என் மலர்tooltip icon

    திருநெல்வேலி

    • நெல்லை மண்டல அளவிலான பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி நெல்லை சங்கர் நகர் சங்கர் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்றது.
    • இறுதி போட்டியில் சங்கர் பாலிடெக்னிக் கல்லூரி அணியும், ராஜபாளையம் பி.ஏ.சி. ராமசாமி ராஜா பாலிடெக்னிக் கல்லூரி அணியும் மோதின. அதில் சங்கர் பாலிடெக்னிக் கல்லூரி அணி வெற்றி பெற்று கோப்பையை வென்றது.

    நெல்லை:

    நெல்லை மண்டல அளவிலான பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி நெல்லை சங்கர் நகர் சங்கர் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்றது. இதில் 10 பாலிடெக்னிக் மாணவ அணிகள் பங்கு பெற்றனர். இறுதி போட்டியில் சங்கர் பாலிடெக்னிக் கல்லூரி அணியும், ராஜபாளையம் பி.ஏ.சி. ராமசாமி ராஜா பாலிடெக்னிக் கல்லூரி அணியும் மோதின. அதில் சங்கர் பாலிடெக்னிக் கல்லூரி அணி வெற்றி பெற்று கோப்பையை வென்றது. முன்னதாக சங்கர் பாலிடெக்னிக் அணி கால் இறுதியில் நாகர்கோவில் அரசு பாலிடெக்னிக் அணியை வென்றது. அரை இறுதியில் கோவில்பட்டி லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியையும் வென்றது. இறுதிப் போட்டியில் சங்கர் பாலிடெக்னிக் மாணவர் மற்றும் அணி தலைவர் விஸ்வா 43 (22) ரன்கள் குவித்ததோடு, பந்துவீச்சில் 3 விக்கெட்டுகளை வீழ்த்திய தன் மூலம் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    வெற்றி பெற்ற சங்கர் பாலிடெக்னிக் கல்லூரி அணியை சங்கர் சிமெண்ட் ஆலையின் தலைமை அதிகாரி சரவண முத்து, கல்லூரி முதல்வர் சங்கர சுப்பிரமணியன், நிர்வாக அதிகாரி ஸ்ரீனிவாசன், உடற் கல்வி இயக்குனர் வரதன், உதவி இயக்குனர் சுந்தர் மற்றும் செல்வம் ஆகியோர் பாராட்டினர்.

    • ராதாபுரம் யூனியனில் கடலோர பகுதியில் கரைச்சுத்து உவரி பஞ்சாயத்துக்கு உள்ளது. இந்த பஞ்சாயத்துக்கு உட்பட்ட சுனாமி காலனி பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன.
    • இங்கு வசிக்கும் மக்களுக்கு கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் குடிதண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.

    திசையன்விளை:

    ராதாபுரம் யூனியனில் கடலோர பகுதியில் கரைச்சுத்து உவரி பஞ்சாயத்துக்கு உள்ளது. இந்த பஞ்சாயத்துக்கு உட்பட்ட சுனாமி காலனி பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன.

    இங்கு வசிக்கும் மக்களுக்கு கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் குடிதண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.கடந்த சில மாதங்களாக இந்த காலனியில் வசிக்கும் பொதுமக்களுக்கு குடிநீர் முறையாக வரவில்லை. இதையடுத்து கடந்த மாதம் 25-ந்தேதி அன்று அந்த பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்தனர்.

    இதனையறிந்த குடிநீர் வழங்கல் துறை செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர் மற்றும் அதிகாரிகள் கடந்த மாதம் 23-ந்தேதி சுனாமி காலனிக்கு சென்று அங்கு பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது 10 நாட்களுக்குள் அந்த பகுதிக்கு குடிதண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

    ஆனால் அதிகாரிகள் கூறியபடி குடிதண்ணீர் வராததால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் நேற்று திடீரென காலிக்குடங்களுடன் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த கரைசுத்து உவரி ஊராட்சி மன்ற துணைத்தலைவர் உவரி ராஜன் கிருபாநிதி மற்றும் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் 

    • நாங்குநேரி அருகே உள்ள மூன்றடைப்பு அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கார்த்திக் (வயது29).
    • இவருக்கும் அதே ஊரை சேர்ந்த நயினார் (30) குடும்பத்தினருக்கும் கடந்த 1 மாதத்திற்கு முன்பு நடந்த கோவில் கொடை விழாவின் போது தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வருகிறது.

