ஏர்வாடி அருகே கள்ளக்காதலி வீட்டில் வாலிபர் தற்கொலை

பிரவின்ராஜ் அடிக்கடி குமாரின் வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். பிரவின் ராஜியும், இந்திராவும் கணவன், மனைவி போல் வாழ்ந்து வந்தனர்.
ஏர்வாடி அருகே  கள்ளக்காதலி வீட்டில் வாலிபர் தற்கொலை
Published on

களக்காடு:

நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள தளபதி சமுத்திரம் கீழூர் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் குமார், இவரது மனைவி இந்திரா. இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. 2 மகன்கள் உள்ளனர்.

கள்ளக்காதல்

இந்நிலையில் குமாரின் உறவினரான பணகுடி அருகே உள்ள ரோஸ்மியா புரத்தை சேர்ந்த பிரவின்ராஜ் (வயது 30) என்பவர் அடிக்கடி குமாரின் வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். இதில் அவருக்கும், இந்திராவிற்கும் பழக்கம் ஏற்பட்டு, நாளடையில் கள்ளக்காதலாக மாறியது.

இதையறிந்த குமார் இருவரையும் எச்சரித்தார். ஆனால் இருவரும் கள்ளக்காதலை கைவிட வில்லை. இதனைதொடர்ந்து குமார், இந்திராவை விட்டு பிரிந்து சென்று விட்டார். அதன் பின் பிரவின் ராஜியும், இந்திராவும் கணவன், மனைவி போல் வாழ்ந்து வந்தனர். இதற்கிடையே நேற்று இரவில் பிரவின்ராஜ் இந்திரா வீட்டிற்கு வந்துள்ளார்.

தற்கொலை

இன்று அதிகாலையில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, வாக்குவாதம் எழுந்துள்ளது. ஆத்திரம் அடைந்த இந்திரா, பிரவின்ராஜை வீட்டிற்கு வெளியே தள்ளி கதவை சாத்தினார். இதனால் மனம் உடைந்த பிரவின்ராஜ் கத்தியால் தனது கழுத்தை தானே அறுத்து கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் வயிற்றிலும் கத்தியால் குத்தி கொண்டுள்ளார்.

இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி அவர் இறந்தார். இதுகுறித்து ஏர்வாடி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com