என் மலர்

  நீங்கள் தேடியது "Illigal Affair"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • திருமணமான பெண் ஒருவருக்கும், சுரேந்தருக்கும் பழக்கம் இருந்துள்ளது
  • சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சதீஷ் சேர்க்கப்பட்டார்.

  நெல்லை:

  பாளை படப்பக்குறிச்சியை சேர்ந்தவர் சுரேந்தர்(வயது 30). நெல்லை ராமையன்பட்டி வட்டக்கிணறு பகுதியை சேர்ந்தவர் சதீஷ்(28). இவர்கள் 2 பேரும் நண்பர்கள். தினமும் ஒன்றாக கூலி வேலைக்கு செல்வது வழக்கம்.

  இந்நிலையில் பாளை மூளிக்குளம் பகுதியை சேர்ந்த திருமணமான பெண் ஒருவருக்கும், சுரேந்தருக்கும் கடந்த 8 வருடங்களாக பழக்கம் இருந்துள்ளது. சமீபத்தில் சுரேந்தர் வேலைக்காக சென்னைக்கு சென்றுள்ளார். அதை பயன்படுத்தி அந்த பெண்ணுக்கு சதீஷ் பாலியல் தொல்லை கொடுத்த தாக கூறப்படுகிறது.

  இந்தநிலையில் நேற்று சென்னையில் இருந்து வந்த சுரேந்தரிடம், அந்த பெண் நடந்த சம்பவங்களை கூறி உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர் சதீசை மூளிக்குளம் பகுதிக்கு அழைத்துள்ளார்.

  அங்கு வந்த சதீசை அரிவாளால் சுரேந்தர் வெட்டி உள்ளார். இதில் காயம் அடைந்த சதீஷ் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

  இந்த சம்பவம் தொடர்பாக பாளை போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேந்தரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  ×