    களக்காடு:

    நாங்குநேரி அருகே உள்ள மூன்றடைப்பு அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கார்த்திக் (வயது29). இவருக்கும் அதே ஊரை சேர்ந்த நயினார் (30) குடும்பத்தினருக்கும் கடந்த 1 மாதத்திற்கு முன்பு நடந்த கோவில் கொடை விழாவின் போது தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வருகிறது.

    இந்நிலையில் சம்பவ த்தன்று நயினார், அவரது மகன் கந்தன் ஆகியோர் கார்த்திக் வீட்டுக்கு சென்று, அவரை அவதூறாக பேசினர். இதனை தட்டி கேட்ட கார்த்திக்கின் மனைவி வித்யா, அவரது தம்பி மனைவி அனிதா ஆகியோரையும் அவதூறாக பேசினர். அத்துடன் கார்த்திக்கின் மோட்டார் சைக்கிளையும் அடித்து உடைத்தனர்.

    அரிவாளால் வீட்டின் கதவையும், குடிநீர் குழாயை யும், பாத்திரங்களையும் வெட்டி சேதப்படுத்தி ரகளையில் ஈடுபட்டனர்.

    இதனைதொடர்ந்து ஆத்திரம் அடைந்த கார்த்திக், நயினாரை அரிவாளால் வெட்டினார். இதில் காயமடைந்த நயினார் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    இதுபற்றி 2 பேரும் மூன்றடைப்பு போலீசில் தனித்தனியாக புகார் செய்தனர். போலீசார் இரு தரப்பையும் சேர்ந்த நயினார், அவரது மகன் கந்தன், கார்த்திக் ஆகிய 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தமிழ்நாடு சட்டமன்ற பேரவை உறுதிமொழிக்குழு இன்று நெல்லை மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளை ஆய்வு செய்ய வந்தனர்.
    • முதலில் முருகன்குறிச்சி பகுதியில் உள்ள பாளையங்கால்வாய் பகுதிக்கு சென்று அதனை பார்வை யிட்டு ஆய்வு செய்தனர்.

    நெல்லை:

    தமிழ்நாடு சட்டமன்ற பேரவை உறுதிமொழிக்குழு இன்று நெல்லை மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளை ஆய்வு செய்ய வந்தனர்.

    பாளையங்கால்வாய்

    குழுவின் தலைவர் வேல்முருகன் தலைமையில் கலெக்டர் கார்த்திகேயன், சட்டப்பேரவை செய லாளர் சீனிவாசன், உறுப்பினர்களான எம்.எல்.ஏ.க்கள் ரூபிமனோகரன், அண்ணாத்துரை, அருள், மோகன், ராமலிங்கம், விஸ்வநாதன், ஜெயக்குமார் மற்றும் நெல்லை மாநக ராட்சி மேயர் சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, கமிஷனர் சிவகிருஷ்ண மூர்த்தி ஆகியோர் நெல்லை மாவட்டத்தில் நடைபெற்று வரும் பணிகளை இன்று ஆய்வு செய்தனர்.

    முதலில் முருகன்குறிச்சி பகுதியில் உள்ள பாளை யங்கால்வாய் பகுதிக்கு சென்று அதனை பார்வை யிட்டு ஆய்வு செய்தனர். அப்போது மேலப்பாளை யம் பகுதியை சேர்ந்த சமூக நல ஆர்வலர்கள், சட்டமன்ற உறுதிமொழி குழுவின் தலைவர் வேல்முருகனிடம் அளித்த மனுவில் கூறியி ருப்பதாவது:-

    தாமிரபரணியின் கிளை ஆறாக ஓடக்கூடிய பாளயங்கால்வாய் சுமார் 42 கிலோமீட்டர் நீளம் கொண்டது. இந்த கால்வாயானது நெல்லை மாவட்டம் பழவூர் கிரா மத்தில் தொடங்கி 14 கிலோ மீட்டர் பயணத்திற்கு பின்னர் மாநகர பகுதியான மேலப்பா ளையத்தை வந்தடைகிறது.

