களக்காடு அருகே காண்ட்ராக்டர் மீது தாக்குதல்

களக்காடு அருகே உள்ள மாவடி, நெரிஞ்சிவிளையை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது40). இவர் கட்டுமான தொழில் காண்ட்ராக்டராக உள்ளார். காயமடைந்த பன்னீர்செல்வம் சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
களக்காடு அருகே காண்ட்ராக்டர் மீது தாக்குதல்
Published on

களக்காடு:

களக்காடு அருகே உள்ள மாவடி, நெரிஞ்சிவிளையை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது40). இவர் கட்டுமான தொழில் காண்ட்ராக்டராக உள்ளார்.

கடந்த 15 நாட்களுக்கு முன்பு மலையடிபுதூரை சேர்ந்த செல்லத்துரை மகன் சாமுவேல் (20) தாமரை குளம் அருகே உள்ள ஜெயராமன் என்பவரது தோட்டத்தில் அனுமதி இன்றி பனை மரத்தில் ஏறி நொங்கு களை வெட்டி யுள்ளார். இதனை பார்த்த பன்னீர்செல்வம், சாமுவேலை கண்டித்து உள்ளார்.

இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வந்தது. இதற்கிடையே நேற்று சாமுவேல், பன்னீர் செல்வத்திற்கு போன் செய்து, கட்டுமான பணி உள்ளது என்றும், அதுபற்றி பேச ராஜபுதூர் ஊருக்கு தென்புறமுள்ள பாலத்திற்கு வரும் படி அழைத்துள்ளார்.

கொலை மிரட்டல்

இதையடுத்து பன்னீர்செல்வம் அங்கு சென்றார். அப்போது அங்கிருந்த சாமுவேல் உள்பட 5 பேர் சேர்ந்து, பன்னீர்செல்வத்தை அவதூறாக பேசி தாக்கினர். கொலை மிரட்டலும் விடுத்தனர்.

இதனால் காயமடைந்த பன்னீர்செல்வம் சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுபற்றி திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் சுப்பு ராமகிருஷ்ணன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி, பன்னீர்செல்வத்தை தாக்கிய சாமுவேல் உள்பட 5 பேரையும் தேடி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com