் தொடர்மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது.

    அணை நிரம்பியது

    குறிப்பாக குண்டாறு மற்றும் அடவிநயினார் அணைபகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் 2 அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்தது. மாவட்டத்தின் மிகச்சிறிய அணையான 36.10 அடி கொள்ளளவு கொண்ட குண்டாறு அணை இன்று காலை நிரம்பி வழிந்தது.

    இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழையால் முதல் முறையாக குண்டாறு அணை நிரம்பி உள்ளது. வழக்கம்போல் மாவட்டத்தில் முதல் முறையாக குண்டாறு நிரம்பி உள்ளதால் அதனை நம்பி உள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    படகு சவாரி

    அணை நிரம்பியதையொட்டி சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தது. இதனால் படகு சவாரி தொடங்கப்பட்டது. அதில் சுற்றுலா பயணிகள் சவாரி செய்தனர்.

    மேலும் கார் பருவ சாகுபடியை விவசாயிகள் தீவிரப்படுத்தி உள்ளனர். சுமார் 600 ஏக்கருக்கும் அதிகமாக நெற்பயிர் நடவு செய்வதற்கு தேவையான பணிகளை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

    ×