    சுமார் 800 ஆண்டுகள் பழமையான பெரிய பள்ளிவாசல் இந்த கரையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் நெல்லை மாநக ரத்தின் 10 ஆயிரம் ஏக்கர் விவசாயத்திற்கும், 57 குளங்களுக்கு நீர் ஆதாரமாகவும், கால்நடை களுக்கான முக்கியமான நீர் நிலை யாகவும், நிலத்தடி நீர் ஆதாரமாகவும் பாளை யங்கால்வாய் திகழ்ந்து வருகிறது.

    இத்தகைய முக்கி யத்துவம் வாய்ந்த பாளை யங்கால்வாயை நெல்லை மாநகராட்சி மேலப்பா ளையம் மண்டலத்தில் பயணிக்கும் போது மாநகராட்சி கழிவு நீரோடையும், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு களும் நேரடியாக கலக்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நச்சுகேடாக உள்ளது. எனவே இந்த பாளையங்கால்வாயை பாதுகாக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

    மனுவை பெற்றுக் கொண்ட வேல்முருகன் எம்.எல்.ஏ., பாளையங்கால் வாயை முழுவது மாக தூர்வார கூடுதல் நிதி ஒது க்கீடு செய்யவும், அனைத்து விதமான நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மேலும் கால்வாயில் கழிவு நீர் கலப்பதை முழுதும் தடுக்கும் முறை குறித்து நடவடிக்கை எடுப்பதற்கு உறுதியாக இருப்பதாக குழு தலைவர் வேல்முருகன் மனு அளித்தவர்களிடம் வலியுறுத்தினார்.

    பொருநை அருங்காட்சியகம்

    தொடர்ந்து சீவலப்பேரி சாலையில் அமைந்துள்ள விளையாட்டு கிராமத்தை பார்வையிட்ட உறுதிமொழி குழுவினர், ரெட்டியார்பட்டி மலைப்பகுதியில் ரூ.33 கோடி மதிப்பிட்டில் கட்டப்பட்டு வரும் பொருநை அருங்காட்சியகத்தையும் ஆய்வு செய்தனர்.

    இதனை முடித்துக் கொண்டு இன்று பிற்பகல் நாங்குநேரியில் உள்ள தொழில் பூங்கா, அரசு என்ஜினீயரிங் கல்லூரி அருகே உள்ள ஆவின் பால் பண்ணை, சந்திப்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் பஸ்நிலைய கட்டுமானப் பணிகள், சுத்தமல்லி யில் நடைபெற்று வரும் கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகள், மனோன்மணியம் சுந்தர னார் பல்கலைக் கழகத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிட பணிகள், பேட்டை கண்டியப்பேரியில் அரசு மருத்துவமனை கட்டிட பணிகளையும் பார்வை யிட்டு ஆய்வு செய்ய உள்ளனர்.

    தொடர்ந்து இன்று மாலை கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் நடை பெறும் ஆய்வு கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.

    • பணகுடி புள்ளிமான் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில் ஆசிரியர் தினம் மற்றும் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
    • மாணவ-மாணவிகள் ராதா மற்றும் கிருஷ்ணா வேடமிட்டு நடனமாடினர்.

    வள்ளியூர்:

    பணகுடி புள்ளிமான் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில் ஆசிரியர் தினம் மற்றும் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் டாக்டர் தேவிகா பேபி தலைமை தாங்கினார். பள்ளி நிர்வாகி டாக்டர் பொன் லட்சுமி முன்னிலை வகித்தார். இதில் மாணவ-மாணவிகள் ராதா மற்றும் கிருஷ்ணா வேடமிட்டு நடனமாடினர். மாணவ-மாணவிகள் வண்ண மலர் கொத்துக்களை ஆசிரியர் களுக்கு வழங்கி ஆசிரியர் தின வாழ்த்துகளை தெரிவித்தனர். பின்னர் மாணவ- மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

    • பள்ளி மாணவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள்.
    • கைதான 4 மாணவர்களும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நெல்லையில் உள்ள சிறார் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் கடந்த மாதம் பள்ளி மாணவர், சக மாணவர்களால் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து போலீசாரும், கல்வி அதிகாரிகளும் அங்குள்ள பள்ளிகளை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில் நாங்குநேரியில் உள்ள சங்கர் ரெட்டியார் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10 மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் சிலர் வகுப்பறை சுவரில் சாதிய வன்முறையை தூண்டும் வகையில் அவதூறு வாசகங்களை எழுதியிருந்தனர்.

    இதுகுறித்து பள்ளி நிர்வாகம் சார்பில் நாங்குநேரி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், நாங்குநேரி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜூ மற்றும் போலீசார் பள்ளிக்கு சென்று பார்வையிட்டனர்.

    அங்கு சுவரில் எழுதப்பட்ட அவதூறு வாசகங்களை அழித்தனர். பின்னர் பள்ளி மாணவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள்.

    இந்த விசாரணையில் 4 மாணவர்கள் இச்சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்கள் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    கைதான 4 மாணவர்களும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நெல்லையில் உள்ள சிறார் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டனர். பள்ளிக்கூட வகுப்பறை சுவரில் சாதிய வன்முறையை தூண்டும் வகையில் அவதூறு வாசகங்கள் எழுதிய 4 மாணவர்கள் கைது செய்யப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பிரபு, அவரது மனைவி ரம்யா ஆகியோர் செல்வியை அவதூறாக பேசி தாக்கினர்.
    • காயம் அடைந்த செல்வி நாங்குநேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

    களக்காடு:

    நாங்குநேரி அருகே உள்ள விஜயநாராயணம் ஏழாங்கால், மேலத்தெருவை சேர்ந்தவர் முருகன் மனைவி செல்வி (வயது62). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சித்திரைவேல் மகன் பிரவு, அவரது மனைவி ரம்யாவிற்கும் தண்ணீர் பிடிப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது.

    இதனைதொடர்ந்து செல்வி வீட்டில் இருக்கும் போது, அவரது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த பிரபு, அவரது மனைவி ரம்யா ஆகியோர் செல்வியை அவதூறாக பேசி தாக்கினர். மேலும் கொலை மிரட்டலும் விடுத்தனர். இதனால் காயம் அடைந்த அவர் நாங்குநேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுபற்றி விஜயநாராயணம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி இது தொடர்பாக பிரபு, அவரது மனைவி ரம்யாவை தேடி வருகின்றனர்.

    • போட்டிகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சின்னராசு தொடங்கி வைத்தார்.
    • பெண்கள் பிரிவின் முதல் போட்டியில் 4-0 என்ற கோல் கணக்கில் பாளை தனியார் மேல்நிலைப்பள்ளி அணியினர் வென்றனர்.

    நெல்லை:

    மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கு இடையிலான ஆக்கி போட்டி பாளை அண்ணா விளையாட்டு அரங்கில் இன்று நடைபெற்றது.

    ஆக்கி யூனிட் ஆப் திருநெல்வேலி மற்றும் ரோட்டரி கிளப் ஆப் திருநெல்வேலி சார்பில் நடைபெற்று வரும் இந்த போட்டிகள் நேற்று தொடங்கியது. இந்த போட்டிகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சின்னராசு தொடங்கி வைத்தார்.2-ம் நாளான இன்று போட்டிகளை ஹென்றி ஜெரோம் மற்றும் தனியார் பள்ளி தாளாளர் ஆல்பெர்ட் ஜோசப் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    14 வயதிற்கு உட்பட்டோ ருக்கான பெண்கள் பிரிவின் முதல் போட்டியில் பாளை தனியார் மேல்நிலைப்பள்ளி அணியினர் 4-0 என்ற கோல் கணக்கில் ரெட்டியார்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி அணியை வென்றனர். மற்ற போட்டிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    நிகழ்ச்சியில் ரோட்டரி தலைவர் விவேக், நிர்வாகிகள் கபீர், பால் , ஆக்கி யூனிட் ஆப் திருநெல்வேலி தலைவர் சேவியர் ஜோதி சற்குணம், செயலாளர் பீர் அலி, தடகள கழக இணைச்செயலாளர் ஜாய், செல்வின், ரவீந்தர் ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். போட்டிகளில் வெற்றி பெற்று முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு இன்று மாலை பரிசுகள், கோப்பைகள் வழங்கப்படுகிறது.

    • விழிப்புணர்வு மனிதச் சங்கிலியை டவுன் சரக உதவி போலீஸ் கமிஷனர் சுப்பையா தொடங்கி வைத்தார்.
    • கண்தானம் குறித்து அரசுப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி நடத்தப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை டாக்டர் அகர்வால் கண் வங்கி மற்றும் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து தேசிய கண்தான விழிப்புணர்வு இருவார விழா கடந்த 25-ந்தேதி முதல் வருகிற 8-ந் தேதி வரை கடைபிடித்து வருகிறது. அதன்படி கண்தானம் பற்றிய விழிப்புணர்வு மனிதச் சங்கிலியை கடந்த 25-ந்தேதி டவுன் சரக உதவி போலீஸ் கமிஷனர் சுப்பையா தொடங்கி வைத்தார்.

    விழிப்புணர்வு

    இதில் நெல்லை அண்ணா பல்கலைக்கழகம், பாளை சாராள் தக்கர் பெண்கள் கல்லூரி, வள்ளியூர் நேரு நர்சிங் கல்லூரி, ஸ்ரீசாரதா மகளிர் கல்லூரி, டாக்டர் அகர்வால் ஆப்டோமெட்ரி கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    மேலும் கண்தானம் குறித்து அரசுப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப்போட்டியும் கல்லூரி மாணவ, மாணவி களுக்கு கவிதைப் போட்டியும் நடத்தப்பட்டது. தொடர்ந்து மாநகரில் உள்ள மருத்துவமனைகளில் இருந்து மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர்களுக்கு டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை மருத்துவர்கள் மூலம் கண்தானம் குறித்தான பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.

    கண்தானம்

    நேற்று நிறைவு நாள் நிகழ்ச்சியில் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை மருத்துவர் டாக்டர் ராணி லட்சுமி வரவேற்று பேசினார். டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை மண்டல மருத்துவ இயக்குனர் டாக்டர் டி. லயனல்ராஜ் கருவிழி மாற்று அறுவை சிகிச்சையில் உலகிலேயே நெல்லை டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை ஆற்றிய சாதனைகள் பற்றியும் கண் தானத்தின் பயன்கள், கண் தானத்தின் அவசியத்தைக் குறித்து பேசினார்.

    விழாவில் தலைமை விருந்தினராக ரோட்டரி கவர்னர் முத்தையா பிள்ளை மற்றும் சிறப்பு விருந்தினராக நெல்லை இந்திய மருத்துவ சங்க நிதிச்செயலாளர் டாக்டர் பிரபுராஜ், ரோட்டரி மாவட்ட பொதுச் செயலாளர் ஆறுமுக பெருமாள் ஆகியோர் கலந்து கொண்டு கண் தானம் அளித்த குடும்பத்தி னர் மற்றும் கண்தானம் நடை பெறுவதற்கு உறுதுணையாக இருக்கும் இயக்கத்தின் தலைவர்கள், உறுப்பினர்கள், தன்னார்வ லர்கள் மற்றும் போட்டி களில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கி கவுரவித்தனர்.

    நிகழ்ச்சியில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த கண்தான இயக்க உறுப்பினர்கள் மற்றும் தலைவர்கள் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டுனர். முடிவில் மேலாளர் கோமதிநாயகம் நன்றி கூறினார்.

    இதற்கான ஏற்பாடுகளை கருவிழிப் பிரிவு மருத்துவர் டாக்டர் ராணிலட்சுமி, கண்வங்கி மேலாளர் ஜெகதீஷ் மற்றும் மருத்து வமனை மருத்து வர்கள், ஊழியர்கள் செய்திருந்தனர்.

    • ஸ்டென்டிங் சிகிச்சை மூலம் 2 ரத்தக்குழாய்களில் உள்ள அடைப்பை அகற்றியது.
    • நெல்லையில் ரத்தக்குழாய் மூலமாகவே இந்த நவீன அறுவை சிகிச்சை செய்து சாதனை நிகழ்த்தப்பட்டு உள்ளது.

    நெல்லை:

    நெல்லை காவேரி ஆஸ்பத்திரியில் 77 வயது பெண்ணுக்கு அதிநவீன இதய சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.இதுகுறித்து இதய சிகிச்சை டாக்டர் மகபூப் சுபுஹாணி கூறியதாவது:-

    பாளையங்கோட்டையை சேர்ந்த 77 வயது பெண்ணுக்கு, நடந்து செல்லும் போது மூச்சு திணறல் மற்றும் படபடப்பு ஏற்பட்டு வந்துள்ளது. அவர் காவேரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    முழு உடல் பரிசோதனை செய்த போது அவருக்கு இருதய பெருந்தமணி வால்வில் அடைப்பு ஏற்பட்டிருந்தது தெரியவந்தது. ஆஞ்சி யோகிராம் பரிசோதனை செய்து பார்த்ததில், இதயத்துக்கு செல்லும் 2 ரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து எனது தலைமையில் மருத்துவ குழு ஆஞ்சியோ பிளாஸ்டி என்ற ஸ்டென்டிங் சிகிச்சை மூலம் 2 ரத்தக்குழாய்களில் உள்ள அடைப்பை அகற்றியது. மேலும் பெருந்தமணி வால்வு பகுதியில், 'டேவி' எனப்படும் டிரான்ஸ் கதீட்டர் பெருந்தமணி வால்வு இன்ஸ்பிளான்டேஷன் என்ற நவீன சிகிச்சை முறையில் வால்வு பொருத்தப்பட்டது. வழக்கமாக இத்தகைய பிரச்சினைக்கு அறுவை சிகிச்சை செய்து, அடைப்பு நீக்கப்படும். ஆனால் தற்போது மதுரைக்கு தெற்கே நெல்லையில் இந்த ரத்தக்குழாய் மூலமாகவே இந்த நவீன அறுவை சிகிச்சை செய்து சாதனை நிகழ்த்தப்பட்டு உள்ளது. இதய டாக்டர் ஜோப், டாக்டர்கள் செல்வி, கார்த்திக் ஆகியோரின் கூட்டு முயற்சியினாலும்இந்த சிகிச்சை வெற்றிக்கரமாக நடத்தப்பட்டது. இது முதியோருக்கு பாதுகாப்பா னது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது டாக்டர்கள் லட்சுமணன், கார்த்திக் ஆகியோர் உடனிருந்தனர்.

    • போட்டியில் கூடங்குளம் ஹார்வர்டு ஹைடெக் மாணவிகள் ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றனர்.
    • சீனியர் பிரிவில் பெமிஷா ஈட்டி எறிதல், வட்டி எறிதலில் முதல் பரிசு பெற்றார்.

    வள்ளியூர்:

    கூடங்குளம் ஹார்வர்டு ஹைடெக் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ- மாணவிகள் வள்ளியூர் ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற திசையன்விளை வட்டார தடகள விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டனர்.

    இதில் கூடங்குளம் ஹார்வர்டு ஹைடெக் மாணவிகள் அதிக புள்ளிகள் பெற்று ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றனர். ஜூனியர் பிரிவில் இன்பதரணி குண்டு எறிதலில் முதல் பரிசு, வட்டு எறிதலில் 2-ம் பரிசு, சீனியர் பிரிவில் பெமிஷா ஈட்டி எறிதல், வட்டி எறிதலில் முதல் பரிசு, குண்டு எறிதலில் 2-ம் பரிசு, ஜீசஸ் அனுஷா 1,500 மீட்டர் 2-ம் பரிசு, சூப்பர் சீனியர் பிரிவில் இந்து 200 மீட்டர் ஓட்டத்தில் 2-ம் பரிசு, தன்யா 100 மீட்டர், 400 மீட்டர் தடை ஓட்டங்களில் முதல் பரிசு, ரோமிஸ்ரீ ஈட்டி எறிதல், குண்டு எறிதலில் முதல் பரிசு அனுஜா 1500 மீட்டர் ஓட்டத்தில் முதல் பரிசு 800 மீட்டர் ஓட்டத்தில் 2-ம் பரிசு சந்தியா வட்டு எறிதலில் முதல் பரிசு, பிளசி வட்டு எறிதல், குண்டு எறிதலில் 2-ம் பரிசு, மேலும் 4×400 தொடர் ஓட்டத்தில் முதல் பரிசு, 4×100 தொடர் ஓட்டத்தில் 2-ம் பரிசும் பெற்றுள்ளார்கள்.

    வெற்றி பெற்ற மாணவிகளை பள்ளித் தாளாளர் டாக்டர் தினேஷ், முதல்வர் முருகேசன் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் சுந்தர் ஆகியோர் பாராட்டினார்கள்.

    • அறிவுரைகளை கடை பிடிக்காத நாற்று பண்ணை உரிமையாளர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
    • விவசாயிகள் நாற்று பண்ணைகளில் விற்பனை பட்டியலினை பெற்று நாற்றுகள் வாங்கிட கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

    நெல்லை:

    நெல்லை விதை ஆய்வு துணை இயக்குனர் சுஜாதாபாய் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நெல்லை, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள காய்கனி நாற்று பண்ணைகளுக்கு விதை கட்டுப்பாட்டு ஆணை 1983-ன் கீழ் விற்பனை உரிமம் வழங்கப்பட்டு விதை ஆய்வாளர்களால் அவ்வப்போது ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    ஆய்வின்போது காய்கனி நாற்று ரகங்கள், பழமரக்கன்றுகளின் ரகங்கள் மற்றும் தென்னங்கன்றுகளின் ரகங்கள் எவ்வாறு கொள்முதல் செய்யப்படுகிறது என்ற விபரத்துடன் அவை முறையாக இருப்புப் பதிவேட்டில் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு முறையான விற்பனை பட்டியல் வழங்கி, விற்பனை செய்யப்பட்டு வருகிறதா எனவும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    விவசாயிகள் விற்பனை உரிமம் பெற்ற நாற்று பண்ணைகளில் விவசாயி பெயர், ஊர், காய்கனி நாற்று அல்லது பழமரக்கன்றுகளின் பெயர், ரகம் ஆகியவற்றுடன் விற்பனையாளர் மற்றும் விவசாயி கையொப்பமிட்ட விற்பனை பட்டியலினை பெற்று நாற்றுகள் வாங்கிட கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

    நாற்று பண்ணையாளர்கள் தங்களிடமுள்ள காய்கனி நாற்றுகள், பழமரக்கன்றுகள் மற்றும் தென்னங்கன்றுகளை ரகம் வாரியாக கொள்முதல் பட்டியல் விபரம் குறிப்பிட்டு இருப்பு பதிவேட்டில் பதிவு செய்து முறையாக விற்பனை பட்டியல் வழங்கி விவசாயிகளுக்கு விற்பனை செய்திட அறிவுரை வழங்கப்படுகிறது.

    அறிவுரைகளை கடை பிடிக்காத நாற்று பண்ணை உரிமையாளர்கள் மீது விதை கட்டுப்பாட்டு ஆணை 1983-ன் கீழ் உரிமம் ரத்து உள்ளிட்ட சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×